Page 104 of 210 FirstFirst ... 45494102103104105106114154204 ... LastLast
Results 1,031 to 1,040 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1031
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலகின் புலி மக்கள் திலகம்...அந்த
    புலியின் நிழலில் நிற்க கூட முடியாத சாதாரண பூனை நடிகன் வந்து வாலாட்டியும்...
    பல வேலைகள் செய்தும் முடியாது...
    பலமுறை பதிவு மூலம் வாலை ஒட்ட நறுக்கியும்
    மீண்டும் வாலாட்ட வருகிறது...
    எங்க விட்டுப்பிள்ளை
    100 சதவீகிதம் வெற்றி முன் 25 சதவீகித மார்க்கை வைத்து தெருவிளையாடல்
    தாண்டவமாடுகிறது..
    நீ எப்படி பொய் வேஷம் போட்டு சிவன் வேடத்தில் வந்தாலும்..
    எ.வீ.பிள்ளை சவுக்கு
    போலி சிவனை துவசம் செய்துவிடும்......bsr...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1032
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Suresh Kumar நீங்கள் சொல்வது கரெக்ட். என்றாலும், மக்கள் திலகம் திரையுலகில் இருந்தவரை அவர்தான் வசூல் சக்ரவர்த்தி அவர்தான் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் என்ற உண்மை தெரிந்ததுதான். ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதை மறைத்து மார்க்கெட்டில் மக்கள் திலகத்துக்கு அடுத்த நிலையில் இருந்த சிவாஜி கணேசனை வசூல் சக்ரவர்த்தியாகவும் மக்கள் திலகத்தை சிவாஜி கணேசன் ரசிகர்கள் கேவலமாகவும் விமர்சிக்கும்போது நாங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடும். அவர்களிடமும் உங்கள் கருத்தை சொல்லிப் பாருங்கள். அப்போதாவது நிறுத்துகிறார்களா என்று பார்ப்போம். நன்றி.... Swamy...

  4. #1033
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்க வீட்டுப் பிள்ளை புரட்சித்தலைவர் நடித்த மிகச் சிறந்த படமாகும் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்த படம் தன்னையும் அறியாமல் கைதட்ட வைத்த படம் அதில் நானும் ஒருவன் சினிமாவிற்கு டிக்கெட் எடுக்க ஒரு மணி நேரம் முன்பே கவுண்டருக்கு சென்றுவிடவேண்டும் நேரம் செல்லச்செல்ல தாய்மார்கள் மட்டும் உடன் பிறப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும் அந்த கும்பலில் அந்த கலவரத்தில் டிக்கெட் எடுக்க பட்ட பாடு இருக்கிறதே அது எனக்கு மட்டுமே தெரியும் மூன்று புத்தம்புதிய சட்டைகள் இதனாலேயே எனக்கு கிழிந்து போனது அதனாலென்ன புரட்சித்தலைவர் படம்தானே அவரின் ஞாபகார்த்தமாக அந்த கிழிந்துபோன சட்டைகள் இன்றளவும் நினைவுச் சின்னங்களாக என்னால் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது புரட்சித்தலைவர் வாழ்ந்த காலத்தில் திரையுலகம் என்பது ஒரு பொற்காலமாக இருந்தது அவர் ஒரு சகாப்தம் அவர் தயவுசெய்து சொல்கிறேன் மிகவும் உருக்கமாக வேண்டிக் கொள்கிறேன் அவரைப் பற்றி இன்னும் நிறைய பதிவிடுங்கள் எனக்கு அதிகம் விஷய ஞானங்கள் போதாது இல்லாவிட்டால் நானும் முகநூலில் நிறைய கருத்து தெரிவிப்பேன் புரட்சித் தலைவர் அவர்களின் நினைவலைகளை புதுப்பிப்பது ஆகவும் அவரின் வாழ்ந்த காலத்திற்கே அழைத்துச் செல்வதாகவும் தங்களின் பதிவுகள் உள்ளது பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி தங்களின் சேவை என்றென்றும் தொடரட்டும் புரட்சித்தலைவரின் ஆசி தமிழகத்திற்கும் தங்களுக்கும் என்றென்றும் உண்டு பதிவிட்டமைக்கு நன்றி... Srinivasan Kannan

  5. #1034
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்றைய விமர்சனத்தில் " எங்க வீட்டு பிள்ளை" படத்தை தயாரித்த விஜயா நிறுவனத்திற்கும் நடித்த எம்.ஜி.யாருக்கும்.வெளியிட்ட விநியோகஸ்தர்களை விட அரசுக்கு கிடைத்த கேளிக்கை வரி அதிகம் ஐம்பது லட்சம்.இன்றைய தேதியில் கணக்கிட்டால் 250.கோடிக்கு மேல் வரும்.அந்த படத்துக்கு முன்பும் சரி பின்பும் இதை போல கேளிக்கை வரியாக எந்த படத்துக்கு கிடைக்கவே இல்லை. இதான் வரலாறு....... Thangavelu Thangam...

  6. #1035
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறுபடியும் அவர்கள் பொய் சொல்கிறார்களா? நாம் என்ன ஆதாரங்களோடு உண்மைகளை சொன்னாலும் அவர்கள் திருந்தமாட்டார்கள். திருவிளையாடலை எங்க வீட்டுப் பிள்ளை வசூலில் முறியடித்ததை எங்க வீட்டுப் பிள்ளை 100 நாள் விளம்பரம், 7 தியேட்டர்களில் வெள்ளி விழா ஆகியவற்றை ஆதாரத்தோடு வெளியிட்டோம். அதேபோல, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வசூலில் தங்கப்பதக்கத்தால் நெருங்க முடியவில்லை. அதற்கான ஆதாரமும் அவர்களிடம் இல்லை. சும்மா வாய்ப்பந்தல் போடுவார்கள்.

    உண்மையில் உலகம் சுற்றும் வாலிபன் 6 மாதங்களில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல் செய்தது. அதற்கு நம்மிடம் விநியோகஸ்தர் தரப்பு ஆதார விளம்பரம் உள்ளது. ஏற்கெனவே வெளியிட்டும் இருக்கிறோம். அரசுக்கு கேளிக்கை வரியாக மட்டும் ஒரு ஆண்டில் 1 கோடி ரூபாயை உலகம் சுற்றும் வாலிபன் செலுத்தி இருக்கிறது. அந்த வசூலையும் மக்கள் ஆதரவையும் பார்த்து மிரண்டுபோய் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மக்கள் திலகத்தின் படங்களின் வசூலைக் குறைக்கவும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் லாபத்தைக் குறைக்கவும் வரியை உயர்த்தினார். இதைக் கண்டித்து 1974ல் தியேட்டர்கள் சில நாட்கள் மூடப்பட்டன. இந்த தடைகளையும் தாண்டி உரிமைக்குரல் படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது எல்லாம் நடந்த வரலாற்று உண்மைகள். மதுரையில் உலகம் சுற்றும் வாலிபனை உரிமைக்குரல் வசூலில் மிஞ்சி 7 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. இது மதுரையில். கோவையிலும் உலகம் சுற்றும் வாலிபனை விட உரிமைக்குரல் வசூல் அதிகம்.

    உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் 20 தியேட்டர்களில் 100 நாள் ஓடியது. பெங்களூர், இலங்கையை சேர்த்தால் 25 தியேட்டர்களில் 100 நாட்கள். பெங்களூர், இலங்கையை கழித்துவிட்டுப் பார்த்தால் கூட தமிழகத்தில் சிவாஜி கணேசனின் எந்தப் படமும் 20 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதே இல்லை. திரிசூலம் கூட 20 தியேட்டரில் 100 நாள் ஓடவில்லை. திரிசூலம் வசூல் உலகம் சுற்றும் வாலிபனை வசூலில் மிஞ்சி விட்டது என்பார்கள். 1979-ல் மக்கள் திலகம் திரையுலகில் இல்லை. முதல்வராகிவிட்டார். இருந்தாலும் திரிசூலம் வசூலுக்கு காரணமும் முதல்வராக இருந்த புரட்சித் தலைவர்தான். தியேட்டர்களுக்கு தினசரி டிக்கெட் வசூலில் இத்தனை சதவீதம் வரி என்று இருந்ததை வாரம் ஒருமுறை குறிப்பிட்ட அளவு வரி செலுத்தினால் போதும் என்று காம்பவுண்டிங் டாக்ஸ் வரிமுறையை புரட்சித் தலைவர் கொண்டுவந்தார். அதனால் தியேட்டர்காரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைந்ததால் திரிசூலம் படத்தின் வசூல் உயர்ந்தது. பழைய வரிமுறை இருந்தால் அதன் வசூல் குறைந்திருந்திருக்கும். திரிசூலம் வசூலுக்கு காரணம் புரட்சித் தலைவர் போட்ட பிச்சை...... Swamy.........

