-
1st March 2021, 01:42 PM
#2031
Junior Member
Diamond Hubber
M.G.R.மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் தொடர்கிறார்!
பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோ வுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, எம்.ஜி.ஆர். பயன் படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதை யும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. எம்.ஜி.ஆருக் கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.
பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.
இந்திய அமைதிப்படை யின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக் காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னை யில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட் டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப் பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.
எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்க மாக உள்ளனர். திமுக தலைமை யோடும் நீங்கள் நெருக்க மாக இருக்க லாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.
அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதி யாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிட ணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.
முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டு வைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் எவரெஸ்ட் சிகரமாய் உயர்ந்தார் எம்.ஜி.ஆர்.!
மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்று வித்த ஆரம்ப காலத்தில், எம்.ஜி.ஆர். மீது பிரபா கரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங் களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். ‘‘தமிழகம் வந்த சில காலத் துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண் டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!
முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.
‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப் போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.
எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உப சரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப் போது நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!
பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக் கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபா கரன் கூறியிருக் கிறார்.
தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!
‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடு வது கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது.
**********...........Baabaa
-
1st March 2021 01:42 PM
# ADS
Circuit advertisement
-
1st March 2021, 01:46 PM
#2032
Junior Member
Diamond Hubber
எனது நல்வாழ்வின் வழிகாட்டி எம் ஜி ஆர்
எனது வாழ்வின் ஒளிவிளக்கு எம் ஜி ஆர்
எனது ஆரம்ப பள்ளி எம் ஜி ஆர்
எனது உயர் கல்வி எம் ஜி ஆர்
எனது ஆசான் எம் ஜி ஆர்
எனது ஆசிரியர் எம் ஜி ஆர்
எனது வாத்தியார் எம் ஜி ஆர்
இன்னும் எனது வாழ்வில் நடக்கும் நடைபெறும் அனைத்து நன்மைகளுக்கும்
நற் செயல்களுக்கும் மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும்
எனது வாழ்வின் எல்லா வகையிலும்
உயர்வுக்கும் வழிகாட்டியாக இருந்தவர் இருக்கின்றவர் இருப்பவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தான்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் போல் எவராலும் ஆக முடியாது முடியவே முடியாது என்ற போதிலும் அவரின் போதனைகளை
என்னால் முடிந்த அளவு கடைபிடிக்கிறேன்
காலத்தால் அழியாத காவியமான புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்களின் படங்கள் எனக்கு போதனைகளை தந்தன
அவரின் வசனம் எனக்கு நேர் வழி காட்டின
அந்த புனிதமான நல்வழியில் நாளும் பொழுதும் பயணிக்கும் படி அவரின் ஒவ்வொரு அசைவும் என்னுள் பசுமையாக பதிந்தன
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு எந்த விதமான கெட்ட பழக்கமும் கிடையாது அதாவது புகைப் பழக்கம் மது பழக்கம் புகையிலை பழக்கம் இது போன்ற எந்த விதமான கெட்ட பழக்கமும் அறவே கிடையாது மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு
அதுபோலவே நானும் இந்த நிமிஷம் வரையிலும் புரட்சித் தலைவர் வழியில் எந்த விதமான ஒரு கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை
நான் மட்டும் அல்லாது எனது சகோதரர்கள் எனது உறவினர்கள் பலரும் எந்த விதமான போதைப் பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை
இன்றளவும் பீடி சிகரெட் புகையிலை மது
இவைகள் போன்ற எந்த ஒரு கெட்ட பழக்கமும் அறவே கிடையாது எனக்கும் எனது உறவினர்கள் பலருக்கும்
எனது கடையில் கூட நான் பீடி சிகரெட் புகையிலை போன்றவைகளை வைத்து வியாபாரம் செய்வதில்லை
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் மீது நான் கொண்ட உண்மையான பக்தியின் காரணமாக
நான் இன்றளவும் என்னால் முடிந்த அளவுக்கு ஒழுக்கமாக இருப்பதற்க்கு காரணமாக இருப்பவர் என் உயிர் மூச்சான புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தான்
என்றும் எனது நல்வாழ்வின் வழிகாட்டி மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தான்
எனது வாழ்வின் ஒளிவிளக்காக இருப்பவர்கள் மூன்று பேர்
1 எனது அன்பு தந்தை
2 எனது அன்பு அன்னை
3 எனது உயிர் மூச்சான தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள்
என்றும் என்றென்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான தெய்வீகமான நல்வழியில் நாளும் பொழுதும் பயணிப்போம் நாம் அனைவரும் ......... Sudalai Mani
-
1st March 2021, 01:47 PM
#2033
Junior Member
Diamond Hubber
எளியோரை இரட்சிக்க வந்த இதய தெய்வம்,
ஏழைகள் வாழ்வில் இருள் நீக்க உதித்த ஒளி விளக்கு,
ஒழுக்க நெறிகளை கலைத் துறையால் பயிற்றுவித்த கலங்கரை விளக்கம்,
உழைப்பவர் எல்லாம் உயர்ந்தவரே என்ற உண்மையை உரக்கச் சொன்ன தனிப் பிறவி,
``தன்னை தலையாகச் செய்வானும் தான்’’ என்று சங்கத் தமிழ் கூறும் வாழ்க்கை நெறிக்கு சிறந்த எடுத்துக்காட்டு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள். வறுமையின் கோரப் பிடியில் வாடிய இளமைக் காலத்தில் தொடங்கி, புகழ் ஏணியின் உச்சத்தைத் தொட்டு, நாடாளும் மன்னனாக வாழ்வை நிறைவு செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உழைப்பாலும், முயற்சியாலும், தன்னலம் துறந்து, பிறர் நலம் பேணி வாழ்ந்த வாழ்க்கை முறையாலும் ``மனிதர்களில் மாணிக்கம்’’ என்ற இரவாப் புகழ் பெற்ற சரித்திர நாயகர்.
திரை உலகில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை சொந்தமாக்கிக்கொண்ட புரட்சித் தலைவர், தனது உழைப்பும், புகழும் மக்களுக்கு நல்ல கருத்துகளையும், அறநெறிகளையும் கொண்டு சேர்க்கும் வலுவான ஆயுதங்களாகப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். திரைப்படங்களின் மூலம், குறிப்பாக பாடல்களின் மூலம், புரட்சிகரமான சிந்தனைகளையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் எடுத்துச் சொன்னதில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நிகராக இன்னொரு மனிதரை உலகில் வேறு எங்கும் காண முடியாது.
புரட்சித் தலைவரின் திரைப்படங்கள் காட்டப்பட்டபோது, திரையரங்குகள் எல்லாம் வகுப்பறைகளாக அல்லவா மாறி இருந்தன.
கல்லாதபேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என்தோழா! - என்றும்,
ஒன்று எங்கள் ஜாதியே,
ஒன்று எங்கள் நீதியே,
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே - என்றும் பாடி,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போல, கலைவழிப் பாடம் நடத்திய ``வாத்தியார்’’ யாரேனும் இருக்க முடியுமா?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தான் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டிய செயல் வீரர். உலகமே போற்றும் சத்துணவுத் திட்டம்; பெண்மையைப் போற்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தலைமுறை, தலைமுறையாக பள்ளத்தில் வீழ்ந்து கிடந்த பலகோடி மக்கள் வாழ்வில் ஏற்றம்பெற, இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 69 விழுக்காடு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு; கிராமப்புறங்களில் நிலவிய அடிமைத்தனங்களுக்குக் காரணமாயிருந்த நிர்வாக முறையை முற்றிலும் ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் (ஏஹடீ) என்னும் புதுப் பதவிகள் மூலம் நிர்வாகத்தை மக்கள் கையில் கொண்டுசேர்த்த மனிதாபிமானப் பணி; மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை தோற்றுவித்து, உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற சதிவலை பிண்ணிய சாதிப் பெயர்களை பொது வெளிகளில் இருந்து நீக்கிய சமூகப் புரட்சி; கம்ப்யூட்டர் காலத்திலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் என்றெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நிகழ்த்திய சாதனைகள், வேறு யாராலும் அத்தனை எளிதாக செய்திட முடியாத அரும் பெரும் சாதனைகளாகும். எனவே தான், அவர் மக்கள் மனதில் புரட்சித் தலைவராகவும், பொன்மனச் செம்மலாகவும் அன்பு சிம்மாசனம் போட்டு மன்னாதி மன்னனாக வீற்றிருக்கிறார்.
ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டி, சமத்துவ சமுதாயம் அமைத்து, சமதர்மம் காத்து தமிழ் இனம் இந்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்திட, ஓயாது பாடுபடும் இயக்கம் தான், புரட்சித் தலைவரால் நிறுவப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் இலட்சியப் பயணத்தில் இதோ இன்னும் சில மாதங்களில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்னும் ஜனநாயகப் போர்க்களத்தை நாம் சந்திக்கப் போகிறோம்.2021-ல் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கப் போவது, மக்களாட்சியின் மாண்புகளைப் போற்றி, எல்லோரும் பங்குபெறும் உண்மை ஜனநாயகமா? அல்லது பதவி வெறிக்கு மக்களை பலியிடும் போலி ஜனநாயகமா? என்ற வினாவிற்கு விடைகாணப் போகும் களமாக எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் களம் அமையப் போகிறது. சுயநலத்திற்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்காகவும் தமிழ் நாட்டையும், தமிழ்ச் சமூகத்தையும் பலிகொடுத்து, அதிகாரத்தை அடையத் துடிக்கும் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக, எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.
!
நன்றி, வணக்கம்...Baabaa
-
1st March 2021, 01:48 PM
#2034
Junior Member
Diamond Hubber
சார் நீங்கள் எது வரை படித்து உள்ளீர்கள். 1980-ல் முக்கிய நண்பர் கேட்கிறார்?
அதற்கு மக்கள்திலகம் அவர்களுடைய பதில், நான் 14வது வரை படித்துள்ளேன். ஆங்கிலம், தமிழ் இதைகேட்ட முக்கிய நபருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தார். இதை கவனித்து கொண்டு இருந்த மக்கள்திலகம் அவர்கள் என்ன சார் கேள்வியை கேட்டு விட்டு மெளனமாக இருக்கின்றீர்களே என்ன நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா என்ற உடன் அவர் சார் மன்னிக்கனும் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்டு இருக்கக்கூடாது. கேட்டு விட்டேன், என்று சொல்லி முடித்தார். உடனே மக்கள் திலகம் சார் நீங்கள் கேட்டது ஒன்றும் தப்பு இல்லை, ஒரு விசயத்தை மற்றவரிடம் தெரிந்து கொள்வதால் தவறு இல்லை. இப்போ இந்த விசயத்தைப் பற்றி நானே முழுவதையும் சொல்கிறேன். நான் மூன்றாவது தான் படித்தேன் என்று சொல்லுகிறார்.
