-
23rd October 2009, 08:34 PM
#21
Senior Member
Veteran Hubber
மக்கள் கலைஞரின் குழந்தையும் தெய்வமும் , 19.11.1965 அன்று, அவரது 4-வது திரைப்படமாக வெளியாகி , 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
இத்திரைப்படம் 100 நாள் ஓடிய திரையரங்குகள் : (3 ஊர்கள் / 5 அரங்குகள்)
1. சென்னை - வெலிங்டன்
2. சென்னை - ராக்ஸி ( 765 இருக்கைகள் )
3. சென்னை - முருகன் ( 808 இருக்கைகள் )
4. திருச்சி - பேலஸ் ( 1001 இருக்கைகள் )
5. கோவை - டிலைட்
அன்புடன்,
பம்மலார்.
-
23rd October 2009 08:34 PM
# ADS
Circuit advertisement
-
24th October 2009, 08:53 PM
#22
Senior Member
Veteran Hubber
சகோதரி சாரதா அவர்களுக்கு,
எம்மைப் பாராட்டிய தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி !
தாங்கள் எழுதியது போல் மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை பிராட்வே யில் 176 நாட்களும், மேகலா வில் 176 நாட்களும் ஓடியது. காஸினோ வில் மட்டும், ஒரு வாரம் குறைவாக, 211 நாட்கள் ஓடியது. அதே காஸினோ வில் , முந்தைய ஆண்டில், 210 நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் சாதனையை, 211 நாட்கள் ஓடி எங்க வீட்டுப் பிள்ளை முறியடித்தது.
அடுத்ததாக, மெல்லிசை மன்னர்கள் பிரிந்த பின், எம்.எஸ்.வி. அவர்கள் தனித்து இசையமைக்கத் தொடங்கிய முதல் படம் மக்கள் திலகத்தின் கலங்கரை விளக்கம். எனினும், அவர் தனித்து இசையமைத்த மக்கள் கலைஞரின் நீ , முதல் திரைப்படமாக வெளிவந்தது.
மற்றொன்று, முருகன் திரையரங்கைப் பற்றி தாங்கள் எழுதியது முற்றிலும் உண்மை. அதில் ஒரு கூடுதல் தகவல். நடிகர் திலகத்தின் நானே ராஜா திரைப்படம் தான் , அவரது திரைப்படங்களில், முருகன் திரையரங்கில் வெளியான முதல் திரைப்படம் (வெளியான தேதி : 25.1.1956). நடிகர் திலகத்தின் நானே ராஜா சென்னை மாநகரில் முதன்முதலில் 6 திரையரங்குகளில் வெளியாகி புதிய சாதனையை ஏற்படுத்தியது. அசோக், சன், முருகன், நூர்ஜஹான், கபாலி, பிரைட்டன் ஆகிய 6 திரையரங்குகளில் இந்தப்படம் வெளியானது.
குழந்தையும் தெய்வமும் குறித்த ஒரு அபூர்வ தகவல் :
ஏவிஎம் தயாரிப்பில், மக்கள் கலைஞரின் ஹீரோ நடிப்பில், பெண் குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி இரு வேடங்களில் கலக்கிய குழந்தையும் தெய்வமும் , மதுரையில் உள்ள சந்திரா திரையரங்கில் 99 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. மதுரையில் உள்ள ஏனைய பெரிய அரங்குகளைப் போன்றே , மிகப் பெரிய திரையரங்கமான சந்திரா , 1550 இருக்கைகளைக் கொண்டது.
அன்புடன்,
பம்மலார்.
-
24th October 2009, 09:31 PM
#23
Senior Member
Seasoned Hubber
சகோதரி சாரதா அவர்களுக்கு,
மக்கள் கலைஞர் அவர்களின் படைப்புக்களைப் பற்றி அலசும் இத்திரி மிக அருமையாக அமைந்து விறுவிறுப்பாக செல்கிறது. பாராட்டுக்கள். ஏற்கெனவே மிட்லண்ட்டில் பார்த்த விளையாட்டுப்பிள்ளை படத்தை மீண்டும் பார்க்க எண்ணி குறைந்த கட்டண வகுப்பிற்குப் போனால் டிக்கெட் கிடைக்கவில்லை, எனவே அங்கிருந்து சித்ரா திரையரங்கில் போய் தபால்காரன் படத்தைப் பார்த்தது நன்கு நினைவுள்ளது. நான்கு கில்லாடிகள் தெய்வமகன் வெளியான போது சில தினங்கள் கழித்து கெயிட்டியில் வெளியானது. இரண்டும் ஒரே நாளில் வெளியாகவில்லை. நான்கு கில்லாடிகள் படமும் சாந்தியில் (ஏற்கெனவே பார்த்தாகி விட்டது) தெய்வ மகன் டிக்கெட் கிடைக்காததால் போய்ப் பார்த்தது. இப்படி நான் மற்ற படங்களைப் பார்ப்தற்கும் நடிகர் திலகம் தான் மறைமுகமாக உத்தரவிட்டார். அவர் படத்திற்கு டிக்கெட் கிடைத்திருந்தால் இப்படி மற்ற நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்பேன்.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th October 2009, 09:53 PM
#24
Senior Member
Diamond Hubber
Nice & informative thread
Originally Posted by
pammalar
முந்தைய ஆண்டில், 210 நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் சாதனையை, 211 நாட்கள் ஓடி எங்க வீட்டுப் பிள்ளை முறியடித்தது.
muriyadikka'pada vendum enbadharkkagave 1 naal adhigamaga Ottugirargala?
-
25th October 2009, 10:46 AM
#25
Senior Member
Veteran Hubber
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களை , பேசும் படம் சினிமா மாத இதழ் , தனது பிப்ரவரி 1965 இதழில் , இம்மாத நக்ஷத்திரமாக கெளரவப்படுத்தியது. அதிலிருந்து :
"சிட்டாடல் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ள 'இரவும் பகலும்' படத்தில் புதுமுகம் ஜெய்சங்கர் அறிமுகமாகியிருக்கிறார். 1965 - ம் ஆண்டில் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் ஒரு பண்பட்ட நாடக நடிகர். 'இரவும் பகலும்' இவரது முதல் படமாயினும் அந்தப் பண்பட்ட நடிப்பை இவரிடம் நாம் காண முடிகிறது.
இவருடன் பிரதம பாகத்தில் நடித்திருக்கும் நடிகை ஒரு புதுமுகமாக இருந்தாலும் , அதையும் தனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு காதல் காட்சிகளில் குழைந்து நடித்து சபாஷ் பெற்று விடுகிறார் ஜெய்சங்கர்.
காதல் காட்சிகளில் மட்டுமல்ல ; சண்டைக் காட்சிகளிலும் கூட இவர் கைகளில் காணப்படும் வேகத்தை இவரது உடலின் நெளிவுகளிலும் காண முடிகிறது. பந்தைப் போல் தாவிக் குதித்து , இவர் போடும் சண்டைக் காட்சிகள் , எதிர்காலத்தில் மக்கள் இதயத்தில் இவருக்கு நிரந்தரமான இடம் இருக்கும் என்பதைக் காட்டியிருக்கிறது.
சோகக் காட்சிகளிலும் ஜெய்சங்கர் சோடை போகாமல் நடித்திருக்கிறார்.
புதுமுகம் ஜெய்சங்கரை அவரது நடிப்புக்காக 'இம்மாத நக்ஷத்திரம்' என்று கெளரவித்து வரவேற்கிறோம்."
என்னே ஒரு தீர்க்க தரிசனமான கணிப்பு !
அன்புடன்,
பம்மலார்.
-
25th October 2009, 04:55 PM
#26
Senior Member
Seasoned Hubber
சகோதரி சாரதா அவர்களுக்கு,
மக்கள் கலைஞர் படங்கள் நம் நெஞ்சை விட்டு என்றும் அகலாது. ராஜா வீட்டுப் பிள்ளை வெற்றிகரமாக ஓடியது. சென்னை ஸ்டார் திரையரங்கில் கடைசி நாள் வரை குறைந்த வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்ற பெருமை அப்படத்திற்கு உண்டு. தூர்தர்ஷனின் புண்ணியத்தில் அப்படம் பலமுறை திரையிடப்பட்டது. தற்போது ஒளிக்குறுந்தட்டில் வெளிவந்துள்ளது. பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் பாடல்மிகவும் பிரபலம்.
மற்றபடி ஜெய்சங்கர் கார் ஓட்டக்கற்றுக் கொடுக்கும் பாடல் புதுசு இது புதுசு, இப்பாடல் சபாஷ் தம்பி படத்தில் இடம் பெற்றதாகும். சபாஷ் தம்பி படம் சென்னை பாரகன் திரையரங்கில் பார்த்தது நன்கு நினைவுள்ளது. நாம் மூவர் காமதேனு திரையரங்கில் வெளியானது. மாடி வீட்டு மாப்பிள்ளை, அஞ்சல் பெட்டி 520 போல பல புதிய படங்களும் காமதேனு திரையரங்கில் வெளியாகின.
சபாஷ் தம்பி சற்றும் அலுப்புத் தட்டாத படம். ஆனால் அதற்குரிய வெற்றியை அப்படம் பெறவில்லை.
தாங்கள் கூறுவது போல் பாலன் பிக்சர்ஸ் தொடர்ந்து எடுத்த பல படங்களுக்கும் சுப்பையா நாயுடு தான் இசை. சக்கரம், பதிலுக்கு பதில் போன்ற படங்களும் அடங்கும்.
வாய்ப்புக்கு நன்றி.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th October 2009, 07:16 PM
#27
Senior Member
Veteran Hubber
Originally Posted by
saradhaa_sn
நகைச்சுவை முலாம் பூசிய 'நான்கு கில்லாடிகள்' படமும், கே.எஸ்.ஜி.யின் சீரியஸ் படமான 'தபால்காரன் தங்கை'யும் ஒரே நாளில் ரிலீஸானதாகச்சொல்வார்கள்.
நான்கு கில்லாடிகள் வெளியான தேதி : 25.9.1969
தபால்காரன் தங்கை வெளியான தேதி : 13.3.1970
அன்புடன்,
பம்மலார்.
-
25th October 2009, 08:12 PM
#28
Senior Member
Veteran Hubber
1966 - ம் ஆண்டில் மக்கள் கலைஞர் ஜெய் 6 திரைப்படங்களில் நடித்திருந்தார். அவை :
( திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்ற ஃபார்மெட்டில் )
1. இரு வல்லவர்கள் - 11.3.1966 - காமதேனு, பாரத், லிபர்ட்டி
2. யார் நீ ? - 14.4.1966 - வெலிங்டன், பிரபாத், சரஸ்வதி
3. நாம் மூவர் - 5.8.1966 - காமதேனு, மஹாராஜா, மஹாலக்ஷ்மி, ஜெயராஜ்
4. காதல் படுத்தும் பாடு - 7.10.1966
5. கெளரி கல்யாணம் - 11.11.1966
6. வல்லவன் ஒருவன் - 11.11.1966
அன்புடன்,
பம்மலார்.
-
25th October 2009, 09:30 PM
#29
Senior Member
Seasoned Hubber
The other song from Jeevanamsam:
Enakkulle Nee irukka, Unakkulle nan iruukka sung by TMS.
Kadhal Paduthum Paadu- Gaiety
Vallavan Oruvan - Globe
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th October 2009, 07:47 PM
#30
Senior Member
Veteran Hubber
அக்கா தங்கை திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி அமோக வெற்றி கண்ட படம். குறைந்த செலவில் எடுக்கப்பட்டு , நிறைந்த வசூல் குவித்த படமும் கூட. தேவர் பிலிம்ஸ் தயாரிப்புகளிலேயே மிக மிக வித்தியாசமான படம்.
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks