Page 8 of 63 FirstFirst ... 6789101858 ... LastLast
Results 71 to 80 of 626

Thread: TV tid bits

  1. #71
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கலைஞர் தொலைக்காட்சியில - அழகிய தமிழ் மகள்

    கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ``அழகிய தமிழ் மகள்.'' நடிகை ரோகிணி தொகுத்து வழங்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மகளிர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் என்று அலசி ஆராயப்படுகிறது.

    இந்தநிகழ்ச்சி, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதியின் கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.



    .
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #72
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மவுசு பெறும் மாயாஜாலத் தொடர்கள்



    சின்னத்திரையில் சீரியல்கள்தான் முன்னிலை என்ற நிலை சமீப காலம் வரை இருந்து வந்தது. இப்போது சீரியல்களை விட புராணத் தொடர்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி ரசிக்கிறார்கள் என்ற தகவல்கள் கிடைத்திருக்கிறது.

    புராணத்தொடர்களில் ராஜ்டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுபோக மாயாஜாலத் தொடர்களுக்கும் மவுசு கூடியிருக்கிறது. தொடர் தவிர்த்து விஜய் டிவியில் வாராவாரம் நடிகர் அலெக்ஸ் நடத்தி வரும் மாயாஜால நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    ஒரு சில சீரியல்கள் தவிர மற்றதெல்லாம் அழுதுவடியும் விதத்தில் தயாராவதால், ரசிகர்கள் குறிப்பாக பெண்கள் `இனியும் அழுவதற்கில்லை' என்று எடுத்தமுடிவுதான் இந்த சீரியல் புறக்கணிப்பு என்கிறார்கள்.

    .
    "அன்பே சிவம்.

  4. #73
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சந்திரபோஸ் - இரண்டாவது பாராட்டு
    ஏவி.எம்.மின் வைரநெஞ்சம் தொடரில் இப்போது நடிகராகி விட்ட முன்னாள் இசையமைப்பாளர் சந்திரபோஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சமீபத்தில் இவர் தொடர்பான ஒரு காட்சியை பார்த்த தொடரின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், சந்திரபோஸூக்கு போன் செய்து குறிப்பிட்ட காட்சியில் அவர் நடிப்பை மனம்விட்டுப் பாராட்டியிருக்கிறார். இந்தப் பாராட்டை கொஞ்சமும் எதிர்பாராத சந்திரபோஸ் நெகிழ்ந்து போயிருக்கிறார்.பாராட்டைத் தொடர்ந்து அந்த கேரக்டர் இப்போது இன்னும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

    இதுபற்றி சந்திரபோஸ் கூறும்போது, "நான் இசையமைப்பாளராக இருந்த கால கட்டத்தில் ஏவி.எம்.மின் மனிதன் படத்துக்கு இசையமைத்தேன். அந்தப் படத்தின் பின்னணி இசை கேட்ட சரவணன் சார் அப்போதே என்னைப் பாராட்டினார். இப்போது நடிகராக வந்தபிறகு மறுபடியும் அவரிடம் இருந்து பாராட்டு கிடைத்திருப்பது என்னை இன்னும் உற்சாகத்தில் வைத்திருக்கிறது'' என்கிறார்.
    .
    "அன்பே சிவம்.

  5. #74
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மக்கள் தொலைக்காட்சியில - வெற்றி வாகை- - ரேவதி.
    மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை விளையாட்டு நிகழ்ச்சி ``வெற்றிவாகை''.

    இதில் மூன்று சுற்றுகள். வெற்றி பெற்றால் பரிசு தரும் விளையாட்டு நிகழ்ச்சி. ஒரு காட்சி காட்டப்படும், அதில் வரும் ஏதாவது ஒரு ஆங்கிலச் சொல் கேட்கப்படும். அதற்கு சரியான தமிழ்ச் சொல் சொன்னால் தகுதிச் சுற்று.

    திரையில் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி காட்டப்படும். அந்த நிகழ்ச்சியிலிருந்து கேள்வி கேட்கப்படும்.

    மூன்றாவது சுற்றில் விளம்பரங்கள், வணிக நிறுவனங்களின் காட்சிகள் விரியும். அதிலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும்.

    சரியான விடை சொன்னால் பரிசு. இது நினைவாற்றலை சோதிக்கும் விளையாட்டு நிகழ்ச்சி.

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரேவதி.
    .
    "அன்பே சிவம்.

  6. #75
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    check here
    http://www.adhikaalai.com/index.php?...3413&Itemid=94

    தீபா வெங்கட் ....
    "அன்பே சிவம்.

  7. #76
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உங்கள் பார்வைக்கு மட்டும்
    கடந்த 2006-ம் ஆண்டுக்கான சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான "கல்கி' தொடருக்காக குஷ்பு சிறந்த நடிகை விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சிறந்த நடிகர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 2006-ம் ஆண்டுக்கான சின்னத் திரை தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளைத் தேர்வு செய்ய நீதிபதி மருதமுத்து, விடுதலை, வசந்த், கண்மணி சுப்பு, டி.வி.சங்கர், ராஜசேகர், செய்தித்துறை செயலாளர், இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்தக் குழு மொத்தம் 14 தொலைக்காட்சித் தொடர்களைப் பார்வையிட்டு விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தது. பரிந்துரையை ஏற்று விருதுக்குரிய தொடர்கள், கலைஞர்கள் பெயரை முதல்வர் கருணாநி அறிவித்துள்ளார்.



    சிறந்த தொடர் சன் டி.வி.யின் "செல்வி' சிறந்த தொடருக்கான முதல் பரிசுக்கும், "சொர்க்கம்' இரண்டாவது பரிசுக்கும் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளன. "அல்லி ராஜ்யம்' சிறந்த வாரத் தொடருக்கான சிறப்புப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.



    "செல்வி' தொடருக்காக ராடன் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. "சொர்க்கம்' தொடருக்காக ஏவி.எம். நிறுவனத்துக்கும், "அல்லி ராஜ்யம்' தொடருக்காக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனத்துக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.



    சாதனையாளர் விருது 2006-ம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருதுக்கு "கோலங்கள்' தொடரை இயக்கிய திருச்செல்வமும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ராணி சோமநாதனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.



    சிறந்த கலைஞர்களுக்கான விருது விவரம் :-





    சிறந்த நடிகை: குஷ்பு (கல்கி)

    சிறந்த நடிகர்: அபிஷேக் (மலர்கள்)

    சிறந்த குணச்சித்திர நடிகர்: டெல்லி குமார் (ஆனந்தம்)

    சிறந்த குணச்சித்திர நடிகை: தேவிப்ரியா (கோலங்கள்)

    சிறந்த வில்லன் நடிகர்: அஜய் (கோலங்கள்)

    சிறந்த வில்லன் நடிகை: பிருந்தா தாஸ் (ஆனந்தம்)

    சிறந்த இயக்குநர்: சமுத்திரக்கனி (செல்வி)

    சிறந்த கதாசிரியர்: தேவிபாலா (ஆனந்தம்)

    சிறந்த திரைக்கதை ஆசிரியர்: ராஜ்பிரபு (செல்வி)

    சிறந்த உரையாடல் ஆசிரியர்: குமரேசன் (அகல்யா)

    சிறந்த குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் பரத் (மை டியர் பூதம்)

    சிறந்த ஒளிப்பதிவாளர்: மாடசாமி (மலர்கள்)

    சிறந்த படத்தொகுப்பாளர்: பிரேம் (லட்சுமி)

    சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: கிரண் (பல தொடர்கள்)

    சிறந்த பின்னணி குரல் (ஆண்): ரவிசங்கர் (பல தொடர்கள்)

    சிறந்த பின்னணி குரல் (பெண்): பிரமிளா (பல தொடர்கள்)

    சிறந்த தந்திரக் காட்சியாளர்: ஈஸ்வர் (சிந்துபாத்) .



    சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

    விருது வழங்கும் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. அதற்கான தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
    "அன்பே சிவம்.

  8. #77
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    KALAIGNAR TV TO LAUNCH 2 MORE CHANNELS

    KARPAGAMTHYAGARAJAN

    Kalaignar TV, the No. 2 Channel in Chennai with a market share of 14 percent is planning to launch two more fresh channels in the coming days.

    Very recently it had rolled out a 24 hours news channel, Kalaignar Seithigal.

    Kalaignar TV made its debut in Tamil Nadu in 2007 with a general channel Kalaignar Tholaikatchi. Six months later, it rolled out Isai Aruvi, a music channel.

    It plans to add two more channels to its bouquet
    in the coming months, a comedy channel called Sirippoli and a children's channel called Chitram.
    "அன்பே சிவம்.

  9. #78
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    PODHIGAI STANDS 2ND IN TRP RATES
    Tamil Nadu state owned Podhigai channel continues to be the second most watched channel across the state next only to Sun TV, according to Television Rating (DART) survey. According to TAM survey, Podhigai, which used to have 0.9 to 1 TRP for its news bulletin in Tamil two years ago enjoys 3.46 TRP in small cities with a population up to 10 lakh. The popularity of the news bulletin maybe due to its 'no strings attached' tag when all other Tamil channels sport a 'political' colour.

    While commercials go to Sun TV, which has the maximum reach in the urban sector (82.1 per cent TV homes), advertisers don't prefer Podhigai. Dr Vethamany Senapathi, Doordarshan Kendra, Chennai, says, "Our revenue target for the fiscal year 2008-09 is Rs.10 crore'.

    Podhigai became the first Tamil channel to telecast the Tamil version of Richard Attenborough's Gandhi on August 15 this year. The regional channel of DD also telecasts live temple festivals including Karthigai Deepam of Tiruvannamali, Brammohtsavam in Tirupati and Magarajyoti festival in Sabarimala Ayyappan temple.

    Another interesting finding of DART survey is that Kalaignar TV has become the third most watched channel in the state within a year of its launch (it was launched in September 2007). While Jaya TV is the sixth most popular channel, Vijay TV ranks fifth, Sun News twelfth and Makkal TV thirteenth.
    "அன்பே சிவம்.

  10. #79
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பாதித்த படப்பிடிப்பு



    சென்னையை `உண்டு இல்லை' பண்ணிய புயல் மழைக்கு சினிமா படப்பிடிப்பு எந்தஅளவுக்கு பாதிக்கப்பட்டதோ தெரியாது. ஆனால் சின்னத்திரை படப்பிடிப்புக்கள் 90 சதவீதம் பாதித்தன.

    சின்னத்திரை படப்பிடிப்பு நடக்கும் பங்களாக்கள் அனைத்தும் சென்னை விருகம்பாக்கம், வளசரவாக்கம், மவுலிவாக்கம் பகுதிகளில் உள்ளன. இந்த இடங்களை மழையும், திறந்து விடப்பட்ட ஏரித்தண்ணீரும் சூழ்ந்து நகருக்குள் கடலைக் கொண்டுவந்து விட்டதால், இந்த ஷூட்டிங் பங்களாக்களிலும் `கட்டாமலே' நீச்சல்குளம். இதனால் நடக்கவிருந்த படப்பிடிப்புக்கள்அனைத்தும் கேன்சலாகிவிட்டன.

    எப்படியும் படப்பிடிப்பை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலையில் இருந்தவர்கள் மட்டும் காட்சிகளில் சிறிதளவு மாற்றி ரோட்டோரத்தில் அவசர படப்பிடிப்பு நடத்தினார்கள்.

    "அன்பே சிவம்.

  11. #80
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவில் சான்ஸ், சின்னத்திரை குலோஸ் : சிம்ரன்

    ஜெயாடிவியில் ஒளிபரப்பாகி வந்த வித்தியாசமான தொடர் சிம்ரன் திரை. பெரிய திரையின் பேரழகு நட்சத்திரமாக ஒரு காலத்தில் ஜொலித்த சிம்ரன் இந்தத் தொடரில் நடித்து வந்தார்.

    மாதத்திற்கு ஒரு தொடர் என வித்தியாசமான தொடராக ஒளிபரப்பாகி வந்த சிம்ரன் திரை திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. சிம்ரன் கால்ஷீட் கொடுக்காததால்தான் தொடரை நிறுத்தி விட்டனராம்.

    வாரணம் ஆயிரம் படத்திற்குப் பின்னர் சினிமாவில் மீண்டும் சிம்ரனுக்கு கிராக்கி பிறந்துள்ளதாம். இதனால்தான் சின்னத் திரைக்கு குட்பை சொல்ல முடிவு செய்து விட்டாராம் சிம்ரன்.

    சிம்ரனின் கால்ஷீட் கிடைக்காததால், சின்னத்திரை தொடர் தயாரிப்பை நிறுத்தி விட்டது பிரமீட் சாய்மீரா நிறுவனம்.

    தற்போது சிம்ரன் டிஎன் 09 4777 உள்பட 3 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சேவல் மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரு படங்கள் ரிலீஸாகின. இதில் வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரனின் கேரக்டர் பேசப்படுவதால் அவருக்கு மீண்டும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    "அன்பே சிவம்.

Page 8 of 63 FirstFirst ... 6789101858 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •