-
22nd January 2021, 08:23 AM
#1781
Junior Member
Diamond Hubber
சோர்ந்து போனவர்களை தட்டி எழுப்பி , மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் நம்பிக்கையும் , விடா முயற்சியும் தனி மனிதனுக்கு தேவை என்று தன்னுடைய படங்கள் மூலம் பல காட்சிகளை
அமைத்து சமுதாயத்தில் பலர் முன்னேற மக்கள் திலகத்தின் படங்கள் இருந்தது என்று பல சமூக ஆவலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .
இந்திய சினிமாவில் எம்ஜிஆரின் சமூக படைப்புகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது .எம்ஜிஆரின் பட பாடல்கள் மொழி மாற்றம் செய்து பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எம்ஜிஆரின் பாடல்களை திரையிட்டு அவர்களுக்கு மனதில் தெளிவும் , அமைதியும் ,ஏற்பட வழி செய்கிறார்கள் .அந்த அளவிற்கு எம்ஜிஆரின் நடிப்பும் பாடல்களும் இருந்ததை பாராட்டுகிறார்கள் .
மனதில் ஒருவித அச்சம் .
ஏமாற்றங்கள்
நினைத்து நடக்காமல் போனது
மற்றவர்கள் நிராகரிப்பு
பொறாமை
இயலாமை
ஏக்கம்
வரிந்து கொண்டு போர்ரடுவது
முன்னிலை படுத்தி போராட்டம்
வசவுகள் - ஏவுகணைகள் ]
ஆத்திரம்
நிர்பந்தம்
திணறல்
அடக்க முயற்சி
அடங்கி போதல்
என்ற குணங்கள் கொண்டோர் இன்றைய சமுதயாத்தில் தங்களை வருத்தி கொண்டு வாழும் அவல நிலைக்கு உள்ளதை
எண்ணித்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய படங்களில் பாடல்களையும் , காட்சிகளையும் அமைத்து மக்கள்
திருந்திட வழி செய்தார் . பலரும் மக்கள் திலகத்தின் அறிவுரைகளை ஏற்று கொண்டார்கள் .
ஒரு சிலர் ...............
''இவர் திருந்தவில்லை ...மனம் வருந்தவில்லை ..அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ''.........vsm...
-
22nd January 2021 08:23 AM
# ADS
Circuit advertisement
-
22nd January 2021, 08:24 AM
#1782
Junior Member
Diamond Hubber
நடிகர் சிரஞ்சீவீ தான் முதல் முதலாக எம் ஜி ஆரை பார்த்ததை விவரித்தார் ஆந்திராவில் ஏதோ அதிகாரபூர்வ நிகழ்ச்சி முடிந்து விட்டு ஸ்டுடியோ பக்கம் வந்த எம் ஜி ஆரை பார்த்த போது ஒரு சுத்த தங்க கட்டி நடந்து வந்தது போல் இருந்தார் பிரபலமாகத நடிகனாக இருந்தபோதும் என்னை அன்போடு விசாரித்து உரையாடியதை மறக்க முடியாது
மலையாள நடிகர் ப்ரேம் நஸீர் தான் முதன் முதலாக எம் ஜி ஆரை சந்தித்ததை இப்படி விவரித்தார் அன்று நான் சின்ன நடிகன் திருவனந்தபுரம் மெரிலாண்டு ஸ்டுடியோவில் படபிடிப்புக்காக வந்த போது ஒரே பரபரப்பு எம் ஜி ஆர் ராஜராஜன் என்ற படத்தின் படபிடிப்புக்கு வருகிறார் என்று அது வரை எம் ஜி ஆரை நேரில் காணத நானும் ஆவலுடன் காத்திருந்தேன் பத்து மணி அளவில் ஒரு ப்ளேன் முத்து கார் கார் வந்து நிற்க்க அதன் கதவை திறந்து கட்ஷூ போட்டு வெள்ளை வேட்டி கைகளை புஜம்வரை சுருட்டி வைத்து வாராத நிறைய சுருள் முடியோடுதங்க நிறத்தில் புன்சிப்போடு கை தொழுது நடந்து வந்த எம் ஜி ஆரை பார்த்து ஆண் ஆன நானே ஒரு கணம் மலைத்து விட்டேன் இத்தனை தேஜஸ் அழகுடைய மனிதன் உண்டா என்று
சரோஜா தேவி தான் முதல் முதலாக எம் ஜி ஆரை சந்தித்ததை இப்படி கூறுகிறார்
துணை நடிகையாக கன்னடபடபிடிப்பில் இருந்தபோது அனைவரும் படபடப்போடு எழுந்து வணக்கம் சொல்ல நான் எதுவும் புரியாமல் பார்க்க தூரத்தில் ஆயிரம் சூரியன் ஒன்றாக வரும் பிரகாசத்தோடு ஒருவர் வர அனைவரும் வணங்க நான் பிரம்மிப்போடு வணங்கி நிற்க்க அவர் சென்ற பின் யார் இவர் என்று கேட்க இவர் தான் எம் ஜிஆர் என கூற நான் அதிர்வோடு நின்றேன்
அப்போது என்னை கவனித்த எம் ஜி ஆர் என்னை பற்றி விசாரித்து தன் சொந்த படமான நாடோடி மன்னன் படத்தில் நடக்க வைத்து எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை தந்தார் என் அன்பு தெய்வம் எம் ஜி ஆர்
எம் ஜி ஆர் கண்டவர் பிரம்மிக்க பழகியவர் பரவசம் கொள்ள
அறிந்தவர் வியக்க
அறிஞர்கள் வியக்க
ஆராட்சியாளர்கள் ஆராயிகிறார்கள் எம் ஜி ஆர் மனிதபிறவியா தெய்வபிறவியா என்று
வாழ்க எம். ஜி .ஆர் ., புகழ்... Arm...
-
22nd January 2021, 08:24 AM
#1783
Junior Member
Diamond Hubber
ஷாக் ட்ரீட்மென்ட்
----------------------------
எம்.ஜி.ஆர் ஒருவரை,,அதுவும் பத்திரிகையுலக ஜாம்பவான் ஒருவரை செருப்பால் அடித்தாரா?? அது என்ன கதை?? பார்ப்போமா?
சா.விஸ்வனாதன் என்னும் பிரபல பத்திரிகையாளர் அவர்!
உங்களுக்கு எளிதில் அடையாளம் தெரிய--
சாவி!!
எஸ்.எஸ்.வாசன் தொடங்கிய ஆனந்த விகடனில் தொடங்கிய இவரது எழுத்துப் பணி கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நீடித்தது!
ஒரு சினிமாவில் இவருக்கேத் தெரியாமல் இவர் நடித்திருக்கிறார்?
அதுவும் எம்.ஜி.ஆரின் அன்பே வா படத்தில்!
அவருக்கேத் தெரியாமல் அவர் எப்படி நடிக்க முடியும்??
அன்பே வா படப் பாடலான--
புதிய வானம் புதிய பூமி பாடல் ஷூட் ஆகும்போது இவரும் அங்கே ஒரு சுற்றுலாப் பயணியாக சென்றிருக்கும் போது சரியாக அந்த பாடல் ஷூட்டிங்கில் குளோஸப்பில் இவரும் சிக்கிக் கொண்டார்.
இன்றைக்கும்,,அப்பாடலைப் பார்த்தீர்கள் என்றால் --
அப்பாடல் காட்சியில் இவர் நடித்திருப்பது போல் தெரிவார்!
எழுத்தாளர் சாவி என்றாலே பத்திரிகையுலகில் இளமையும் ஜாலியும் நிறைந்தவர் என்று பேசப்படுவார்!
இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் நகைச்சுவையால் பின்னப்பட்டிருக்கும்!
இன்றைய ராஜேஷ்குமார்,,பட்டுக்கோட்டை பிரபாகர்,,சுபா போன்ற பல எழுத்தாளர்களை உருவாக்கிய பிரம்மா எனலாம் இவரை!!!
பெரியாரிஸத்தில் தீவிர பிடிப்புள்ள இவர் அன்றையக் காலக் கட்டத்தில் தீவிரமாக ஆதரித்த அரசியல் தலைவர்---?
கருணா நிதி??
முரசொலிக் குழுமம் குங்குமம் வார இதழைத் தொடங்கி அது வெற்றிகரமாக நடை போடுவதற்குக் காரணமே இந்த சாவி தான்!
இவர் தான் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்!
தம் எழுத்துலக அனுபவங்களாலும்,,திறமையாலும் அப்பத்திரிகையை சக்சஸ் ஃபுல் இதழாக மாற்றிய சாவி--சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ--
தேவையோ--தேவையில்லையோ--
அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை சகட்டு மேனிக்கு தம் பத்திரிகை மூலம் திட்டுவது அன்றைய சாவிக்கு சுவாரஸ்யப் பொழுது போக்கு??
அன்றைய முரசொலியை விட குங்குமம் வார இதழில் தான் எம்.ஜி.ஆர் மீதானக் கண்டனப் பதிவுகள் அதிகம் இடம் பெறும் என்றால் பார்த்துக் கொள்லுங்களேன்??
அந்த சமயத்தில் தான்--
குங்குமத்தின் கொட்டத்தை அடக்க--
மணியன் மூலம்--இதயம் பேசுகிறது பத்திரிகையும்-
வலம்புரி ஜான் ஆசிரியராக அங்கம் வகித்த --தாய்--வார இதழும் பவனி வரத் தொடங்கின!
எழுத்தாளர் சாவி,,குங்குமம் வார இதழின் ஆசிரியர் பணியைத் துறந்து--சாவி என்றப் பெயரிலேயே சொந்தமாகப் பத்திரிகை தொடங்குகிறார்!
அதிலும் வழக்கம் போல் எம்.ஜி.ஆருக்கு எதிராக--காச் மூச் தான்??
இந்த நிலையில் தான்--
சாவி பத்திரிகையில் வெகு திடீர் என்று அந்த அறிவிப்பு வெளி வருகிறது?
தோட்டத்திலிருந்து கோட்டை வரை!
முதல்வருடன் மூன்று நாட்கள்!!
சகலரும் அன்றையக் காலத்தில் அதிர்ந்து போன இதன்-பின்னணியில் தான் எம்.ஜி.ஆர்-
முன்னணியில் தெரிகிறார்!!
சாவி பத்திரிகை தொடங்கி சில இதழ்களில் கொஞ்சம் பொருளாதார நெருக்கடி அவருக்கு ஏற்பட--
கருணா நிதியிடம் உதவி கேட்டு இவர் செல்ல--
குங்குமம் பத்திரிகைக்கே ஆசிரியராக இரு. வேண்டுமானால் சம்பளத்தை உயர்த்தித் தருகிறேன் என்ற ஆணவமான பதில் கிடைத்திருக்கிறது?
ஒரு பண்பட்ட எழுத்துக் கலைஞனுக்கு இதை விட வேறு என்ன அவமானம் வேண்டும்??
முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஒரு கவர் ஸ்டோரி செய்தால் சர்க்குலேஷன் உயரும் என்ற நிச்சயத்தின் பேரில் -வெகுவாகத் தயங்கி--கூச்சப்பட்டு முதல்வர் எம்.ஜி.ஆரை அணுக--அவரோ--
உங்களை ஆணந்த விகடன் பத்திரிகையில் இருந்து தினமணி கதிர் பத்திரிகையைத் தொடர்ந்து வெகு காலம் நான் அறிவேன்.
என்னை எப்படி வேண்டுமானாலும் பேட்டி எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஒரு நிபந்தனை??
நான் பேட்டிக் கொடுக்கிறேனே என்று என்னை செயற்கையாகப் புகழக் கூடாது?
என்னையும் என் மந்திரி சபையையும் நியாயமான கண்னோட்டத்தில் எழுத வேண்டும்???
எழுத்தாளர் சாவி,,நெகிழ்ந்து போய் தமது நெருங்கிய சகாக்களிடம் இப்படிச் சொன்னாராம்--
வாழ்க்கைக்குத் தேவையான மனித நேயம்,,கருணா நிதியிடம் கொஞ்சங்கூட இல்லை என்பதை உணர்ந்த போது அதிர்ச்சியாக இருந்தது!
அதை விட அதிர்ச்சி--
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் எனக்கு உதவியதுடன்--என் பத்திரிகை தர்மத்தை எனக்கு எடுத்துக் கூறி,,தன் பெருந்தன்மையால் என்னை செருப்பால் அடித்து விட்டார்???
என்ன தோழமைகளே? சாவியின் உணர்வு நியாயம் தானே???!!!...vtr...
|
-
22nd January 2021, 08:25 AM
#1784
Junior Member
Diamond Hubber
கலங்கரை விளக்கம்:
1958இல் அல்பிரட் ஹிட்ச்கொக்கின் வெர்டிகோ என்ற சைக்கோதிறில்லர் ஆங்கிலத் திரைப்படத்தை 1965ல் கே. சங்கர் கலங்கரை விளக்கம் என்ற கறுப்பு வெள்ளை திரைப்படமாக இயக்கி அமோக வெற்றி பெற்றார். (சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு, கதை - மா. லட்சுமணன், இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்).
கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் மனநிலை பாதிப்படைகிறார். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார். கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார்.
நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார். நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார்.
அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடம். உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார்.
தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.
4) இசையும் பாடலும் போட்டி போடும் அருமையான பாடல்:
அமாவாசையானால் சித்தம் கலங்கி பிரச்சினை கொடுக்கும் நீலாவைக் குணப்படுத்த ரவி வெளியே அழைத்துச் செல்லும் போது, பிரச்சினைக்குள்ளான நீலா மலை உச்சிமீதேறி குதித்து தற்கொலை செய்யப் போகும் போது, ரவி சிவகாமி, சிவகாமி என அழைத்து தானும் நரசிம்ம பல்லவனாகி நீலாவைக் காப்பாற்ற இருவரும் பாடும் பாட்டே பொன்னெழில் பூத்தது புது வானில்.
பஞ்சு அருணாசலத்தின் முதற் பாட்டு. சரோஜா தேவி. பூமா தேவி, அவர் முகம் பூகோளம். அது அழும் போது உலகமே அழுகின்றது. சிரிக்கும் போது உலகமே சிரிக்கின்றது. சரணத்தில் நீலா,
ஆடலரசி சிவகாமியாகி, ரவியை நோக்கி வரும்போது, லோங் சொட்டிலிருந்து, குளொஸ் அப்புக்கு வரும்போது ரவி, நரசிம்ம பல்லவனாகி இருக்கையில், அவர்கள் இருவரின் அழகின் காலடியில் உலகமே விழுந்து
சிவகாமி..சிவகாமி....
ஒ ஓஓஓஓஓ
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
ஆஆஆஆஆஆஆஆ...
ஒரு தலைவனின் தனிமையின் பிரிவின் வலியையும், அதற்கான தலைவியின் பதிலையும் கொண்டமைந்த மென்மையான காதலும,; அழகிய எதுகைகள், மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையான தென்றலாய் மயிலிறகாகி வருடும் உணர்வும் கொண்ட பாடல் இது. கேட்க மிகவும் அருமையாக இருந்ததற்கும் கண்ணதாசன் எழுதியது போல இருந்ததற்கும் காரணம் பஞ்சுவும் கண்ணதாசனும் சுமந்த பொது நிறமூர்த்தங்களாகவும் இருக்கலாம்.
Courtesy net...VSM...
-
22nd January 2021, 08:25 AM
#1785
Junior Member
Diamond Hubber
அன்பு எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கும் வளர்ந்து வரும் தலைவர் அனுதாபிகளுக்கும் ஆளும் அரசில் பங்குபெற்றும் எம்.ஜி.ஆர் பக்கமும் பேசி செயல்படும் நண்பர்களுக்கும் இந்த பதிவு;
அரசியல் தெளிவோம் கொஞ்சம் !
தலைவர் 1987ல் மறைந்தபிறகு கட்சிக்கு தலைமையேற்றும் ஆட்சியை நடத்தவும் ஒரு தலைமை தேவைப்பட்டது.தலைவரின் அரசியல் பாதையில் கூட நிழலாக பயணி த்தவர் ஜானகி அம்மையார்.தலைவரின் ஒவ்வொரு வெற்றிக்கும் ஜானகி அம்மையார் பின்புலமாக இருந்தார்.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வோமே அது மாதிரி.அதனால் தலைவர் மறைவுக்குப்பின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி ஜானகி அம்மையாரை பொறுப்பேற்க சொன்னார்கள்.அது படி நடந்தது.ஆனால் ஒரு பிரிவினர் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒரு அணியாக பிரிந்து இருந்தனர்.ஆக 97 சட்டமன்ற உறுப்பினர்களுடன் 7 பேர் அமைச்சர்களாக ஜானகி அம்மையார் முதல்வரானார்.இரட்டை இலை ஆட்சிதானே. யார் கவிழ்த்தார்கள்.ஜெ.ஜெ தலைமை வகுத்த அணிதானே. ஆக ஆட்சி கலைந்தது யாரால்.நாம் தான் தெரிந்து கொள்ளவேண்டும்.பின்னர் 1989ல் தேர்தல்.ஜா -ஜெ அணி போட்டி. 1975ல் ஆட்சியை இழந்த கலைஞர் வென்று 1989ல் முதல்வராகுகிறார்.இந்த சூழலை கண்டு மனம் வருந்தினார் ஜானகி அம்மையார்.எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி வலுவாக்கிட இரு அணியையும் இணைக்க ஜானகி அம்மையார் ஒருவரே தியாகம் பண்ணி ஒரே அணியாக உருவாக்கினார்.இரட்டை இலை பெற்றிட ஒப்புதல் கடிதம் தேர்தல் கமிஷனுக்கு கொடுத்தார்.சின்னமும் கிடைத்தது.கழகத்துக்கு தனது பெயரில் உள்ள ராயப்பேட்டை தலைமைக்கழக கட்டிடத்தை கட்சிக்கே தானமாக கொடுத்தார்.கட்சியின் இணைப்புக்கு ஒரு கோடி ருபாய் ஜெ அம்மையாரிடம் கொடுத்தார்.இந்த தியாக செயலை நெக்குறுக குறிப்பிடுகிறார் கே.ஏ.கே அவர்கள்.இதைப்பற்றி மாதவன் அவர்களும் ராசாராம் அவர்களும் மிகவும் பெருந்தன்மையாக ஜானகி அம்மையாரை பற்றி குறிப்பிடுகிறார்கள்.
மேற்குறிப்பிடும் தியாக செயலுக்காக ஜானகி அம்மையார் பெயரை தலைமைக்கழக கட்டிடத்துக்கு சூட்டிடவும் அவரது திருஉருவப்படம் தலைமைக்கழகத்தில் வைக்கவும் நாம் முறையிடுகிறோம்.நாம் ஒரு வலுவான காரணம் இல்லாமல் முயலுவதில்லை.ஆனால் இந்த வரலாறு தெரிந்தும் ஆளும் அரசு செவிசாய்க்கவில்லை.ஆனால் இன்னொரு பெண் முதல்வருக்கு 58 கோடியில் நினைவகம் கட்டுகிறது.ஏன் அ.தி.மு.கவின் முதல் பெண் முதல்வரை பாரா முகமாக இருக்குறீர்கள். ஆளும் அரசு அ.தி.மு.க 1972ல் இருந்து இன்று வரை வளர்ந்த பாதையில் பயணித்த கழக மூத்தோடிகளை கௌரவிக்கவேண்டும்.இந்த அரசு செய்யுமா ? எதிர்பார்ப்போம்.
நெல்லை எஸ்.எஸ்.மணி...
-
22nd January 2021, 08:26 AM
#1786
Junior Member
Diamond Hubber
எனது எண்ணங்கள்.........
தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!
தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து 30 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார்.
இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும்.
எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.
இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.
அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.........vsm...
-
23rd January 2021, 07:55 AM
#1787
Junior Member
Diamond Hubber
ஒரு நடிகருக்கு ஒரு படம் 100 நாட்கள் ஓடி விட்டால் போதும், அவர்கள் மார்க்கெட் மற்றும் சம்பளம் உயர்ந்து விடும். ஆனால் அடுத்து வருகின்ற 100 நாட்கள் படத்துக்கு அவர்கள் சுமாராக 20 படங்கள் வரை காத்திருக்க நேரிடும். ஆனால் புரட்சி தலைவரின் படங்கள் தொடர்ந்து 8 படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடிய நிகழ்வை நாம் மிக சாதாரணமாக பார்க்கிறோம்.
இந்த அதிசயம் தமிழ்ப்பட வரலாற்றில் வேறு எந்த நடிகரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சாதனையாகும்.. அதுவும் 1974 மற்றும் 1975 ம் வருடங்களில் வெளியான அத்தனை படங்களும் 100 நாட்களை தாண்டி ஓடியது ஒரு அற்புதமான சாதனையாகும். ஆனால் அய்யனுக்கோ, ஒரு மூன்று படத்தை 1972 ல் தொடர்ச்சியாக ஓட்டி விட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதை நாம் பார்க்கிறோம்.
அதிலும் "ஞானஒளி" சென்னையின் மிகச்சிறிய தியேட்டரான பிளாஸாவில் 100 நாட்கள் வடக்கயிறு போட்டு இழுத்து கொண்டு போனதை கண்டு தமிழ்நாடே கைகொட்டி சிரித்தது. ஆனால் அப்படி ஓட்டி விட்டு 1972 ல் நாங்கள்தான் என்று கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் குதிப்பதை பார்த்தால் அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை. 1972 ல் "நல்லநேரம்" தான் அதிக தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடிய படம். ஒன்றிரண்டு சென்டர்களில் பணம் செலவழித்து அதிக வசூல் காட்டினால் அந்த ஆண்டின் சாதனை படமாகுமா?. "வசந்த மாளிகை"யும் "பட்டிக்காடா பட்டணமா"வும் 1971 ல் வெளியான "ரிக்ஷாக்காரனை"யே வெல்ல முடியவில்லை.
மற்றொரு படம் பைலட்டில் படாத பாடு பட்டு 50 நாட்களை தாண்டி தனிமரமாக இழுத்துச் செல்லப்பட்ட படம். ஆங்கிலம் மற்றும் இந்தி படங்கள் திரையிடும் தியேட்டர் பைலட்டை குத்தகைக்கு எடுத்து கும்மியடித்து ஓட்டிய படம்தான் "தவப்புதல்வன்". பெயருக்கு ஏற்ற மாதிரி 100 நாட்கள் தவமிருந்து ஓட்டினாலும் முக்தா சீனிவாசன் வருத்தப்பட்டு எம்ஜிஆர் படத்தின் பெருமையை "இதயக்கனி" வெற்றி விழாவில் உண்மையை உணர்த்தினாலும் கைபிள்ளைகள் கலங்காமல் அடுத்தடுத்த படங்களை 100 நாட்கள் வடக்கயிறு போட்டு மகிழ்ந்தனர்.
1972ல் வெளியான "ஞானஒளி" மற்றும் "தவப்புதல்வன்" "தர்மம் எங்கே"? மூன்றுமே தோல்வி படங்கள் என்றாலும் "தர்மம் எங்கே"? படுதோல்வி படமாகும். "ராஜா"வும் "நீதி"யும் பாலாஜியின் பணத்தை கைஸ்கள் சிதறி விளையாடி ஓட்டிய படங்கள். அப்படியும் "நீதி"யை 100 நாட்கள் ஓட்ட முடியவில்லை. "பட்டிக்காடா பட்டணமா", "வசந்த மாளிகை" இரண்டும் மதுரை சென்னை மட்டும் ஓட்டி விட்டு மற்ற ஊர்களில் 50 நாட்கள் கூட ஓட தடுமாறிய படங்கள். 1972 ல் வசந்த மாளிகைதான் அதிக வசூலாம். கைஸ்கள் உளறுகின்றனர். "வசந்த மாளிகை" வசூலில் "ரிக்ஷாக்காரன்", "நல்லநேரம்" படங்களையே வெல்ல முடியவ்ல்லை.
"பட்டிக்காடா பட்டணமா" "வசந்த மாளிகை" எத்தனை ஊர்களில் 50 நாட்கள் ஓடியது என்று தெரிவிக்க முடியுமா? கைஸ்களே. அதைக்காட்டிலும் அதிகமாக எம்ஜிஆருடைய சாதாரண படங்கள் அதிகம் ஓடியதை நிரூபிக்க முடியும்.
அவர்கள் 50 நாட்களை பார்க்க மாட்டார்கள். எங்கே 100 நாட்கள் ஓட்டலாம் என்பதையே கணித்து ஓட்டுவார்கள். 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க 100 நாட்கள் ஓட்டி மகிழ்வார்கள்.
1974 ல் வெளியான
"நேற்று இன்று நாளை" "உரிமைக்குரல்" "சிரித்து வாழ வேண்டும்" 1975ல் வெளியான "நினைத்ததை முடிப்பவன்" "நாளை நமதே" "இதயக்கனி" "பல்லாண்டு வாழ்க" அதை தொடர்ந்து 1976 ல் வெளியான "நீதிக்கு தலை வணங்கு"
படம் வரை தொடர்ந்து 100 நாட்களும் அதைத்தாண்டி ஓடியும் தலைவர் ரசிகர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதுவே அய்யன் படமாக இருந்திருந்தால் அண்டசாசரம் வரை கலக்கி அமெரிக்க அதிபரை கூட திரும்பிப் பார்க்க வைத்திருப்பார்கள் கைஸ்கள்.
இதில் "உரிமைக்குரலி"ன் வெற்றி தமிழ்ப்பட சரித்திர வெற்றி. அந்த வெற்றியை வார்த்தையால் விவரிக்க இயலாது. "இதயக்கனி"யின் வெற்றியும் சத்யமான வெற்றி. ஆமாம் சத்யத்தில் யாரும் வெல்ல முடியாத சாதனை வசூல் வெற்றியாகும். அடுத்து "பல்லாண்டு வாழ்க" "நீதிக்கு தலை வணங்கு" "நேற்று இன்று நாளை" ஆகிய படங்கள் வசூலிலும் சாதித்து காட்டியவை. நெல்லை பார்வதியில் வாழ்நாள் அதிக வசூலை பெற்ற படம்தான் "நேற்று இன்று நாளை". அதே போல் "பல்லாண்டு வாழ்க" பூர்ணகலாவில் 100 நாட்கள் ஓடி சாதனை வசூல் பெற்ற படமாகும். பூர்ணகலாவில் 100 நாட்கள் ஓடிய ஒரே படமாகும்.
"நாளை நமதே" சிவசக்தியில் தொடர்ந்து 60 காட்சிகள் வரை அரங்கம் நிறைந்தது. இலங்கையில் பல சாதனைகளை செய்து 100 நாட்களை தாண்டி ஓடி அபரிமிதமான வெற்றியை பதிவு செய்த படம். "நினைத்ததை முடிப்பவன்" தேவிபாரடைஸில் 101 காட்சிகள் தொடர் hf
ஆனாலும் படத்தை 100 நாட்கள் ஓட்டவில்லை. மாபெரும் வெற்றிப் படமான "நினைத்ததை முடிப்பவனை" தொடர்ந்து "நாளை நமதே" வெளிவந்ததால் மதுரையில் மட்டும் 100 நாட்கள் ஓடியது. இல்லையென்றால் சுமார் 7 திரையரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் கண்டிருக்கும்.
மீதி அடுத்த பதிவில்..........ksr...
-
23rd January 2021, 08:04 PM
#1788
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரை காவியங்கள்*மறு வெளியீடு தொடர்ச்சி ..........
இந்த வாரம் ( 22/01/21 முதல் ) வெளியான*படங்கள்*விவரம்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மதுரை - திருப்பரங்குன்றம் லட்சுமியில்* 23/01/21 முதல்* தென்னக
*ஜேம்ஸபாண்டாக* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ரகசிய போலீஸ் 115
தினசரி 2 காட்சிகள்,* சனி, ஞாயிறு 3 காட்சிகள்**நடைபெறுகிறது .
ராஜபாளையம் ஜெய் ஆனந்தில்* *ரகசிய போலீஸ் 115 தினசரி 4* காட்சிகள் .
இன்று முதல் (22/01/21)* நடைபெறுகிறது .
கோவை நாஸில்* எங்க வீட்டு பிள்ளை* தினசரி 4 காட்சிகள் .நடைபெறுகிறது .
சேலம் அலங்காரில்* அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*
வெற்றிகரமான 2 வது வாரம் .
திருச்சி அருணாவில்* *அடிமைப்பெண் தினசரி 4 காட்சிகள்*
வெற்றிகரமான இணைந்த 2 வது வாரம் .**
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd January 2021, 08:07 PM
#1789
Junior Member
Platinum Hubber
ஆனந்த விகடன்*வார இதழ் - 27/01/21
நடிகர்*தனுஷ்*பேட்டி*
கேள்வி*:* உங்களுடைய படங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க* .நீங்க யாருடைய ரசிகர் ?
பதில் : எப்பவுமே நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகன்தான்*.
இப்பவும் அவருடைய படங்களை*அவ்வப்போது பார்ப்பதுண்டு .*
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd January 2021, 11:01 PM
#1790
Junior Member
Diamond Hubber
“எதையும் வெளிப்படையாகப் பேசுவதை எம்.ஜி.ஆர் ரசிப்பார்!”
- சோ
https://www.thaaii.com/?p=59759
ஒசாமஅசா தொடர் – 17 எழுத்தும், தொகுப்பும்; மணா
நான் துக்ளக் பத்திரிகையை ஆரம்பிக்கிறபோது எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்.
“வேண்டாம் சினிமாவில் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கிட்டிருக்கு. குறிப்பா என்னுடைய பல படங்களில் நீங்க இருக்கப் போறீங்க. ஏற்கனவே நீங்க உங்க நாடகத்திலேயே தி.மு.க.வை ரொம்பவும் கலாட்டா பண்றீங்க. பத்திரிகை ஆரம்பிச்சா இதெல்லாம் இன்னும் ஜாஸ்தியாப் போயிடும்.”
“ஆமாம் சார்… அப்படித்தான் வரும்.”
“அப்படியிருக்கும்போது பத்திரிகை ஆரம்பிக்கிறது நல்லதில்லை. உங்க சினிமா சான்ஸ் எல்லாம் கெட்டுப்போகும். இரண்டிலேயும் ஒரே நேரத்தில் காலை வைக்காதீங்க. ஏற்கனவே டி.டி.கே.வில் வேற நீங்க இருக்கிறப்போ இது தேவை தானா?” என்று எவ்வளவோ சொன்னார் எம்.ஜி.ஆர்.
அன்றைக்கு அவருடன் இருந்த ப.நீலகண்டனைப் போன்ற இயக்குநர்களும் பத்திரிகை துவக்குவதில் இருக்கிற பாதிப்புகளைப் பற்றி விரிவாகச் சொன்னார்கள்.
நான் அவர் சொன்ன எதையும் கேட்காமல் பத்திரிகையைத் துவக்கியதில் அவருக்கு வருத்தம்தான்.
அவரைப்பற்றி நான் துக்ளக்கில் விமர்சித்தபோது அதைப்பற்றி என்னிடம் கேட்க மாட்டார். ஒருமுறை ‘துக்ளக்’கில் வெளியிட அவரிடம் ஒரு கட்டுரை கேட்டேன்.
“துக்ளக்கையே விமர்சனம் பண்ணி எழுதட்டுமா?” – என்றார்.
“சரிங்க சார்… எழுதுங்க”
“நான் எழுதினது அப்படியே வரணும்.”
“கண்டிப்பா அப்படியே வரும் சார்.”
அதன்படியே துக்ளக்கைப் பாராட்டியும், சிறிது விமர்சித்தும் மூன்று கட்டுரைகளை அவர் எழுதி துக்ளக்கில் அப்படியே வெளிவந்தது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. அதற்குமேல் தொடர்ந்து அவரால் எழுத முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தார்.
அவரிடம் நேரடியாக அவரையே கிண்டல் செய்து பேசினால் கோபப்படாமல் ரசிப்பார். இதே குணம் சிவாஜியிடமும் உண்டு. இவர்களைப் பற்றி வெளியே எங்கோ பேசுவதுதான் இவர்களுக்குப் பிடிக்காது.
எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ப.நீலகண்டன்தான் டைரக்டர். சினிமா விஷயத்தைக் கரைத்துக் குடித்த இயக்குநர் அவர். எம்.ஜி.ஆருக்கு அந்தக் காட்சியில் கொஞ்சம் நீளமான வசனம். நான் பதிலுக்கு “சரி” என்று சொல்ல வேண்டும். அவ்வளவுதான். இதுதான் காட்சி.
நான் “சரி” என்று சொன்னதும் ‘ஷாட்’ முடிந்தது.
“சோ.. நீங்க ‘சரி’ன்னு எப்படிச் சொன்னீங்க?” – நீலகண்டன் கேட்டார்.
“சரின்னு தானே சார் சொன்னேன்”.
“அப்படியில்லை.. சரின்னு அழுத்திச் சொல்லுங்க” – ‘சரி’யைச் சொல்லிக் காட்டினார் நீலகண்டன்.
இரண்டாவது டேக் எடுக்கப்பட்டது.
நான் “சரி”யை அழுத்திச் சொன்னபோது டைரக்டர் “கட், கட் அப்படியில்லை சோ..” என்றார்.
நான் சுதாரித்துக் கொண்டு எம்.ஜி.ஆரிடம் “இவர் என்னை விடப்போறதில்லை. இந்த சீனில் உங்க டயலாக் சரியா வரலை சார்.. அதை உங்க கிட்டே சொல்ல முடியாது. அதனால் என்னைப்போட்டு ‘சரி’ங்கிறதுக்காக இந்தப் பிழி பிழியுறார்.
சரிங்கிறதை இதைவிட எப்படி சார் சரியாச் சொல்லிற முடியும்? தயவு செஞ்சு உங்க டயலாக்கை ஒழுங்காச் சொல்லிடுங்க சார்?” – சிரித்துக் கொண்டே சொன்னேன்.
எம்.ஜி.ஆரும் சிரித்தார். ப.நீலகண்டனும் சிரித்தார். நேரடியாக நான் பேசியதை எந்த விதத்திலும் எம்.ஜி.ஆர். தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.
இன்னொரு படம் எம்.ஜி.ஆருடன் நடித்துக் கொண்டிருந்தேன். அதிலும் ப.நீலகண்டன் தான் டைரக்டர். ஷூட்டிங் நேரத்தில் என்னை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருப்பார் நீலகண்டன். அன்றும் அப்படித்தான்.
“என்ன சோ.. துக்ளக் பத்திரிகை எப்படிப் போயிட்டிருக்கு?”
“நல்லாப் போகுது சார்” – சொன்னேன். அவர் எதற்கோ பீடிகை போடுகிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது.
அவரே தொடர்ந்தார்.
“மஞ்சரி எப்படிப்பட்ட பத்திரிகை?”
“நல்ல பத்திரிகை சார்”.
“அதில் நல்ல விஷயங்கள் எல்லாம் வருமா?”
“வரும் சார்”.
“அதிலே வர்ற அளவுக்கு உருப்படியான விஷயங்கள் உங்க துக்ளக்கில் வருமா? மஞ்சரிக்கு என்ன விற்பனை?”
“விற்பனை குறைவுதான் சார்”
“அதாவது நல்ல சரக்குக்கு நாட்டில் நல்ல மதிப்பில்லை. துக்ளக்கிற்கு விற்பனை இருக்கிறது. அப்படித்தானே?” – சொல்லிவிட்டு என் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்டன்.
“ஆமாம் சார்… நல்ல படங்கள் நிறைய நாட்கள் ஓடுவதில்லை. ‘என் அண்ணன்’ நூறு நாட்கள் ஓடுகிறது” என்று நான் அழுத்தம் கொடுத்துச் சொன்னேன்.
பக்கத்தில் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். நீலகண்டனிடம் சிரித்தபடியே சொன்னார். “எதுக்கு சோ வாயைப் போய்க் கிளர்றீங்க?”
“எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகணுமா? சிலதுக்குப் பதில் சொல்லாம விடக்கூடாதா நீங்க?” என்று நீலகண்டன் என்னிடம் திருப்பிக் கேட்க, அந்த உரையாடல் தமாஷாகப் போனதே ஒழிய, சீரியஸாகவிடவில்லை.
‘என் அண்ணன்’ எம்.ஜி.ஆர். நடித்த படமாக இருந்தாலும்கூட அவரும் நான் சொன்னதை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டு ரசித்தார். இது அவருடைய சுபாவம்.
ஒருமுறை நான் கலைஞரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சந்திப்பு குறித்த தகவல் பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்து அப்போது பரபரப்பாகி விட்டது.
அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர். படம் ஒன்றின் வெள்ளிவிழா சென்னை ‘சில்ட்ரன்ஸ்’ தியேட்டரில் நடந்தது. விழாவில் நானும் கலந்து கொண்டேன்.
துவக்கத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., “இரண்டு நாட்களுக்கு முன்னால் சோ ஒருத்தரை சந்திச்சுட்டு வந்திருக்கார். கடுமையா விமர்சனம் பண்ணிக்கிட்டிருக்கிற ஒருத்தரை ஏன் இவர் சந்திச்சார்? என்ன பேசினார்ங்கிறதைத் தெரிஞ்சிக்க நீங்க எல்லாம் ஆர்வமா இருக்கீங்க.
சோ சட்டம் படித்தவர். அதனால் சட்டப்படி அவர் அதைச் சொல்லியாகணும்” என்று கூட்டத்தைப் பார்த்து சொன்னதும் ஒரே கைதட்டல். அதோடு என்னைப் பேசச் சொல்லிவிட்டார்.
நான் ஜனங்களைப் பார்த்தபடி மைக்கில் சொன்னேன்.
“இது உங்க கிட்டே சொல்லவேண்டிய விஷயமில்லை. நான் இவர் கிட்டேதான் சொல்லணும். அதுக்கேத்தபடி நான் இந்த மைக்கைத் திருப்பி வைச்சுக்கிறேன்” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்தபடி, “நான் சட்டம் படிச்சுருக்கிறதாச் சொன்னீங்க. நான் சட்டம் படிச்சவன்தான். அதனால் சட்டப்படி நழுவ வேண்டிய நேரம். அதனால் நான் சொல்ல மாட்டேன்!”
அதையும் ரசித்தார் எம்.ஜி.ஆர்.
(தொடரும்…)
Bookmarks