  7. #1036
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Yuva Raj வாங்க யுவராஜ், எப்படி இருக்கீங்க.. புரட்சித் தலைவர் ஆட்சிக்கு முன் தியேட்டரில் கேளிக்கை வரி தினசரி டிக்கெட் விற்பனையில் குறிப்பிட்ட சதவீதம் இருந்தது. ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். 1000 ரூபாய் ஒருநாள் வசூல் என்றால், 400 ரூபாய் வரி.. ஒரு வாரத்துக்கு 2800 வரி. இதை மாற்றி ஒரு வாரத்துக்கு குறிப்பிட்ட சதவீதம் வரி ( அதாவது ஏற்கனவே உள்ளதைவிட குறைவாக) கட்டினால் போதும் என்ற ஒருங்கிணைந்த வரி முறையை புரட்சித் தலைவர் கொண்டுவந்தார். மேலும் தினசரி 3 காட்சிகள் வீதம் ஒரு வாரத்துக்கு 21 காட்சிகள் என்று நிர்ணயித்து இந்த காம்பவுண்டிங் டாக்ஸ் வரி விதிக்கப்பட்டது. சனி, ஞாயிறு, பண்டிகை நாட்களில் சிறப்பு காட்சிகளுக்கு வரி இல்லை.இந்த வரி முறை 1977 டிசம்பரில் முதலில் அமலுக்கு வந்து படிப்படியாக எல்லா ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைந்ததால் தியேட்டரில் வசூல் அதிகரித்தது. திரிசூலம் வசூலும் அதிகரித்தது. இப்போது புரிகிறதா? .. சரி... உலகம் சுற்றும் வாலிபன் வசூலில் என்ன சந்தேகம்?... Swamy...

  8. #1037
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Yuva Raj நீங்கள் தெரிந்து கொள்வதற்காக சொல்கிறேன். மக்கள் திலகம் நடித்த இன்று போல் என்றும் வாழ்க படம் 1977 மே மாதம் 5 ம் தேதி சட்டசபை தேர்தலுக்கு முன் ரிலீஸ். படம் 100 நாள் ஓடியது. அப்போது தேர்தல் முடிந்து மக்கள் திலகம் முதல்வராகிவிட்டார். அப்போதைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் 100 வது நாள் விழா நடந்தது. அந்த விழாவில்தான் திரையுலகை காப்பாற்ற விரைவில் நல்ல செய்தி வரும்... என்று காம்பவுண்டிங் டாக்ஸ் பற்றி மக்கள் திலகம் சூசகமாக அறிவித்தார். பின்னர் காம்பவுண்டிங் டாக்ஸ் முறை அமலுக்கு வந்தது. அதுபற்றிய செய்தி ..... Swamy...

  9. #1038
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "மதுரை வீரன்"தான் முதன் முதலில் சென்னையில் 4 திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம்.
    1956 ஏப் 13 ம் தேதியன்று சென்னை சித்ரா, காமதேனு, பிரபாத், சரஸ்வதி என்ற நான்கு திரையரங்குகளில் வெளியாகி இந்த மகத்தான சாதனை செய்த படம் மதுரை வீரன்தான். அவன்தான் உண்மையான மதுரை சூரன்.
    ஏதோ கோவில் மணிதான் இந்த சாதனையை முதலில் செய்தது என்று பொய் விளம்பரங்கள் மூலம் ஊரை ஏமாற்றி திரிந்த கணேசனின்
    கைபுள்ளைங்களின் பிரசாரத்துக்கு சாவுமணி அடிக்கும் ஆதாரங்களுடன்
    உங்களை சந்திக்கிறேன்.

    "மதுரைவீரனி"ன் 100 வது நாள் விளம்பரம் கிடைக்காவிட்டாலும் கடைசியாக நமக்கு கிடைத்தது 75 வது நாள் விளம்பரம்தான். அதைத்தொடர்ந்து 100 நாட்கள் விளம்பரத்தை தேடிய நமக்கு கிடைத்தது இரண்டு வலுவான ஆதாரங்கள். "மதுரை வீரனி"ன் 100 வது நாள் 1956 ஜீலை 21 அன்று வருகிறது அல்லவா?. சென்னையில் மட்டும் சித்ரா, காமதேனுவில் ஜீலை 22 அன்று புதிய மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் படம் பத்மினி பிக்சர்ஸாரின் "சிவசக்தி" வெளியான விளம்பரம் கிடைத்திருக்கிறது. அதிலும் தெளிவாக சென்னையில் மட்டும் என்று குறிப்பிட்டதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். மதுரை வீரனின் 100 வது நாளுக்காக ஜூலை 22 சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதிலிருந்து சித்ரா, காமதேனுவில்
    "மதுரை வீரன்" 100 நாட்கள் ஓடியது உறுதி செய்யப்படுகிறது. பிரபாத், சரஸ்வதியில் ஆக 3 முதல் "மர்மவீரன்"
    என்ற தமிழ்ப்படம் வெளியான ஆதாரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பிரபாத், சரஸ்வதியில் "மதுரை வீரன்" 112 நாட்கள் ஓடியதை நாம் உறுதி செய்து கொள்ளலாம். இதன்மூலம் "கோவில்மணி"யின் சென்னை 4 திரையரங்கில் முதன்முறையாக என்று தயாரித்த விளம்பரம் பொய் என்று நிரூபிக்கப் பட்டு விட்டது.

    ஆமா இந்த பொய் விளம்பரம் எந்த பிரஸ்ஸில் பிரிண்ட் பண்ணியது. எவ்வளவு காசு கொடுத்தீர்கள். அந்த நாட்களில் டிக்கெட் கிழித்து வசூலை காண்பித்தவர்கள் தற்போது புது டெக்னிக் கையாண்டு வருகிறார்கள். ஆங்கில பத்திரிக்கைகளில் கொடுத்த விளம்பரம்தான் ஒரிஜினல் விளம்பரம. எங்கே அதுல முதன் முறையாக என்ற வாசகத்தை காணோம்? என்று அசோகன் கேட்ட மாதிரி நாமும் கேட்கலாம். நமக்கு வாய்த்த கைபுள்ளைங்க மிகவும் திறமைசாலிகள். ஆனால் பித்தலாட்டம்தான் உடம்பு முழுக்க இருக்கிறது. நாதாரித்தனத்தை செஞ்சாலும் ரொம்ப நாசூக்கா செய்யணும்யானு சொல்ற வடிவேலுவின் காமெடிதான் ஞாபகத்துக்கு வருது.

    கொலைக்குற்றம் செய்பவன் தான் செய்யவில்லை என்பதற்காக போலி அலிபிகளை உருவாக்குதல் போல எதிர்தரப்பு எங்காவது சைக்கிள் கேப் கிடைத்தாலும் அதை பயன்படுத்தி தங்களது பொய்சாதனையை விளம்பரப்படுத்துவதில் மகா கில்லாடிகள். அவர்கள் 1 தியேட்டரில் ஓடினாலும் பெரிய விளம்பரம் கொடுப்பதே அவர்கள் ஓட்டிய சாதனையை வெளிப்படுத்துவதற்குதான் என்பது தெளிவாகிறது. சாதனையை தேடி ஓடாதவர் புரட்சி நடிகர். சாதனை தன்னை தேடி வருமாறு செய்பவர்.

    நாம் 33 திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய படத்தின் விளம்பரத்தை சேமித்து வைக்காமல் இப்படி அல்லாட வேண்டி இருக்கிறது. அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படங்களை ஓட்டி விளம்பரம் தேடுவதால் கணக்கு வைத்து கொண்டு அலைகிறார்கள். நாம் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. "சிவந்த மண்ணை" தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 100 நாட்கள் ஓட்டும் போது "நியூடெல்லி" என்ற படத்தை காலை,மாட்னி காட்சிக்கு திரையிட்டு
    அவை அத்தனையும் ஹவுஸ்புல் காட்சிகள் என்றும் அந்த காட்சியில் "சிவந்த மண்தா"ன் ஓடியது என்றும் பொய் dcr தயாரித்து ஊரை ஏமாற்றிய திறமையான குற்றவாளிகள்தான் நம்ம கைபுள்ளைங்க.

    "சிவந்த மண்" ஓடிய கடைசி வாரம் முழுவதும் hf காட்சிகள். நம்ப முடிகிறதா? இயல்பான சாதனை செய்ய முடியாமல் இப்படி போலி சாதனையை உருவாக்கி விளம்பரம் கொடுத்து மகிழ்வதும் ஒரு மனநோய்தான். எங்களுக்கு வேண்டிய ஆதாரத்தை தந்து உதவிய புரட்சி தலைவரின் அன்புத்தம்பி திரு சைலேஷ் பாசு அவர்களுக்கு நடிகப்பேரரசர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி ...நன்றி... நன்று...ksr...

  10. #1039
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை- தங்கம் திரையரங்கில் வரலாறு படைத்த வசூல் காவியம் மக்கள் திலகத்தின்
    "நவரத்தினம்" ஆகும்.
    1972 ல்" நான் ஏன் பிறந்தேன்" காவியம்
    70 நாட்கள் 3 லட்சத்தை நெருங்கியது.
    முதல் வார வசூலில் புரட்சி படைத்தது.
    அதன் பின் 5 ஆண்டு கழித்து 50 நாட்களை கடந்த திரைப்படம்
    நவரத்தினம் தான்.
    இக்காவியம் 62 நாளில் பெற்ற வசூலில்
    மற்ற நடிகர்களின் 100 நாள் ஒடிய
    (உத்தமன்,வாணி ராணி,என்மகன்)
    வசூலை தவிடுபொடியாக்கியது.

    சென்னையில் 8 வாரத்தில் 9 லட்சத்தை பெற்ற முதல் காவியம்.
    முதல் வெளியீட்டில் 5 வாரத்தில்
    60 லட்சத்தை பெற்றகாவியம்.
    மதுரை ஏரியாவில் முதல் வெளியிட்டில்
    9 லட்சம் மகத்தான வசூல்....
    (மதுரை, திண்டுக்கல்,பழனி,ராம்நாட்
    ராஜபாளையம், சிவகாசி) அடுத்து வெளியீடு... விருதுநகர், தேனீ, கம்பம்
    காரைக்குடி, 5 வாரங்கள்..
    10 ஊரில் வசூல் 12 லட்சத்தை கடந்தது.
    அடுத்த சி....சென்டரிலும் 30 க்கும் மேற்பட்ட ஊர்களில் 2,3வாரங்கள் ஒடி சாதனை. மதுரை மாவட்ட ஏரியாவில் மட்டும் நவரத்தினம் 6 மாதத்தில் மிகப்பெரிய வசூல் ஆகும்.
    இக்காவியம் பெற்ற வசூலை மற்ற நடிகரின்
    175 நாள் ஒடியவையை.... விட
    மதுரையை தவிர மற்ற எ,பி,சி ...ஏரியாவில்
    நவரத்தினம் மகத்தான வசூலாகும்.........ur...

  11. #1040
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மகத்தான திரைப்படம் ...."இன்று போல் என்றும் வாழ்க" காவியம்
    1977 ல் வெளியாகி வெற்றி முரசு கொட்டியகாவியம்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வர் ஆகி விழா கொண்டாடிய காவியம்.
    அன்றைய கவர்னர் பட்வாரி அவர்கள் தலைமையில் சென்னை நியூ உட்லாண்ஸ் ஹோட்டலில் 100 வது நாள் விழா சிறப்புடன் நடைபெற்றது.

    1977 ம் ஆண்டு சென்னை தேவிபாரடைஸ்
    மதுரை சென்ட்ரல்
    சேலம் சென்ட்ரல் விக்டோரியா
    100 நாள் ஒடி வெற்றிக்கண்டது.

    44 திரையில் வெளியாகி
    28 திரையில் 50 நாட்களை கடந்து.
    கோவை ராஜா 80 நாட்களும்,
    சென்ட்ரலில் 21நாட்களும் ஒடி சாதனை.
    திருச்சி பேலஸ் 100 காட்சி அரங்கு நிறைந்து 85 நாட்கள் ஒடியது.நெல்லை 77, ஈரோடு 78, குடந்தை 68,தஞ்சை 68,
    பாண்டி 78 என சாதனை.

    என்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் புகழ்
    "இன்று போல் என்றும் வாழ்க"...ur

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •