போன முறை இளைஞர்களுக்கான சிறந்த பாடகர் போட்டியில் வலம் வந்தவர் ரோஹித்... வால் நட்சத்திரம் போல வந்து ஜொலித்துவிட்டு, விஜய் தொலைகாட்சியின் அரசியல் விளையாட்டுக்களால் விலகிப் போனவர். சுருக்கமா சொல்லப் போனால் ஏகலைவன். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், விரும்பிப் பார்க்கும் வீடியோக்களில் இவரின் பாடல்களும் ஒன்று. பாடல் ஒரு சோறு பதம். இவரின் குரலில் தென்படும் ஆண்மைக்கு நான் விசிறி. டூயட் பாடல்களையெல்லாம் தனியாகவே ரொம்ப அனாயசமாக பாடிச்செல்லும் அசாத்திய திறமைதான் இவரின் தனித்துவம்.