-
31st October 2019, 02:45 PM
#1861
Junior Member
Diamond Hubber
உலகம் சுற்றும் வாலிபன் படம் ரெடியாயிட்டிருந்த நேரம். பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.
பாட்டு எழுத கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம் போல வார்த்தைகளால ஜாலம் காட்ட, எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.
அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.
பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.
எடிட்டிங் முடிஞ்சு, இறுதி கட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.
படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.
எம்ஜியாருக்கு வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே”ன்னு தான் கூப்பிடுவார். சரி, வாலியைக் கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்லை” அப்டீன்னாராம்.
வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.
“அட, நிஜமாதான் சொல்றேன். உங்க பேர் வராது.”
“என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”
“அப்டியா? நான் ரிலீஸ் பண்ணிட்டா?”
“எப்டிங்க ரிலீஸ் பண்ணுவீங்க? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதுல ‘வாலி’ங்கறத எடுத்துட்டா ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும். மக்கள் திலகம் நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க?”
எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்!......... Thanks ..
-
31st October 2019 02:45 PM
# ADS
Circuit advertisement
-
31st October 2019, 02:46 PM
#1862
Junior Member
Diamond Hubber
............ Thanks.........
-
31st October 2019, 02:53 PM
#1863
Junior Member
Diamond Hubber
31-10-1975 - 31-10-2019... இன்று கலைஉலகின் ஆதாரம், வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., "பல்லாண்டு வாழ்க" லட்சிய காவியம் வெளியாகி 44 வருடங்கள் நிறைவடைந்து, 45ம் ஆண்டு தொடக்கம்... இனி இது போல ஒரு படிப்பினை காவியம் தான் எடுக்க முடியுமா? வேறு யாராலும் இயலுமா?!!!!
-
31st October 2019, 08:28 PM
#1864
Junior Member
Diamond Hubber
முன்னாள் பாரத பிரதமர் இந்தியாவின் இரும்புப் பெண்மணி
அன்னை இந்திரா அவர்களின்
நினைவுநாள் இன்று(31.10. 2019)
அன்னையை போற்றி வணங்குவோம்!அப்போலோ பரபரப்பானது !
காரணம் , பிரதமர் வந்து கொண்டிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல் அமைச்சரைப் பார்ப்பதற்காக !
இது நடந்தது இந்திராகாந்தி - எம்.ஜி.ஆர்.காலத்தில்.
.
அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , திடீரென அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் - அக்டோபர் 1984 இல்.
உடனே விரைந்து வந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி .
அது வரை யாருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதியில்லை.
ஆனால் இந்திரா காந்தி , அப்போலோ மருத்துவமனைக்கு சென்று கண்ணாடிக் கதவு வழியாக , எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டார்.
அதிர்ந்து போனார் இந்திரா.
அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் :
" IS THAT MGR ? OH MY GOD ,
I CANT BELIEVE IT."
அருகில் இருந்த ஜானகி அம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி சொன்னாராம் : “கவலைப்படாதீர்கள். இவரை காப்பாற்றுவது இந்த நாட்டின் கடமை ; என்னுடைய கடமை .”
சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலில் இறங்கினார் இந்திராகாந்தி.
அடுத்த நாளே பிரதமரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் , அப்போலோவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
அது மட்டுமா? இந்திரா காந்தியின் ஏற்பாட்டின் பேரில் , ஏர் இந்தியா போயிங் விமானம் ஒன்று , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தயாராக , எம்.ஜி.ஆருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அவசரமாக மருத்துவர்களை அழைத்து வருவதற்கும் , தேவைப்பட்டால் எம்.ஜி.ஆரை வெளி நாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கும் தயாராக இருக்கச் சொல்லி இருந்தார் இந்திராகாந்தி .
.
எம்.ஜி.ஆரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே ,
5.11. 1984 அன்று ஏற்கனவே இந்திராகாந்தி ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்.
சிகிச்சை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
ஆனால்...
இதை எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த இந்திராகாந்தி -
அப்போது உயிரோடு இல்லை.
ஆம் . அக்டோபர் 31 காலை வேளையில்தான் , கண் இமைக்கும் நேரத்தில் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து விட்டது.
இந்திரா காந்தி தன் பாதுகாவலர்கள் இருவரால் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
உலகமே அந்தச் செய்தியை உடனே அறிந்து கொண்டு விட்டாலும் , எம்.ஜி.ஆரிடம் மட்டும் அதை சொல்லாமல் மறைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தவித்தார்கள் மருத்துவர்கள்.
ஏனென்றால் இந்திரா காந்தி இறந்த அந்த வேளையில்தான் , எம்.ஜி.ஆர். உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு , உயிருக்குப் போராடிக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்.
அந்த நேரத்தில் இந்த செய்தியை சொல்லி , அதைத் தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்பட்டு விட்டால் ?
சில நாட்களுக்குப் பின் அமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, எம்.ஜி.ஆர். உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
உடல்நலம் தேறி எழுந்து வந்தார் எம்.ஜி.ஆர்.
அதன் பிறகுதான் மெல்ல மெல்ல இந்திரா காந்தியின் மரணச்செய்தியை தயக்கத்துடன் எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள் அதிகாரிகள்.
அதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.
உடனடியாக இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளின் "வீடியோ"க்களை கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார் .
வீடியோ ஓட ஓட , எம்.ஜி.ஆரின் விழிகளில் கண்ணீர் பெரு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர். , இந்திராவின் இறுதி ஊர்வலக் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவைப் பார்த்து விட்டு , தேம்பி தேம்பி சிறு பிள்ளை போல் அழுதிருக்கிறார்.
காரணம் , தன் உயிரைக் காப்பாற்ற ஓடோடி வந்த இந்திராகாந்திக்கு நன்றி சொல்ல எம்.ஜி.ஆர். உள்ளம் துடிக்கிறது.
ஆனால் இந்திரா இப்போது உயிரோடு இல்லை.
பக்கத்தில் இருப்பவர் யாரிடமாவது இதை சொல்லி வாய் விட்டு அழலாம் என்றால் கூட , பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.
.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் , மௌனமாக தனக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் எம்.ஜி.ஆரால் ?
“வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி.”
இன்று (அக்டோபர் 31)இந்திரா காந்தி நினைவு தினம் .............. Thanks.........
-
31st October 2019, 08:30 PM
#1865
Junior Member
Diamond Hubber
லண்டனில் புரட்சித் தலைவர் - 2nd VISIT...
லண்டன் சென்ற தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அவர்களுக்கு லண்டன் தமிழ்ச் சங்கத்தினர் அமோக வரவேற்பு அளித்தனர்.
1978ஆம் வருடம் நவம்பர் மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது. லண்டன் பாரதிய வித்யா பவனில் நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் காலத்து கொண்டனர்......
புரட்சித் தலைவர் யாரின் நெஞ்சையும் ஈர்க்கும் கவர்ச்சிமிக்கச் சொற்பொழிவு ஆற்றினார். தமது சிறுவயது முதல் பேரறிஞர் அண்ணாவை தெய்வமான கருதுவதாகவும் அவருடைய கொள்கைகளை பின்போரி வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் நாடாகும் தொழிலாளர் கலவரம், சாதிக் சண்டைகள் .....ஏற்படும் தீங்குகளையும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷன்களையும் தவிக்க தாம் ஏற்ற மருந்து கண்டுபிடித்து அமைதிநிலவப் பாடுபட்டு வருவதையும் எடுத்துரைத்தார்.
தேசிய கீதத்தின் பின்னர் வரவேற்பு கூட்டம் முடிவடைந்தது........... Thanks SB.,
-
31st October 2019, 08:32 PM
#1866
Junior Member
Diamond Hubber
பிர*ப*ல முன்னாள் திரைப்ப*ட* ந*டிகை கீதாஞ்ச*லி (72 வ*ய*து) இன்று மார*டைப்பால் காலமானார்.
இவ*ர் ஆந்திராவை பூர்வீக*மாக கொண்ட*வ*ர். சிற*ந்த* குணச்சித்திர* ந*டிகை. தெலுங்கில் சுமார் 40 ப*ட*ங்க*ளும், த*மிழில் 15 ப*ட*ங்க*ளும், மலையாளம் மற்றும் ஹிந்தியில் சில ப*ட*ங்க*ளும் ந*டித்துள்ளார்.
மக்கள் திலகத்துட*ன் தாயின் மடியில், என் அண்ண*ன், ப*ணம் ப*டைத்த*வ*ன், அன்னமிட்ட* கை உள்ளிட்ட ப*ட*ங்க*ளில் ந*டித்துள்ளார். இவை த*விர நெஞ்சிருக்கும் வ*ரை, நீலவான*ம், சார*தா, அதே க*ண்க*ள் ஆகிய ப*ட*ங்க*ளில் குறிப்பிட*த்த*க்க வேட*ம் புரிந்துள்ளார்.
மேலும் மக்கள் திலகம் த*யாரிக்கவிருந்த* "இணைந்த* கைக*ள்" ப*ட*த்தில் இரு க*தாநாய*கிய*ரில் ஒருவ*ராக ந*டிக்க* ஒப்ப*ந்த*மாகி பின் சில காட்சிக*ளுட*ன் நின்று போனது.
கீதாஞ்ச*லியின் மறைவிற்கு ஆழ்ந்த* இர*ங்க*லை தெரிவித்துக் கொள்கிறோம்............ Thanks.........
-
1st November 2019, 03:15 AM
#1867
Junior Member
Diamond Hubber
-
1st November 2019, 11:06 AM
#1868
Junior Member
Platinum Hubber
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகளில் ஒரு வார வசூலாக*ரூ.1,93,000/- ஈட்டி அபார, அரிய, அசுர ,அட்டகாசமான சாதனை படைத்துள்ளது.*இனி வரும் காலத்தில், வெளியாகும் பழைய படம் இந்த வசூலை முறியடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் தலைவரின் படத்தை தலைவர் படங்களே முறியடித்து சாதனை படைக்கும் என்பது திண்ணம் .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ் குமார் .
-
1st November 2019, 03:25 PM
#1869
Junior Member
Diamond Hubber
-
1st November 2019, 03:28 PM
#1870
Junior Member
Diamond Hubber
http://www.kalamnewstv.live/?p=2658
*KALAM NEWS TV*
*உண்மை செய்தியை உலகிற்கு உரக்கச் சொல்லும் கலாம் நியூஸ் டிவி தமிழ் தொலைக்காட்சி* ........... Thanks............
Bookmarks