-
8th April 2009, 04:14 PM
#141
Senior Member
Seasoned Hubber
மக்கள் டிவியின் தொகுப்பாளினி இப்போ முகவரி நிகழ்ச்சி தொகுப்பாளினி. சுத்த தமிழ் சுகப்படலையா பிட்டு போட்டு பிக்கப் மன்னிக்கனும் துண்டு ஓட்டு துரத்தினேன். என் பூர்வீகம் புதுகோட்டை ஆனா சிங்கார சென்னை தான் வளர்ப்பு தாய். முதலில் செய்திகளுக்காக சுத்த தமிழ் பேசுறது கஷ்டமா இருந்தது. வணக்கம்னு சொல்லவே ஏகப்பட்ட டேக்குகள் வாங்கினேன்.ஆனா நான் வாசிச்ச செய்து யு டியூப் வரை ஹிட்.ஷாப்பிங் போறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதான் முகவரி நிகழ்ச்சிக்கு சம்மதிச்சேன்.கடையில் வந்திருக்கும் புது புது பொருட்களை பத்தி பேசுறதுதான் நிகழ்ச்சி ஒரு நாள் கொசு வத்தி லிக்யூடேட்டர்னு நினைச்சி ஒரு பொருளை கையில் எடுத்து பேச ஆரம்பிச்சேன். எல்லாம் முடிச்சிட்டு பாத்தா அது ரூம் ஏர்ப்ரெஷ்னர். இன்னொரு டேக்ல தப்பை சரி பண்ணிட்டேன் என்று சிரிக்கிறார் சுபஸ்ரீ.
குமுதம் 8.4.09
-
8th April 2009 04:14 PM
# ADS
Circuit advertisement
-
8th April 2009, 04:16 PM
#142
Senior Member
Seasoned Hubber
நான் கடவுள் படத்தில் பிச்சை பாத்திரம் பாட்டுல பிச்சி உதறிய பாடகர் மது பாலகிருஷ்ணன் கிரிக்கெட் ப்ளேயர் ஸ்ரீசாந்தின் உறவினர்.
-
8th April 2009, 05:40 PM
#143
Moderator
Diamond Hubber

Originally Posted by
Madhu Sree

march mudinju april-e vandhuduche

March = பங்குனி
thats approximately March 15 to April 15
--
-
13th April 2009, 11:01 PM
#144
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் புதிய காதல் ஜோடி
மேகலா, நாணல், சிவசக்தி, ருத்ரா என தொடர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ, இப்போது `காதல்'ஸ்ரீ. சிவசக்தி தொடரில் நடிகை சமீதா ஜோடியாக நடித்த நேரத்தில் காதல் தீ பற்றிக் கொண்டுவிட, சிவ-சக்தியாகும் நாளுக்காக காதல் ஜோடிகள் காத்திருக்கிறார்கள்.
காதல் கைகூடியதில் ஸ்ரீயை விடவும் ஸ்ரீமதிக்கு ரொம்பவே மகிழ்ச்சி என்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
13th April 2009, 11:02 PM
#145
Moderator
Diamond Hubber
தினம்தினம் தீபாவளி தொடரை இயக்கிவரும் டைரக்டர் ராஜேந்திரன், இப்போது தனது பெயரை கணேஷ் ராஜேந்திரன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.
நன்றி: தினதந்தி
-
13th April 2009, 11:02 PM
#146
Moderator
Diamond Hubber
கேமராமேன்கள் நடிப்பதை நடிகர் இளவரசு தொடங்கி வைத்தார். இப்போது அதையே தினம் தினம் தீபாவளி உள்ளிட்ட சில தொடர்களில் ஒளிப்பதிவாளராக இருக்கும் பி.சூர்யபிரகாஷ் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டார். இதே தொடரில் நாயகி ஆர்த்திக்கு அப்பாவாக நடித்ததுக் கொண்டிருப்பவர், கிச்சு கிச்சு தாம்பாளம், சண்டிக் குதிரைகள் போன்ற தொடர்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்.
நன்றி: தினதந்தி
-
13th April 2009, 11:04 PM
#147
Moderator
Diamond Hubber
பாவனா'ம்மா
கடந்த ஆண்டு பிரபல தெலுங்குப்பட இயக்குனர் விஜய கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை நடிகை பாவனா, கடந்தவாரம் ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். இதில் ஆச்சரியம், பிரசவத்துக்கு முந்தின தினம் கூட விக்ரமாதித்தன் இயக்கும் மேகலா தொடரில் நடித்துக் கொடுத்தது தான்.
நன்றி: தினதந்தி
-
13th April 2009, 11:25 PM
#148
Moderator
Diamond Hubber
சின்னத்திரை பிட்ஸ்
முக்கிய பொறுப்புகளில் : பெமினா மிஸ் இந்தியா போட்டி நிகழ்ச்சி, சோனி "டிவி'யில் காட்டப்பட்டது. 20 'மிஸ்'களில் தென்னகத்தை சேர்ந்த "மிஸ்' பெங்களூருவை சேர்ந்தவர். தொகுப்பாளராக மாதவன், நடுவராக அசின், நடனமாடுபவராக ஜெனிலியா. தொகுப்பாளினியாக பாலிவுட் கவர்ச்சி மலைகா அரோரா. லாலு ஸ்டைலில் பேசுவது உட்பட கிண்டல்களில் "மேடி' கலக்கி விட்டார்.
நிறைந்தது துளசி: கலைஞர் "டிவி'யில், திங்கள் முதல் வெள்ளி தோறும், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான "துளசி' முடிந்தது. இனி வி.பி.எல்., தமாஷ் நிகழ்ச்சி அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும்.
தகதிமிதாவில் வைஜயந்தி மாலா: ஜெயா சேனலில், செவ்வாய் காலை 7.30 க்கு, சிறப்பு நிகழ்ச்சியாக தகதிமிதாவில், பிரபல நடன மேதை வைஜயந்தி மாலா பங்கேற்கிறார்.
மக்களில் நேதாஜி: மக்கள் சேனலில், வார நாட்களில் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் நேதாஜி. விடுதலைப்போரில் வீர வழியை பின்பற்றிய மாவீரனின் கதை தான் தொடர்.
பட்டி மன்றம்: மக்கள் சேனலில், சித்திரை திருநாளில், வழக்கமான கொண் டாட்ட நிகழ்ச்சிகளுடன் இரவு 8 மணிக்கு ஒளிபரப் பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி இது. டாஸ்மாக்கே கதியென கிடக்கும் மொடாக் குடியர்களின் பட்டிமன்றம் இது
நன்றி: தினமலர்
-
18th April 2009, 06:16 PM
#149
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் முதன்முதலாக நடிக்க வந்த கவி நடிகை நாளொன்றுக்கு 75 ஆயிரம் சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் நாளடைவில் ஒரு எபிசோடுக்கான தயாரிப்புச் செலவில் நடிகையின்அதிகபட்ச சம்பளம் இடிக்க, நடிகையிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டார் தயாரிப்பாளர். நடிகை சம்மதிக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர் தொடரை நிறுத்திவிடும் முடிவுக்கு வந்துவிட, அதிர்ந்துபோன நடிகை அவசரஅவசரமாய் தன் சம்பளத்தை அதிரடியாய் குறைத்துக் கொண்டிருக்கிறார்.
-
18th April 2009, 06:17 PM
#150
Moderator
Diamond Hubber
`தினம் தினம் தீபாவளி' தொடரை இயக்கிவரும் டைரக்டர் கணேஷ் ராஜேந்திரன், சின்னத்திரை இயக்குனர்களில் வித்தியாசமானவர். தனது படப்பிடிப்பு நடக்கும்இடங்களில் நடிகர்-நடிகைள், டெக்னீஷியன்கள் யாருக்காவது பிறந்த நாள் என்றால் இவரே தன் கைப்பட ஒரு மெகா சைஸ் கேக்கை தன்செலவில் வரவழைத்து விடுகிறார். பிறந்த நாள் கொண்டாடுபவரை கேக் வெட்டச் செய்து வாழ்த்தவும் செய்கிறார். ஒரே ïனிட்டாக இருந்து செயல்படுபவர்களிடையே ஒரு நல்ல நட்புறவை இது வளர்க்கும் என்பது இவரது நம்பிக்கை.
Bookmarks