-
7th February 2010, 09:17 PM
#301
Moderator
Diamond Hubber
சீரியல் இயக்குனருக்கு தடை
சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு சீரியல் இயக்குனருக்கு தடை போட்டது பற்றித்தான் இப்போது பரபரப்பான பேச்சு.
சமீபத்தில் தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. சின்னத்திரை நடிகர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து சின்னத்திரை கூட்டமைப்பு சங்கமாக செயல்பட்டு வரும் இந்த கூட்டத்தில், பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்தியில் அதிர்ச்சிகரமான முடிவு ஒன்றும் அரங்கேறியது. சத்யவான் குடும்பத்தோடு இணைந்த பெயரில் இப்போது சீரியல் ஒன்றை இயக்கிவரும் பிரபல இயக்குனர் பற்றி சின்னத்திரை நடிகர் சங்கத்தில் ஒரு இளம் நடிகர் கொடுத்த புகாரின் பேரில் தான் அந்த உடனடி நடவடிக்கை. அந்த நடிகர் விஷயத்தில் தேவையே இல்லாமல் இயக்குனர் கடுமையாக நடந்து கொண்டார் என்பது எழுத்து பூர்வமான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை ஆராய்ந்த சங்கம், அதுவிஷயமாக சம்பந்தப்பட்ட சீரியல் இயக்குனரிடமும் பேசியபின் இனி அந்த இயக்குர் இயக்கும் எந்த சீரியலுக்கும் இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் பணியாற்ற மாட்டார்கள் என்று அதிரடி தீர்ப்பை கொடுத்தார்கள். அதோடு அந்த இயக்குனர் இயக்கி வந்த சீரியல் ஒளிபரப்பாகும் சேனலுக்கும் இந்த தகவலை பாஸ் செய்தார்கள்.
சேனல் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது இனிதான் தெரியவரும்.
நன்றி: தினதந்தி
-
7th February 2010 09:17 PM
# ADS
Circuit advertisement
-
14th February 2010, 08:16 AM
#302
Moderator
Diamond Hubber
கலைஞர் டிவியின் `மானாட மயிலாட' பாகம்4-க்கான இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ரம்பா மேடையேறி ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார். ரம்பாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதால் அவரை தங்கள் மனதில் கனவுக்கன்னியாக வைத்திருந்த ரசிகர்கள் அத்தனை பேரும் மனம் உடைந்து விட்டதாக குறிப்பிட்ட ரம்பா, "என் திருமண அறிவிப்பின் மூலம் உங்கள் இதயங்களை சுக்குநூறாக உடைத்து விட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன்'' என்றார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சிம்பு வெற்றிபெற்ற ஜோடிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முதல்பரிசு ரூ. 10 லட்சத்தை கோகுல்- நீபா ஜோடியும், இரண்டாம் பரிசு ரூ. 5 லட்சத்தை நிவாஸ்-கிருத்திகா ஜோடியும், மூன்றாம் பரிசு ரூ. 3 லட்சத்தை லோகேஷ்-ஸ்வேதா ஜோடியும் தட்டிச்சென்றனர். ரகுமான்-நிகிஷா ஜோடிக்கு ஆறுதல்பரிசாக எல்.சி.டி. டிவி வழங்கப்பட்டது.
`மானாட மயிலாட' பாகம்-4 முடிவடைந்ததைத் தொடர்ந்து பாகம்-5 தொடக்கவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
நன்றி: தினதந்தி
-
20th February 2010, 09:00 PM
#303
Moderator
Diamond Hubber
ரம்யாகிருஷ்ணனுடன் நடிக்கலாம்!
நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் தங்கம் தொடர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ரம்யாகிருஷ்ணனுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை திரையுலகம் சாராத ஒரு பெண்ணுக்கு வழங்க முன்வந்திருக்கிறார், ரம்யா.
இதுபற்றி அவர் கூறும்போது, "தொடரை பார்க்கும் பெண்கள் பலர் என்னை சந்திக்கும்போது `உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமே' என்கிறார்கள். அவர்
களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் தங்கம் தொடரிலேயே அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். 20 வயதுக்குமேற்பட்ட சிறந்த சரும அழகியான ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். சிந்தால் நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படும் அவர், தொடர் முழுக்கவே என்னுடன் நடிப்பார்'' என்கிறார்.
-
20th February 2010, 09:05 PM
#304
Moderator
Diamond Hubber
தமிழ் திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த இவ்விழாவில் முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசினார்கள். அவர்களில் அஜித்தின் பேச்சு மட்டும் ஹைலைட்டாக இருந்தது. விழா மேடையில், முதல்வர் முன்னிலையில் பேசிய அஜித், கொஞ்சம் காட்டமாகவே தனது கருத்தை தெரிவித்தார். இதுபோன்ற விழாக்களில் பங்கேற்க நடிகர் - நடிகைகளை மிரட்டுகிறார்கள்... என்று பேசி கைத்தட்*டலை பெற்றார் அஜித். அவரது பேச்சு *தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படி அவர் என்ன பேசினார், எப்படி பேசினார் என்பதை டி.வி.,யில் சிறப்பு நிகழ்ச்சியாக வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் கலைஞர் டி.வி.,யில் விளம்பரம் வெளியாகி வருகிறது. மேற்படி விழாவை விரைவில் ஒளிபரப்ப உள்ள கலைஞர் டி.வி., அதுதொடர்பான விளம்பரத்தை வெளயிட்டு வருகிறது. அதில் கமல்ஹாசன், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களின் பெயர்களை குறிப்பிடும் அறிவிப்பாளர் அஜித் *பெயரை குறிப்பிடவில்லை. அஜித் தொடர்பான க்ளிப்பிங்கும் தவிர்க்கப்பட்டு வருவதாக அவரது ரசிகர்கள் குமுறுகிறார்கள். சரி... விழா நிகழ்ச்சியிலாவது அஜித்தை காட்டுகிறார்களா என்று பார்ப்போம்!
-
27th February 2010, 08:36 PM
#305
Moderator
Diamond Hubber
இரண்டு திரையிலும்...
சின்னத்திரையில் இருந்து கொண்டே பெரியதிரையிலும் அதிக படங்களை கைவசம் வைத்திருப்பவர் நீலிமாராணி தான். "இரண்டு திரைகளிலும் பிசியாக நடிக்கும்போது கால்ஷீட் பிரச்சினை வராதா?'' நீலிமாராணியிடம் கேட்டால், "மாதத்தில் குறிப்பிட்ட நாட்களை முன்கூட்டியே டிவிக்கு ஒதுக்கி விடுகிறேன்.
அதனால் மீதியுள்ள நாட்களை சினிமாவுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்'' என்கிறார். என்றாலும் சின்னத்திரையின் இந்த கதாநாயகிக்கு பெரிய திரையில் `கதாநாயகியின் தோழி' வரைக்கும் தான் வரமுடிகிறது என்பதில் கொஞ்சம் வருத்தம் தான்.
-
27th February 2010, 08:50 PM
#306
Moderator
Diamond Hubber
"மெட்டி ஒலி' சீரியல் இயக்குநர் திருமுருகன் அடுத்து இயக்கும் சீரியலுக்கு "நாதஸ்வரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டப் பின்னணியில் உருவாகும் இக்கதைக்கு தேவயானியை நாயகியாக போடுவதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியிருக்கிறது. இதைத் தவிர "மெட்டி ஒலி' மகேஸ்வரியையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க போகிறார்களாம்.
-
13th March 2010, 04:13 AM
#307
Moderator
Diamond Hubber
நீலிமா ராணியின் துணிச்சல்!
சன் டி.வி.யில் இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகும் "இதயம்' ஒன்பது மணிக்கு வரும் "தென்றல்', ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் "செல்லமே' ஆகிய தொடர்களில் நடித்து வருபவர் நீலிமா ராணி. "செல்லமே' தொடரில் வரும் அமுதா கேரக்டருக்கும், "தென்றல்' தொடரில் வரும் லாவண்யா பாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் கொடுத்து நடித்து வருகிறார் நீலிமா ராணி. கலைஞர் டி.வி.யில் வரும் "பவானி' தொடரில் ஒரு ஏழை பெண்ணின் பாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
நான்கு தொடர்களில் நான்கு விதமான பாத்திரங்களில் நடித்து வரும் அவர் பெரியத் திரையில் சமீபத்தில் வெளியான "புகைப்படம்', மற்றும் சரத்குமாரின் "ஜக்குபாய்' படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது "வெண்ணிலா கபடிக் குழு' சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும், "நான் மகான் அல்ல' படத்திலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
""எனக்கு நெகட்டீவ் கேரக்டர்களில் நடிக்க விருப்பம்தான். காரணம் அதுபோன்ற வேடங்கள்தான் ரசிகர்களின் மனதில் எளிதாக போய் சேரும். பாஸிட்டிவான வேடங்கள் என்றால் அதில் இப்படித்தான் வருவாங்க, அடுத்து இதுதான் பண்ணுவாங்கன்னு ஒரு புரிதல் இருக்கும். ஆனால் நெகட்டிவ் கேரக்டர்கள் அப்படியில்லை. அடுத்து என்ன செய்யப் போறாங்கன்னு ஒரு டென்ஷன் இருந்துகிட்டே இருக்கும். அதனால்தான் எனக்கு நெகட்டீவ் ரோல்கள் பிடிக்கிறது'' என்கிறார் நீலிமா ராணி துணிச்சலோடு!
-
13th March 2010, 04:14 AM
#308
Moderator
Diamond Hubber
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர் "தங்கம்'. பார்வையாளர்களை தன் வசப்படுத்தி இருக்கும் இந்தத் தொடரில் நடிக்க நேயர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளனர். இது பற்றி அந்த தொடரின் கிரியேட்டிவ் ஹெட் மற்றும் நாயகியுமான ரம்யா கிருஷ்ணன் கூறுகையில்,
""இந்தத் தொடர் ஆரம்பத்தில் இருந்தே பார்வையாளர்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. இந்தத் தொடரை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு பார்த்து வருவதை எங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அதனால் இதில் நடிப்பதற்கு நிறைய பேர் ஆர்வமாக இருக்கின்றனர். அதனால் இதில் தோன்றி நடிக்க ரசிகர்களில் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறோம்.
அதற்கான போட்டியை சிந்தால் சோப் நிறுவனம் நடத்துகிறது. இருபது வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கான திறமை போட்டி என்கிற தலைப்பில் நடக்கும் அந்த போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், "தங்கம்' தொடரை பார்க்கும்போது அதற்கான தகவல் தெரிவிக்கப்படும். அதன் படி தங்களுடைய மொபைல் ஃபோனிலிருந்து பெயர், வயது, முகவரியை டைப் செய்து எஸ்.எம்.எஸ்.அனுப்பினால் போதும். இந்த போட்டிக்கான முதல் கட்ட தேர்வு சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை போன்ற நகரங்களில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நகரிலும் முதல்கட்ட தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் நடைபெற இருக்கும் இறுதிகட்ட தேர்வில் பங்குபெற்று அங்கு நானும், திரையுலக இயக்குனர் குழு மற்றும் சரும மருத்துவர் ஒருவர் நடுவர்களாக இருந்து போட்டியில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுப்போம். அவருக்கு தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறோம்.
-
13th March 2010, 04:16 AM
#309
Moderator
Diamond Hubber
நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் "கேப்டன் டி.வி.' சேனல் வருகிற ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் 24 மணிநேர ஒளிபரப்பு சேவையைத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுக் குறித்து "கேப்டன்' தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் எல்.கே. சுதீஷ் கூறுகையில், ""கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம் ததும்பும் தொடர் நாடகங்களும், மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களும், மாலை நேரத்தில் புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும்.
பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் இதில் முக்கிய பங்கு பெறுகின்றன. நேர்மையான நடுநிலைச் செய்திகள் மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி ஒளிபரப்பப்படும். இது தவிர பிற நிகழ்ச்சிகளில் திறமையுள்ளவர்களை வெளிக்கொண்டு வர கேப்டன் தொலைக்காட்சி முன்னுரிமை அளிக்கும்.
கேப்டன் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு மார்ச் 15 முதல் எப்ரல் 13 வரை இருக்கும். ஏப்ரல் 14 முதல், 24 மணி நேரமும் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் புதிய நிகழ்ச்சிகளோடு ஒளிபரப்பாகும். இது முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தொலைக்காட்சியாக அமையும். இவை அனைத்தையும் இன்சாட் 4 பி செயற்கைகோள் ஒளிபரப்பு மூலம் காணலாம்'' என்றார்.
-
17th March 2010, 12:23 PM
#310
Senior Member
Seasoned Hubber
"அரசி' மற்றும் "அபிராமி' தொடர்களில் பிஸியாக இருக்கும் ராதிகாவும், கௌதமியும் முதன் முறையாக விஜய் டி.வி.யின் "ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சிக்கு நடுவராக பொறுப்பேற்று இருக்கிறார்கள். "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியின் ஒரு பகுதிக்கு சிறப்பு விருந்தினராக வந்ததுதான் கௌதமியின் கடைசி விஜய் டி.வி. விஜயம். ராதிகாவுக்கு இதுதான் முதல் விஜயம்.
கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த ஜெயா டி.வி.யின் "ராகமாலிகா', இனி வரும் சுற்றுகளில் 8 முதல் 13 வயதுக்குள்ளானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் போகிறது. இந்த சுற்றுகளுக்கு நடுவராகப் பொறுப்பேற்கிறார் பாடகி பி.சுசீலா. இந்த வரிசையில் அடுத்த மாதம் முதல் "ஹரியுடன் நான்' என்ற இசை நிகழ்ச்சியையும் களம் இறக்குகிறது ஜெயா தரப்பு.
பாண்டியராஜன் - அர்ச்சனாவை வைத்து "கலக்கப் போவது யாரு? ஜூனியரை' இந்த வாரம் முடிக்கப் போகிறது விஜய் டி.வி. தமிழ் தொலைக்காட்சியின் காமெடி ரியாலிட்டி ஷோவுக்கு முன்னோடியான இந்த நிகழ்ச்சியை மீண்டும் புதுப் பாணி மற்றும் பொலிவுடன் இறக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறதாம் விஜய் நிர்வாகம். இதற்காக முன்னணி நகைச்சுவை நடிகர்களை நடுவராக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
தமிழ்ப் படத்தைத் தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனம், சீரியல் என வாய்ப்புகள் வந்த போதிலும், அனைத்தையும் மறுத்து, தற்போது "சன் குடும்ப விருது'களில் அமர்ந்திருக்கிறார் கஸ்தூரி. இந்த நிகழ்ச்சிக்காக இதற்கு முன் சீரியல்களே பார்த்திராத அவருக்கு "கோலங்கள்', "அரசி' உள்ளிட்ட சீரியல்களின் முக்கிய காட்சிகள் தனியே காட்சியிடப்பட்டிருக்கிறது.
http://dinamani.com/edition/story.as...41&SEO=&Title=
Bookmarks