-
12th June 2017, 06:41 AM
#191
Senior Member
Devoted Hubber
Originally Posted by
tacinema
Great News - only Acting God could do it - thrash his own previous records.
வாழ்த்துக்கள் சிவா for opening a new thread on NT. ரங்கதுரை வசூலிலே ஒரு பின்னு பின்றார் போல் இருக்கே. சூப்பர் நியூஸ் from மதுரை & நாகர்கோயிலில் இருந்து!!
ஆனா எனக்கு மிகவும் வருத்தம் - மற்ற நடிகர்களின் பிளாப் re-release பெருசாக விளம்பரப்படுத்த போது, ரங்கதுரையின் இந்த அருமையான மாபெரும் வெற்றியை ஏன் distributors பெருசா கொண்டாடவில்லை? Any reasons?
வாழ்த்துக்கு நன்றி.
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம்
சட்டமாகாது தம்பி
பிறர் வாழ நினைப்பவர் சொல்லுவதெல்லம்
சட்டமாகணும் தம்பி என்பதெல்லாம்
ஏட்டளவில் பாட்டளவில் வார்த்தை ஜாலம் மட்டுமே
சர்வாதிகாரம செய்பவர்கள் ஜனநாயகம் பேசுவார்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th June 2017 06:41 AM
# ADS
Circuit advertisement
-
12th June 2017, 08:30 AM
#192
Senior Member
Devoted Hubber
S V Ramani
· 1 hr
அவர் ஒரு சரித்திரம் - 008
திருப்புமுனை. -
உலகில் பல சம்பவங்கள் பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கின்றன.. ஃப்ரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி, போன்றவை சில உதாரணங்கள்.
தமிழ் சினிமாவில் திருப்புமுனை என்றால் அது 1952 அக்டோபர் 17-ந் தேதி நிகழ்ந்தது. தமிழ் சினிமாவின் பல்வேறு துறைகளில் ஒரு பெரிய மாற்றம் அன்றைக்குத்தான் நடந்தது. தமிழ் சினிமாவையே அது தலைகீழாக புரட்டிய நிகழ்வு அது.
ஜாதி மத இன ஏன் மொழி வேறுபாடுகளை எல்லாம் கடந்து லட்சக்கணக்கான மனிதர்களை ஒரு தனி மனிதன் தன் நடிப்பாற்றலினால் ஒன்றாக இணைத்த சாதனைக்கு தொடக்கமிட்ட நாள் இந்த அக்டோபர் 17. நமக்கு முன்னால் பிறந்த லட்சக் கணக்கானோர், நம்மை போன்ற லட்சக் கணக்கானோர், நமக்கு பின்னால் வந்த வரப்போகிற லட்சக் கணக்கானோர் என என்றுமே குறையாத ரசிகர் கூட்டத்தை தனக்கு சொந்தமாக வைத்திருக்கும் என்றும் ஒளி வீசும் அந்த அணையா விளக்கிற்கு இன்று திரையில் வயது 65 பூர்த்தியாகப் போகின்றது.
அதுதான் பராசக்தி. அந்த புரட்சியாளர்தான் நடிகர் திலகம். இந்த தமிழ்த் திரைப்பட உலகம் பலதரப்பட்ட நடிகர்களை சந்தித்திருக்கிறது. ஆனால் இது போன்ற ஒரு கலைஞனை முதன் முறையாக கண்டது. இப்படத்தில்தான். முதல் படத்திலேயே என்ன ஒரு நடிப்பு! அண்ணன்களின் செல்லப்பிள்ளையாக சுக வாழ்வு வாழ்வு. பின்னர் தங்கையின் திருமணத்திற்கு தாய்நாடான இந்தியாவுக்கு வந்தபோது, சூனியக்காரி ஒருத்தியினால் பணம் முழுதும் இழந்து மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே தங்கையைக் கண்டுபிடித்தபோது அவளது விதவைக் கோலத்தைக் கண்டு அதிர்ச்சி; செல்வந்தர்களாக தனது அண்ணன்கள் வந்து தனக்கு நல்வாழ்வு அளிப்பர் என்ற அவளது நம்பிக்கையைக் கெடுக்க மனம்வராமல், தான் யார் என்ற உண்மையைக் கூறமுடியாமல், பைத்தியக்காரன் வேடம் போட்டு அவளுக்கு பாதுகாவலனாக இருப்பது, அவளை சீரழிக்க முயன்ற சமூகத்தில் பெரிய பேரோடு நடமாடும் கயவர்களை தாக்கித் தனது கோபத்தைத் தணித்துக் கொள்வது, இறுதியில் தற்கொலை செய்துகொள்ள முயன்ற தனது தங்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி அவளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவது என்று பல நிலைப்பாடுகள் அவரது பாத்திரத்தில். அனைத்தையும் செவ்வனே செய்திருக்கிறார் தனது முதல் படத்திலேயே. பைத்தியக்காரன் வேடத்தில் அவரது நகைச்சுவை மிகுந்த நடிப்பு அருமை. அதே சமயம் தங்கை தன்னை பைத்தியம் என்று நினைத்து குழந்தையைக் கொஞ்ச தராதபோது வெளிப்படுத்தும் சோகம் என முதல் படத்திலேயே பலதரப்பட்ட உணர்ச்சிகளை கணநேரத்தில் வெளிப்படுத்துகிறார். அவர் நடத்தும் "மந்திரி நமது மாநகர்தன்னில்" தர்பார், ரசிக்கத்தக்கது. இடையில் காதலும். ஆனால் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் இறுதிக் காட்சியில் அவர் நீதிமன்றத்தில் பேசும் வசனங்கள் இன்றளவும் பிரபலம். அதே போல் கோயிலில் பேசும் வசனமும் - "காளி என்றைக்கடா பேசியிருக்கிறாள்" - பிரபலம்.
அறிஞர் அண்ணா கூறியதுபோல் "வைரத்தின் ஒளியை ஒளித்து வைக்க முடியாது, என்றேனும் ஒருநாள் அது ஒளிவீசியே தீரும்" என்ற வார்த்தைகளுக்கொப்ப, இப்படத்தில் இவர் நடிக்காது போயிருந்தாலும், வெகு விரைவில் வேறு படத்தில் தோன்றி ஒளிவீசியிருப்பார்.
தமிழ்நாட்டில் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட முதல்நடிகர். அவருடைய பல வேடங்கள் சாதாரண மக்களின் வாழ்வையொட்டி இருந்தன. அவரது படங்கள் பல ரோல் மாடல்களாக அமைந்தன. ஒருவர் தனது நடிப்பினால் பலரது உள்ளங்களை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர் நமது நடிகர் திலகம். தேசபக்தியிலும் அவர் தன்னிகரில்லாத மனிதராக விளங்கினார். அதற்கு சான்று அவர் ஏற்று நடித்த தேசபக்தி வேடங்கள். பல தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புராண பாத்திரங்களையும் நம் கண் முன்னே நிறுத்திய ஒரே நடிகர் நமது நடிகர் திலகம். உண்மை வாழ்வில் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் ஈந்த கொடை வள்ளல் கர்ணன் நமது நடிகர் திலகம். இன்னும் அவர் நமது உள்ளங்களில் நிறைந்து இருக்கிறார்.
வாழ்க அவரது சாதனைகள்.
ஜெய் ஹிந்த்!
இணைப்பு - பராசக்தி படத்தின் கோர்ட் சீன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th June 2017, 02:31 PM
#193
-
12th June 2017, 10:10 PM
#194
Senior Member
Devoted Hubber
Jahir Hussain
கவித்துவமான தலைப்பு "எங்கிருந்தோ வந்தாள்".... கண்ணன் பாட்டில்தான் எங்கிருந்தோ வந்தான் என்ற கவிதை நயம்,, வரிகளாகும்,,, இது சகுந்தலையை பற்றியது ஆகவே "எங்கிருந்தோ வந்தாள்" ஆனது,,,, இது கண்ணீரும் கம்பலையும் ஆன சாகுந்தலையின் கதையே,,,, இதில் துஷ்யந்தனுக்கு பெரிய ஸ்கோப் இல்லையே? துஷ்யந்தன் போன்ற கதை நாயகனாக,,,, கவிஞனாக மனநிலை பிறழ்ந்தவனாக,,,, அவர் நடிகர் திலகமாக,,,, இருக்கும் போது அந்த கதாபாத்திரம முக்கியத்துவம் பெற்று விடுகிறது,,,, பக்கம் பக்கமாக எழுதப்படும் வசனங்கள் உணர்த்துவதை விட நான்கு வரி கவிதைகள் உணர்த்தி விடும்,,,
இதில் இரண்டு நாயகர்க்ள்,, ஒருவர் சிவாஜி,,, இன்னொருவர் கண்ணதாசன்,,, இடம் பெற்ற 6 பாடல்களில் 3 பாடல்களை ம்ட்டுமே
ஆய்வுக்கு எடுத்துக கொள்கிறேன்,
கதாநாயகன் கவிஞன் ஆனதால் கண்ணதாசனுக்கு எளிதாக போய் விட்டது,,, இதில் சிவாஜி இரண்டு விதமான கவிஞராக நடித்திருப்பார்,,, மனநிலை பிறழ்ந்த கவிஞர்,,, அறிவொளி வீசும் கவிஞர்,,, மனநிலை பிறழ்ந்த கவிஞராக அவர் பாடும் பாடல் வரிகளை கவனித்துப் பார்த்தால் தெரியும் அதற்கேற்ற வரிகளை கண்ணதாசன் பொறுத்தி இருப்பார்,,
என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
இரக்கம் பிறக்காதா,,,,
சாதாரணமாக பேச்சு வழக்கில் பேசுவதை கவிதையாக வடித்து ட்யூன் போட்டது போல் தெரிகிறதல்லவா? இன்னொரு சரணம் ,,,
என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
அம்மா………… விவரம் புரியாதா
தன் இயலாமையையும் தன்னை உன்னிடம் சரணடைந்து தனக்கு ஆறுதல் தேடுவது போலவும் வார்த்தைகளை போட்டு இசைத்திருக்கிறார்,,,
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
மேற்கண்ட வரிகள் அந்த மனிதரின் மொத்த மனநிலையையும் மொத்தமாக பிரதிமலிக்கிறது,,, இப்படி ஒரேபாடலில் கதாபாத்திரத்தின் மொத்த குணாதிசயங்களையும் அடைக்க முடியுமா? அதை உணர்வுகளால் வெளிப்படுத்த முடியுமா? நிரூபித்து இருக்கிறார்கள் சிவாஜியும் கண்ணதாசனும்,,,
: இனி... அறிவொளி மிகுந்த கவிஞராக சிவாஜி பாடும் பாடல்,,,
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்,,,,,
ஏற்ற இறக்கத்தோடு எதுகை மோனையோடு சந்தக்கவிதை போலத்தான் அறிவொளி கவிஞன் பாடுவான்,, காட்சி அமைப்பில் சிவாஜியும் நல்ல கவிஞர் போன்ற மெச்சூரிட்டியுன் நடித்திருப்பார்,,, கண்ணதாசனும் தன் எண்ணங்களை எல்லாம் கவிதையாக வடித்து நயத்தோடு தந்திருப்பார்,,,
உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
இந்த சரணத்திலும் தொடர்ச்சியாக வார்த்தை விளையாட்டு ஆடியிருப்பார்,,, சீன் உடைய மூட் கெடாமல் சிவாஜியும் தன் உடல்மொழியை கையாண்டு இருப்பார்,,, ஸ்கிரீனில் அவரை பார்ப்பவர்கள் பரவசப்படும் அளவிற்கு காட்சி அமைந்திருக்கும்,,
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
மேற்கண்ட இரண்டு பாடல்களில் இருந்தே படத்தின் மூலமாக இயக்குநரும் கதாசிரியரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு பாதி விளங்கி விடும்,, படத்தின் பாதி கதையும் இந்த இரண்டு பாடல்களில் அடங்கி விடும்,, பாடல் வரிகளைக் கொண்டு கதை சொல்லும் யுக்தி கடைபிடிக்கப் பட்டிருக்கிறது,,, அதுசரி,,, கதை நாயகியின் மன நிலை என்ன? கதை ஓட்டத்தில் அவர் எப்படி இணைந்து கொள்கிறார்,, கதை நாயனுக்காக என்ன செய்ய போகிறாள்,,, இப்படி பல கேள்விகளுக்கு ஒரு டூயட் பாட்டின் மூலம் தெளிவு படுத்துகிறார் கண்ணதாசன்,, நடிகர் திலகத்தின் முகபாவங்கள் உடல்மொழி நடிப்பு இவையாவும் அவர் கவிதை வரிகளை நிஜமாக்குகிறது,, இது வழக்கமான ஹீரோ ஹீரோயின டூயட் அல்ல,,,,
நிலவென வளரட்டும்
கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும்
இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஓ
உன்னைக் கண்ணாகக் கொண்டேன்
இந்த வரிகள் கதை நாயகியின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது
என் உள்ளம் நிறைந்துவிட்டாய் நீ,, பழையபடி முழு மனநிலை அடைய விரும்புகிறேன்,,, நான் அதற்காக முயற்சிக்கிறேன் போன்ற எண்ண ஓட்டங்களின் கரு தான் அவர் பாடிய சரணம்,,,,
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ நீ
விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி
கண்ணே பூ வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே
தங்கம் பாதி வைரம் பாதி
அங்கம் என்பதோ
நூல் இடையில் வாழும் பெண்மை
உன் இசையில் ஆடும் பொம்மை
எங்கும் உன் வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே,,,,,
பிறழ்ந்த மனநிலையிலும் கவிதை உள்ளம் கதைநாயகியை எப்படி நேசிக்கிறது என்பதை தெளிவு படுத்தப்படுகிறது,,, இதன் மூலம் அவள் காதலுக்கு பதில் கவிதை மூலமாகவே பதில் தரப்படுகிறது,,,
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே என்
கண்ணே பூவண்ணமே,,,,,,
இதில் இன்னும் முக்கியமான இருவர்,,,,, எம் எஸ் வி யும் டி எம் எஸ்ஸூம்,,,, சிவாஜிக்காக பாடுகிறோம் என்ற பரவசத்தில் டி எம் எஸ் ஸும்,,, கண்ணதாசன வரிகளை இசைக்கிறோம் என்ற துடிப்பில் எம் எஸ் வியும் செம காம்பினேஷன்,,, பிற்காலத்தில் பிரபுவுக்காக சின்னத்தம்பி படத்தில் இளையராஜா ஏறக்குறைய இதே யுக்தியை பயன்படுத்தி இருப்பார்,,,
திரைப்படங்களில் பாடல்காட்சிகள் கதையோடு இணைக்க வேண்டும்,,, தனியாக தெரியக்கூடாது,, அப்படி இருந்தால்தான் ஏறக்குறைய ஒரு யதார்த்த சினிமாவை இயக்குநரால் உருவாக்க முடியும்,,, நடிகர் திலகம் சினிமா கேரியரில் இந்தப்படம் ஒரு முக்கியமான பதிவுதான்,,,,,
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th June 2017, 10:11 PM
#195
Senior Member
Devoted Hubber
Rajendran Palaniapillai
அண்ணன் திமுகவிலிருந்து விலகி
காங்கிரஸ் வந்த சமகாலத்திலேயே
கவியரசருக்கும் திமுக வில் பிரச்சனை
ஏற்பட்டு அவரும் வெளியேறினார்.
கவியரசரிடம் சிவாஜி அண்ணன்...
திருப்பதியிலே சாமி கும்பிட்டது
தப்பா? என மன உளைச்சலுடன்
கேட்டதற்கு பதில்தான்
பார்த்தால் பசி தீரும் படத்திற்கு
ஒரு பாடலை ப்போட்டார் பாருங்கள்
உள்ளம் என்பது ஆமை அதில்
உண்மை என்பது ஊமை.
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி.
அடுத்து வைச்சாருபாருங்க ஆப்பு
தெய்வம் என்றால்அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலைதான்.உண்டென்றால் அது
உண்டு.
இல்லையென்றால்அது இல்லை.
இல்லையென்றால் அது இல்லை.
ஊடேயே நட்புக்கும் சிறு விளக்கம்.
தண்ணீர் தனல் போல் தெரியும்
செந்தனலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகைபோல் தெரியும்
அது நாள்பட நாள்பட புரியும்.
நாள்பட நாள்ட புரியும்.
இப்பாடலை TMS படித்திருப்பார்
அண்ணன் சிவாஜி நடித்திருப்பார்.
உணர்ச்சிகளை முக பாவத்தில்
காட்டியிருப்பார்.சிங்கத்தமிழன்
சிவாஜி அண்ணன்.
"அண்ணன் ஒரு கோயில் "!.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th June 2017, 10:27 PM
#196
Junior Member
Senior Hubber
நீதி மன்ற விசாரணைக் கூண்டில் நிற்கிற கொலைக் குற்றவாளியிடம் நீதிபதி கேட்கிறார்..
" நீ உன் மனைவியை வேண்டுமென்றேதான் கொலை செய்திருக்கிறாய்.. சரியா?"
அந்தக் குற்றவாளி சொல்கிறான்.. " இல்ல.. எசமான்..! அவ வேண்டாம்னுதான் கொன்னேன்."
ஏதோ ஒரு வாரப் பத்திரிகையின் நகைச்சுவையில் படித்தது சிரிப்புக்குப் பதிலாக வருத்தத்தையே கொண்டு வந்தது.
மனைவி என்கிறவளின் மகிமை புரியாமல் இப்படியொரு கணவன் இருப்பானா?
*****
ரத்தம் பூசிய ஆடவர்கள் இறந்து கிடக்கிற
புகைப்படங்கள்.. ஏனென்ற அதிர்ச்சியுடன் கீழே
வந்திருக்கிற செய்திகளைப் படித்தால், பெரும்பாலானவர்கள் கள்ளக்காதல் பிரச்சினைகளில் கட்டிய மனைவியாலேயே கொல்லப்பட்டவர்கள் என்றறிகிற போது இதயம்
அதிகபட்ச அதிர்ச்சியை சந்திக்கிறது.
காலம் முழுமைக்கும் தனக்கும், தன் வாழ்விற்கும்
காவலனாய், தனதன்புக் குழந்தைகளுக்குக்
கம்பீரமான தகப்பனாய் வாழ்வெல்லாம் கொண்டாட வேண்டிய கணவனை ஒரு பெண்
துடிக்கத் துடிக்கக் கொன்றிருப்பதன் காரணம்
தேடினால், அது அவளுக்கெனச் சூழ்ந்த அசிங்கமான இருட்டுக்குச் சாட்சியாகயிருந்த
கள்ளக்காதலுக்காக என்று விடை கிடைக்கிறது.
மனம் அதிர்கிறது. கணவனென்பவன் பெண்ணுக்கு ஆதாரம் என்பதெல்லாம் பொய்யா ?
கள்ளக்காதலுக்கு இடையூறு மட்டும் தானா அவன்?
*****
எந்தவிதமான குறிக்கோளுமில்லாமல், எதற்கெடுத்தாலும் அர்த்தமில்லாமல் கெக்கலித்துச் சிரித்துக் கொண்டு, எது சொன்னாலும் பரவாயில்லை.. பார்ப்பவர்கள்
சிரித்தால் போதும் என்கிற மட்டமான லட்சியத்தோடு வரும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிரிக்கச் சிரிக்கப் பேசப்படுகிற
கணவன்மார்கள் "டௌரி கல்யாணம்" கிஷ்மூ மாதிரி இருக்கிறார்கள். மனைவிமார்கள் "மனோகரா" வசந்தசேனை மாதிரி இருக்கிறார்கள்.
*****
அலுக்க அலுக்க வேலை பார்த்து ஏறிய வியர்வைப் பிசுக்கு இரண்டு மணி நேரமாகத் தந்த
எரிச்சலை, ஒரு சாயங்காலக் குளியலுக்குப் பிறகான நடையின் இடையே, உபயோகித்துக் குளித்த மைசூர் சாண்டலை நினைவூட்டி நகரும்
ஒற்றை நொடிக் காற்று வீச்சு மாற்றி விடுவது போல...
மேலே நான் குறிப்பிட்ட பார்த்ததும், படித்ததுமான
கணவன்- மனைவி பந்தம் தொடர்பான வருத்தம்
தடவிய அபிப்ராயங்களை, அந்த புனித பந்தத்தின்
உண்மைத்தன்மையை அழகாக எடுத்துக் காட்டிய
இந்த "அந்தமான் காதலி" யின் சில நிமிஷப் பாடல்
மதிப்பான அபிப்ராயங்களாக மாற்றித் தந்தது.
*****
" நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்...
திருக்கோயிலே ஓடி வா!"
- காட்சியைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு பாட்டை மாத்திரம் கேட்டால், ஒரு இருபது வயது இளைஞனுக்கும், ஒரு பதினெட்டு
வயது அழகுப் பெண்ணுக்கும் பொருந்திப் போகிற
இளமை பாடலிலிருப்பதை உணரலாம்.
ஆனால், காதல் அன்பில் முதிர்ந்த, காதோரங்கள்
நரைத்த ஓர் அற்புத தம்பதிக்கு ஒலிக்கிறதாய்
இந்தப் பாடல் ஆச்சரியம் காட்டுகிறது.
*****
கட்டிப் பிடிக்கும் அழகு கண் பொத்த வைக்கவில்லை. தனக்கானவளை வெகுகாலம் கழித்துப் பார்த்ததும் பாய்கிற அபத்தம் இல்லை.
அருகில் இல்லாமல் போனாலும் அன்பான மனைவியைத் தன் முன்னே கற்பித்து மானசீகமாக தன் அன்றாட அனுபவங்களை அவளோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு உத்தம புருஷன் இப்படித்தான் இருப்பான் என்று நடிகர் திலகம் பாடலிலேயே காட்டி விடுகிறார்.
*****
அய்யனின் பொது வாழ்க்கையில் மட்டுமல்ல..
கலை வாழ்க்கையிலும் சவால்கள்.. சவால்கள்!
அத்தனையிலும் வென்றிருக்கிறார். நம் மனதில்
நின்றிருக்கிறார்.
இந்தப் பாடலிலும் ஒரு சவால். " திருமாலின் திருமார்பில்", மலரே குறிஞ்சி மலரே" போன்ற
அய்யனுக்காக ஜேசுதாஸ் அவர்கள் பாடிய மெல்லிய காதல் பாடல்கள் போலில்லை இந்தப் பாடல்.
இது, அன்பில் கனிந்த, அனுபவத்தில் சிறந்த
ஒரு நல்ல கணவன் தன் மனைவி மீதான தனது
பேரன்பை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் விளைந்த பாடல். இந்தப் பாடலில் ஒலிக்க வேண்டிய ஆண் குரலுக்கு வெறும் இனிமை மட்டும் இருந்தால் போதாது. வெகுகாலம் தேக்கி
வைத்த அன்பை அதற்குரியவளிடம் கொட்டும் ஓசை அந்தக் குரலில் கேட்க வேண்டும்.
கேட்கிறது.
" சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்" என்று உச்சஸ்தாயியில் பாடினால் கேட்போருக்கெல்லாம்
உள்ளூர ஒரு புல்லரிப்பு ஓட வேண்டும்.
ஓடுகிறது.
ஆனாலும்... ஒரு சிக்கல்.
நடிகர் திலகத்தின் அற்புத பாவனைகளுக்கு இந்தக் குரல்தான் பொருத்தமென்று இங்கே வேறொரு தெய்வீ்கக் குரலை நிச்சயம் பண்ணி விட்டார்கள். அதையும் மீறி இந்த சாகசக் குரலை ஜெயிக்க வைக்க வேண்டிய சவால் நடிகர் திலகத்தின் எதிர் நிற்கிறது.
நடிகர் திலகம் ஜெயிக்கிறார்.
உண்மைக் காதலை கண்கள் வழி உதிர்க்கிறார்.
தனக்காக பின்னொலிக்கும் தேன் குரலைப் பெருமை செய்ய மெலிதாய், அழகாய் தோள் குலுக்கி நடிக்கிறார். ( நமக்குக் கோடிக் கோடியாய் தரப் போகும் "சிறப்புக் குலுக்கல்" அது.)
"நீரின்றி ஆறில்லை.. நீயின்றி நானில்லை.."- பாடும் போது முகத்தில் காட்டும் ஆனந்தப் பெருமிதத்தில் எவருக்கும் எட்டாத உயரத்தில்
ஜொலிக்கிறார்.
"முல்லைக்குக் குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ"- பாடும் போது சிந்தும் முகக் கனிவில்
புத்தர்களைப் பழிக்கிறார்.
*****
பாடலினூடே நாயகி தனக்கு ஆதாரமாய்த் திகழும்
நாயகனைப் போற்றிப் பாடுவதாய் சில வரிகள்..
அவைகள் அப்படியே நம் நடிகர் திலகத்தைப் போற்றி அவரது ரசிகர்கள் பாடுவதற்கும் தோதான
வரிகளாய் அமைகின்றன...
" அய்யா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்.
அப்போதும், இப்போதும்
தப்பாத தாளங்கள்."
Ninaivale Silai Seithu - Andaman Kadhali Tamil So…:
-
13th June 2017, 10:09 AM
#197
Senior Member
Devoted Hubber
Murali Srinivas
· 10 hrs
ஆண்டவன் கட்டளை
12.06.1964 அன்று வெளியாகி இன்று (12.06.2017) 53 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஆணடவன் கட்டளை பற்றி 2009-ல் எழுதியது.
இந்த படத்தை பொறுத்தவரை ஆலய மணி என்ற வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் திலகம் - பி.எஸ்.வீரப்பா - கே.சங்கர் கூட்டணியில் வெளி வந்த அடுத்த படம்.
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் தன்மை மாறும்போதெல்லாம் அவரின் கெட் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் மாறுவது குறிப்பிட வேண்டிய விஷயம். கடமை உணர்வோடு வாழும் புரொபெஸராக வரும் போது நடு வகிடு எடுத்த ஹேர் ஸ்டைல். காதல் வயப்படும் போது அழகான ஹேர் ஸ்டைல் (புதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் வரும் அதே ஸ்டைல்), குற்றவாளியாக ஜெயிலில் இருக்கும் போது நெற்றியில் முடி வழியும் ஸ்டைல், துறவு போன்ற நிலையில் மொட்டை அடித்தது போன்ற ஸ்டைல். இப்படி அடுக்கி கொண்டே போகலாம். கெட் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் போன்றவையே இப்படி என்றால், நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா?
புரொபஸர் வகுப்பு எடுக்கும் ஸ்டைலே தனி. ஜுலியஸ் சீசர் பற்றி அவர் விளக்குவது, எப்படி came, saw, conquered ("vili,vidi,vitti "- ?) சீசருக்கு மட்டுமே பொருந்தும் அதை ஆண்டனிக்கு உவமைப்படுத்துவது தவறு என்று சுட்டிக்காட்டும் விதம், சாக்ரடீஸ் பற்றி எடுக்கும் லெக்சர், (Those who cannot obey cannot command என்று மாணவனை அடக்குவது) எல்லாமே ஒரு கண்டிப்பான புரொபஸரை கண் முன்னே நிறுத்தும். அதே மனிதன் மெல்லிய ஆனால் வலிமையான உணர்வுகளால் சலனப்படும்போது எப்படி மாறுவான் என்பதை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். ஹாஸ்டல் நிகழ்ச்சி மனதை அலைக்கழிக்க, வீட்டில் இருக்கும் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் படங்களை பார்த்தும், புத்தகத்தை படித்தும் மனத்தை அமைதிப்படுத்துவது, மழை காரணமாக ராதாவுடன் ஏற்படும் ஒரு நிமிட நெருக்கம், அதை உணர்ந்தவுடன் curse the rain என்று கத்தி விட்டு பிறகு தவறு தன் மீது தான் என்று உணர்ந்ததும் bless the rain என்று சொல்லி விட்டு போவது,பூங்காவில் மழையில் நடந்த நிகழ்ச்சியால் தன் நிலை பிறழ்ந்து விடுவேனோ என்ற மனக் குழப்பத்தில் வீட்டிற்கு வரும் புரொபசர் சந்திக்கும் மனப் போராட்டக் காட்சி, வகுப்பறையில் பாடம் எடுக்க முடியாமல் திணறுவது, ராதாவின் தாயார் கேட்கும் பணத்திற்காக சேட் கடையில் பணம் வாங்கும் போது அங்கு வேலை செய்யும் தன் ஊர்க்காரனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் திரும்பவது, கடைக்கு வெளியே சந்திக்கும் ராமுவையும் ஒரு வார்த்தை கூட பேசாமல் தவிர்ப்பது, எல்லாம் துறந்த மன நிலையை வெளிபடுத்தும் அந்த நடை, அந்த பாடி லாங்க்வேஜ்,சுரங்க வேலைக்கு சென்ற இடத்தில் சந்திக்கும் ராதாவிற்கு தன்னை தெரியவில்லை என்றவுடன் ஏற்படும் அந்த ஷாக், இவை எல்லாமே ஒன்றை ஒன்று வெல்லக் கூடியவை.
ஒவ்வொரு காட்சியையும் எவ்வளவு நுட்பமாக கவனித்து செய்வார் நடிகர் திலகம் என்பதற்கு இந்த படத்தில் வரும் இரண்டு காட்சிகள் போதும். பூங்காவில் மழையில் திடீரென்று ஏற்படும் இடி மின்னல் காரணமாக தன்னை அணைத்து கொள்ளும் ராதாவை அவரும் அணைத்து கொள்ள தேவிகா சொல்லும் வசனம் "மழை அழகா இருக்குலே". அதற்கு அவர் சொல்லும் பதில் "வானம் என்ற தந்தை பூமி என்ற அன்னையை அணைக்கும் காட்சி தானே மழை". இதை இரண்டாம் முறையும் சொல்லுவார். வசனத்தை அவர் சொல்லும் போது சிறிது blurred ஆக கேட்கும். அதாவது மழை கொட்டிக்கொண்டிருக்கும் போது நாம் ஏதாவது பேசினால் அது தெளிவாக அடுத்தவர் காதுக்கு விழாது. அதை அத்தனை நுட்பமாக செய்திருப்பார். [நேரொலியில் பேசியிருந்தால் அற்புதம். டப்பிங்கில் பேசியிருந்தால் அதி அற்புதம்]. மற்றொன்று எல்லோருக்கும் தெரிந்தது. ஆறு மனமே ஆறு பாட்டின் முடிவில் கடலையை ஊதி வாயில் போட்டுக்கொண்டே வரும் நடை (அந்த நீளமான நடையை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள்). அது போல அழகே வா அருகே வா பாட்டில் அவர் முகத்தை பார்த்தாலே அந்த பாத்திரம் அனுபவிக்கும் பல்வேறு உணர்வுகளும் அப்படியே வெளிப்படும். ரசிகர்களுக்காகவே சில ஸ்டைல் நடைகள், அமைதியான நதியினிலே ஓடம் பாட்டிலும் அது தூக்கலாக இருக்கும்.
ஜெயிலில் நடக்கும் தாய் மகன் சந்திப்பையும் சொல்ல வேண்டும். தன் மகன் கொலைகாரன் என்று கேள்விப்பட்டவுடன் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கை எல்லாம் போய் அவனை சபித்து உயிர் விடும் தாய், தான் நிரபராதி என்பதை தன் தாய் கூட நம்பவில்லையே என்று கதறும் மகன், கல்லூரி மைதானத்தில் அனைத்து மாணவர்களுக்கு முன்பில் அவமானப்படும் புரொபஸர், இந்த இரண்டும் குறிப்பிடத்தக்க காட்சிகள்.
தேவிகாவிற்கு ரொமான்ஸ் நன்றாக வரும் என்பது தெரியும். [பாலிருக்கும் பாடல், நான் என்ன சொல்லி விட்டேன் பாடல்,மடி மீது தலை வைத்து பாடல், கர்ணன் படத்தில் முதல் சந்திப்பு, கண்கள் எங்கே மற்றும் இரவும் நிலவும் பாடல், நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் மற்றும் நீலவானம் படம்].
ஆனால் இந்த படத்தில் தேவிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார். முதலில் சாதாரணமாக வருபவர் ஒரு seductress பாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார். கிளாஸில் பாடம் நடத்தும் புரொபஸரை பார்க்கும் அந்த பார்வை, நமது மனதில் இருக்கும் நமது எதிரிகளான நுட்பமான உணர்வுகளை வெல்ல வேண்டும் என்று சொல்லும் புரொபஸரிடம் தனியாக வந்து அது என்ன என்று அப்பாவி போல கேட்பது, அழகே வா பாடலில் அந்த கடலில் குளித்து கொண்டே அவர் செய்யும் movements, புரொபஸர் தன்னை அனைத்துக்கொண்டதை ரசித்து கொண்டே கையை எடுக்கிறீங்களா என்பது, I am sorry என்று சொல்பவரிடம் But,I am not sorry என்று சொல்வது, what do you mean என்று அவர் கோபப்பட, இதுக்கெல்லாம் எப்படி சார் meaning சொல்றது என்று முகத்தில் வழியும் நீரை அவர் மீது செல்லமாக விசிறி விட்டு செல்வது - தேவிகாவிடம் இவ்வளவு காதல் குறும்பு நரம்புகளா என்று வியப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. இடைவேளைக்கு பிறகு அவருக்கு அவ்வளவாக வேலை இல்லை.
மற்ற காரக்டர்கள் எல்லாம் படத்திற்கு உதவி செய்பவை. ஆனால் முழு நீள பாத்திரங்கள் அல்ல. சந்திரபாபு முற்பகுதியில் கொஞ்சம் அதிகமாக வருவார். ஆனால் காமெடி குறைவு தான். நடிகர் திலகம் படிக்க வைக்கும் மாணவனாக மற்றும் அவரது முறை பெண்ணை காதலிப்பவராக ராஜன், as usual. இளமையான புஷ்பலதா, மூன்று நான்கு காட்சிகள் வந்தாலும் மெஜெஸ்டிக்கான பாலாஜி, இரண்டு மூன்று காட்சிகளிலே பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தி விடும் சுந்தரி பாய் (ஏன் ஒரு பணக்கார மாப்பிளையை தேடுகிறேன் என்பதற்கு அவர் தேவிகாவிடம் விளக்கம் சொல்வது, பிறந்தது முதல் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு பெண்மணியின் ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தும்), வழக்கம் போல அசோகன் (இந்த வருடத்தில்[1964] தான் அசோகன், நடிகர் திலகத்தோடு நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. கர்ணன், ஆண்டவன் கட்டளை, முரடன் முத்து], கௌரவ தோற்றத்தில் ஜாவர், வீரப்பா, நாகையா ஆகியோர்.
ஜாவர் திரைக்கதை வசனம் பல இடங்களில் அவரது புத்தி கூர்மையை பறை சாற்றும். ஒரு குறை என்னவென்றால் கொஞ்சம் தூய தமிழ் தேவைக்கு அதிகமாகவே இடம் பெற்றிருக்கிறது. அது இயல்பான நடையில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
தம்புவின் ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம். ராஜன் புஷ்பலதா டூயட் பாடலான கண்ணிரெண்டும் மின்ன மின்ன- வின் போது திரை முழுக்க அருவி, அதற்கு முன்னாள் ராஜன், புஷ்பலதா, அழகே வா பாடலின் போது வர்கலாவில் (கேரளா) தென்னை மரங்களோடு கடல் வந்து பேசும் காட்சிகள், அதன் சுற்று வட்டாரத்திலே எடுக்கப்பட்ட அமைதியான நதியினிலே ஓடம் (அந்த படகு காட்சிகள் எவ்வித ஜெர்க்மின்றி இருக்கும்), இதை தவிர படம் முழுக்க கண்ணை உறுத்தாத காமிரா.
இசையை பற்றி தனியாக சொல்ல வேண்டும். எனக்கு தெரிந்து பல பேர் கவியரசர் - மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் வந்த மிக சிறந்த பாடல்களாக இந்த படத்தின் பாடல்களை குறிப்பிடுவதை கேட்டிருக்கிறேன். அமைதியான நதியிலே ஓடம் பாடலை கேட்கும் போது தன்னிலை மறந்து கண்ணில் கண்ணீர் அரும்புவதையும் பார்த்திருக்கிறேன். கண்ணதாசனின் மிக சிறந்த தத்துவ பாடலாக ஆறு மனமே ஆறு பாடலை சொல்லுவதையும் கவனித்திருக்கிறேன். [நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் - எனக்கு மிகவும் பிடித்த வரிகள்]. இந்த பாடல் அறுபடை வீடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் . குறிப்பாக திருப்பரங்குன்றத்திலும், பழமுதிர் சோலையிலும் (அழகர் கோவில்) ஷூட்டிங் நடக்கும் போது கட்டுகடங்காத கூட்டம் என்று சொல்வார்கள். பாடல் பார்க்கும் போதே Frame- ல் மக்கள் கூட்டம் கூட்டமாக தெரிவார்கள். அதை கஷ்டப்பட்டு மறைத்து எடுத்திருப்பார்கள். அதுவும் அழகர் கோவிலில் விவேகானந்தர் உடையில் வெளி பிரகாரத்தில் நடிகர் திலகம் நடக்கும் ஸ்டைல் (பின்னால் துதிக்கையை தூக்கி ஆசீர்வதிக்கும் கணேசன்), தியேட்டரில் மட்டுமல்ல, நேரில் பார்த்தவர்களும் கை தட்டியது சரித்திரம். சாதாரணமாக எந்த நடிகனின் ரசிகனும் தன் அபிமான நடிகர் தாடி நீக்கி, மீசை நறுக்கி நேர்த்தியாக உடையணிந்து மிக அழகாக தோற்றமளிக்கும் போது தான் மிக அதிகமாக ரசிப்பார்கள், ஆரவாரம் செய்வார்கள்,கை தட்டுவார்கள். ஆனால் இங்கேயோ தன் அபிமான நடிகன், பரதேசி போல் முடி குறைத்து, முள்ளு முள்ளான தாடி வைத்து, கிழிந்த காவி வேட்டி கட்டி வரும்போதுதான் ரசிகன் உச்சக்கட்ட ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறான். தன் நடிப்பின் மூலமாக ரசிகனின் ரசிப்பு தன்மையையும் வளர்த்தவர் நடிகர் திலகம் என்று சொன்னால் அது வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம்.எந்த மொழிப் படமானாலும் action ஹீரோவிற்கு மாஸ் இருக்கும். ஆனால் ஒரு actor -க்கு இவ்வளவு பெரிய மாஸ் இருப்பது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு இருக்கும்?
தோலை நீக்கி விட்டு கடலையை வாயில் போட்டுக் கொண்டு தோலியை ஊதும் காட்சி - உண்மையிலே அது மில்லியன் டாலர் performance -தான்.
இது தவிர சுசீலாவின் சொக்க வைக்கும் குரலில் அழகே வா (சாதாரணமாக ஈஸ்வரி பாடும் சூழ்நிலை), பி.பி.எஸ் - ஈஸ்வரியின் கண்ணிரெண்டும் மின்ன மின்ன, சந்திரபாபுவிற்காகவே அமைக்கப்பட்ட சிரிப்பு வருது பாடல் எல்லாமே ரசிகர்கள் மனதில் நிரந்தரமாகவே குடியிருப்பவை.
இவை எல்லாம் அமையப் பெற்றதால் இயக்குனர் சங்கரின் வேலை எளிதானது. ஆனால் இவை அனைத்தும் இருந்தும் இந்த படம் நூறு நாட்கள் என்ற வெற்றிக்கோட்டை தொட முடியாமல் போனது வருத்தமான விஷயம். இரண்டு காரணங்கள். படத்தின் முடிவுக்கு இட்டு செல்லும் இடங்களில் அது வரை இருந்த இயல்பு போய் சிறிது செயற்கை நுழைந்து விட்டது ஒரு காரணம். இரண்டு, இந்த படத்திற்கு பின் வெளியான புதிய பறவை, சென்னை பாரகனில் எளிதாக 100 நாட்கள் ஓடியிருக்கும் இந்த படம். அந்த நேரத்தில்தான் சாந்தியில் வெளியாவதாக இருந்த புதிய பறவை (ராஜ் கபூரின் சங்கம் சாந்தியில் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால்) பாரகனுக்கு ரிலீஸ் மாற்றபப்ட்டது. சொந்தப படமாக இருந்தும் கூட தன தியேட்டரில்தான் வெளியிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் வேறு தியேட்டர் தேடித் போனது நடிகர் திலகத்தின் பெருந்தன்மை. புதிய பறவைக்காக பாரகன் திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டது. அந்த வேலையை செய்வதற்காக 70 நாட்கள் ஓடிய ஆணடவன் கட்டளை எடுக்கப்பட்டு தியேட்டர் தற்காலிகமாக மூடப்பட்டது..எங்கள் மதுரையிலும் 70 நாட்கள் ஓடியது இந்தப் படம்.
1964 மே 27 அன்று ஜவகர்லால் நேரு மறைந்து போனார். 1964 ஜூன் 12 அன்று வெளியான இந்த படத்தின் இறுதி காட்சி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வகுப்பறையில் நடிகர் திலகம் பேசுவது போல் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அன்புடன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th June 2017, 10:15 AM
#198
Senior Member
Devoted Hubber
Jahir Hussain
· 6 mins
பெருந்தலைவர் ஐயா காமராஜர் இந்தப் படத்தை கண்டு களித்து இருக்கிறார்,,, ஆகவே பெருமைமிக்க படங்களில் ஒன்றாக அமைந்து விட்டது,,, இன்னொரு விஷயம் இந்தப்படம் ரிலீஸில் ஃபிரெஷ் ஆக நான் பார்த்த முதல் சிவாஜி படம்,,, அதற்கு முன் வேறு சில படங்கள் நான் பார்த்திருக்கக் கூடும் ஆனாலும் எனது நினைவில் இதுதான் முதல் படம் என்று தோன்றுகிறது,,, அப்போது ஆறேழு வயது இருக்கலாம்,, சரி அந்தக் கதை எதற்கு? இந்தப்படம் ரிலீஸ் சமயத்தில் நான் 50 வயதை தொட்டவனாக இருந்தால் எப்படி விமர்சனம் செய்வேனோ அதே காலகட்டத்தை கற்பனை செய்து இந்தப் படத்தை எனது பார்வையில் எழுதுகிறேன்,,, இன்றுதான் ரிலீஸ் ஆன படம்போல் தியேட்டரில் பார்த்துவிட்டு சூட்டோடு சூடாக எழுதுகிறேன்,,,
இந்தப்படத்தின் ரைட்டர் பால முருகன் இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதுவதற்கு முன்பே ஒரு முக்கியமான விஷயத்தை உள்ளே கொண்டு வந்து விட்டார்,,, நாடகக்கலையை மையப்படுத்தி திரைக்கதையில் குடும்ப உறவுகளை பின்னி கச்சிதமாக அமைத்து விட்டார்,, 1960-70 களில் மக்களுக்கு நாடகங்கள் மீது பிடிப்பு தளராமல் இருக்கத்தான் செய்தது,, ஒருபக்கம் திராவிட இயக்கங்கள் நாடக மேடைகளை அலங்கரித்து வந்தது, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நடிகவேள் ராதா போன்றோர் ஒருமுனையில் தங்களது திராவிட இயக்க கொள்கைகளை முன்னிறுத்தும் போது,,, கண்ணதாசன், சக்தி கிருஷ்ணசாமி, ஜாவர் சீத்தாராமன் போன்ற வெகுசிலரே தேசிய மற்றும் தெய்வீக நன்னெறிகளை உள்ளடக்கி நாடகங்கள் இயற்றினார்கள், சம்பூர்ண ராமாயணம், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஹரிச்சந்திரன் போன்ற நாடகங்கள் மேடை ஏற்றப்பட்டன,,, திரைப்படங்களில் நிறைய நடித்து வந்தாலும் தேசபக்தியையும் தெய்வ பக்தியையும் உணர்த்தும் நாடக மேடைகளிலும் ஆர்வத்துடன் பங்குகொண்வர் நமது தேசியத்திலகம் சிவாஜி ஆவார், சமூக நாடகங்களை மட்டும் சினிமாவாக எடுக்காமல் மேற்குறிப்பிட்ட பல நாடகங்களையும் சினிமாவாக நடித்து வெற்றி கண்டு இருக்கிறார்,,, தேசபற்றை மக்கள் மனதில் விதைத்திருக்கிறார்,,,
சிவாஜி சினிமாக்களில் படிப்படியாக நாடகங்கள் திரைக்கதைக்குள் நுழைக்கப்பட்டது ஒரு சிறப்பு, ரத்தத் திலகத்தில் "ஒத்தெல்லோ".. அன்னையின் ஆணையில் சேரன் செங்குட்டுவன்,,, பின் நாட்களில் ராமன் எத்தனை ராமனடி படத்தில் வீரசிவாஜி ,,, பிறகு வாஞ்சிநாதன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்,,, இந்தப்படத்தில் ஒரு ராஜபார்ட் ஆகவே மேடை நாடக நடிகனாக வாழ்ந்திருப்பது சிறப்பு,,, இந்த கதைக்குள் நந்தனார் நாடகம், வள்ளி தெய்வானை, அல்லி அர்ஜூனன், பவளக் கொடி, சத்தியவான் சாவித்ரி, வள்ளி திருமணம்,கண்ணகி போன்ற நாடகங்களை தொட்டு தொடர்ந்து வந்திருப்பார்,,, பிறகு ஹாம்லட், பகவத்சிங், திருப்பூர் குமரன் போன்ற நாடக காட்சிகளையும கதையோடு இணைத்து இருப்பார்கள்,,, வறுமையில் உழலும் ஒரு சிறுவன் ஒரு நாடக கம்பெனியில் தன்னை இணைத்துக் கொண்டு தன் நடிப்பாற்றலை வளர்த்துக் கொண்டு எப்படி படிப்படியாக முன்னேறுகிறான் என்பதுதான் கதை,. இதில் காதல் பாசம் குடும்ப சென்டிமென்ட் இவற்றை பக்குவமாக கலந்ததோடு நில்லாமல் நாடக கலைஞர்களின் வாழ்க்கை நாடகம் நடத்த படுதற்கான கஷ்ட நஷ்டங்கள் இவற்றையும் இணைத்து இழைத்து தந்து இருக்கிறார்கள்,,, சிவாஜி என்ற ஒற்றைக் கலைஞனை மட்டுமே நம்பி முன்னிருத்தி நாடக காட்சிகளையும் குடும்ப உறவுகளையும் நாடக கலைஞன் மில் தொழிலாளர்கள் நேசம் இவற்றையும் விட்டு வைக்காமல் புட்டு புட்டு வைத்து இருக்கிறார்கள்,,,
இயல் இசை நாடகம் இம்மூன்றில் இசையும் இசைசார்ந்த நடனக் கலையையும் தில்லானா மோகனாம்பாள் படமாக ஏ பி என் வடிவமைத்து விட்டார்,, அதை தொடர்ந்து நாடகம் என்ற பகுதியை எடுத்துக் கொண்டு கதை சிதைந்து விடாமல் காட்சி அமைப்புகளை சிக்கனப்படுத்தி வெகுஜன சினிமாவாக உருவாக்கி ஜெயித்து இருக்கிறார்கள்,
அம்மம்மா தம்பி என்று நம்பி என்று பாடிக் கொண்டு ஒரு சிறுவன் ரயிலில் தன் தம்பி தங்கையோடு யாசகம் கேட்டு வருவான்,,, அப்போது "சக்" என்று ஒருவன் அவனது நெஞ்சில் உதைப்பான்,,,, "பக்" என்ற மன நிலையில் நாம் நிமிர்ந்து அமர்வோம்,,, கடைசிவரை படம் முடியும் வரை அதே மனநிலையில்தான் நிமிர்ந்தே அமர்ந்திருப்போம்,,, இது முதல் சிறப்பு,,
நண்பர்கள் பலர் இந்தப் படத்தை சல்லடையாக சலித்து எடுத்து விட்டார்கள்,,, என் பங்கிற்கு நானும் எழுதி விட்டேன்,, ஆனாலும் இன்று புதிதாய் பார்வையிட்ட போது புதிய சில அனுபவங்கள் கிடைக்கிறது,,, "உன் உயிர் போவதாக இருந்தால் நாடக மேடையில்தான் போகனும்"... இது ரங்கதுரை என்ற கலைஞன் தன்னுடன் இணையாக நடிக்கும் சிந்தாமணி என்ற பெண் கலைஞருக்காக மட்டும் சொல்லவில்லை,, மாபெரும் சிவாஜி கணேசன் தன்னோடு நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த தன் சகோதரி போன்ற தன்னை முழுதும் சினிமாவுக்கு என்று அர்ப்பணித்த மனோரமாவுக்கு சொல்கிற அட்வைஸ்,,, தன் ஆர்மோனியப் பெட்டியை அடகு வைத்து 300 ரூபாய் கேட்கும்போது "உன்னை கோடி ரூபாய்க்கு நம்புகிறேன் ரெங்கதுரை" என்று சொல்வார்,,, இந்த எளிய இரண்டு ஒற்றைவரி வசனங்களும் ஒரு நாடகக் கலைஞனை எவ்வளவு உயர்த்திப் பிடிக்கிறது,,, ஒருகட்டத்தில் பகவதி சொல்வார் நீங்கள் என் வீட்டோடு தங்கிவிடு என்பார்,, அதற்கு பதில்,,, நாள் முழுக்க பட்டினி கிடந்தாலும் ராத்திரி நாடகத்திலே ராஜா வேஷம் போடுகிறதிலே இருக்கிற நிம்மதி வேறு எதிலும் இல்லை என்பார்,,, தம்பிக்காக கப்பல் வியாபாரி கண்ணபிரானாக வந்து கரகரத்த குரலில் பேசி பகவதிக்கு ஷாக் கொடுத்துவிட்டு அப்படியே வேஷத்தை கலைத்துவிட்டு சன்னமான குரலில் தம்பியைப்பற்றி கூறி மன்னிப்புக் கேட்பது,, ஒரு நாடகக் கலைஞனின் நடிப்புத்திறமையை நிமிர்த்தி நிறுத்தி இருப்பார்,,, கோமாளி வேஷம் போட்டு குழந்தைகளை கவரும் நகைச்சுவை நாடகம் நடத்தப் போகும் நேரத்தில் தங்கை மரணம்,, தகவல் வர நாடகத்தை கேன்சல் செய்யாமல் சோகம் ஹாஸ்யம் இரண்டையும் ஒருசேர முகத்தில் பாவங்கள் காட்டி பாடி நடிக்கும் திறமை,,, யாருக்கு வரும்,,,
இந்த படத்தில் பல நாடகக்காட்சிகளை இதமாக இணைக்கப்பட்டு அதன் மூலமாக கதையோட்டத்தை கொண்டு சென்று இருப்பார் இயக்குநர்
ஆரம்பக் காட்சிகளில் வள்ளி தெய்வாணை நாடகத்தில் பாலகலைஞர்கள் வசனம் பேசியவாரே "காயாத கானகத்தே" என்று பாடி திலகம் அறிமுகமாக அப்படியே டைட்டில் கார்டு போடப்படும்,, அல்லி அர்ச்சுனன் நாடகம் நகைச்சுகை கலந்து வருவதாலும் நந்தனார் நாடகம் செல்வந்தன் ஏழை என்பதாலும் அப்படியே விட்டுவிடுவார் இயக்குநர்,,, பவளக் கொடி நாடகம் நடக்கும் போது அலமேலு காதலை சொல்லி விடுவதும் அதையொட்டி அப்படியே மதனமாளிகை பாடலும்,,,
அதேபோல வள்ளி திருமணம் நாடகத்தில் ரசிகர்கள் முதலில் கல்யாணத்தை நடத்தச் சொல்லி கலாட்டா செய்வது போல் காட்சி அமைத்து நாடகத்தின் இடையிலேயே முருகன் வேஷத்தில் அலமேலுவை திருமணம் செய்து கொள்வது,,, இப்படி ஒவ்வொறு நாடக காட்சிகளின் இடையிடையே கதையோட்டத்தை கலந்துவிடும் யுக்தி சிறப்பு,,, ஹாம்லெட் நாடகத்தில் என்ன ஒரு கம்பீரம் கவர்ச்சி,,, டு பீ ,,,, ஆர் நாட் டு பீ என்று ஆங்கில வசனங்களை இதுவரை நாம் கேட்காத குரலில் பார்க்காத உடல் மொழியில் கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார் சிவாஜி,,, சிகரம் வைத்தார்ப்போல பகத்சிங் நாடகத்தில் கண்ணதாசனை கொண்டு வந்து பாடல்வரிகளை பரவவிட்டு பகத்சிங் தமிழில் உணர்ச்சியுரை ஆற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை செய்து ஒரு தேசபக்தி பாடலை வடிவமைத்து இருப்பார்கள்,,, நரம்புகள் முறுக்கேற உணர்ச்சிகள் கொந்தளிக்கும் வரிகளை அமைத்து டி எம் எஸ் மற்றும் எம் எஸ்வி இருவரும் ராஜபாட்டை நடத்தி இருப்பார்கள்,, ரெங்கதுரை என்ற சிவாஜி மட்டுமா பகவத்சிங்காக மாறி இருப்பார்,,, அந்த காட்சியை ஸ்கிரீனில் பார்க்கும் ஒவ்வொறு ஆடியன்ஸூம் பகத் சிங் ஆக அல்லவா மாறி இருப்பார்கள்!!!
க்ளைமேக்ஸில் முத்தாய்ப்பாக திருப்பூர் குமரன் நாடகத்தை பயன்படுத்தி இருப்பார்கள்,,, அந்த நாடக காட்சிகளுக்கு உள்ளேயே படத்தின் கிளைமேக்ஸல் அண்ணல் காந்தி படகொலையைப் போல் காட்சியாக அமைத்து ரெங்கதுரையை ஒருவன் சுட்டுக் கொல்வது போலவும் நாடகமேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தேசியக் கொடியோடு உயிர் துறப்பதாகவும்,,, அதாவது கொடிகாத்த குமரனும் உயிர்துறக்கிறார் எதிரிகள் சதியால் துப்பாக்கிக் குண்டுகளுக்கு ரெங்கதுரையும் பலி ஆகி விடுவது போலவும் மேடை நாடக காட்சி அமைத்து படத்தை முடித்து இருப்பார்கள்,,, இந்தக் காட்சிகளில் சில குறைகள் இருப்பினும் நடிகர் திலகம் நடிப்பு சாம்ராஜ்யத்தின் முன் அதெல்லாம் பார்வையாளர்களுக்கு மறக்கடிக்கப் பட்டு விடும்,,,படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நாடக காட்சிகளை அரவணைத்துக் கொண்டே கதையோடு ட்ராவல் பண்ணுவது அசாதரணமான காரியம்,, கொஞ்சம் பிசகினாலும் திரைக்கதை ட்ராமாஸ்டிக்காக போயிருக்கும்,,, ஆனால் நடிப்பு என்ற கைவிலங்கால் நம்மை கட்டிப்போட்டு விட்டு ஒரு கண்கட்டி வித்தையை அரங்கேற்றி இருக்கிறார்கள்,, 1973-74 களில் அதிகபட்சம் சினிமா டிக்கட் விலை ஒரு ரூபாய்க்குள்தான் இருக்கும்,,, அந்த ஒற்றை ரூபாயில் நமக்கு எத்தனை அனுபவம்,,, சிவாஜிக்கு எத்தனை கெட் அப்புகள்,, திருப்பூர் குமரனாக, பகத்சிங்காக, கப்ப்ல் முதலாளி கண்ணபிரானாக, முருகனாக, நந்தனாராக, பஃபூனாக, ஹாம்லெட் ஆக, ஆர்ஜூனனாக அப்பப்பா எத்தனை வேஷம்,,, நிச்சயமாக ரசிகர்களுக்கு இந்தப் படம் பம்பர் ப்ரைஸ்தான்,,,
நான் இந்தப்பதிவை இதில் உள்ள நாடக மேடை அனுபவங்களுக்கு ஆன கண்ணோட்டத்தில் மட்டுமே பதிவு செய்திருக்கிறேன்,, திரைப்படம் என்ற கண்ணோட்டத்தில் பல நண்பர்கள் பதிவேற்றி இருக்கிறார்கள்,, கமெண்ட்லேயும் பதிவிடுவார்கள்,, ஆகவே அந்த விஷயங்களை அவர்களுக்காக ரிசர்வ் செய்து விடுகிறேன்,,, (முகப்புப் படம் உதவி திரு கௌசிங்கன் ராமையா)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th June 2017, 10:17 AM
#199
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th June 2017, 10:18 AM
#200
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks