Page 117 of 118 FirstFirst ... 1767107115116117118 LastLast
Results 1,161 to 1,170 of 1171

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #1161
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    326
    Post Thanks / Like
    சிவாஜியை இப்படிக் கொண்டாடணும் -வழக்கறிஞர் சுமதி | SRI MEDIA TAMIL | #sivaji | #advocatr_sumathi |




    Thanks
    SRI MEDIA TAMIL
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1162
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    326
    Post Thanks / Like
    சிவாஜியின் நடிப்பைப் புரிந்து கொள்ளவே வளர வேண்டியிருக்கிறது! | SRI MEDIA TAMIL | #sivaji | #sumathi





    Thanks
    SRI MEDIA TAMIL
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1163
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    326
    Post Thanks / Like
    அக்டோபர் 01 2024 .
    கள்ளம் கபடம் இல்லாத, களங்கம் ஏதுமற்ற,
    வெள்ளைமனம்கொண்ட வெள்ளைரோஜா வின்
    96 வது பிறந்தநாள்.
    சிவாஜி ஜெயந்தி 96.
    வெள்ளைமனம் கொண்ட அனைத்த உள்ளங்களுக்கும்
    சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்.

    siva-460.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1164
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    326
    Post Thanks / Like
    எதுக்குங்க பொம்பளை வேஷம் போடுற பசங்களையெல்லாம் ஹீரோவா புக் பண்ணுறீங்க!?..ஏ.வி.எம் செட்டியாரிடம் அந்த இயக்குநர் கேட்கும்போது தான் செட்டியார் யோசித்தார்.அவர் அப்படிச் சொன்னதில் ஒரு நியாயமிருக்கு.சினிமா என்பது ஒரு கலை மட்டுமல்ல.அது ஒரு தொழில்.அதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கு.போட்ட பணத்திற்கு நஷ்டம் வந்தால் தயாரிப்பாளர் பாதிப்பார்.அதனால் பல குடும்பங்கள் பாதிக்கும் என்கிற எண்ணத்தில் தான் அந்த இயக்குநர் அப்படிப் பேசினார்.ஆனால் அந்த பொம்பளை வேஷம் போட்ட பையனை அவர் எளிதாக எடை போட்டுவிட்டார்.பிற்காலத்தில் அந்தப் பையனை அவர் இயக்கவும் செய்தார்.உள்ளத்தில் நெருப்பைச் சுமந்து இல்லத்தில் உடமைகள் இழந்து எல்லை எதுவென தெரியாத ஏக்கத்தில் திரிந்த அந்தக் கலைஞனுக்கு அந்த முதல் படம் தான் வாழ்வா சாவா பிரச்சனை என அந்த இயக்குநருக்கு அப்போது தெரியாது.வெறும் பொம்பளை வேஷம் போடுற பையன் தான் இந்த திரையுலகையே பிற்காலத்தில் புரட்டிப் போடப் போகிறார் என்றும் அப்போது அவருக்குத் தெரியாது.இன்னொரு இணை தயாரிப்பாளர் காட்டிய உறுதி அந்தப் பையனையே ஹீரோவாக்கியது.ஊரெங்கும் தீபாவளி கொண்டாடும் உற்சாகத்தில் வெளியான அந்தத் திரைப்படம் தான் பராசக்தி.அதன் ஹீரோவிற்கு இன்று பிறந்த நாள் கொண்டாடி மகிழ்கிறது நம் இசைக் குழு!..நடிகர் திலகத்தின் பெயரைச் சொன்னாலே தமிழ் கூறும் நல்லுலகம் ஏன் அதிருது?...
    புறங்களில் தீ வைத்தால் அணைந்து விடும்.ஆனால் அகங்களில் வைத்த தீ ஆண்டுகள் கடந்தாலும் கொளுந்துவிட்டு எரியும்.சிவாஜி எனும் மகா நடிகன் அகத்தில் வைத்த நெருப்பு!..உழைத்துக் களைத்தவன் ஓய்வினை விரும்பி திளைக்க வரும்போது இனிக்க இனிக்க* விருந்து வைத்தவர் நமது நடிகர் திலகம்.கன மழை பெய்திட கார்முகில் கரைவது போல் .வெண் திரையில் திலகத்தின் முகம் கண்டாலோ அவரது ரசிகனின் கவலைகள் குறைந்தது.நம் அன்னை மொழியை அரியணையில் ஏற்றிய அந்த செம்மொழிப் பாவலனுக்கு இன்று பிறந்த நாள்.சிவாஜி எனும் மூன்றெழுத்து மந்திரத்தை இங்கே எவ்வளவோ பாடியாச்சு.இந்த எல்லையில்லா வானத்தை எத்தனையோ முறை அளந்தாச்சு!..இருந்தாலும் பேசுவதற்கு இன்னும் ஏராளமாக இருக்கிறது..எத்தனையோ கலைஞர் இங்கே தழைத்தனர்.மாண்புறவே பலரும் இங்கே நிலைத்தனர். அத்தனை பேரிலும் அதிசயப் பிறவி நடிகர் திலகம்.யாமறிந்த மொழிகளிலே இனிதாவது ஏதாவது இருக்கிறதா?..தமிழைத் தவிர!..யாமறிந்த நடிகர்களில் வியப்பிற்கு உரியவர் யாராவது இங்கு உண்டா?..திலகத்தைத் தவிர!..எல்லோரும் தான் நடிக்கிறார்கள்.ஆனால் இது தான் நடிப்பு என்கிற இலக்கணத்தை யாராவது வகுத்திருக்கிறார்களா!?..இனிய தமிழில் இப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களை நமக்குக் காட்டியிருக்கிறார்களா?..
    பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் கலை தான் நடிப்புக் கலை.நாடகம் கூத்து என பல வடிவங்களில் வந்தாலும் சினிமாத் தொழில் சமீபத்திய நூற்றாண்டு கலை.நாடகத்திலும் கூத்திலும் பார்க்க முடியாத நெருங்கிய அருகாமையை இதில் மட்டுமே பார்க்க முடியும்.தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில் திரைக் கலைஞனின் செவ்வரியோடிய கண்களைக் கூட மிக அருகிலேயே ஒரு ரசிகனால் தரிசிக்க முடியும்.கருப்பு வெள்ளை கலராகி இப்போது டிஜிட்டலில் வந்து நிற்கும் இன்றைய சினிமா வரை இங்கே கோலோச்சியவர் ஏராளம்.அவர்கள் அனைவரும் உச்சரிக்கும் ஒரே பெயர் நடிகர் திலகம்.காரணம் அவர் விளையாடிவிட்டுப் போன திரைப்படங்கள்!..அதில் அவர் கலக்கிவிட்டுப் போன காவியங்கள்.சிவாஜி என்றதும் முதலில் நம் நினைவிற்கு வருவது அந்த சிம்மக் குரல்.நவ ரசங்களை முகத்தில் காட்டலாம்.ஆனால் குரலிலும் காட்ட முடியும் என நிரூபித்தவர் இந்தக் கோமகன்.இரண்டாவது அவரது நினைவாற்றல்.பத்து இருபது பக்கமானாலும் எழுத்துக்கள் சிதையாமல் கருத்துக்களை கோர்வையாக நினைவில் நிறுத்தும் அற்புதம்.மூன்றாவது அவரது மொழி ஆளுமை!..வல்லினமும் மெல்லினமும் தடுமாறும் இந்தக் காலத்தில் இடையினத்தைக் கூட இம்மி பிஸகாமல் உச்சரிக்கும் நேர்த்தி.குரலும் நினைவும் இயற்கை தந்தது.மொழி ஆளுமை அவராக கற்றுக்கொண்டது.கல்வியறிவே இல்லாத ஒரு கலைஞன் தனது தாய் மொழியில் இவ்வளவு ஆளுமையைக் காட்ட முடியுமா?..ஒரு மொழியை எப்படிக் கையாள வேண்டும் என்கிற இலக்கணத்தை நாம் இவரிடம் படிக்கலாம்.எத்தனையோ உதாரணங்கள்.சேரன் செங்குட்டுவனின் ஓரங்க நாடகம்.உட்கார்ந்த இடத்கிலேயே எழுதித் தள்ளிய ஒரு எழுத்தாசான்.அதை உச்சரிப்பில் வானளாவ உயர்த்திய நடிப்பாசான்.சங்கத் தமிழுக்கு சான்றாக கொட்டிக் கிடக்கும் பல வசனங்கள்.எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நின்று கொண்டு அவர் எடுத்து வீசிய வசனங்கள்.வட்டாரத் தமிழுக்கு வாகாக வந்த பல வசனங்கள் .இதழ்களின் மோதலில் மலர்ந்த இனிமையான பல கச்சேரிகள்.ஆதி சிவன் ஆடை தரித்து அவர் ஆடிய ருத்ர தாண்டவங்கள்.அவரது கோபக் கனலால் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்த நக்கீரன்கள்.அந்த வேய்குழல் வேந்தனின் குழலோசையில் மயங்கிக் கிறங்கிய கோகுலத்துக் கோதைகள்.அந்த கொங்கணப் பார்வையில் கிறங்கிக் கிடந்த கொக்குகள்!..எத்தனை!.. எத்தனை!..
    நடிகர் திலகத்திற்கு மட்டும் இவ்வளவு திறமை எங்கிருந்து வந்தது!?..யோசித்துப் பார்த்தால் அவர் தொழில் மீது வைத்திருந்த பக்தி தான் முழு முதற் காரணம்.பராசக்தி நாயகனில் தொடங்கிய தொழில் பக்தி.பலரும் காதுபடப் பேசிய ஏளனப் பேச்சுக்கள் அவரது நடிப்பிற்கு உரமானது.கொடுத்த பாத்திரத்தை எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என உள்ளுக்குள்ளேயே போட்டு ஓட்டும் டெடிகேஷன்.தளம் வேறாக இருக்கலாம்.நடிப்பு தான் எனது தொழில்.புகழின் உச்சியில் நின்று கொண்டு சிவாஜி ஒரு அமெச்சூர் நடிகனைப் போல் சபாவில் நடித்துக்கொண்டிருப்பார்.அவரது ஒவ்வொரு மணித் துளியும் பணமாகும் நேரத்தில் அதை நாடகத்தில் கொண்டு போய் விரயமாக்கிக்கொண்டிருப்பார்.பட முதலாளிக்கு அது விரயம்.நடிகர் திலகத்திற்கு அது தான் மூலதனம்.அவருக்காக பல கார்கள் காத்துக் கிடக்கும்.ஆனால் அவரோ திரைச் சீலை விலகாதா என ஏங்கிக்கொண்டிருப்பார்.எப்போதோ கிடைக்கப் போகும் அப்ளாஸை விட அப்போதே கிடைக்கும் அப்ளாஸூக்காக ஆர்வமாக இருப்பார்.தொழில் மீது கொண்ட பக்தி.எமக்குத் தொழில் நடிப்பு.கௌரவத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் அறிமுகமாகும் கட்டம்.ஒரு கையில் பியர் மக்கோடு மறு கையில் டெலிஃபோன்.அந்தப் பக்கத்து ஆசாமிக்காக இந்தப் பக்கத்தில் சீறும் சிங்கமாக சிவாஜி!.தொழில்ல மோதினா நான் தான் ஜெயிப்பேன்.இது ஆணவமோ அகம்பாவமோ இல்லை.தொழில் மேல நான் வெச்சிருக்கிற பக்தி!..அசைக்க முடியாத தன்னம்பிக்கை!..புரியறதா?..யாருக்கோ விடும் எச்சரிக்கை!..காஃபியோடு கண்ணன்.வேண்டாம்!..என பைப்போடு ஒரு போராட்டம்.இருங்கோ!..நான் நெருப்பு வெக்கிறேன்.பைப்புக்கா?.. எனக்கா?..ரெண்டுக்கும் நான் தானே பெரிப்பா!..ஒரு சின்ன காட்சி தான்.ஆனால் சிவாஜி எனும் மகா கலைஞன் அந்தக் காட்சியை கொண்டு போன விதம் நமக்கெல்லாம் ஆச்சர்யமா இருக்கும்.
    உயர்ந்த மனிதனின் ஒரு பகுதி ஊட்டியில் சூட்டிங்.கருப்பு பேண்ட் வெளிர் மஞ்சளில் நடிகர் திலகம் ஒரு காதல் காட்சிக்கு ரெடியாக அமர்ந்திருக்கிறார்.வெதர் சில்லுன்னு இருக்கு.சரவணன் வருகிறார்.அருகே சேரைப் போட்டு அமர்கிறார்.ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க!.?.உடம்புக்கு ஏதாவது?.சரவணன் கையை எடுத்து கழுத்தில் வைக்கிறார் திலகம்.அய்யோ!..கொதிக்குதே!..வாங்க ரெஸ்ட் எடுக்கலாம்.இந்த ஜூரம் வேற சரவணன்!.நாளைக்கு வியட்நாம் வீடு அரங்கேற்றம்!.அதில ஒரு பிராமணக் கேரக்டர்.அதை சிறப்பா செய்யணுமேன்னு டென்ஷன்.அதனால தான் இந்த ஜூரம்!..சரவணன் ஆச்சர்யமானார்.பிராமணர் கேரக்டர் உங்களுக்கு புதுசு இல்லையே! .என்ன !.தமிழ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.அதை மேனேஜ் பண்ணீட்டா சுலபமாயிடுமே!..இல்லைய்யா!..அது சாதாரண பிராமணன் ரோல் இல்ல!.ப்ரஸ்டீஜ் பத்மநாபன்கிற எமோஷனலான ரோல்.பாஷையிலும் கவனமா இருக்கணும் எமோஷனலிலும் கோட்டை விட்டுறக் கூடாது.சீரியஸான கேரக்டரில் நடிக்கும்போது ஏதாவது தப்பா போயிட்டா ஜனங்க காமெடியா சிரிச்சிடுவாங்க!.இது நடந்தது 29_11_-68.சிவாஜி எனும் இமயம் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த வருஷம்.நாளைக்கு நடக்கப் போகிற நாடக அரங்கேற்றத்துக்கு இன்னைக்கு ஜூரம்.அடுத்த நாள் அந்த நாடகம் பார்த்த சரவணன் மிரண்டுவிட்டார்.அங்கே சிவாஜி இல்லை.இருந்தது ப்ரஸ்டீஜ் பத்மநாபன்.அப்படியொரு டெடிகேஷன் எந்த நடிகரிடத்தில் இருந்தது?.அதே ஜூரத்தோடு தான் அவர் சித்திர விழிகள் என்ன மீனோ மானோ என்றார் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?..இப்படி ஒவ்வொரு பாடலிலும் அவருக்கு ஒவ்வொரு அனுபவம்.
    காட்டுக் குருவி ஒண்ணு காத்தாடப் போனதுன்னு நாட்டுக் குருவி ஒண்ணு நடை பார்த்து ஏங்குதடி!..அந்த வெள்ளி மலை மான் குட்டி தொகையறாவில் ஒரு வெட்டு வெட்டி அவர் தரும் எக்ஸ்ப்ரஷனுக்குப் பின்னாலும் ஒரு கதையிருக்கும்.பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை பச்சை இளம் கிளி மொழி நீ சொல்வது உண்மை பாடலில் அவர் காட்டும் க்ளோஸப் பாவனைகளுக்குப் பின்னாலும் ஒரு கதையிருக்கும்.நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்!..ஸீத்ரூ ப்ளாக் பூப்போட்ட சட்டையில் மடித்துக் காட்டிய புஜங்களில் செம க்யூட்டா அந்த மேடையிலிருந்து லாவகமா ஒரு குதி குதித்து விசில் அடிச்சுக்கிட்டே தேவிகா பக்கமா வரும்போதும் உள்ளே ஏதோ ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்.நதி நீரில் மௌனமா நகரும் போட்டில் அதே பூப்போட்ட முழுக்கை சட்டை..மேல் பட்டன் இரண்டு திறந்திருக்க இரு கட்டை விரலை மட்டும் இரு பாக்கெட்டில் விட்டபடி நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சிம்மா!..அது தான் உண்மைக்கு சாட்சியம்மா!..ஸ்டைலா எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக தியாகத்தின் திரு உருவமாக சிவாஜி!..பாடும்போது உள்ளே என்ன நினைத்துக்கொண்டிருப்பார்?..கண்களால் பேசுதம்மா பாசத்தின் அழைப்பு!..பெண்ணோடு பேசுதம்மா பெற்றெடுத்த வயிறு!..பாதி இருளில் சிதைந்த முகத்தை மறைத்தபடி கோயில் தூணுக்கு அந்தப் பக்கத்திலிருந்து எட்டிப் பார்க்கும் நடிகர் திலகம்..பெற்றெடுத்த வயிறை கண்ணாறக் காண முடியாத சோகம்!..பாசத்தில் தடுமாறும் வேதனையா?..சூழ்நிலையின் விரக்தியா?..அந்த க்ளோஸப் காட்சியில் அவர் மனம் எதை எடை போட்டதோ?..அட்டகனா நான்?..கூட்டத்தோடு கூட்டமாக நின்று போர் புரியும் கோழைகளில் ஒருவனா நான்!?..பீஷ்மரே!..நீங்கள் நியமித்த கேவலம் இந்த அர்த்தரதனோடு அதிரனும் தளபதியுமாக வீற்றிருக்கும் நீர் தைரியமிருந்தால் நேருக்கு நேர் நின்று போர் புரியும்!..உருவிய வாளோடு கொந்தளிக்கும் அந்த கோபத்தின் வெப்பம் தாளாமல் பீஷ்மர் தள்ளாடுவாரே இந்தக் கர்ணனிடம்.சுற்றி நிற்கும் சேவகர்கள் பதற்றமாக சூழும்போது அவர் மனம் எதை நினைத்ததோ?..என்ன சார் உங்க ஊட்டு கதவு கோழ மாதிரி பின்னாடி இருந்து தாக்குது!..பலே பாண்டியாவில் வந்த உடல் மொழியும் அந்த கர்ணனின் உடல் மொழியும் ஒரே நபரிடமிருந்து வந்தது தானா?..எத்தனை எத்தனை பாத்திரங்கள்.எவ்வளவு உணர்வுகள்.பட்டியல் போட்டால் பக்கம் போறாதே!..இவன் எப்படா விழுவான்னு தானே எல்லாரும் எதிர்பார்க்குறா!..நடக்காதுடீ!..பாரிஸ்டரின் அந்த பைப்பை ஒழுங்காகப் பிடிக்கக் கூட இப்போதைய நடிகர்கள் நாலு நாள் ஒத்திகை பார்க்கணுமே!..ஏன் நடிகர் திலகம் எல்லோருக்கும் ஒரு அகராதி!..?..காரணம் !..விதை அவரு போட்டது!.அது மரமாகி நடிப்புக் கலையின் விருட்சமாகி நிற்கிறது.இதில அவருக்கென்ன பெருமையா?..சத்தியமா அவருக்குப் பெருமை தான்.ஆனால் அவரைப் புகழ்வது?..அது நமது கடமையல்லவா!..

    Thanks Abdul Samath Fayaz (Old is Gold பழைய தமிழ் திரை இசைப் பாடல்கள் ( 1941--1981) face book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1165
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    326
    Post Thanks / Like
    வசந்தமாளிகை கொடுத்த வாழ்வு -சிவசக்தி பாண்டியன்




    Thanks Sivaji murasu youtube
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1166
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    326
    Post Thanks / Like
    sivajiganesan : -பாலிவுட்டைப் பதறவைத்த சிவாஜி! டில்லி ! கதறிய இந்தி வாலா ! -kantharaj




    Thanks
    Jeeva Cinema youtube.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1167
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    326
    Post Thanks / Like
    மதுரையில் சிவாஜி கணேசனுக்கு கோயில் கட்டும் ரசிகர்கள்.

    பீடம் அமைத்து நலத்திட்ட உதவி வழங்கினர்.

    (மாலை மலர் )

    siva-668.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1168
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    326
    Post Thanks / Like
    வள்ளல் நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தி
    1952 ஆம் வருடம் தீபாவளிக்கு வெளியடப்பட்டு
    தமிழ் திரையுலகில் ஓர் புரட்ச்சியை ஏற்படுத்தியது.

    சென்னை மதுரை சேலம் திருச்சி கோவை மற்றும் பல ஊர்களிலும்
    100 நாட்களை கடந்து ஓடி மாபெரும் சாதனை படைத்தது.
    திருச்சியில் 100 நாட்கள் கடந்து ஓடிக்கொண்டிருந்த வேளை
    பணம் படம் திரையிடுவதற்காக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும்
    அதே தியேட்டரில் திரையிடப்பட்டு வெள்ளிவிழா கண்டு 200
    நாட்களுக்குமேல் ஓடி சாதனை படைத்தது.
    மதுரையில் மிகப்பெரிய அரங்கம் தங்கத்தில் திரையிடப்படடு
    112 நாட்கள் ஓடியபின் சிட்டி சினிமாவில் திரையிடப்பட்டு 126 நாட்கள் ஓடியபது.
    பின்னர் ஶ்ரீ தேவி அரங்கிற்கு மாற்றப்பட்டு அங்கு 78 நாட்கள் ஓடியது.
    மதுரையில் மொத்தம் 316 நாட்கள் ஓடியது.
    தங்கம் மற்றும் சிட்டி சினிமாவிலும் பராசக்தி பெற்ற வசூல் சுமார் 2 38 000.00.
    ஶ்ரீதேவி தியேட்டர் வசூல் கிடக்கவில்லை. அதுவம் சேர்ந்தால் கிட்டத்தட்ட 3 லட்சம் பெற்றிருக்கக்கூடிய
    சாத்தியம் உண்டு.
    சாதனை என்பது அது தானாக உருவாக வேண்டும் அது
    வள்ளல் கணேசனுக்கு எப்பொழுதும் நடைபெற்றக்கொண்டிருக்கிறது.
    ஆனால் மாற்றுமுகாம் பொய் பொய்யாக பேசி வாயால் வடை சுடுகிறார்கள்.
    மதுரையில் மதுரைவீரன் நாடோடி மன்னன் இரண்டும் 3 லட்சம் தாண்டியதாக
    பொய்யான வசூல் விபரத்ததை வெளியிடுகிறார்கள்.
    மதுரைவீரன் வசூல் தவறானதென மதுரையில் பெற்ற வசூலாக மாற்றுமுகாம் குறிப்பிட்ட மதுரைவீரன் மற்றும்
    எங்கவீட்டு பிள்ளை பெற்ற வசூல் விபரங்களை ஒப்பீடு செய்து
    நண்பர் சேகர் பரசுராம் அவர்கள் விளக்கம் அளித்திருந்தார்.

    அதுமட்டுமா 2012ல் கர்ணன் மறு வெளியீடு கண்டு மாபெரும் சாதனை படைத்திருந்தது.
    பொறுக்குமா மாற்றுமுகாம் குழுவுக்கு ஆயிரத்தில் ஒருவனை கையிலேடுத்தார்கள்
    கர்ணன் பட விளம்பரம் பிரமாண்டத்தின் அடையாளம் எனவே
    ஆயிரத்தில் ஒருவனுக்கு பிரமாண்டத்தின் மகுடமாம் அங்கே பிரமாண்டம் என்ன இருந்தது ?எங்கே இருந்தது?
    எம் ஜீ ஆருக்கு சிவாஜி கணேசன் போட்டியே இல்லையாம் அப்புறம் எதற்கு இந்தப் போட்டி?
    கர்ணன் திரையிடப்பட்ட தியேட்டர்கள விட ஆயிரத்தில் ஒருவனை அதிக தியேட்டர்களில் திரையிட்டு
    பல தியேட்டர்களில் முதல்நாளே ஆளில்லாமல் காட்சிகள் நடைபெறாமலே தூக்கப்பட்டு மூக்குடைபடவேண்டும்.

    ஆயிரத்தில் ஒருவன் திரையிடடு 3 வாரம் வரை படத்தை வெளியிட்டவர் விளம்பரம் செய்தார்.
    காரணம் 3 வாரங்கள்தான் அப்படத்தின் ஓட்டம்
    பின்னர் கோயாபல் கொம்பனி கையிலெடுத்துக்கொண்டது.
    துபாயிலிருந்து பணம் பிரான்சிலிருந்து பணம் தமிழ் நாட்டில் ஆங்காங்கே
    நாலு பக்கமும் இருந்து பணம் சேகரிக்கப்பட்டு படம் ஓடிய நாட்களுக்கும் ஓடாத நாட்களுக்கும்
    தியேட்டருக்கு குத்தகை கட்டி படம் ஓடியதாக பத்திரிகைகளுக்கும் பணத்தை இறைத்து
    விளம்பரம் கொடுத்து மொத்தம் ஆயிரத்தில் ஒருவன் தியேட்டரில் திரையிடப்பட்ட நாட்கள் 69 மட்டுமே.
    தியேட்டர் நிர்வாகத்திடம் கேட்டே நிங்கள் உண்மையை அறிந்து கொள்ளலாம்.
    ஆனால் படம் ஓடியதாக விளம்பரம் செய்யப்பட்ட நாட்கள் 190. இதில் வேடிக்கை என்னவென்றால்
    சென்னையில் படம் ஓடுகிறது துபாயிலிருந்து ஒன்லைனில் டிக்கட் புக் பண்ணப்பட்டது.
    தங்கள் நடிகருக்கு யாருமே போட்டி இல்லையென்றால் ஏன் இத்தனை பித்தலாட்டம்.
    போட்டியே இல்லாத நடிகனென்றால் சாதனை அதுவாக நடைபெற்றிருக்க வேண்டாமா?
    இது போன்று பல தேவையேற்படும்பொழுது வெளிவரும்...

    Screenshot 2024-09-08 212117.jpg
    Last edited by sivaa; 11th November 2024 at 03:19 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1169
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    326
    Post Thanks / Like
    மதுரை நாகமலை புதுக்கோட்டை திரை அரங்கில்
    15-11-2024 வெள்ளிக்கிழமை முதல்
    சிவகாமியின் செல்வன்.

    siva-707.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1170
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    326
    Post Thanks / Like
    இதே நாளில் வெளியான திலகம் ஐயா அவர்களின் திரைப்படங்கள்.

    அன்னை இல்லம் 15-11-1963.

    லட்சுமி கல்யாணம் 15-11-1968.

    siva-711.jpg

    நன்றி C Sundara Moorthy (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)
    Last edited by sivaa; 15th November 2024 at 05:50 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •