Page 75 of 402 FirstFirst ... 2565737475767785125175 ... LastLast
Results 741 to 750 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #741
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #742
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #743
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #744
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #745
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by puratchi nadigar mgr; 2nd August 2019 at 09:53 PM.

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #746
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "நான் குற்றம் சாட்டப்பட்டவன், எல்லோரையும் போல் நானும் நின்று கொண்டே பதில் கூறுகிறேன்"

    நீதி மன்றம் கொடுத்த சலுகையையே மறுத்த #மக்கள்திலகம்

    அது 1973 மார்ச் மாதம் 27ம் தேதி.

    திருப்பூரில் முன்னாள் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் துரைசாமி (தற்போது ம.தி.மு.க) நமது #புரட்சித்தலைவர் மேல் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.

    இந்த வழக்கு சம்பந்தமாக, தற்போது பலர் கேட்பதைப் போல், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கவில்லை - நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    மாறாக, தானே நேரில் ஆஜாராகி நீதிபதி தொடுத்த சுமார் 50 க்கும் மேலான வினாக்களுக்கு பொறுமையாக பதில் அளித்தார்.

    தலைவரின் பதில்கள் முழுவதையும் பதிவு செய்த எழுத்தர், தயக்கத்தோடு, தலைவரின் வயதை கேட்க, தலைவரோ

    "ஏன் தயங்குகிறீர்கள், நீதி மன்ற நடைமுறைகளில் ஒன்று தானே இது"

    -என்று கூறி அவரது அச்சத்தை போக்கி, தனது வயதை தெரிவிக்கிறார்.

    தொழில் அரசியல்தானே என்று வினவும் பொழுது, நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்

    "அரசியல் என் தொண்டு, சினிமாவில் நடிப்பு என் தொழில் "

    -என்று கூறியது மட்டுமல்லாமல்,

    "சிலர் அரசியலை தொழிலாக்கி பிழைப்பாக்கி கொண்டதால், நான் என் தொழிலை விட்டு அரசியலுக்கு வர நேர்ந்தது"

    -என்று நகைச்சுவையாக மேலும் சொன்னார்.

    இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வழக்கு போட்ட துரைசாமியே குற்றம் சாட்டப்பட்ட நம் தலைவர் அவர்கள் 'நாற்காலியில் அமர்ந்தவாறே பதில் சொல்லலாம்' என்று கூறிய பொழுதும், அதை நாசூக்காக மறுத்து, நீதிமன்ற நடைமுறைப்படி,

    "நான் குற்றம் சாட்டப்பட்டவன், எல்லோரையும் போல் நானும் நின்று கொண்டே பதில் கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.

    நீதிமன்றத்துக்கும், அதன் நடை முறைகளுக்கும் பெரும் மதிப்பளித்து அவர் கூறிய இந்த பதில், நீதிபதி உட்பட எல்லோரையும் நெகிழ வைத்தது.

    அதுதான் 'நீதிக்கு தலை வணங்கு' என்று அறிவுறுத்திய நம் மன்னன், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் பண்பு !

    அன்பின் பிறப்பிடம், பண்பின் சிகரம், பாசத்தின் உறைவிடம், நேசத்தின் இருப்பிடம். உலகத் தமிழர்களின் உண்மைத் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். !

    அன்புடன்
    படப்பை R.D.பாபு........... Thanks...

  9. #747
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு தலைவர் பட குழு ஜப்பான் வந்து சேருகிறது.

    குழுவினர் நடுவில் ஒரு மன்னன் போல நடந்து வருகிறார் வாத்தியார்...

    கஸ்டம்ஸ் பகுதியை கடந்து வரும் போது வேஷ்டி ஜிப்பா தலையில் தொப்பியுடன் வந்த எம்ஜிஆர் அவர்களை பார்த்த ஜப்பானிய விமானநிலய பணிப்பெண்கள் எம்ஜிஆர் இவ்வளவு எளிமையாய் இருக்கிறாரே என்று வியநதனர்

    அவர் அருகில் சென்ற நான் வாருங்கள் வணக்கம் ஜப்பான் expovil அனுமதி கிடைப்பது கடினம் நம் தமிழ்நாடு போல இல்லை ஆனாலும் ஒருவாரம் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கி உள்ளேன் என்றேன்...

    ஒரு வாரம் இருக்கு போதும்...என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் எம்ஜிஆர்..

    நடு இரவு ஒரு மணி டோக்கியோவில் உள்ள பிரபல இம்பீரியல் ஹோட்டல் முன் குழு வந்து இறங்குகிறது

    நாகேஷுக்கு நடை சரியில்லை..அசோகன் அசைவு சரி இல்லை. மஞ்சுளா முகம் மங்கி இருந்தது..சந்திரகலா சரியாக பேசவில்லை...எனக்கு காரணம் புரியவில்லை. வாத்தியார் மட்டும் அவர்களிடம் ஏதோ பேசிவிட்டு என்னிடம் வந்து விமானத்தில் யாரும் சாப்பிடவில்லை அனைவருக்கும் நான் உள்பட சரியான பசி.

    இப்போது நம்ம ஊர் சாப்பாடு எங்காவது கிடைக்குமா என்று என்னிடம் கேட்க பதறிய நான் அந்த இரவிலும் ரசமும் சோறும் கிடைத்தால் கூட போதும் என்று அவர் சொன்ன வார்த்தை உணர்ந்து ஒரு பெரிய காரில் இரவோடு இரவாக எனக்கு தெரிந்த பேங்க் ஆப் இந்தியா சந்தானம் வீட்டுக்கு சென்று கதவைத்தட்டினேன்

    எம்ஜிஆர் வந்து இருக்கிறார் என்ற உடன் அந்த தம்பதியினர் அசந்து வியந்து அந்த வேளையில் சுட சுட சாதம் ரசம் அப்பளம் வத்த குழம்புடன் அனைவரும் வயிறார பசியாற அனைவரும் சாப்பிடத்தை உறுதி செய்து கொண்ட நம் வாத்தியார் அந்த சந்தானம் தம்பதியருக்கு நன்றி சொல்லி புறப்பட அவர்கள் இது கனவா நினைவா என்று திகைத்து போனார்கள்.......... Thanks...

  10. #748
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாலி மக்கள் திலகத்திற்காக

    நான் ஆணையிட்டால்...
    அது நடந்து விட்டால்...
    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
    இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
    உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
    அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் (2)
    (நான் ஆணையிட்டால்)

    ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
    அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
    உடல் உழைக்கச் சொல்வேன்
    அதில் பிழைக்கச் சொல்வேன்
    அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் (2)
    (நான் ஆணையிட்டால்)

    சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
    வாழ்விற்கும் வசதிக்கும்
    ஊரார் கால்பிடிப்பார்
    ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
    அவர் எப்போதும் வால்பிடிப்பார்
    முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
    இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
    இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
    அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
    அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
    (நான் ஆணையிட்டால்)

    இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
    நானா பார்த்திருப்பேன்
    ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
    அதை எப்போதும் காத்திருப்பேன்
    எதிர்காலம் வரும் என் கடமை வரும்
    இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
    பொது நீதியிலே புதுப் பாதையிலே
    வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
    வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
    (நான் ஆணையிட்டால்).......... Thanks...

  11. #749
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் முதல் தயாரிப்பு.வெளியான தேதி 18/07/1964. வெளியாகி 55 ஆண்டுகள் நிறைவு பெற்றது

    இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

    ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.

    தெய்வத்தாய் ஆரம்ப காட்சி தன் தாயாரை சந்திக்க வருவார் எம்ஜிஆர். ஏன் இவ்வளவு லேட் என்பார். அதற்கு என் எதிரிகள் என்னை தாக்க திட்ட மிட்டனர். அவர்களுடைய திட்டங்களை தவிடு பொடி ஆக்கிவிட்டேன் என்பார்.
    : கலை உலகம் மட்டுமில்லை அரசியலிலும் புரட்சித்தலைவரை எதிரிகள் பல வகையில் தாக்கினார்கள். தமிழக முதல் அமைச்சராக இருந்த போது தினம் ஒரு போராட்டம் நடத்தினார் கருணாநிதி. அவரை 13 வருடங்கள் கோட்டை பக்கம் வராமல் அவருடைய திட்டங்களை தவிடு பொடி ஆக்கினார் புரட்சித்தலைவர்.
    : தமிழ் சினிமாவில் எம்ஜியார் படம் சிவாஜி படம் ஸ்ரீதர் படம் பிறகு பாலச்சந்தர் படம் என்று பேசப்பட்டது. தெய்வத்தாய் படத்தில் வசனம் எப்படி இருக்க வேண்டும் மக்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்று உணர்த்தினார்.

    வாழைமலர் போல பூமி முகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா[ என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல் வரிகளைத்தான் தன்னுடைய காரின் கண்ணாடியில் பதித்து வைத்திருந்தார் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு உறுதுணையாக இருந்த மறைந்த திரு. ராமாவரம் தோட்டம் எம்ஜியார் விஜயன் அவர்கள்.

    சென்னை பிளாசா கிரவுன் புவனேஸ்வரி 100 நாள் ஓடியது. மதுரை கல்பனா கோவை ராயல் தொழிலாளி வரும் வரை 69 நாள் ஓடியது. நெல்லை லட்சுமி 50 நாள் ஓடியது.
    குமுதம் பத்திரிகை மக்கள் திலகம் படம் விமரிசனம் மட்ட மாக இருக்கும்.எம்ஜிஆர் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி எழதும். தெய்வத்தாய் பற்றி தரக்குறைவாக எழதியது. மறு வாரமே விளம்பரத்தில் கருத்துக் குருடர்களின் எழத்திக் கனைகளை முறியடித்த படம் என்றுவிளம்பரம் செய்தார் தயாரிப்பாளர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.
    : இது ஒரு சத்யா மூவிஸ் தயாரிப்பு!
    : சேலம் ஓரியண்டல் 69 நாள் ஓடியது.



    வசனம் : கே. பாலச்சந்தர் . இயக்கம் : பி.மாதவன் . இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ,

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிக பொருத்தமான ஜோடி என பேசப்பட்ட சரோஜாதேவி ஆடல், பாடலுடன் மிக சிறப்பாக நடித்திருந்தார் .
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்களில் புதுமையான நடன அசைவுகளை புகுத்தி
    ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் .
    நகைச்சுவை மன்னன் நாகேஷ் தனக்கே உரிய பாணியில் சிரிக்க வைத்தார் .
    நடிகர் அசோகன் தந்தையாகவும், பண்டரிபாய் தாயாகவும் நன்கு சோபித்தனர் .
    வில்லன் எம்.என். நம்பியார் எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.என். லட்சுமி, மற்றும் பலர் நடிப்பில் மெருகேற்றி படத்தை சிறப்பித்தனர் .
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அறிமுக காட்சி அபாரம். முதன்முறையாக விமானத்தில் இருந்து வெளி வரும் காட்சி. பல காட்சிகளில் கருத்தாழமிக்க வசனங்கள் பேசி கைதட்டல்கள் பெற்றார் . துப்பறியும் அதிகாரி வேடம் கைவந்த கலை போல நடித்தார் . பாடல்கள் மிகவும் இனிமை. மெல்லிசை மன்னர்கள் டைட்டில் இசையில் இருந்து கிளைமாக்ஸ் காட்சிகள் வரையில் பாராட்டும்படி இருந்தது .கிளைமாக்ஸ் காட்சிகளில் குற்றவாளி யான தன் கணவன் தன் மகனுக்கு அவர்தான் தந்தை என்பது தான் உயிரோடு இருக்கும்வரை தெரியக்கூடாது என்கிற வகையில் உணரிச்சிமிக்க போராட்டமாக காட்சிகளை திறமையாக இயக்கிய
    இயக்குனர் மாதவன் பாராட்டத்தக்கவர் .அதற்கு வசனகர்த்தா பாலச்சந்தரின் வசனங்கள் கைகொடுத்தன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காதல், வீரம், தீரம், துப்பறிவது சண்டை நடனம் சோகம் உணர்ச்சி , தாய்மை ஆகிய வற்றை காட்சிகளில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் உள்ளங்களை கவர்ந்தார் .


    பாடல்கள் :
    1. காதலிக்காதே, கவலைப்படாதே (பி.சுசீலா )
    2. [பருவம் போன பாதையிலே (பி.சுசீலா )
    3. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ( கொள்கை பாடல் )
    4. இந்த புன்னகை என்ன விலை ( மேல் நாட்டு நடனம் / கிராமிய நடனம் கலந்த காதல் பாடல் )
    5. வண்ணக்கிளி சொன்ன மொழி (காதல் பாடல் )
    6. ஒரு பெண்ணை பார்த்து ( அருமையான ட்விஸ்ட் நடனத்துடன் காதல் பாடல் )
    7. உண்மைக்கு வேலியிட்டு 0(சீர்காழி கோவிந்தராஜன் - சோக பாடல் )

    1974ல் ,முதன்முறையாக பார்த்தேன். அரங்கு ஞாபகமில்லை. ஆனால் பல அரங்குகளில் பார்த்துள்ளேன். இருப்பினும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஆனந்த் அரங்கில் பக்தர்களுடன் கண்டுகளித்து மறக்க முடியாதது .

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #750
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    Last edited by puratchi nadigar mgr; 30th July 2019 at 10:17 PM.

  14. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •