Page 25 of 63 FirstFirst ... 15232425262735 ... LastLast
Results 241 to 250 of 626

Thread: TV tid bits

  1. #241
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மானாட மயிலாட நடன நிகழ்ச்சிக்குப் பிறகு பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்த கலைஞர் குழுமம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்கும் நடன மாஸ்டர் காலா மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் நடுவர்களாக இருப்பார்களாம். இதை தவிர இன்னொரு நடுவராக நமீதா மற்றும் ரம்பாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிகிறது. இவர்களைத் தவிர புது நடிகை ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது.
    Thanks: Dinamani
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #242
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரையில் இருந்து...



    சின்னத்திரை வட்டாரத்தில் சித்ரலேகாவைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். லேகா ரத்னகுமாரின் இயக்கத்தில் வந்த இருட்டில் ஒருவானம்பாடி தொடரில் தான் தனது கலைப்பணியை தொடங்கினார். அந்த தொடருக்கு வசனம் எழுதியதோடு, பாடலும் எழுதி கவிஞராகவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து `அஞ்சாதே அஞ்சு', `இருட்டுக்கு இரண்டு நிறம்,' `நீ எங்கே என் அன்பே' என தொடர்ந்து வந்த தொடர்களிலும் இவர்தான் வசனம், பாடல்கள்.

    சின்னத்திரையில் இப்படி முன்னணி வசனகர்த்தாவாக இருந்து வந்த சித்ரலேகா இப்போது பெரிய திரைக்கு புரமோஷன் ஆகிறார். லேகா ரத்னகுமார் இயக்கும் படத்திற்கு கதை,வசனம் இவர்தான். அதோடு வழக்கம் போல் பாடல்களும் எழுதுகிறார்.

    படத்தின் கதை பற்றி கேட்டால், "அமெரிக்காவில் நடக்கிற மாதிரியான கதை. அதனால் 70 சதவீதம் அமெரிக்காவிலும், ஏற்காட்டில் 30 சதவீதமும் படப்பிடிப்பு இருக்கும். இன்றைய நாட்டு நடப்பை பிரதிபலிக்கும் கதையாக இருக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன்'' என்கிறார்.


    [html:78f246d15e]<div align="center">[/html:78f246d15e]
    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #243
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    It is reported that the Vijayawada-born actress has joined hands with a Tamil TV channel for the 'marriage reality show'.In this endeavour, Rambha has the full support of her parents, who have been trying to find a bridegroom for their daughter for the last few years. When Rambha came up with this idea, they gave their consent immediately, our sources say.
    It is learnt that her parents would get half of the profits from the show and a deal has been agreed upon to this effect.
    'Rakhi Ka Swayamvar', aired on NDTV Imagine had been a huge a success. Canada-based businessman Elesh Parujanwala won the tough competition to win Rakhi's hand.
    "அன்பே சிவம்.

  5. #244
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    'Karuthamma' fame Rajashree enters wedlock


    Actress Rajashree made her debut in Tamil Cinema with Bharathiraja's 'Karuthamma'. Winning laurels for her prodigious performance, she continued getting on with fantastic shows in 'Sedhu', 'Nandha', 'Run', 'Manasellam', 'Vetaiyadu Vilaiyaadu'. Rajashree has spelled prominent roles around 57 films in Telugu and Tamil. Apart from Silver Screen, the actress leaped with best credits in TV series 'Aalayam', 'Agal Vilakku', 'Mandhira Vasal' and 'Sivamayam'.

    Both Rajashree and Ansari Raja, proprietor of 'Body Shape' Gym of Chennai were in love for quite some time. It was a customary marriage according to Hindu-Muslim religion that was attended by their family members and close friends.
    "அன்பே சிவம்.

  6. #245
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Sun Tv is strengthening it's top, by the day. Mr. LV Navaneeth leaves Radio One[ he was station and programming head, Chennai] to Join Sun TV as VP content and revenue.

    His key focus will be to manage the business of network's non general entertainment channels. He will handle the music, movies, comedy and kids' channels of the group, comprising Sun Music, KiranTV, Gemini Music, Udaya2, Chutti TV, Chintu TV, Kushi TV, KTV, Udaya Movies, Teja TV, Ushe TV and Adithya.

    Armed with 15 years of experience of programming, advertising and marketing in media and entertainment, Navaneeth has been associated with The Hindu, HCL and Radio One.

    After being with The Hindu for eight years, from 1998 to mid 2006, he left the company as GM, advertising and marketing. Later, he was with Radio One for three years and was responsible for launching the Chennai station.

    Navaneeth is an engineering graduate in Instrumentation Technology and also holds a post graduate diploma in Marketing Communications from Mudra Institute of Communications, Ahmedabad.
    "அன்பே சிவம்.

  7. #246
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    சினிமா
    ரியாலிட்டி ஷோவில் ரம்பா



    "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் இருந்து கை கழுவப்பட்ட ரம்பாவை தெலுங்கு சேனல் ஒன்று "ரியாலிட்டி ஷோ'வுக்காக அணுகி இருக்கிறது. ஆனால் ரம்பாவின் சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்த சேனல் தரப்பு, அந்த முயற்சியைக் கைவிட எண்ணியுள்ளது. வந்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என சம்பளத்தில் இருந்து இறங்கி வந்தாராம் ரம்பா. மார்க்கெட் இல்லாத நடிகைகள் நிறைய பேர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்களாம்.



    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  8. #247
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    சீரியல் மற்றும் சினிமாக்களில் கவனம் செலுத்தி வரும் நீலிமா ராணி, "ஜக்குபாய்' மற்றும் "புகைப்படம்' படங்களைப் பெரிதும் எதிர்பார்க்கிறார். இந்தப் படங்களின் ரீலீசுக்குப் பிறகு திரையுலகில் தன் "மவுசு' கூடிவிடும் எனவும் சொல்லி வருகிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் திருமணமானவுடன் எங்கும் செல்லாமல் இருந்த நீலிமா, ஜனவரிக்குப் பிறகு கணவருடன் லண்டன் செல்லத் திட்டம் வைத்திருக்கிறார்.


    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  9. #248
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,602
    Post Thanks / Like

    உறுதியாக இருந்தால், எதையும் சாதிக்கலாம்

    ஸ்ரீதேவிகுமரேசன்
    First Published : 13 Sep 2009 10:45:00 AM IST

    Last Updated : 13 Sep 2009 10:58:15 AM IST

    அரசி இப்போது "செல்லமே' ஆகிவிட்டார். ஆமாம்! இதுவரை அரசியாக தமிழ் நெஞ்சங்களின் இல்லத்திற்கு வந்து இதயத்தில் இடம் பிடித்த ராதிகா, இப்போது போலீஸ் தொப்பியைக் கழட்டி வைத்துவிட்டு "செல்லமாக' செல்லம்மாவாகி பாசத்தைக் கொட்ட வருகிறார். சித்தி தொடருக்காக திருச்சி ஸ்ரீரங்கம், சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தவர், இப்போது திருக்கோவில்கள் குடிகொண்டிருக்கும் கும்பகோணம், சுவாமிமலையைச் சுற்றி படமாக்கி வந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் அவரது அலுவலகத்தில் அவரிடம் பேச ஆரம்பித்தோம்:

    செல்லமே' என்ன மாதிரியான தொடர்? மற்ற தொடர்களிலிருந்து இது எப்படி மாறுபட்டது?

    அரசி, சித்தி இரண்டிலும் என்னை மையப்படுத்தி எடுத்திருந்தோம். "செல்லமே' ஒரு குடும்பத்தின் கதை. குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். இவங்க கெட்டவங்க. இவங்க ரொம்ப நல்லவங்க என பட்டியல் போடாமல் சாதாரண குடும்பங்களில் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பாசப் பிரச்னைகளோடு சொல்கிற கதை. இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கையின் பெருமையை உணர்த்துவதாக இருக்கும். உயிருக்கு உயிரான நண்பர்கள்கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எதிரியாகிவிடுகிறார்கள். உறவுகள் பிரிந்தால் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறோம்.

    வேறு என்ன புதிய சிறப்புகள் இருக்கிறது?

    இந்தத் தொடர் கிராமிய மணத்தோடு இருக்கும்."மாறன்' என்கிற படத்தை இயக்கிய ஜவகர், இந்தத் தொடரை

    டைரக்ட் செய்கிறார். இதில் முதன் முறையாக என்னோடு சேர்ந்து எனக்கு அண்ணனாக ராதாரவி நடிக்கிறார். பெரும்பாலான காட்சிகளை கும்ப கோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் போன்ற இடங்களில் எடுத்திருக்கிறோம். சினிமா படப்பிடிப்புக்குச் சென்ற மாதிரி அதே குவாலிட்டியோடு அவுட்டோரில் படமாக்கப்பட்டிருக்கிறது.

    இரண்டு வருஷமா அரசியாக வாழ்ந்தீர்கள்? அந்தக் கதாபாத்திரத் திலிருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?

    ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. நான் அந்தக் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வர ரொம்ப நாளாகக் காத்திருந்தேன். சினிமாவில் வந்து ரெண்டு வேடம் பண்றதுக்கு நிறைய நேரம் எடுத்து பண்ணுவோம். டிவியைப் பொறுத்த வரைக்கும் நிற்கவே டயம் கிடையாது. அப்படி இருக்கும்போது ரெண்டு ரோல் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். குரலை மாற்ற வேண்டும், டிரெஸ் மாற்ற வேண்டும். ரொம்ப ரொம்ப சேலஞ்சிங்கான கேரக்டர். அந்த கேரக்டருக்கு குட்பை சொல்ற நேரம் வந்தது.. கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷம்தான்.

    இரவு ஒன்பது முப்பது என்றால் அது உங்கள் நேரம் என பத்து வருடங்களுக்கும் மேலாக நிலைக்க வைத்துவிட்டீர்கள்? அதன் ரகசியம் என்ன?

    ரகசியமே கிடையாது. எல்லாம் போராட்டம்தான். இயல்பிலேயே எனக்குள்ளே போராட்ட குணம் இருப்பதால் அதைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. கஷ்டம் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்னையை உருவாக்கி அதற்கு எதிர்பார்ப்பு உருவாக்க நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் மிகப்பெரிய சிக்கல்கள் எல்லாம் வரும். அதையெல்லாம் தாங்கி சமாளிக்க வேண்டியதுதான்.

    "செல்வி'யாவும் "அரசி'யாகவும் நடித்தீர்கள். இதில் எந்த வேடம் உங்களுக்குப் பிடித்திருந்தது?

    ரெண்டும் வித்தியாசம்தான். "செல்வி' மூணு வருஷம் பண்ணுனேன். "அரசி' ரெண்டரை வருஷம் பண்ணுனேன்.

    எனக்கு நான் எடுத்துக் கொண்ட எல்லா வேடங்களும் பிடிக்கும், அதை நான் ரசித்துப் பண்ணுவதால்.

    நீங்கள் தயாரிக்கும் "செந்தூரப்பூவே' தொடரில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை?

    எவ்வளவுதான் நடிக்கிறது? நான் பிஸினûஸப் பார்க்கணும். தயாரிப்பைப் பார்க்கணும். நடிப்பைப் பார்க்கணும். பசங்களைப் பார்க்கணும். கணவரைப் பார்க்கணும். எல்லாம் இருக்கே. ஒரு சீரியலுக்கு மேல் நடிக்கிறது ரொம்ப கஷ்டமான வேலை. நேரம் கிடைக் கும்போது பசங் ககூடதான் இருக்கேன். அவங்க ஹோம் ஒர்க் பார்ப்பது, ஸ்கூல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது இதற்கே நேரம் போய்விடுகிறது.

    சில நடிகைகளிடம் பேசியபோது உங்களை ரோல் மாடலாக நினைக்கிறார்கள்? அதைப் பற்றி என்ன

    நினைக்கிறீர்கள்?

    கீழே விழுந்தாலும் டக்குன்னு எழுந்திருச்சி நடக்க வேண்டும். உருண்டு புரண்டு அழுதுகிட்டு இருக்கமுடியாது. அதை ரொம்ப சீக்கிரமா கத்துக்கிட்டேன். அதைப் பார்த்து அப்படி நினைச்சிருப் பாங்க. நான் எப்படி வந்தேன், எப்படி இருக்கேன், எப்படி எல்லாம் விழுந்து அடி பட்டு எழுந்தேன் என எல்லாமே

    அவர்களுக்குத் தெரிகிறதில்லையா?

    வேறு படங்களில் நடிப்பதில்லையே ஏன்?

    நடிக்கக் கூடாது என்று இல்லை. நேரம் சரியாக அமையவில்லை. கண்டிப்பாக நடிப்பேன். சரியான நேரமும் கேரக்டரும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

    உங்களுடைய "அரசி' இயக்குநர் சமுத்திரக்கனி, "நாடோடிகள்' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிலேயும் வாய்ப்பு கிடைத்து உயர்ந்திருக்கிறாரே? அவரைப் பற்றி?

    அந்தக் கதையை நான் பண்ண வேண்டியது. அவர் என்னிடம் அந்தக் கதையை சொன்னபோதே நான் சொன்னேன். ரொம்ப நல்லா இருக்கு கனி. இந்தச் சமயத்துல எனக்கு வேறு கமிட்மென்ட் இருந்ததால் இந்தப் படம் பண்ண முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அவர் நம்பிக்கையோட ஜெயிச்சிருக்கார். "செல்லமே' தொடர் ஆரம்பமாவதைக் கேள்விப்பட்டு, "உங்க புது சீரியலில் பத்து நாள் வந்து ஒர்க் பண்ணிட்டு போவட்டுமா?'ன்னு போன் செய்தார். அப்படி ஒரு சென்டிமெண்ட் அவரிடம்.

    சின்னத்திரை மூலமா மக்களைத் தினம் சந்திக்கிறீர்கள்? அவர்களுக்கு இதன் மூலமாக என்ன சொல்ல விரும்புறீர்கள்?

    நான் நினைக்கிறது சொல்றது எல்லாமே சீரியல் மூலமா சொல்லிடுறேன். அடிப் படையில் எனக்கு "நீ அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்' என்று அட்வைஸ் பண்ணுவதெல்லாம் பிடிக்காது.எந்தத் துறையில் இருந்தாலும் குடும்பத் தலை வியா இருந்தாலும் அல்லது வேலைக்குச் சென்றாலும் சமையல்காரியாக இருந்தாலும் எந்த இடத்திலும் உறுதியாக இருந்தோம் என்றால் நம்மால் சாதிக்க முடியும்.


    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  10. #249
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    சின்னத்திரை வண்ணத்துளிகள்



    * சன் மியூசிக்கில் இசைநிகழ்ச்சியை வழங்கி வந்த ஹேமாசின்ஹா இப்போது சுவிட்சர்லாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.


    * நடிகை சுவர்ணமால்யா கையில் இப்போதைக்கு `தெக்கத்தி சீமையிலே' தொடர் மட்டுமே இருக்கிறது. இதனால் சினிமா வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


    * சின்னத்திரை அளவுக்கு பெரிய திரையிலும் வாய்ப்புக்களை தேடிக்கொள்ளும் நீலிமா ராணி பெரியதிரைக்காக நடித்த `புகைப்படம்' படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ஜக்குபாய் படத்திலும் இவருக்கு முக்கிய வேடம்.


    * `மெட்டிஒலி' உமா இப்போது கவரிமான்கள் தொடரில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். பெரிய திரை வாய்ப்புக்களுக்கும் முயற்சித்ததில் 2 படங்களில் அழைப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே சேரனின் `வெற்றிக்கொடி கட்டு' படத்தில் உமா நடித்திருந்தது குறிப்படத்தக்கது.


    * நாகவல்லி சீரியல் மூலமாக முதன்முதலாக சின்னத்திரைக்கு வந்திருக்கும் நடிகர் பொன்னம்பலம், படப்பிடிப்பு அவுட்டோரில் நடப்பதையொட்டி ஒரு கேரவனை தனது சொந்தச் செலவில் அங்கே கொண்டு வந்தார். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரையிலும் அவரால் கேரவனில் வந்து ஒய்வெடுக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு தொடர் படப்பிடிப்பு நடந்து பொன்னம்பலத்தை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #250
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    தெலுங்கு சீரியலில் சிம்ரன்

    நடிகை சிம்ரன் சினிமாவில் வாய்ப்பு அரிதானதும் தமிழில் சின்னத்திரை பக்கமாக நகர்ந்தார். பிரமிட் சாய்மீரா தயாரித்த `சிம்ரன் திரை' தொடரில் நடித்தார். தொடர்ந்து சீரியல் வாய்ப்புக்களும் இல்லாத நிலையில் இப்போது தெலுங்கில் கிடைத்த சீரியல் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். தெலுங்கு சீரியலில் நடித்தபடியே தெலுங்குப் படங்களில் நடிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Page 25 of 63 FirstFirst ... 15232425262735 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •