-
1st January 2012, 04:22 AM
#371
Moderator
Diamond Hubber
விருது வழங்கும் விழா: ஜோடியாக வந்த சினேகா, பிரசன்னா
ஜெயா டி.வி. சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு ஜெயா விருது வழங்கும் விழா கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடந்தது. கார்த்தி சிறந்த நடிகர் விருது பெற்றார். சினேகா, சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இந்த விருதை சினேகாவும், பிரசன்னாவும் ஜோடியாக வந்து பெற்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கரண், நடிகைகள் அஞ்சலி, பூர்ணா, அனன்யா ஆகியோரும் விருது பெற்றனர். சிறந்த இயக்குனருக்கான விருதை ஜெயம் ராஜாவும், இசையமைப்பாளருக்கான விருதை விஜய் ஆண்டனியும் பெற்றனர். டைரக்டர் பார்த்திபன், விஜய், வெற்றிமாறன், ஆகியோரும் விருது பெற்றார்கள். நடிகர் பிரபு, ஏவி.எம்.சரவணன், ஆர்.வி.உதயகுமார், தரணி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
நன்றி: தினமலர்
-
1st January 2012 04:22 AM
# ADS
Circuit advertisement
-
1st January 2012, 04:24 AM
#372
Moderator
Diamond Hubber
சின்னத்திரைக்கு வந்தார் மாமதுரை மிதுனா!
கருத்தம்மா ராஜஸ்ரீயின் தங்கை மிதுனா, மாமதுரை படத்தில் "மதுரை மதுரைதான்... மணக்கும் மல்லிக்கும் மதுரைதான்... " என்ற பாடலில் வாசன் கார்த்திக்குடன் ஆட்டம் போட்டவர். அதன் பிறகு சில படங்களில் நடித்து விட்டு தெலுங்கு பக்கம் போனவர், மறுபடியும் சென்னை வந்திருக்கிறார். இந்த முறை சின்னத்திரையில் நடிப்பதற்காக வந்திருக்கிறார். சாப்ரன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும், காதம்பரி எனும் மெகா தொடரில் இவர்தான் கதையின் நாயகி. இவருடன் சுதா சந்திரன், லஷ்மிராஜ், காயத்ரி, பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்து வருகின்றனர். பிரபு சங்கர் கதை, எழுதி, இயக்கும் இந்தத் தொடரின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த மணிமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
டி.வி., சீரியலில் நடிப்பது குறித்து மிதுனா அளித்துள்ள பேட்டியில், நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்திருக்கிறேன். இயக்குநர் பிரபு சங்கர் அழைத்து, காதம்பரி தொடரின் கதையை என்னிடம் சொன்னார். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஒவ்வொரு எபிசோடுக்கும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் காட்சிகள், ஒவ்வொரு காட்சியிலும் சுவராஸ்யம், பிரமாண்டம், அதுவும் காதம்பரி என்கிற டைட்டில் ரோலில் நடிக்கிற வாய்ப்பு. அதான் வந்து விட்டேன். சென்னையில் தங்கி தொடர்ந்து நடித்து வருகிறேன். ஹைதராபாத், திருநெல்வேலி, அச்சன்கோவில், பெங்களூரு போன்ற இடங்களிலும், சில காடுகளிலும், அரண்மனைகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு பிறகு என்னை காதம்பரி என்றே அழைப்பார்கள். அந்தளவுக்கு இந்த கதாபாத்திரம் அமைந்திருக்கிறது, என்று கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்
-
1st January 2012, 11:38 PM
#373
Moderator
Diamond Hubber
-
14th January 2012, 08:19 AM
#374
Moderator
Diamond Hubber
சின்னத்திரைக்கு வந்த அசின்...!
பெரிய கனவோடு பாலிவுட்டிற்கு போன நடிகை அசினுக்கு சரியான வாய்ப்புகள் ஏதும் அமையாததால் சின்னத்திரைக்கு வந்துவிட்டார். தமிழ் சினிமாவிற்கு பல நடிகைகள் வந்தபோதிலும், குறுகிய காலத்திலேயே நம்பர்-1 நடிகை என்ற இடத்தை தக்க வைத்தவர் நடிகை அசின். இப்படி நம்பர்-1 நடிகையாக வலம் வந்த அசினுக்கு, கஜினி படம் மூலம் இந்தியில் வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் அறிமுகமான முதல்படமே சூப்பர், டூப்பர் ஹிட்டானதால் பாலிவுட்டிலேயே கவனம் செலுத்தினார் அசின். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த எந்த படமும் சரியாக போகவில்லை. இருந்தும் அங்கேய தங்கியிருந்து வாய்ப்பு வேட்டையில் இறங்கினார். ஆனால் முன்னணி நடிகைகளான கரீனா, கத்ரீனா, வித்யாபாலன் ஆகியோர் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், அசினுக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. தற்போது ஒன்றோ, இரண்டு படம் மட்டுமே கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் பெரிய திரையில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாலோ என்னவோ, சின்னத்திரைக்கு வந்துவிட்டார் அசின். இந்தியில் யு.டி.வி., நடத்தும் சூப்பர் ஸ்டார் சாண்டா என்ற நிகழ்ச்சியில் அசின் நடிக்கவுள்ளார். சின்னத்திரைக்கு வந்தது பற்றி அசின் கூறுகையில், யு.டி.வி.யின் சூப்பர் சாண்டா நிகழ்ச்சியில் நடிக்கிறேன். பெரிய திரையை காட்டிலும், சின்னத்திரை மூலமாக நேரடியாக ரசிகர்களை சென்றடையலாம். இது ஒரு அருமையான நிகழ்ச்சி, நட்பை விளக்கும் உண்ணதமான நிகழ்ச்சி என்று கூறியுள்ளார்.
இதனிடையே சின்னத்திரைக்கு அசின் வந்துவிட்டதால், இனி யாரும் அவரை பெரிய திரையில் நடிக்க கூப்பிடமாட்டார்கள். அசின் அப்படியே மலையாளத்தில் போய் செட்டிலாகி விட வேண்டியதது தான் பாலிவுட்டில் உள்ளவர்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.
நன்றி: தினமலர்
-
22nd January 2012, 01:40 AM
#375
Moderator
Diamond Hubber
புதிய சேனல்
கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து மற்றுமொரு தொலைக்காட்சியாக வரும் 26-ந்தேதி ``முரசு'' தொலைக் காட்சி தொடங்குகிறது. `என் ஜீவன் பாடுது' என்ற தலைப்பில் காலையில் ஒரு மணி நேரம் பாடகர்களின் தனிப்பாடல்களும், மாலை ஒரு மணி நேரம் பாடகிகளின் தனிப்பாடல்களும், இரவு 10 மணிக்கு அனைத்து நாட்களிலும் கருப்பு-வெள்ளை படங்களில் இருந்து பாடல்களும் இடம் பெறுகின்றன.
ஜனரஞ்சகப்பாடல்கள், அதிரடிப்பாடல்கள், கவிஞர்களின் பாடல்கள், காதல் பாடல்கள், ஒருபடப் பாடல்கள், இசையமைப்பாளர் நேரம் என்று 1980-க்கு முன் வெளியான படப்பாடல்களின் ஒரு இணையற்ற சங்கமமாக தொடர்கிறது, முரசு தொலைக்காட்சி.
நன்றி: தினதந்தி
-
22nd January 2012, 01:46 AM
#376
Moderator
Diamond Hubber
சென்னைவாசியான சிநேகா நம்பியார்!
நான் பதினோராம் வகுப்பு படிக்கும்பொழுதே கன்னட திரைத்துறையில் கால்பதித்துவிட்டேன். நிறைய கன்னடத் தொடர்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு தெலுங்கு பக்கம் சென்றேன். அங்கிருந்து தமிழுக்கு வந்தேன். "அகல்யா' தொடரில்தான் முதலில் தமிழில் அறிமுகமானேன். இப்போது தமிழ் திரைத்துறையிலேயே செட்டிலாகி சென்னைவாசி ஆகிட்டேன்'' என்று உற்சாகத்துடன் கூறுகிறார் பெங்களுரைச் சேர்ந்த சிநேகா நம்பியார்.
-
28th January 2012, 07:39 AM
#377
Moderator
Diamond Hubber
ஆனந்தம் தந்த அகாடமி விருது
புதுடெல்லியில் உள்ள இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தில் சுயேச்சையாக செயல்படும் ஒரு அமைப்பு சங்கீத நாடக அகாடமி. இசை, நாட்டியம், நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பிரபல கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது அளித்து கவுரவிக்கிறது.
2011-ம் ஆண்டுக்கான விருதுகளில் நடிப்பு, இயக்கம் ஆகிய பிரிவில் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 8 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த `கலைமாமணி' `ஏ.ஆர்.எஸ்.'சும் ஒருவர். சுமார் அரை நூற்றாண்டு கால அவரது கலைச்சேவையை பாராட்டி, கவுரவிக்கும் விதத்தில் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
ஒய்.ஜி.பி. மூலம் நாடக உலகத்திற்கு அறிமுகமான இவர் மேடை நாடக உலகில் 47 ஆண்டு கால அனுபவமுள்ளவர். மொத்தம் 39 நாடகங்களுக்காக (தமிழ்-36, ஆங்கிலம்-3) கிட்டத்தட்ட 400 தடவை மேடை ஏறி இருக்கிறார்.
சினிமாவில் நூறு படங்களை நெருங்கும் ஏ.ஆர்.எஸ், சின்னத்திரையிலும் தன் பங்களிப்பை தொடர்ந்து வருகிறார். கே.ஆர்.விஜயாவுடன் `மடிசார் மாமி,' லட்சுமியுடன் `நல்லதோர் வீணை', ஸ்ரீவித்யாவுடன் `கலாட்டா குடும்பம்', ரேவதியுடன் `நிறங்கள்', `ஒய்.ஜி. மகேந்திராவுடன் `துப்பறியும் சாம்பு' குஷ்புவுடன் `கல்கி' உள்ளிட்ட 37 டெலிவிஷன் தொடர்களில் நடித்திருப்பவர். இப்போதும் முக்கிய கேரக்டரில் `அவள்' தொடரில் நடிப்பை தொடர்கிறார்.
ஏற்கனவே இந்த விருது மூலம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த கலைஞர்கள் வருமாறு: 1959-ல் பம்மல் சம்பந்த முதலியார். 1962-ல் டி.கே. சண்முகம். 1968-ல் எஸ்.வி. சஹஸ்ரநாமம். 1992-ல் பூர்ணம் விஸ்வநாதன்.
.
நன்றி: தினதந்தி
Last edited by aanaa; 28th January 2012 at 07:43 AM.
"அன்பே சிவம்.”
-
26th February 2012, 09:09 PM
#378
Moderator
Diamond Hubber
படுபிஸியான நடிகை தாரிகா
மெகா தொடர்கள், நடன நிகழ்ச்சிகள், பெரியதிரை படங்களில் ஆயிட்டம் டான்ஸ் என்று படுபிஸியாக இருந்த பிரபல சின்னதிரை நடிகை தாரிகா, பாலிவுட் நடிகையாகியிருக்கிறார். தற்போது இரண்டு இந்திப் படங்களில் நடித்து வருகிறாராம் அம்மணி.
Last edited by aanaa; 26th February 2012 at 09:25 PM.
"அன்பே சிவம்.”
-
3rd March 2012, 09:08 AM
#379
Moderator
Diamond Hubber
நாடகத்தில் நடிக்கிறார் பத்மப்பிரியா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடகத்தில் நடிக்கப் போகிறேன் என்று பத்மப்பிரியா கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது; நாடகத்துறையிலிருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். இங்கு வந்த பிறகு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதுதான் ஒரே எண்ணம் கொண்ட, மலையாள நடிகை ஆன் ஆகஸ்டின், இயக்குனர் வி.கே.பிரகாஷ், எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் குலூருடன் நானும் பேசிக்கொண்டிருந்தபோது நாடக எண்ணம் மீண்டும் துளிர்த்தது. சிறந்த நாடகங்களை தயாரித்து அதிகமான ரசிகர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி, ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ் மற்றும் ஜெயப்பிரகாஷ் குலூர் படைப்புகளை நாடகமாக்கியுள்ளோம். நாடகத்துக்கு வந்துவிட்டதால் சினிமா அவ்வளவுதானா என்று கேட்காதீர்கள். தமிழில் 'தங்கமீன்கள்' படத்தில் நடித்துள்ளேன். மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்துவருகிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவள் நான். அதனால் சிறந்த கதைகளைத் தேடித் தேடி நடிக்கிறேன். இவ்வாறு பத்மப்பிரியா கூறினார்.
நன்றி: தினகரன்
Last edited by aanaa; 3rd March 2012 at 09:12 AM.
"அன்பே சிவம்.”
-
3rd March 2012, 09:11 AM
#380
Moderator
Diamond Hubber
சின்னத்திரைக்கு வரும் வில்லன்
ஏற்கனவே வெள்ளித்திரையில் கலக்கிய வில்லன் நடிகர் மகாநிதி சங்கர் சன் டிவியில் ஒளிப்பராகும் 'நாதஸ்வரம்' தொடரில் கலக்கி வருகிறார். இவரை தொடர்ந்து இன்னொரு வில்லன் நடிகரும் சின்னத்திரைக்கு வர இருக்கிறார். வசந்த டிவியில் ஒளிபரப்பு ஆக உள்ள 'கன் பைட் கபாலி' என்ற காமெடித் தொடரில் பொன்னம்பலம் நடிக்கயிருக்கிறார்.
நன்றி: தினகரன்
Bookmarks