அது தவறு நான் நான்காவது வரை படித்து உள்ளேன். அதற்கு மேல் படிக்க வசதி வாய்ப்பு இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மை. அதனால் நாடக கம்பெனிக்கு நடிக்க சென்றோம். கல்வி அறிவு என்பது பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து கிட்டு புத்தகங்களை படித்தால் மட்டும் அந்த அறிவு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ஒரு மனிதன் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், எப்படியும், எங்கு இருந்தாலும் கற்றுக்கொள்ளலாம் ஒரு உதாரணம் சொல்கிறேன். பன்னிரண்டாவது வரை படித்த ஒரு மாணவன் ஒரு குற்றத்திற்காக அவனை 7 வருடம் ஜெயிலில் அடைக்கப்படுகிறான். அவன் ஜெயிலுக்குள் இருந்து கொண்டே என்ன படிக்கணுமோ அதை ஜெயில் அதிகாரிகளிடம் சொல்லி அனுமதி பெற்று ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிவரும்போது, படிப்பில்தேர்வு பெற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வரும்போது அவர் ஒரு வழக்கறிஞராக B.A. B.L., படிப்பில் தேர்ச்சி பெற்று விடுதலை ஆகி வெளியே வருகிறார். இது போல் என்னை போன்றவர்கள் அறையும், குறையுமாக படித்தவர்கள் நல்லா படிப்பு அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு எனக்கு கிடைக்கும் நேரங்களில் இரவு நேரத்தில் வாத்தியார்களை வரவழைத்து கற்று கொண்டேன். 14வது படிக்கும் ஒரு மாணவன் படிக்க எழுத திறமை கொண்டவன் போல் நான் இப்போ இருக்கிறேன்.
மற்றும் ஒரு உதாரணம், தமிழ்நாட்டின் ஒரு பெரிய இந்திய அரசியல் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்அமைச்சராகவும் 10 ஆண்டுகாலம் இருந்தவர் பதவி வகித்தவர், கருமவீரர் காமராசர் அவர்கள் எத்தனாவது வரை அவர் கல்வி பயின்று உள்ளார் என்பது நாடு அறிந்த விஷயம். அதே போல் நானும் ஒருவன் என்று பெருமையாக சொல்லி கொள்ள விரும்புபவன். இதைவிட வேறு ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் கேளுங்கள் என்றார். உடனே, அவர் சார் நீங்கள் ஒரு தத்துவ மேதை எல்லாம் அறிந்த ஒரு மாமனிதர் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தான் தங்களிடம் இந்த கேள்வியை கேட்டேன். அதாவது நான் தங்களை மெதுவாக உங்களுடைய கல்வி அறிவை பற்றி தொட்டு பார்த்தேன்.
இதில் தாங்கள் பள்ளிக்கூடம் சென்று பயின்ற கல்வியை விட மிக அதிகமாக கற்று உள்ளீர்கள் அதாவது ஒரு உதாரணம் இப்போ நீங்க தமிழ் ஆங்கிலத்தை தடை இன்றி படிக்கிறீங்க. தமிழ் கொள்கைபடி தமிழை இலக்கியத்தோடு எழுதுகிறீர்கள். பேசுகிறீர்கள் இதை வைத்து பார்க்கும் போது சுமார் ஒரு பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் இலக்கியத்தோடு படித்தவராக உங்களை நாங்கள் நினைக்கிறோம். நீங்களே பலமுறை சொல்வீர்கள் "கற்றுது கை மண் அளவு கற்காதது கடல் அளவு", இதே போல் நீங்கள் கற்றது கை அளவு அல்ல, கடல் அளவு ஆகும். உடனே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மறுத்து குறுக்கிடுகிறார். நீங்கள் என்னுடைய கல்வியை பற்றி இவ்வளவு ஆர்வத்தோடு பேசுவதால், நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். நானும் என் அண்ணனும் பள்ளிக்கூடம் சென்றுபடிக்கின்ற காலத்தில், பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லும் பாடங்களை மனதில் பதிந்து கொள்வோம். படிப்பறிவு எங்களுக்கு நல்லாவே இருந்தது. ஆனால், தொடர்ந்து எங்களால் படிக்க வசதி இல்லை, அந்த சூழ்நிலையில் தான் நானும் என் அண்ணனும் படித்தது போதும் ஏதாவது வேலை செய்வோம் என்ற எண்ணத்தோடு தான் நாங்கள் நாடக கம்பெனிகளில் நுழைந்ததோம். அப்படி நாடக கம்பெனிகளில் வேலை செய்யும் காலத்தில் நேரம் கிடைக்கும் போது ஏதாவது எங்களுக்குக் கிடைக்கின்ற புத்தகங்களை நாங்கள் படிக்க தவறுவது இல்லை எனது அண்ணன் சக்கரபாணி அவர்கள் இலங்கை கண்டியிலே ஆங்கில பள்ளியில் எனது தந்தையால் சேர்க்கப்பட்டு படித்தவர் மூன்றாவது வகுப்பு வரை படித்தவர். எங்கள் தந்தையார் பட்டபடிப்பு படித்தவர். ஆங்கிலம் அவர் கல்லூரியில் லக்சரராகவும் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாகவும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவர். இதை கருத்தில் கொண்டு தந்தையை போல் நாமும் எப்படியாவது கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டோம்.
அதன்படி நாங்கள் இருவரும் நாடக கம்பெனி சினிமா துறையிலும் பணி செய்து கொண்டு இருக்கும்காலத்தில் எங்களுக்கு நேரம் கிடைக்கின்ற போது இரவு வாத்தியார் வழியாக கல்வி பயின்றோம். அந்த விடா முயற்சிதான் இன்று எங்களுக்கு உறுதுணையாக உள்ளது என்று சொல்லி முடித்தார்............Png
-
1st March 2021, 01:49 PM
#2035
Junior Member
Diamond Hubber
நேற்றைய இன்றைய நாளைய கதாநாயகர்கள் போல அல்ல நம் தலைவர்.
நடிக்க வரும் முன்பே அனைத்து கலைகளையும் கற்று பின் நடிக்க வந்தவர்..
திரைப்படங்கள் சார்ந்த அவரின் அறிவு நுணுக்கம் கண்டு வியக்காதவர்கள் இல்லை....
ஸ்ரீதர் இயக்கத்தில் தலைவரின் மீனவநண்பன் படம் தயார் ஆகி கொண்டு இருந்த நேரம்...படத்தில் டி.எம்.எஸ்...வாணி ஜெயராம் பாடிய அசத்தல் பாடல்...
கண் அழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன் பாடல் படமாக்க பட்டு கொண்டு இருக்க...
காட்சிகள் அருமையாக வந்தது என்ற நினைப்பில் அனைவரும் இருக்க ஸ்ரீதர் தலைவர் இடம் போய்.... குறிப்பிட்ட பாடல் வரிகளில் கேமரா லைட்டிங் சரி இல்லை ....அதை மட்டும் மீண்டும் எடுக்கலாமா என்று கேட்க தலைவர் சரி என்று சொல்ல..
அதன் படி பாடல் மறுமுறை அந்த குறிப்பிட்ட பகுதி எடுக்க பட்ட உடன் அனைவரும் மகிழ்ந்தனர்...
இயக்குனர் ஸ்ரீதரும் தளத்தில் இருந்த எல்லோரும் எதிர்பாராத சம்பவம் அங்கே அப்போது நடந்தது....தலைவர் சிரித்து கொண்டே அந்த இளம் வயது துணை இயக்குனரிடம் போய் என்னப்பா என் வாய் அசைப்பு பாடல் வரிகள் உடன் இந்த முறை சரியா ஒத்து போட்சா என்று கேட்க.
அதிர்ச்சியில் உறைந்து போனது....அந்த இளம் இயக்குனர் மட்டும் அல்ல...முது பெரும் இயக்குனர் ஸ்ரீதரும் தான்...உங்களிடம் சொல்ல தயக்கம் மற்றும் அல்ல பயம் எப்படி கண்டுபிடித்தீர்கள் இந்த நிகழ்வை என்று ஸ்ரீதர் கேட்க..
பாடல் முழுமை அடைந்துவிட்டது என்று நான் உட்பட அனைவரும் நினைக்கும் போது அந்த இளம் இயக்குனர் வாய் அசைப்பு வரிகள் உடன் உடன்பட்டு செல்லவில்லை என்று உங்களுடன் சைகையில் சொன்னதை நான் நடித்து கொண்டே கவனித்தேன்....
நாடகம்...படம்..என்று நம்மை நம்பி காசு கொடுத்து பார்க்கவரும் கடைசி ரசிகன் கூட ஏமாந்து விட கூடாது என்பதில் நான் சரியாக இருப்பேன்...என்ன எப்படி...நான் சொன்னது சரியா ?
என்று கேட்க பதில் சொல்ல முடியாமல் மௌன மொழியில் அவரும் ஒப்பு கொள்ள
அந்த துணை இயக்குநர் பி.வாசு அவர்களை அருகில் அழைத்து பயம் கொள்ள வேண்டாம்.
உங்கள் தகப்பனார் போல உங்களுக்கும் சிறந்த எதிர் காலம் இந்த துறையில் நிச்சியம் உண்டு என்று வாழ்த்தி இரு கரம் கூப்பி கும்பிட்டு அன்று விடை பெறுகிறார் நம் காவியநாயகன்.
முதுகுக்கு பின்னால் கூட செயல்படும் கண்கள் நம் தலைவருக்கு உண்டு என்பதை நிரூபித்த சம்பவங்களில் அதுவும் ஒன்று...
சும்மா வந்ததில்லை நமது தலைவர் புகழ்.
உண்மை...உழைப்பு..
திறமை.... சார்ந்தவை அவை....நன்றி.
தொடரும்....உங்களில் ஒருவன்...நெல்லை மணி....வாழ்க தலைவர் புகழ்.....
அதனால் இன்று வரை சொல்கிறோம்...
தலைவா வந்தோமே எமை நாம் தந்தோமே என்று........
-
1st March 2021, 01:50 PM
#2036
Junior Member
Diamond Hubber
# எம்ஜிஆர் தொப்பி அணிய கார*ணம்#
சிறு வ*ய*து முத*லே எம்ஜிஆர் தொப்பி மற்றும் கண்ணாடி மீது அதிக ஈர்ப்பும், ஆசையும் கொண்டிருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். நடிக்க வந்த பிறகு தனது பாகவதர் ஸ்டைல் சிகையை மறைக்க வெளியிடங்களுக்கு வரும் போது தொப்பியும், அல்லது துண்டை முண்டாசு போல கட்டியும் வரும் வழக்கமும் கொண்டிருந்தாராம். எம்.ஜிஆர் தனது பல படங்களில் பாடல்களில் விதவிதமான தொப்பிகளை அணிந்து நடித்திருப்பார். மற்ற நடிகர்களை காட்டிலும் எம்.ஜி.ஆர்-க்கு தான தொப்பி மிகவும் பொருத்தமாக இருக்கிறது என சினிமா துறையினரே பரவலாக பேசிய காலமும் இருந்தது.
என்ன இருந்தாலும், எம்.ஜி.ஆர் தனது அரசியல் காலக்கட்டத்தில் தொடங்கி கடைசி வரையில் அணிந்திருந்த அந்த வெள்ளை தொப்பி தான் அவரது அடையாளமாக மாறியது. எம்.ஜி.ஆர் படத்தை வரைய வேண்டும் என்றால் மிகவும் எளிது, தொப்பியும், கண்ணாடியும் வரைந்தால் போதுமானது. இந்தளவு பிரபலமான தொப்பிக்கு பின்னால் சில இரகசியங்களும், உண்மைகளும் மறைந்திருக்கின்றன...
அடிமைப்பெண்!
படங்களில் மட்டும் தொப்பி பயன்படுத்தி வந்த எம்ஜிஆர்-ஐ நிஜ வாழ்க்கையிலும் தொப்பி பயன்படுத்த வைத்த படம் அடிமைப்பெண். ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடந்துவந்த நேரத்தில் அதிக வெயில் வாட்டி எடுத்தது. அதனால் எம்ஜிஆர் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.
புஸ்குல்லா!
படப்பிடிப்பு காண வந்த நபர் இதை கவனித்து எம்ஜிஆர்-க்கு வெள்ளை நிற புஸ்குல்லா பரிசளித்தார்.இந்த தொப்பியால் எம்ஜிஆர் அந்த வெயிலில் சற்று இலகுவாக பணியாற்ற முடிந்தது. மேலும், இந்த தொப்பி எம்ஜிஆர்-க்கு பொருத்தமாகவும்,, அழகாகவும் இருப்பதாகவும் குவிந்த பாராட்டுக்கள், இந்த தொப்பி எம்.ஜி.ஆர் தலையில் நிரந்தர இடம் பிடிக்க காரணம் ஆனது.
நிரந்தர தொப்பி!
பின்னாட்களில் இந்த வெள்ளை புஸ்குல்லா தொப்பியுடன் அதிகம் வெளிவர துவங்கினார் எம்ஜிஆர். இந்த தொப்பி இல்லாமல் புகைப்படம் எடுப்பதையும் தவிர்த்தார். எம்ஜிஆர்-உடன் மிகவும் ஒன்றிப்போனது இந்த வெள்ளை தொப்பி.
பிரத்யேக தயாரிப்பு!
எம்ஜிஆர்-க்கு மிகவும் பிடித்துப்போன இந்த தொப்பியை ரசாக் எனும் தொப்பி தயாரிப்பாளர் பிரத்யேகமாக தயாரித்து தர துவங்கினார். இறுதி காலம் வரை இவர் தான் எம்ஜிஆர்-க்கு தொப்பி தயாரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
தொப்பி தயாரிப்பு!
செம்மறி ஆட்டின் முடிகளை பதப்படுத்தி, அதை மேம்படுத்தி, அதனுள் மூன்று அடுக்குகளில் கேன்வாஸ் வைத்து தைத்து ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டது இந்த தொப்பி. காற்று உள்ளே செல்லவும், வியர்வை தங்காமல் இருக்கவும் சிறு சிறு துவாரங்கள் இடம் பெற்றிருந்தன.
தொப்பி விமர்சனம்!
திமுக-வை விட்டு எம்ஜிஆர் வெளியேறிய போது, எம்ஜிஆர்-ஐ தொப்பியை வைத்து கிண்டலடித்து திமுக-வினர் விமர்சனம் செய்து வந்தனர் என்றும் பல செய்தி கோப்புகள் மூலம் அறியப்படுகிறது.
உடல்நலம் குன்றிய போது...
1984-ல் எம்ஜிஆர்-க்குக் உடல் நலம் குன்றி அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் இறந்துவிட்டார் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எம்ஜிஆர்-ன் படங்கள், வீடியோ காட்சிகள் வெளியிட தீர்மானித்தனர்.
தொப்பி இல்லாமல் எம்ஜிஆர்!
ஆனால், மருத்துவர்கள் தொப்பி அணிய மறுத்தால், தொப்பி இல்லாமல், பல வருடங்கள் கழித்து எம்ஜிஆர் தோற்றம் வெளியானது. உடல்நல குறைபாட்டின் காரணத்தால் மெலிந்து காணப்பட்ட எம்ஜிஆர் படங்களை கண்டு மக்கள் மிகவும் வருந்தினர்.
அடையாளம்!
எம்ஜிஆர் என்றால் அனைவருக்கும் மனதில் தோன்றும் தோற்றத்தில் பெரும்பங்கு இந்த தொப்பியும், கருப்பு கண்ணாடியும் தான் இடம்பெறும். அந்தளவிற்கு எம்ஜிஆர்-ன் அடையாளமாக மாறியது இந்த வெள்ளை தொப்பி. எம்ஜிஆர் இறந்த போதிலும் கூட இந்த வெள்ளை தொப்பியுடன் தான் ந*ல்ல*ட*க்க*ம் செய்ய*ப்ப*ட்டார்.
ம*திய வ*ண*க்க*த்துட*ன்...Png
-
1st March 2021, 01:51 PM
#2037
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம்..
புரட்சி தலைவர் நடித்த திரை காவியங்களை பற்றிய இந்த அலசல் தொடரில் புரட்சி தலைவர் நடித்த படங்களை பற்றி பார்த்து வருகின்றோம்
அந்த வகையில் இன்று புரட்சி தலைவர்
மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படமான "கூண்டுக்கிளி" திரைப்படம் பற்றி காண்போம்...
ஒரே எம்ஜிஆர், ஒரே சிவாஜி, ஒரே ‘கூண்டுக்கிளி’; ’கூண்டுக்கிளி’ வெளியாகி 66 ஆண்டுகள
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹீரோக்கள் ஜோடி போட்டு, வெற்றிக்கொடி நாட்டியது நடந்திருக்கிறது. சின்னப்பா, கிட்டப்பாக்கள் காலம் தொடங்கி. இன்றைக்கு அஜித் - விஜய் வரைக்கும் அப்படியொரு ஜோடி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இவர்களில் நீண்டகாலம் தமிழ் சினிமாவில் நீயா நானா என்று முன்னேறிய ஜோடி... புரட்சி தலைவர் எம்ஜிஆரும் ,சிவாஜியும்தான்!
எம்ஜிஆர் - சிவாஜி இரண்டுபேரும் எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இருவரும் மார்க்கெட் வேல்யூ கொண்ட உச்ச நட்சத்திரங்கள். இதையடுத்து எம்ஜிஆர் அரசியல் கட்சி தொடங்கினார். அரியணையில் அமர்ந்தார். சிவாஜி தொடர்ந்து நடித்தார். மரணிக்கும் வரை நடித்தார். மரணமில்லாப் பெருவாழ்வு எனும் புகழுடன் இருவருமே இன்று வரை போற்றப்படுகின்றனர்.
இவர்களுக்குப் பிறகு அடுத்த தலைமுறை நாயகர்களாக வந்தவர்கள் கமலும் ரஜினியும். ரஜினி கமலின் படத்தில்தான் அறிமுகமானார். தொடர்ந்து ஏகப்பட்ட படங்கள் இணைந்து நடித்தார்கள். ஒருகட்டத்தில் இருவருமே பேசிக்கொண்டார்கள்; பிரிந்து களமாடினார்கள். வெற்றி கிரீடம் சூடிக்கொண்டார்கள்.
ஆனால் எம்ஜிஆரும் சிவாஜியும் அப்படியில்லை. இருவரும் ஒருபடத்தில் இணைந்து நடித்தார்கள். ஒரே படத்தில், ஒரேயொரு படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அவ்வளவுதான். அதன் பிறகு, தனித்தனியே ராஜநடை போட்டார்கள். தனித்தனி கோட்டையில் அமர்ந்து, ராஜாங்கம் பண்ணினார்கள். அப்படி அவர்கள் சேர்ந்து நடித்த ஒரே படம்... ‘கூண்டுக்கிளி’.
ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பில், டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆரும் ,சிவாஜியும் சேர்ந்து நடித்த ‘கூண்டுக்கிளி’படம் உருவானது. ஜீவா, தங்கராஜ், மங்களா எனும் கதாபாத்திரங்களின் வழியே புரட்சி தலைவர் எம்ஜிஆர், சிவாஜியுடன் பி.எஸ்.சரோஜாவும் நடித்திருந்தார்.எழுத்தாளரும் பத்திரிகையாளருமான விந்தன், கதை, வசனம் எழுதியிருந்தார்.
சிவாஜிதான் ஜீவா. அவரிடம் இருந்துதான் கதையே தொடங்கும். தற்கொலைக்குக் கயிறு கிடைக்கும். இதைக் கொண்டு சாகலாம் என்று நினைப்பார். அப்போது ரயில் சத்தம் கேட்கும். ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுப்பார். அப்போது ரயில் நெருங்கும் வேளையில், எம்ஜிஆர் காப்பாற்றுவார். எம்ஜிஆரின் பெயர் தங்கராஜ். இருவரும் நண்பர்கள்.
‘மங்களா என்பவளைப் பெண் பார்க்கச் சென்றது, பிடித்துப் போனது, ஆரம்பத்தில் பெற்றோர் சம்மதித்தது, பிறகு கடன் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் மங்களாவுக்கு திருமணம் செய்துவைக்க முடியாது என மறுத்துவிடுவது, அவளைத் தேடி சிவாஜி செல்வது, ஆனால் பலவருடங்களாகியும் அவளைக் கண்டறியாமல் அலைவது, ஒருகட்டத்தில் உயிரை விட முடிவு செய்வது என எம்ஜிஆரிடம், தன் நண்பரிடம் சொல்லுவார் சிவாஜி.
பிறகு சிவாஜியை தன் வீட்டுக்கு அழைத்து வருவார். வேலையும் வாங்கித் தருவார். மகனை அறிமுகப்படுத்தி வைப்பார். எம்ஜிஆரின் மனைவியைப் பார்த்ததும் அதிர்ந்து போவார் சிவாஜி. அவர்... சிவாஜி பெண் பார்த்த மங்களா ஆவார். உடனே மயங்கிச் சரிவார்.
மங்களாவைப் பெண் பார்த்தது சிவாஜிக்குத் தெரியும். ஆனால், சிவாஜிதான் தன்னைப் பெண் பார்க்க வந்தவர் என்பது பி.எஸ்.சரோஜா அவருக்குத் தெரியாது. அதேசமயம், சிவாஜியால் இயல்பாக இருக்கமுடியாது. ஒருகட்டத்தில் ஊரும் தெருவும் ’ஒருமாதிரி’யாக இணைத்துப்பேசத் தொடங்கும். இதை எம்ஜிஆரிடமே சிலர் கிண்டல் செய்ய, அவர்களை அடித்துப் போடுவார். அதனால் கைது செய்யப்படுவார். ஜெயிலுக்குப் போவார். போகும் போது தன் மனைவியிடம் ‘கவலைப்படாதே. உன்னையும் நம் மகனையும் என் நண்பன் ஜீவா காப்பாற்றுவான்’ என்பார் எம்ஜிஆர்.
ஆனால், அண்ணா அண்ணா என்றழைக்கும் நண்பனின் மனைவியை, காதலியாகவே பார்ப்பார் சிவாஜி. ஒருகட்டத்தில், நேரடியாகவே விவரம் சொல்ல, ‘பெண் பார்க்க வந்த ஒரே காரணத்தால், இப்படி நினைக்கலாமா?’ என்று கோபமாவார் அந்தப் பெண்மணி. ஆனாலும் அவளை அடையும் எண்ணம் சிவாஜிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொழுந்துவிட்டெரியும். அவரும் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டவனாக, வில்லனாக மாறிக் கொண்டே இருப்பார்.
இரக்கமே இல்லாதவனாக மாறுவார். அரக்கத்தனத்தையெல்லாம் காட்டத் தொடங்குவார். சாப்பாட்டுக்கு வழியிருக்காது. ‘என்னுடன் வா. ஓடிப்போய்விடலாம்’ என்று அழைப்பார் சிவாஜி. வீட்டை காலி செய்ய ஏற்பாடுகள் செய்வார். ‘இப்போதாவது வா. ஓடிவிடலாம். உன்னையும் உன் குழந்தையையும் காப்பாற்றுகிறேன்’ என்பார்.
எங்கோ ஓர் திண்ணையில் வசிப்பார் எம்ஜிஆரின் மனைவி. பிச்சைக்காரர்களுடன் பிச்சைக்காரராக தங்குவார். பையனுக்கு உடல்நலம் மோசமாகிவிடும். ‘பணம் தரேன். பையனைக் காப்பாத்து. ஆனா என் ஆசைக்கு இணங்கு’ என்று டார்ச்சர் பண்ணுவார் சிவாஜி. ஆனால் எம்ஜிஆரின் மனைவி மசியமாட்டார். இவையெல்லாம் தெரிந்தே அதே தெருவில் உள்ள சொக்கி என்பவள், சிவாஜியைக் காதலிப்பாள். ஆனால் அவளை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் சிவாஜி.
கடைசியாக, சிவாஜியைத் தேடி வருவார் எம்ஜிஆரின் மனைவி. அப்போது இருவருக்கும் வாக்குவாதம். கடவுளை நக்கலடித்தும் பேசுவார். வெளியே இடி, மின்னல். அந்த மின்னல் சிவாஜியின் கண்களைப் பறித்துவிடும். பாக்கெட்டில் உள்ள பணத்தையெல்லாம் கொடுத்து, பையனைக் காப்பாற்றிக்கொள் என்று புத்தி தெளிவார்.
அங்கிருந்து கிளம்பி புலம்பியபடி செல்வார் சிவாஜி. எம்ஜிஆர், சிறையில் இருந்து விடுதலையாகி ரயிலில் வந்து இறங்குவார். வீட்டுக்கு வருவார். எல்லா விஷயமும் தெரியவரும். சிவாஜியைக் கொல்ல முடிவு செய்வார். தட்டுத்தடுமாறி, சிவாஜி தண்டவாளத்துக்கு வருவார். எந்த தண்டவாளத்தில் சாகப் போய், எம்ஜிஆர் வந்து காப்பாற்றினாரோ... அதே தண்டவாளம். ஆனால் எம்ஜிஆர் தண்டவாளத்தில் இருந்து சிவாஜியைத் தூக்கிவெளியே போடுவார். அடித்து உதைப்பார். அப்போது அங்கே வரும் சொக்கி, உண்மைகளையெல்லாம் சொல்லுவாள்.
அதைக் கேட்ட எம்ஜிஆர், சிவாஜியை மன்னிப்பார். மனைவியையும் மகனையும் பார்ப்பார். எம்ஜிஆர் தன் குடும்பத்துடன் இணைவார். சொக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்ல, காற்றில் கைவீசியபடி நடந்து செல்வார் சிவாஜி. ‘சுபம்’ என்று டைட்டிலுடன் படம் நிறைவுறும்.
டைட்டிலில் எம்.ஜி.ராமச்சந்தர், சிவாஜி கணேசன் என்று இருவரின் பெயரையும் ஒரே ஸ்க்ரீனில் போடுகிறார்கள். படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுத்தாளர் விந்தன் எழுதியிருப்பார். விந்தன், தஞ்சை ராமையா தாஸ், கா.மு.ஷெரீப், மருதகாசி முதலானோர் பாடல்களை எழுத, படத்தில் பத்துப்பனிரெண்டு பாடல்கள் இருக்கின்றன. கே.வி.மகாதேவன் இசையமைக்க, டி.ஆர்.ராமண்ணா இயக்கியிருந்தார்.
நெகடீவ் ரோலில், கனகச்சிதமாக தன் நடிப்பையும் நடிப்பின் முத்திரையையும் பதித்திருந்தார் சிவாஜி. எம்ஜிஆர், தன் முத்திரையை திரையில் காட்டாத காலம் அது. தனக்கென ஒரு பாணியை எம்ஜிஆர் வகுத்துக் கொள்ளாத காலம் அது. ஆனாலும் அவரின் தேர்ந்த நடிப்பும் கச்சிதம். ஆனால் படம் முழுக்க சிவாஜி வருகிறார். ஜெயிலுக்கு போன எம்ஜிஆர், படம் முடியும் போதுதான் வருகிறார்.
இந்தப் படம் வந்த தருணத்தில், அதாவது படம் ரிலீசான போதா... பிறகா... தெரியவில்லை. எம்ஜிஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களும் முட்டிக் கொண்டார்கள். தியேட்டரில் ஏக கலாட்டா. படம் திரையிடப்படாமல் பாதியிலேயே நின்றது. படத்தின் பிலிம் சுருள் எரிக்கப்பட்டது என்றெல்லாம் ஏகப்பட்ட கதைகளும் திரைக்கதைகளும் சொல்லுவார்கள். ஆனால், இதேகாலகட்டத்தில் வந்த படங்கள், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகள் வரைக்கும் கூட புத்தம்புதிய காப்பி என்று ஒரு ரவுண்டு வந்தன. ‘கூண்டுக்கிளி’ மட்டும் மிஸ்ஸிங்.
புரட்சி தலைவரின் இதற்கு முந்தைய படமான "மலைக்கள்ளன்" அந்த நாளில்
ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது.. ஆனால் இந்த திரைப்படம் தோல்வியை தழுவியது..
1954ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ‘கூண்டுக்கிளி’ வெளியானது. படம் வெளியாகி, 66 வருடங்களாகின்றன.
தமிழ்த் திரையுலகில், ஒரே எம்ஜிஆர், ஒரே சிவாஜி என்பார்கள். அதேபோல், எம்ஜிஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே ‘கூண்டுக்கிளி’.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...skt...
-
1st March 2021, 01:51 PM
#2038
Junior Member
Diamond Hubber
புரட்சியார் புறப்பட இன்னும் சில தினங்களே உள்ளது !
