-
10th April 2018, 06:23 AM
#2111
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th April 2018 06:23 AM
# ADS
Circuit advertisement
-
10th April 2018, 06:24 AM
#2112
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th April 2018, 06:15 AM
#2113
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th April 2018, 06:15 AM
#2114
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th April 2018, 07:26 PM
#2115
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th April 2018, 07:33 PM
#2116
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th April 2018, 07:35 PM
#2117
Senior Member
Devoted Hubber
raja lakshmi
ஆனந்த விகடன் இதழில் பல்வேறு கால கட்டங்களில் வந்த நடிகர் திலகம் பற்றிய சில சுவையான தகவல்கள்
“சாதாரணமாக யாருடனாவது பேச ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையாக விசாரிப்பார் சிவாஜி.
மற்றவர்களின் ‘மேனரிஸ’ங்களை உன்னிப்பாகக் கவனித்து வைத்துக்கொள்வார். ஒருவர் சிகரெட் பிடித்தால் கூட எப்படிப் பிடிக்கிறார் என்று பார்த்துக் கொள்வார். ஒரு முறை எந்தெந்தக் குணாதிசயங்கள் உள்ளவர்கள் எப்படி சிகரெட் பிடிப்பார்கள் என்று சுமார் 15 வகையாக சிகரெட் பிடித்துக் காட்டினார்!
ஷூட்டிங்கில் தன் பாகம் எடுத்து முடிக்கும்வரையில் செட்டை விட்டு வெளியே ஒரு அடிகூடப் போகமாட்டார்.
“சிவாஜி சார்! நீங்கள் மற்ற நடிகர்களோடு நடித்தால் ஷாட்டில் அவர்களை ஏன் ‘ஓவர் ஷேடோ’ செய்கிறீர்கள்? அவர்கள் அத்தனைக் கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே!” என்று ஒரு முறை அவரிடம் துடுக்காகக் கேட்டுவிட்டேன்.
சிவாஜி என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். “யூ ஆர் கரெக்ட்! ஆனால், அதென்னவோப்பா…காமிரா முன்னால் நிற்பதை நான் ஒரு பாக்ஸிங் ரிங்கில் நிற்பது போலவே கருதுகிறேன். என்னோடு யார் நின்றாலும் அவர்களை நான் ‘வின்’ பண்ணத்தான் முயலுவேன். எனக்கு அது ஒரு ‘சாலஞ்ச்’ மாதிரி” என்றார்.
இது போன்ற தர்மசங்கடக் கேள்விகளை இவரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். இவருக்குக் கோபமே வராது.
செட்டில் இவரைச் சந்திக்கச் சென்றால், உடனே கூப்பிட்டு விறுவிறு என்று விஷயத்தைப் பேசிப் பத்திரிகையாளர்களை அனுப்பி விடுவார். பத்திரிகை அவசரம் தெரிந்தவர்!”
– நிருபர் பாலா (16.11.80)
“இனி நடிகர்களைப் பாராட்டி ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டுமானால் ‘வி.சி.கணேசன்’ என்ற பட்டத்தைக் கொடுங்கள். அதுதான் மிக உயர்ந்தது!”
– சத்யராஜ் (12.10.86)
“‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?”
– நாகேஷ் (12.10.86)
“‘தேவர்மகன்’ ஷூட்டிங்… அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்… கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், ‘தத்ரூபமா அழணும்பா’ என்றிருந்தார். ‘ஷாட் ரெடி!’ என்று குரல் கேட்டதுமே… ‘ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா… ஐயா!’ என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. ‘கட், கட்’ என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, ‘இங்க வாடா’ என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். ‘நீ ஒருத்தன் அழுதா போதுமா… மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!’ என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!”
– வடிவேலு (9.3.97)
“மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். ‘புதிய பறவை’யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. ‘நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்’ என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, ‘இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்?’ என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் ‘எங்கே நிம்மதி’!”.
– கவிஞர் வைரமுத்து (4.2.90)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th April 2018, 07:36 PM
#2118
Senior Member
Devoted Hubber
jahir hussain
எந்தவொறு படத்திலும் நம்மவர் நடிப்புக்குத் தோல்வியே கிடையாது. இயக்குநர்களும் படத்தயாரிப்பாளர்களும் எதிர்பார்ப்பதைவிட கூடுதலாகவே அவருடைய திறமை வெளிப்படும்.
அண்ணன் என்றால் ‘பாசமலர்’ .... அப்பா என்றால் ‘தெய்வமகன்’... மகன் என்றாலும் ‘தெய்வமகன்கள்தான்... கணவன் என்றால் ‘வியட்நாம் வீடு’ காதலன் என்றால் ‘வசந்தமாளிகை’... இப்படி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவருடைய நடிப்பாற்றல் தனித்துவத்துடன் வெளிப்படும். டாக்டர் என்றால் ‘பாலும் பழமும்‘ படம் நினைவுக்கு வரும். வக்கீல் என்றால் ‘கௌரவம்’ படத்தைத் தாண்டி இன்னொன்று நினைவுக்கு வராது. காவல்துறை உயரதிகாரி என்றால் ‘தங்கப்பதக்கம்’ படத்தை மிஞ்ச இன்னொன்று கிடையாது. லாரி டிரைவராக இருந்தாலும் நீதிபதியாக இருந்தாலும் நடிகர் திலகத்தைக் கடந்து இன்னொரு நடிகரை சட்டென யோசிக்க முடியாது. சிக்கல் சண்முகசுந்தரம் என்ற நாதசுரக் கலைஞராக ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வாழ்ந்திருப்பார் ஏழையின் துன்பமா, பணக்காரனின் ஆடம்பரமா எல்லாவற்றையும் தன் படங்களில் அச்சு அசலாகப் பிரதிபலித்தவர் அவர்தான்.
இவையெல்லாவற்றையும்விட பாமர மக்களின் ஊடகமான சினிமா மூலமாக வரலாற்று நாயகர்களையும் புராண மாந்தர்களையும் நினைவுபடுத்தி நெஞ்சில் நிறைந்தவர் சிவாஜியே. வீரபாண்டியகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, மகாகவி பாரதியார், ராஜராஜசோழன், சேரன் செங்குட்டுவன், பகத்சிங், திருப்பூர் குமரன், சாக்ரடீஸ், கர்ணன், பரமசிவன், காத்தவராயன், அப்பர், சுந்தரர், ஹரிச்சந்திரன் என அவர் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். திருமால் எடுத்ததாகச் சொல்லப்படும் அவதாரங்களைவிட, திரையில் சிவாஜி பூசிய அரிதாரங்களும் அது மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கங்களும் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கின்றன. பெரும்பாலான இயக்குநர்களுக்கு சிவாஜி ஒரு "வரப்பிரசாதமாக" இருந்தார். தங்கள் கலைப்படைப்பை மெருகேற்ற சிவாஜியைத் தவிர இன்னொரு கலைஞனை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதபடி அவருடைய நடிப்பு இருந்தது. தன்னைவிட மூத்த நடிகர்களான எம்.ஆர்.ராதா, நாகையா, பாலையா ஆகியோருடனும் அவருடைய நடிப்பு போட்டிபோடும். தனக்குப் பின் திரைக்கு வந்தவர்களான முத்துராமன், மேஜர் சுந்தர்ரராஜன், பாலாஜி ஆகியோருக்கும் அவரது நடிப்பு, பாடம் சொல்லிக் கொடுக்கும். தான் அறிமுகமான காலத்தில் அறிமுகமான ஜெமினி, எஸ்.எஸ்.ஆர், வி.கே. ராமசாமி ஆகியோர்களுக்கும் நட்பார்ந்த நடிகராக திகழ்ந்தார்...
சிவாஜிக்கு ஜோடியாக நடித்த சௌகார் ஜானகி, பத்மினி, பானுமதி, சரோஜாதேவி, சாவித்திரி, ஜெயலலிதா, லட்சுமி, கே.ஆர்.விஜயா, சுஜாதா என எல்லோருமே மற்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதைக் காட்டிலும் சிவாஜியுடன் நடிக்கும்போது கூடுதல் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார்கள். முகம் பார்க்கும் கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்து ஒப்பனையை சரிசெய்துகொள்வதுபோல, சிவாஜி எனும் நடிப்பிற்கான கண்ணாடி முன் நிற்கும்போது சக நடிகர்-நடிகைகள் தங்கள் நடிப்பை சரி செய்துகொண்டு அதிக திறமையை வெளிப்படுத்துவது வழக்கமாக இருந்தது. சிவாஜியின் சாயல் இல்லாமல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு திரையுலகில் அவருடைய நடிப்பாற்றல் ஆதிக்கம் செலுத்தியது.
நாடகமேடையில் இருந்து வந்தவர் என்பதாலும், அன்றைய திரைப்படங்களில் அமைந்த கதையம்சங்களாலும் அவை எடுக்கப்பட்ட விதத்தாலும் சிவாஜியவர்கள் தன் நடிப்பில் அந்தந்த காலகட்டத்தை பிரதிபலித்தார்... ஆனாலும், அவருடைய வசனஉச்சரிப்பும், அதற்கேற்ற உடல்மொழியும் வேறு எவராலும் நெருங்க முடியாதது. கண்களால் நடிப்பார். புருவங்களால் நடிப்பார். கன்னங்களை மட்டுமே நடிக்க வைப்பார். அவரது உதடுகள் நடிக்கும். உள்ளத்தின் வார்த்தைகளை மௌனத்தால் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துவார். அவரது உடையும் அதற்கேற்ற நடையும், அசத்தலான பார்வையும், அலட்சியமான பாணியும் திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்களுக்கு அள்ளி அள்ளி பரிமாறப்பட்ட அறுசுவை விருந்தாக அமைந்தன. நடுத்தரக் குடும்பங்களின் ரேஷன் கார்டில் இடம்பெறாத குடும்ப உறுப்பினர் எனச் சொல்லும் அளவிற்கு சிவாஜி, ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்பட்டார்... காதல், நகைச்சுவை, கோபம், சோகம், விரக்தி, அழுகை உள்ளிட்ட நவரசங்களையும் வெளிப்படுத்தும் அவரது முகபாவத்தை எத்தனை நெருக்கமான குளோசப்பிலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். அப்படியொரு திறமையும் முகவெட்டும் சிவாஜிக்கே வாய்த்திருந்தது. பின்னணி பாடியவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் பாடல் காட்சிகளில் நடிப்பது சிவாஜியின் வழக்கம்.
படத்தைப் பார்க்கும்போது சிவாஜியே பாடுவது போன்ற தோற்றம் கிடைக்கும். இத்தகைய பேராற்றல் வாய்ந்த ஒரு நடிகர் சிவாஜிக்கு முன்பும் கிடையாது. பின்பும் கிடையாது. அவருடைய சமகாலத்தில் இந்தியாவில் வேறெந்த மொழியிலும் சிவாஜியைப்போன்ற அற்புத நடிகரைக் காண முடியவில்லை. எத்தனை யுகங்கள் கடந்தாலும் நடிப்பின் இலக்கணமாக ரசிகர்களின் நெஞ்சில் உயர்ந்து நிற்பார் நடிகர் திலகம்... (நன்றி கோவி.லெனின் அவர்களுக்கு..)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th April 2018, 07:41 PM
#2119
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்துடன் தங்கள் அனுபவம் குறித்து பல்வேறு பிரபலங்கள் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி தேதி வாரியாக ,
சிவாஜி THE BOSS (விகடன் பொக்கிஷம்)
==========================================
“சிவாஜி ‘பராசக்தி’யில் நடித்துக்கொண்டிருந்த போதே ‘மனோகரா’ படத் தயாரிப்பு
... வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கு நான் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தேன்.
அந்தச் சமயத்தில், ‘மனோகரா’வில் கே.ஆர்.ராமசாமியை மனோகரனாக நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. ‘பராசக்தி’யில் சிவாஜியின் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் சிறப்பாக இருந்ததைக் கண்கூடாகக் கண்டதனால், சிவாஜியையே மனோகரனாக நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளரான ஜூபிடர் சோமுவிடம் சொன்னேன். அதற்கான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதற்கிடையே, சிலர் ஜூபிடர் சோமுவிடம் சென்று அவரது மனத்தைக் குழப்பினார்கள். அந்தச் சமயம், ‘பராசக்தி’ 1952 தீபா வளியன்று வெளிவந்தது. சென்னை அசோக் தியேட்டரில் ‘பராசக்தி’ வெளியான அன்றே – முதல் நாள் – அதுவும் மாட்னி காட்சிக்கு நானும் ஜூபிடர் சோமுவும் கிருஷ்ணன் பஞ்சுவுமாகப் போய்ப் பார்த்தோம்.
படம் முடிந்தது. சிவாஜியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘யார் என்ன சொன்னாலும் சிவாஜி கணேசன் தான் மனோகரனாக நடிக்கிறார்’ என்று மெய்சிலிர்க்கச் சொன்னார் ஜூபிடர் சோமு.”
– கலைஞர் மு.கருணாநிதி (21.8.88)
“சிவாஜிகணேசன் ஒரு ‘தெய்வ மலர்’. திரு ‘கல்கி’ அவர்கள் ‘சிவகாமியின் சபத’த்தில் சிவகாமி பற்றி கூறும்போது, ‘அவளும், அவளுடைய கலையும் தெய்வத்திற்கே அர்ப்பணமானவை. மனி தர்களால் தொடமுடியாது’ என்கிறார். நானும் அதையே சொல்கி றேன். திரு. கணேசன் அவர்களின் கலை, தெய்வத்திற்கு அர்ப்பண மானது! நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ? அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ! நான் இவரது நடிப்புத் திறனைக் கண்டு வியக்காத நாளே இல்லை. கோலார் பொன் சுரங்கம் வற்றி விட்டது என்று சொல்கிறார்களே, கிம்பர்லி வைரச் சுரங்கங்கள் வெறுமையாகிவிட்டன என்று சொல்கிறார்களே… இந்த நடிப்புச் சுரங்கம் மட்டும் வற்றுவதில்லையே!
இந்த உயர்ந்த நடிகரின் வெற்றி இவரது உழைப்பில்தான் இருக்கிறது. ‘தெய்வ மகன்’ படத்தில் மூன்று சிவாஜிகளும் தோன்றும் ஒரு காட்சியை நான் முதன்முறையாகப் பார்த்தபோது, எனக்கே மூன்று தனிப்பட்டவர்கள் நடிப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது! அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு!”
– டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர் (21.9.69)
“சிவாஜி கணேசனை நான் மிகவும் மதித்து, போற்றிப் பாதுகாக்கும் காரணம், அவரை எதற்கும் எப்பொழுதும் அணுகி, எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவருக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியும்! எனக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் நான் அவரிடம் சென்றுதான் நிவர்த்தி செய்து கொள்வேன். தீர ஆலோசித்து, பொறுமையாக விஷயத்தை விளக்குவதில் அவருக்கு ஈடு அவரேதான்.
படப்பிடிப்பு என்று வந்து விட்டால், சிவாஜி காரியத்தில் மிகவும் கண்ணாக இருப்பார். தம்மால் மற்றவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வருவதையும் சகியார். என் வாழ்வில் இவர் என்றுமே மறக்க முடியாதவர்; மறக்கவும் இயலாதவர்.”
– நடிகை உஷாநந்தினி (22.7.73)
[நாளை தொடரும்]
(courtesy raja lakshmi f book)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th April 2018, 07:43 PM
#2120
Senior Member
Devoted Hubber
சிவாஜி கணேசன் ஐயா மறைவிற்கு 22.7.2001 அன்று பிரபல நாளிதழ்கள் வெளியிட்ட தலைப்பு செய்திகள் (Headlines)
1.தினத்தந்தி - நடிப்பு உலக "இமயம்" மறைந்து.
2.தினமலர் - சரிந்தது தமிழ்த் திரையுலகதூண்!
... 3.தினமணி - நடிப்புச் சுடர் அணைந்தது!
4.தினகரன் - சினிமா உலகில் இமாலய சாதனை படைத்த நடிகர் திலகம் சிவாஜி காலமானார்.
5.கதிரவன் - இமயமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி திடீர் மரணம்.
6.மாலை முரசு - தமிழகமே சோகத்தில் மூழ்கியது. லட்சக் கணக்கானோர் திரண்டு சிவாஜிக்கு கண்ணீர் அஞ்சலி.
7.மாலை மலர் - நடிப்புலக சக்கரவர்த்தி மறைந்தார்.
8.மக்கள் குரல் - சிவாஜி மறைவினால் தமிழகம் கண்ணீர்.
9.மாலைச்சடர் - தலைவர்கள், கலைஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.
9.News Today - All roads in chennai lead to Sivaji Ganesan salai TN weeps as he lies in state.
10.The Hindu - Sivaji Ganesan is dead.
11.The New Indian Expess - Nadigar Thilakam is dead.
பத்திரிகைகள் வெளியிட்ட முன் அட்டைத் தலைப்புகள்
1.ஜுனியர் விகடன் - 29.7.2001 - மன்னவன் சென்றானடி!
2.தமிழன் எக்ஸ்பிரஸ் - 1-7 ஆகஸ்ட் 2001- ராஜபார்ட் சிவாஜி துரை.
3.குங்குமம்- 3.8.2001- சிவாஜி ஒரு சகாப்தம்!
4.பாக்யா - 3-9 ஆகஸ்ட் 2001 - விதயாய் இறங்கிய விருட்சம்!
5.அஞ்சா நெஞ்சன் - 1-15 ஆகஸ்ட் 2001 - சரிந்தது சரித்திரம்!
6.நந்தன்- 1-15 ஆகஸ்ட் 2001 - மூன்றாம் தமிழ் மகுடம் இழந்தது!
7.சிகப்பு நாடா- 1-15 ஆகஸ்ட் 2001 - பெருமாள் முதலியார் கண்டெடுத்த நல்முத்து மறைந்து.
8.உண்மை - 16 -31 ஆகஸ்ட் 2001 - சிவாஜி - ஒரு தமிழ் பெருமகன்!
குறிப்பு:
1. ஆண்கள் படத்தையே அட்டையில் இடம் பெற வைக்காத " லேடீஸ் ஸ்பெஷல் ", "சிநேகிதி" போன்ற பத்திரிகைகளும் சிவாஜி படத்தை அட்டையில் வெளியிட்டு அஞ்சலி செலுத்தின.
2.ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகள் அனைத்தும் முன் அட்டையில் சிவாஜி படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.
நன்றி: வசந்த மாளிகை ஜுலை 2004 சிறப்பு மலர்.
Courtesy thanka thaamarai f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks