-
16th August 2009, 11:39 PM
#231
Moderator
Diamond Hubber
சீரியல் சீரியஸ்
சின்னத்திரை வட்டாரத்தில் சீரியல்களில் நடிக்கும் நடிப்புக் கலைஞர்களுக்கு பணப்பட்டுவாடா என்பது இதுவரை பிரச்சினையில்லாமல் தான் இருந்து வந்தது. முதன் முதலாக ஒரு சேனல் புண்ணியத்தில் இப்போது இதிலும் பிரச்சினையாகி விட்டது. குறிப்பிட்ட அந்த சேனலில் சீரியல் தயாரித்து வழங்கியவர்களுக்கு சேனல் உரிய நேரத்தில் உரியமுறையில் பணப்பட்டுவாடா செய்யாமல் காலம் கடத்த, அதனால் சீரியலில் நடித்தவர்களுக்கு தயாரிப்பாளர்களால் உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்கமுடியாமல் போய்விட்டது. சம்பளப்பிரச்சினை சின்னத்திரை நடிகர் சங்கத்தை எட்ட, விசாரித்தவர்களுக்கு சேனலின் அலட்சிய போக்கு தெரிய வந்திருக்கிறது.
இதனால் சங்கங்கள் மூலம் சம்பளத்தை சேனலில் இருந்து வாங்குவது தொடர்பான வேலைகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, இனி அந்த சேனலுக்கு யாரும் சீரியல் தயாரிக்க முன்வரக்கூடாது என்ற உத்தரவும் அரங்கேறத் தயாராக இருக்கிறது.
நன்றி: தினதந்தி
-
16th August 2009 11:39 PM
# ADS
Circuit advertisement
-
16th August 2009, 11:40 PM
#232
Moderator
Diamond Hubber
மாப்பிள்ளை இயக்குனர்
சின்னத்திரையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்ரமாதித்தனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. வருகிற 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமணம். இந்திய கம்ïனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழுத்தலைவர் இரா.நல்லகண்ணு தலைமை தாங்கி நடத்தி வைக்கும் இந்த திருமணம் வாலஜாபேட்டையில் உள்ள உமா ஏழுமலையான் மகாலில் நடக்கிறது.
திருமணத்தையொட்டி சின்னத்திரையின் ஒட்டுமொத்த பிரபலங்களுக்கும் ஒருவர் விடாமல் அழைப்பு வைத்திருக்கிறார், விக்ரமாதித்தன்.
மணப்பெண் மங்களசுந்தரி சின்னத்திரை இயக்குனருக்கு மனைவியாவோம் என்று தெரியாமல் அதுவரை சீரியல் எதுவும் பார்க்காமல் இருந்திருக்கிறார். இப்போது கணவரே சீரியல் இயக்குனர் என்றதும் முதல்கட்டமாக கணவர் இயக்கும் மேகலா சீரியலை பார்க்கத் தொடங்கியிருக்கிறாராம்.
நன்றி: தினதந்தி
-
22nd August 2009, 07:20 PM
#233
Moderator
Diamond Hubber
சீரியல் மற்றும் சினிமாவில் முழு நேர நடிகையாகிறார் சோனியா அகர்வால்
மண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்ற பானுப்பிரியா, நளினி, சீதா, சரிதா, அம்பிகா, சுகன்யா, மீரா வாசுதேவன் உள்ளிட்டோர் சீரியல் மற்றும் சினிமாவில் முழு நேர நடிகையாகி விட்டனர். இவர்களைத் தொடர்ந்து சோனியா அகர்வாலும் முழு நேர நடிகையாகிறார். குடும்ப பிரச்னைகளால் "நாணல்' தொடரிலிருந்து விலகிய அவர் மீண்டும் அதில் நடிக்கிறார். சினிமா விஜயமும் இருக்குமாம்.
Thanks: Dinamani
-
22nd August 2009, 07:24 PM
#234
Moderator
Diamond Hubber
முரளி மகன் அதர்வா அறிமுகமாகும் "பானா காத்தாடி' படம் மூலம் அவருக்கு ஜோடி சேருகிறார்
சின்னத்திரை தொகுப்பாளினி மகேஸ்வரி. இதை தவிர "ஓடிப் போலாமா' படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். "குயில்' படம் மூலம் சினிமாவுக்கு வந்த மஹேஸ்வரி "பானா காத்தாடி' படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். மஹேஸ்வரிக்கு சீரியல் திட்டமும் இருக்கிறதாம்.
Thanks: Dinamani
-
22nd August 2009, 07:27 PM
#235
Moderator
Diamond Hubber
மஹாலட்சுமி, குட்டி பூஜா
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த மஹாலட்சுமியை திடீரென்று காணவில்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்திருக்கிறார் சீரியல் நடிகையாக, "அரசி' தொடரில் ராதிகாவுக்கு இவர்தான் தங்கை. சீரியல்களில் சீரியஸôன கேரக்டர் இல்லாமல் ஜாலியான கேரக்டர்கள் தந்தால் தொடர்ந்து சீரியலில் நடிப்பாராம்.
[html:c4398f2971]<div align="center">
[/html:c4398f2971]
Thanks: Dinamani
-
22nd August 2009, 07:28 PM
#236
Moderator
Diamond Hubber
கலைஞர் குழுமத்தில் இருந்து சிறுவர்களுக்கான சேனல் ஒன்று வர இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவாக முடுக்கி விடப்பட்டுள்ளன. மற்ற குழுமத்திலிருந்து வரும் அந்த சேனலை மிஞ்சும் அளவிற்கு நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்பது புதிய சேனலின் திட்டம். வாரம் ஒரு வெளிநாட்டு கார்ட்டூன் படம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கலாம்.
Thanks: Dinamani
-
22nd August 2009, 07:29 PM
#237
Moderator
Diamond Hubber
மெகா டி.வி.யின் ஆஸ்தான தொகுப்பாளினி ஐஸ்வர்யா அடுத்த மாதம் என்ஜினீயர் ராம் என்பவரை மனம் முடித்து அமெரிக்கா பறக்கிறார். இதனால் மெகா டி.வி. தரப்பு வேறு ஒரு தொகுப்பாளரை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் உள்ளது. சீரியல்களை நடிப்பதை தவிர மெகா டி.வி.யின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஐஸ்வர்யாதான் வழங்கி வந்தார்.
Thanks: Dinamani
-
22nd August 2009, 07:29 PM
#238
Moderator
Diamond Hubber
மகன் பிரணிதாவுடன் நாளின் அதிக நேரத்தை ஒதுக்குகிறார் நடிகை குட்டி பூஜா. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பத்து லட்சத்தை அலேக்காக தட்டி சென்ற இவர் சீரியல்களுக்கு குட்பை சொல்லியிருக்கிறார். விஜய் டி.வி.யின் "அணு அளவும் பயமில்லை' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ள இவருக்கு இது போன்ற ஷோக்களின் மீது ஆர்வம் உள்ளதாம்.
Thanks: Dinamani
-
22nd August 2009, 07:30 PM
#239
Moderator
Diamond Hubber
ஆஸ்திரேலியாவே அல்லோல பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்கிறார் கலைஞர் டி.வி.யின் ஆஸ்தான தொகுப்பாளினி ரியா. விஸ்காம் சம்பந்தமாக படித்து விட்டு அவர் இந்தியா திரும்ப நான்கு வருடங்கள் ஆகுமாம். சென்னை வந்த பிறகு டி.வி. பக்கம் போகாமல் இயக்குநராக சினிமா பக்கம் வந்து விடுவாராம்.
Thanks: Dinamani
-
22nd August 2009, 07:30 PM
#240
Moderator
Diamond Hubber
வானிலைப் பெண் மோனிகா திருமணத்துக்கு பின் சன் டி.வி.க்கே நிகழ்ச்சி தொகுப்பாளாராக வந்து விட்டார். சில மாதங்களுக்கு முன் வங்கி அதிகாரி ஒருவரை திருமணம் முடித்த அவர் சீரியல்களை தவிர்த்து இருந்தார். திருமணத்துக்கு பின் சீரியல்கள் வேண்டாம் என புது மாப்பிள்ளை சொல்லவே மீண்டும் நிகழ்ச்சி தொகுக்க வந்திருக்கிறாராம். வானிலை செய்திகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
Thanks: Dinamani
Bookmarks