-
15th October 2010, 06:12 PM
#1
Senior Member
Veteran Hubber
S.Janaki - Lyrics
S.Janaki is my favorite singer. Please use this thread to post only S.Janaki Amma's lyrics of your favorite songs.
பாடல்: கண்ணிலே என்ன உண்டு
திரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
ஞானியின் மனமும் ஆசையில் தேனீ
நானொரு ராணி பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்
கோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
Please click on the link below for the list of links to the songs in this thread:
Janaki song lyrics in this thread
-
15th October 2010 06:12 PM
# ADS
Circuit advertisement
-
15th October 2010, 06:13 PM
#2
Senior Member
Veteran Hubber
Kaatrukella veli song's lyrics pl...........
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th October 2010, 06:22 PM
#3
Senior Member
Veteran Hubber
kaatrukkenna vEli(avargaL)
பாடல்: காற்றுக்கென்ன வேலி
திரைப்படம்: அவர்கள்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.ஜானகி
காற்றுக்கென்ன வேலி...கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது
தேர் கொண்டு வா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே இன்று தான் பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப்பேசி கிள்ளை ஆனேன்
கோவில்விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன்
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th October 2010, 06:24 PM
#4
Senior Member
Veteran Hubber
thank u priya...
pl u conitune your choices. disturb pannalai..
-
15th October 2010, 06:39 PM
#5
Senior Member
Veteran Hubber
kanavu ondru thOndrudhE(oru Odai nadhiyaagiRadhu)
பாடல்: கனவு ஒன்று தோன்றுதே
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
பூமகள் மேலாடை...நெளியுமோ
நகர்ந்திடுமோ...நழுவிடுமோ...ஓ
காமனே வாராதே...காமனே வாராதே
மனமே பகையா...மலரும் சுமையா
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
பார்வைகள் பார்த்தானே...இருதயம்
இடம் பெயர்ந்து...கிறங்கிடுதே...ஏ
கேள்விகள் கேட்டானே...கேள்விகள் கேட்டானே
புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ
சிறையை உடைக்க பறவை நினைக்க
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
லல லால லாலலா...ல லாலா லா லாலா
லல லால லாலலா...ல லாலா லா லாலா
-
15th October 2010, 06:56 PM
#6
Senior Member
Veteran Hubber
பாடல்: வசந்த கால கோலங்கள்
படம் : தியாகம்
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : இசைஞானி இளையராஜா
பாடியவர் : எஸ்.ஜானகி
நடித்தவர் : லட்சுமி
வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
அலையிலாடும் காகிதம்...ம்...ம்...ம்...ம்...ம்..
அலையிலாடும் காகிதம்
அதிலும் இந்த காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்கும் இந்த உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று
அதில் இரண்டும் உண்டல்லவா
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள்
தேரில் ஏறும் முன்னரே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்லவேளை திருவுள்ளம்
நடக்கவில்லை திருமணம்
நன்றி.. நன்றி.. தேவா
உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோலங்கள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
-
15th October 2010, 07:02 PM
#7
Senior Member
Veteran Hubber
One old no of SJ
Sollamal theriya vendumae - lyric venumae.....
-
15th October 2010, 11:41 PM
#8
Senior Member
Veteran Hubber
sollaamal theriya vENdumE(viLaiyaattu piLLai)
பாடல்: சொல்லாமல் தெரிய வேண்டுமே
திரைப்படம்: விளையாட்டுப் பிள்ளை
இசை: மகாதேவன்
பாடியவர்: எஸ்.ஜானகி
சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே
ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
மறு முறை காணவே மனமும் சென்றது
மறு முறை காணவே மனமும் சென்றது
மங்கையின் ஆசையை நாணம் வென்றது
சொல்லாமல் தெரிய வேண்டுமே
ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
ஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
மனதில் இருப்பது மறைமுகம் ஆனது
மனதில் இருப்பது மறைமுகம் ஆனது
மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது
சொல்லாமல் தெரிய வேண்டுமே
தேடிய செல்வம் கைகளில் கிடைத்தது
திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது
பாடிய யாவையும் கவிதையில் படித்தது
பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது
சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே
யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே
சொல்லாமல் தெரிய வேண்டுமே
-
15th October 2010, 11:51 PM
#9
Senior Member
Veteran Hubber
oru thai maasam(vaNdi chakkaram)
பாடல்: ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
திரைப்படம்: வண்டிச்சக்கரம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.ஜானகி
ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி
ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி
மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி
மைபோட்ட கண்ணுக்கு சுகம் இருக்குதடி
மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி
மைபோட்ட கண்ணுக்கு சுகம் இருக்குதடி
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
அள்ளி அணைக்க சொல்லாதோ
வெள்ளிக்கொலுசு துள்ளாதோ
அள்ளி அணைக்க சொல்லாதோ
அணைச்ச பக்கம் சிலிர்க்குதுன்னு
மயக்கம் கொள்ளாதோ...ஓ
ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி
ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
மச்சான கைகாரி மயக்கி வச்சுக்கிட்டா
மாராப்பு சேலையிலே இழுத்து கட்டிக்கிட்டா
மச்சான கைகாரி மயக்கி வச்சுக்கிட்டா
மாராப்பு சேலையிலே இழுத்து கட்டிக்கிட்டா
புது ரவிக்கை தந்தானா
அதை ரசிக்க வந்தானா
புது ரவிக்கை தந்தானா
அதை ரசிக்க வந்தானா
ரவிக்கை தந்த ரகசித்தை
உனக்கு சொன்னானா...ஆ
ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுப லாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமின்னு
கும்மி கொட்டுங்கடி
ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேர்த்து
-
16th October 2010, 12:01 AM
#10
Senior Member
Veteran Hubber
adi ammaadi(kanni paruvathilE)
பாடல்: அடி அம்மாடி சின்னப் பொண்ணு
திரைப்படம்: கன்னிப் பருவத்திலே
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.ஜானகி
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி
பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
வாடாத மல்லியப்பூ நான் வச்சிருந்தேன் என் கொண்டையில
வண்டு ஒண்ணு வட்டமிட வந்திருச்சு என்ன சொல்ல
மேலாட தான் விலகி காத்து மேனியெல்லாம் கொஞ்சம் தொட்டுவிட
குளிரடிச்சு சிலுசிலுத்து குமரி என்னை வாட்டுதடி
ம்...தானன னன்னா தானன னன்னா தன்ன னான்னா
தானன னன்னா தனன னன்னா...தானன னன்னா
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
ஓஹோ...பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி
நான் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணு செல்லக் கண்ணு
தெனம் காணாத கனவில்ல எல்லாம் ஒண்ணு
நான் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணு செல்லக் கண்ணு
தெனம் காணாத கனவில்ல எல்லாம் ஒண்ணு
என் கனவு நெனவாச்சி அம்மன் அருளாலதான்
என் கனவு நெனவாச்சி அம்மன் அருளாலதான்
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி
ஆத்துல நான் குளிக்கையிலே அஞ்சாறு மீன் வந்து கடிக்குதடி
தேகமெல்லாம் கிளுகிளுத்து திண்டாடுறேன் குறுகுறுத்து
காதோடு சொல்லட்டுமா நான் கண்ணாலே கண்ட ரகசியத்த
யாருக்குமே சொல்லாதே நீ ஆச வெக்கம் அறியாதடி
ஹோய்...தானன னன்னா தானன னன்னா தன்ன னான்னா
தானன னன்னா தனன னன்னா...தானன னன்னா
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
ஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
அது என்னாச்சு...சம்மதம் வந்தாச்சு
ஹே...பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி
பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி
ஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி
Bookmarks