இப்படி ஒரு செய்தியை அந்தக்காலத்திலேயே 1959ல் கலை என்ற சினிமா பத்திரிகை வெளியிட்டது.அப்போதே நமது எம்.ஜி.ஆர் வருகை கலையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.1958ல் நாடோடி மன்னன் பெற்ற இமாலய வெற்றியால் (தயாரிப்பு,இரட்டை வேட நடிப்பு,இயக்கம்) தலைவர் மீது எவ்வளவு பேர் எதிர்த்திசையில் கண்பட்டிருப்பார்கள்.அப்படியே நடக்கவும் செய்தது.சீர்காழியில் இன்பக்கனவு நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.ஓய்வு எடுக்கவேண்டிய சூழல்.எம்.ஜி.ஆர் மார்கெட் அவ்வளவுதான் என்றவர்கள் பலர்.ஆனால் மனோபலம் தன்னம்பிக்கை கொண்ட நாயகராயிற்றே நம் தலைவன்.தலைவரின் முன்னேற்ற வாழ்க்கையில் முதல் தடைக்கல் நிகழ்வு இது தான்.பின்னர் பீனிக்ஸ் பறவை போன்று எழுந்தார் வீறுகொண்டு.( இந்த பீனிக்ஸ் பறவை உவமை எம்.ஜி.ஆருக்கு மட்டும் பொருந்தும்.வேற யாருக்கும் காரணப்பெயராக இது அமையாது ) இந்த சூழலில் அக்கால "கலை" என்ற சினிமா பத்திரிகை 1959ல் எம்.ஜி.ஆரை பிரத்தியேகமாக சந்தித்து உடல் தேறியதை உலகிற்கு சொல்லி தனிப்படங்களுடன் செய்தி வெளியிட்டது.எம்.ஜி.ஆர் வலுவாக எழுந்து நிற்பதையும் ஒரு குழந்தையை கையில் தூக்கிக்கொண்டிருப்பதையும் படம் எடுத்து வெளியிட்டு " புரட்சியார் புறப்பட இன்னும் சில தினங்களே உள்ளது " என்று செய்தி வெளியிட்டது..........nssm...
-
1st March 2021, 01:55 PM
#2039
Junior Member
Diamond Hubber
அந்த அதிகாரி உதயசூரியன் சின்னத்தை முடக்கி இருந்தால் ரொம்ப சந்தோஷ பட்டு இருப்பார் குருஜி...
அவர் தலைவர் மீது பற்று வைத்ததற்கு ஒரு சிறு சம்பவம் குருஜி.
எம்ஜிஆர் முதல்வரான பின்னர் தானாக முடிவுகள் எடுக்காமல் அதிகாரிகளிடம் உங்களுக்கு மக்களுக்கு நல்லது என்னவென்று செய்ய தெரியும் அதை செய்யுங்கள் என கட்டளையிட்டாராம்.
எம்ஜிஆர் 1977 ல் முதலமைச்சர் ஆனார். முதல்வர் அலுவலக்ததில் கோப்புகளை பாஅர்த்துகொண்டிருந்தாராம். அப்போது அவரது அலுவலகத்துக்கு ஒரு கோப்பு அனுப்பப்பட்டது. எம்ஜிஆர் அந்த கோப்பை படித்துவிட்டு கோப்பில் "எது சரியோ அதை செய்யுங்கள்" என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி அனுப்பிவிட்டாராம்.
கோப்பை அனுப்பிய அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. சரி முதல்வரிடமே கேட்போம் என்று எம்ஜிஆர் அலுவலக அறைக்குள் சென்று ஐயா கோப்பில் என்று இழுத்துள்ளார், அதற்கு எம்ஜிஆர் ஆமாம் "எது சரியோ அதை செய்யுங்கள்" என்று எழுதியிருக்கிறேன் அதை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
நீங்கள் சொல்லுவதை கேட்டு நடப்பது தான் எங்கள் வேலை என்று அந்த அதிகாரி சொல்ல. இதோ பாருங்கள் இந்த "முதலமைச்சர்" நிர்வாகம் எனக்கு புதியது. எனவேதான் நான் அப்படி "எது சரியோ அதை செய்யுங்கள்" எழுதினேன் , மக்களுக்கு நல்லது நடக்கணும் அதில் கவுரவம் ஒரு பொருட்டல்ல என்று கூறியுள்ளார்.
மலைத்துபோன அந்த அதிகாரி சார் , நாங்கள் எதாவது பிரச்சனை அல்லது அரசு திட்டத்துக்கு உங்கள் வழிகாட்டுதல் ஒப்புதல் தேவை என்றால் உங்களிடம் "எப்படி போனால் எப்படி முடியும்" என்று பல தீர்வுகளை சொல்கிறோம். நீங்கள் யோசித்து உங்களது முடிவை சொல்லுங்கள். அதன்படி நாங்கள் செயல்படுகிறோம் என்றார்.
எம்ஜிஆர் அதற்க்கு "சரி, இனி அப்படியே செய்வோம்" என்று கூறியுள்ளார். "தனக்கு எல்லாம் தெரியும்" என்ற மமதை இல்லாமல் மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் எனபதற்காக இறங்கி வந்தவர் எம்ஜிஆர். அவர்தான் எம்ஜிஆர் குருஜி......... Sujeeth
-
2nd March 2021, 07:40 AM
#2040
Junior Member
Diamond Hubber
கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.
அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்து விட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க என்னை குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக
முதல் நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் ஆசை நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.
‘‘என்னது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு,
‘‘நம்பள மாதிரி ஆளுங்கள நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி
அவர்களுடன் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.
இன்றைக்கு இருக்கும் மக்களால் பிரபலமானவர்களில் யாருக்கு இந்த குணமுண்டு.
தொண்டர்களையும் ரசிகர்களையும் தொடக் கூட அனுமதிக்காத முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர்களே அதிகம்....Png
Bookmarks