-
12th August 2012, 05:00 AM
#401
Moderator
Diamond Hubber

வசந்த் டிவியில் தொகுப்பாளினி ப்ளஸ் செய்தி வாசிப்பாளர் என அதிரடி அசத்தலில் ஆச்சர்யப்படுத்துகிறார் மகாலட்சுமி. ஆல் இந்தியா ரேடியோவுல அறிவிப்பாளர், ஆர்.ஜேன்னு இருந்து பொதிகையில ஷோ பண்ணி இப்போ வசந்த் டிவி என அறிமுகப் படலத்தை சொல்கிறார் மகாலட்சுமி. " 'ஆச்சியுடன் பேச்சு'ன்னு 26 வாரம் ஷோ பண்ணேன். எந்த ஈகோவும் இல்லாம, எந்த கேள்வி கேட்டாலும் ஜாலியா சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லி போட்டோ எடுத்துக்கோ பாப்பான்னு அன்பு காட்டின மனோரமா ஆச்சியின் அன்புக்கு நான் அடிமையோ அடிமை.
சூர்யா, விஜய், கமல்னு 300 பேரை பேட்டி எடுத்துட்டேன். ரஜினியை பேட்டி எடுக்கணும்னு ரொம்ப ஆசை. அபிஷேக்கை பேட்டி எடுக்கும்போது போன்ல நிறைய ஃபாரின் அழைப்புகள், உங்க ரசிகர்கள் கூட பேசுனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாரு! சுரேஷ் கிருஷ்ணாவைப் பேட்டி எடுத்தபோது அவரோட மனைவி நேரில் அழைச்சுப்ப் பாராட்டினாங்க...
நல்லா சிரிச்சுக்கிட்டே எல்லா கேள்விக்கும் பதில் வாங்கிடுறியே! நியூஸ் வாசிக்குறியான்னு கேட்டாங்க!இப்போ சிரிச்சபடி ஒரு நியூஸ் ரீடர் வசந்த் டிவியில மட்டும் பார்க்கலாம்! இறுக்கமா வர்ற உங்களையும் சிரிச்ச மாதிரி பதில் சொல்ல வைக்குறது இந்த மகாலட்சுமியின் தனித்திறமை " சிரிப்பை சிதறவிட்டு, 'ட்ரீம் ஸ்டார்' நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக பை சொல்லி பறக்கிறார் மகா!
-
12th August 2012 05:00 AM
# ADS
Circuit advertisement
-
12th August 2012, 05:01 AM
#402
Moderator
Diamond Hubber
கோலாலம்பூர் கோயிலும்... நானும்...

காமெடி டைமில் திறம காட்டிய அர்ச்சனா பெரிய கமர்ஷியல் பிரேக் விட என்னாச்சு என்று அக்கறையோடு விசாரித்தோம். "பெரிசா நல்லா ஆஃபர்ஸ் வரலை. ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷன் இருக்குற மாதிரி புதுமையா நிகழ்ச்சி பண்ண ஆசை. மீண்டும் காமெடி டைம் வந்தாலும் ரொம்ப சந்தோஷம். இப்போ இன்டீரியர் டிசைனிங், ஈவென்ட் மேனேஜ்மென்ட்னு பிஸி ஆகிட்டேன். கார்ப்பரேட் ஷோவுக்கு காம்பயர் பண்றேன்.
கணவர் வினித் கடற்படையில இருக்குறதால கொச்சின்ல ஒரு வீடு ஸ்பெஷலா கொடுத்திருக்காங்க. பத்து நாள் குட்டி தேவதை ஜாரா, கணவரோட சேர்ந்து வீடு அழகா செட் பண்ணிட்டு வந்தேன்.
70 சதவீதம் முஸ்லீம்கள் இருக்குற கோலாலம்பூர்ல முருகன் கோவில் அவ்வளவு அழகு!252 படி ஏறி ஆச்சர்யத்தோட கோயிலைச் சுத்தி சுத்தி வந்தேன். பக்தி எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி... அதான் எட்டுமணி நேரம் அந்த இடத்தை விட்டு நகரலை. இடி, மின்னல், மழை எதுவந்தாலும் இனி என் ஃபேவரைட் கோயில் கோலாலம்பூர் முருகன்தான் " சத்தியம் செய்யாத குறையாய் சொல்கிறார் அர்ச்சனா.
-
12th August 2012, 05:03 AM
#403
Moderator
Diamond Hubber
பட்டரும் ஹனியும்!
எனக்கு செல்லப்பிராணிகள்ன ரொம்ப்ப... இஷ்ட்...டம் என்று சொல்கிறார் கலா மாஸ்டர். " பட்டர், ஹனின்னு ரெண்டு செல்ல நாய்கள் வளர்க்குறேன்.
அரோனா வாஸ்துமீன்னா எனக்கு கொள்ளைப் பிரியம். கெட்டதை எடுத்துக்கிட்டு நல்லதைத் தர்ற அந்த மீன் இறந்து போனதுல ரொம்ப வருத்தம்.
சமீபத்துல நடந்த பெட் அனிமல் ஷோவுல நிறைய மீன்கள் வாங்கலாம்னு போனா, வித்தியாசமான கலர்ஃபுல் பறவைகள் கவனம் ஈர்த்துச்சு. ஆப்ரிக்கன் கிரே மைனா மனிதன் மாதிரி பேசுமாம்.
பஞ்சுகாட்டன் மாதிரி மிருதுவா இருக்கும்... அதை எப்படியாவது வாங்கிடணும்... என் பையன் வித்யூத்தும், செல்லப்பிராணிகளும் தான் என்னோட ரிலாக்சேஷன் " ரியலாக கெமிஸ்ட்ரியுடன் பேசுகிறார் கலா மாஸ்டர்.
-
12th August 2012, 05:04 AM
#404
Moderator
Diamond Hubber
புது அம்மா!
இசையருவி சேனலின் கலகல காம்பயர் மகேஷ்வரி பூரிப்போடு இருக்கிறார்.. " கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆச்சு. வெங்கட்டுக்கு பைனான்ஸ் பிசினஸ். பாப்பா கேஷவ்வுக்கு ஒரு வயசு. . தொட்டில்ல போடும் போது பெருசா ஃபங்ஷன் வைக்கலை. இப்போதான் ஒரு கெட்டுகெதர் வைச்சேன். குழந்தையை எப்படி கவனிச்சுக்கணும்னு சுத்தமா தெரியாதுங்க. இப்போ ஒவ்வொண்ணா கத்துக்குறது ரொம்ப இன்ட்ரஸ்டிங்... வித்தியாசமான லைவ் ஷோ, ரியாலிட்டி ஷோவுல ரீ என்ட்ரி ஆகலாம்னு இருக்கேன்" மனம் முழுக்க சந்தோஷத்துடன் சிரிக்கிறார் மகேஷ்சிரி.. சாரி.. மகேஷ்வரி!
-
12th August 2012, 05:05 AM
#405
Moderator
Diamond Hubber

ஜெயா.டி.வியில் இருமலர்கள், சன்.டி.வியில் செல்லமே, இளவரசி என்று சீரியல் ராணியாக வலம் வரும் மகாலட்சுமி இப்போது விஜய் டி.வி 'அவள்' சீரியலில் வில்லி ரேஞ்சுக்கு நடிப்புத் திறமை காட்டி வருகிறார்.
"ஒரே மாதிரி காம்பியர் பண்றது, நடிக்குறதுன்னு அலுத்துப்போயி நெகடிவ் ரோல் பண்ண ஆரம்பிச்சேன். நிறைய பேரு திட்டி, சாபம் விட்டாலும் அதை என் கேரக்டருக்கான் கிரெடிட்டா எடுத்துக்குறேன். சிலர் ஓவரா கோவத்தைக் காட்டும்போது அதை மகாலட்சுமி கிட்ட காட்டாதீங்க, கேரக்டர்கிட்ட காட்டுங்கன்னு சொல்லிடுவேன். நான் சஞ்சீவ் ஜோடியா நடிக்குறேன். சஞ்சீவை ஷூட்டிங்லதான் நேர்ல பார்த்தேன். ரொம்ப ஃபிரண்ட்லி.. ஒரு நிமிஷம் கூட சும்மா இல்லாம கலாய்ப்பாரு. செட்டே கலகலன்னு இருக்கும்.
கணவர் அனில்குமார் எப்போ பார்த்தாலும் கிரிக்கெட்டே கதின்னு கிடப்பாரு. சீரியல்,படம் பார்க்கவே முடியலன்னு 52 இன்ச் எல்.சி.டி டி.வி வாங்கிட்டேன். இனிமே நான் நடிச்ச அத்தனை சீரியல்களையும் ஒரு எபிசோடு கூட விடாம பார்த்துடுவேன். சின்னதா ஒரு ரெஸ்ட் தேவைப்படுறதால அலப்பி போட் ஹவுசுக்கு கிளம்பிட்டு இருக்கோம். பை" என்று ஆசையாக பறக்கிறார் மகாலட்சுமி.
-
2nd September 2012, 08:21 AM
#406
Moderator
Diamond Hubber
நடிகர் ரிஷி
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஒரு ஸ்டேஜ் ஷோவுல நடிக்கறதுக்காக கிளம்பிட்டு இருந்தேன். ஏற்கனவே ஒரு ஷூட்டிங்ல கமிட் ஆகி இருந்ததால, அதை முடிச்சுட்டு கிளம்பும்போதே ரொம்ப லேட் ஆயிடுச்சு. ஸ்பாட்டுக்கு கரெக்ட் டைமுக்கு போயிடலாம்னு கிளம்பினா எல்லாமே தலைகீழ். பயங்கரமான மழை, டிராஃபிக், இருட்டு... எல்லாம் சேர்ந்து என்னை படுத்தி எடுத்துடுச்சு. 7 மணிக்கு நாடகம். டிராஃபிக்லயே ஏழரை மணி வரைக்கும் நின்னுட்டு இருக்கேன். கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு காரும் பைக்குமா நிக்குது.
எல்லா வண்டிகளும் திருவிழா தேர் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நகருது. ஒருவழியா ஸ்பாட்டுக்கு போயிட்டேன். அங்க பவர்கட். ரொம்ப டென்ஷனாயிடுச்சு. ஆடியன்ஸ் இருட்டுல உட்கார்ந்திருக்காங்க. ஜெனரேட்டர் வசதி இல்ல. ஒருவழியா மெழுகுவர்த்தி வெளிச்சத்துல மேக்கப்பை போட்டுட்டு ஸ்டேஜுல ஏறினேன். கரன்ட் வந்துடுச்சு. கிட்டத்தட்ட 2 மணி நேரம் லேட். ஆனா, மின்சார வாரியத்தின் மேல பழியைப் போட்டுட்டு நான் தப்பிச்சுட்டேன். சமாளிக்கறதுக்கும் ஒரு சாமர்த்தியம் வேணும்ல!
நன்றி: தினகரன்
-
2nd September 2012, 08:22 AM
#407
Moderator
Diamond Hubber
நடிகை நீலிமா ராணி
‘லேட்’ - இந்த வார்த்தைக்கு என் அகராதியில இடமே இல்ல. ரொம்ப சமர்த்துப் பொண்ணு. இதுவரைக்கும் நான் லேட்டா போனதால ஷூட்டிங் லேட்டுன்னு யாரும் சொன்னதே இல்ல. சின்ன வயசுலயே டைமை சரியா ஃபாலோ பண்ணணும்னு எங்க வீட்டுல கத்துக் கொடுத்திருக்காங்க. 5 மணிக்கு அலாரம் வச்சா, 4 மணிக்கு எந்திரிச்சு அதை ஆஃப் பண்ற ஆள் நான். எப்பவும் ரொம்ப அலர்ட்டா இருப்பேன். சில நேரங்கள்ல ரொம்ப பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைச்சு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே ஷூட்டிங்குக்குப் போயிடுவேன்.
அங்கே, அப்போதான் வண்டியில இருந்து ஜெனரேட்டரை இறக்கிட்டு இருப்பாங்க. மத்தவங்ககிட்ட கோபப்படவும் முடியாது. வேற வழியில்லாம நானே என்னை சமாதானப்படுத்திட்டு காத்திருப்பேன். லேட் ஆகக் கூடாதுன்னு கார்ல போகும் போதே மேக்கப் போட்டுக்குவேன். கிடைக்கிற நேரத்தை அவசியமான, முக்கியமான விஷயங்களுக்குப் பயன்படுத்திக்குவேன். சமையல் விஷயத்துலயும் எனக்கு லேட் ஆகாது. எல்லாத்துலயும் இன்னிக்கி வரைக்கும் சரியா இருக்கேன். யாருக்காகவும் என்னோட பாலிசியை மாத்திக்கிட்டதே இல்ல!
நன்றி: தினகரன்
-
2nd September 2012, 08:25 AM
#408
Moderator
Diamond Hubber
ஜெயித்த பணத்தை தோற்றவர்களுக்கு கொடுத்த பவர் ஸ்டார்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கேம் ஷோ ஒன்றில் பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் போட்டியில் தான் ஜெயித்த பணத்தை தோல்வியடைந்த பெண்களுக்கு பரிசாகக் கொடுத்தார். நடிகை ரோஜா நடத்தும் கேம்ஷோ லக்கா கிக்கா. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்று பரிசினை பெற்றுச் செல்கின்றனர். கடந்த வார நிகழ்ச்சியில் திரைப்பட நடன பெண்மணிகள் செந்தாமரை, மைனா நாகு ஆகியோருடன் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பங்கேற்றார்.
ஒவ்வொரு சுற்றிலும் பவர் ஸ்டாரின் கையே ஓங்கியது. ரூ.36,000 வரை போட்டியில் ஜெயித்தார் சீனிவாசன். போட்டியில் கலந்து கொண்ட பிற பங்கேற்பாளர்களுக்கு 4000, 7000 ரூபாய்கள் மட்டுமே கிடைத்தன. இறுதியில் 36000 ரூபாய் ஜெயித்த சீனிவாசன் நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பரிசுத் தொகைக்கான செக் வழங்கப்பட்டது. ஆனால் பெருந்தன்மையாக தன்னுடைய பரிசுப்பணத்தை போட்டியில் பங்கேற்று தோல்வியடைந்த செந்தாமரை, மைனா நாகு ஆகியோருக்கு வழங்கி விட்டார் பவர் ஸ்டார்.
நன்றி: தினமலர்
-
4th September 2012, 10:18 PM
#409
Junior Member
Regular Hubber
"ஒரே மாதிரி காம்பியர் பண்றது, நடிக்குறதுன்னு அலுத்துப்போயி நெகடிவ் ரோல் பண்ண ஆரம்பிச்சேன்.
enakku therinji indhamma negative role dhaan eppome edukkudhu.
-
15th September 2012, 07:03 PM
#410
Moderator
Diamond Hubber
நினைத்தாலே இனிக்கும்

ஜெயா டிவி வெற்றிகரமாக 14-வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததைமுன்னிட்டு, பிரபல இசையமைப்பாளர்களான இசை இரட்டையர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு விழா எடுத்து கவுரவப்படுத்தினார்கள். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் `நினைத்தாலே இனிக்கும்' என்ற தலைப்பில் நடந்த இசைநிகழ்ச்சிக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். இந்த மேடையில் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி கவுரவிக்கப் பட்டார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றிய சக கலைஞர்கள், நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பல முன்னணி திரைப்பட நட்சத்திரங்களும் முன்னணி இயக்குனர்களும், பிரபலங்களும் பங்கேற்றனர். தொடர்ந்து மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த காலத்தால் அழியாத பாடல்கள் இன்னிசையுடன் பின்னணி பாடகர்களால் பாடப்பட்டது.
இந்த பிரமாண்ட நிகழ்ச்சி வருகிற புதன்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
நன்றி: தினதந்தி
Bookmarks