-
8th February 2017, 02:51 AM
#431
Moderator
Diamond Hubber
சின்னத்திரை தான் ரஜினி படவாய்ப்பை வாங்கித்தந்தது! -தாடி பாலாஜி பேட்டி
சினிமாவில் காமெடியனாக நடித்து வரும் தாடி பாலாஜி, விஜய் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். கலக்கப்போவது யாரு, நடுவுல கொஞ்சம் டிர்ஸ்டப் பண்ணுவோம், சிரிப்புடா என பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்த கத்திச்சண்டை படத்திலும் அவருடன் இணைந்து காமெடி செய்தவர், தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்களிலும் நடிக்கிறார் தாடி பாலாஜி.
தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் நமக்களித்த தகவல்கள் இங்கே இடம்பெறுகிறது...
வடிவேலுவுடன் கத்திச்சண்டையில் நடித்தது பற்றி!
வடிவேலுவுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்களில் காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகியிருக்கிறது. மேலும், வடிவேலு சாரின் ரீ-என்ட்ரியில் நடித்த முதல் படத்திலேயே அவர் எனக்கு வாய்ப்பு கொடுத் தது மகிழ்ச்சியாக இருந்தது. அதேசமயம், கத்திச்சண்டையில் அவருக்கான தீனி இல்லை என்பது எனது கருத்து. டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மருதமலை படத்தில் சூப்பர் காமெடி காட்சிகள். மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அர்ஜூனே தெரியமாட்டார். வடிவேலுதான் தெரிவார்.
ஆனால் இந்த படத்தைப்பொறுத்தவரை அந்த அளவுக்கு காமெடி பெரிதாக இல்லை. அதோடு, வடிவேலு நார்மலா வந்திருக்கலாம். இந்த மாதிரி கெட்டப்பில் வந்திருக்க வேண்டாம் என் நினைக்கிறேன். கத்திச்சண்டை ட்ரெய்லரில் ஐ வில் பேக் என்று அவர் சொன்னபோது தியேட்டரில் பெரிய கைதட்டல் கிடைத்தது. ஜனங்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு அவருக்கான காமெடி காட்சிகள் படத்தில் இல்லையோ என்று தோன்றுகிறது. மேலும், வடிவேலுவுடன் அடுத்தபடியாக 23ஆம் புலிகேசி படத்தில் நடிக்கிறேன். அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் முழுமையாக பூர்த்தி செய்து விடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. காரணம், வடிவேலு ஒரு சிறந்த காமெடியன். டிவி மூலமாக மற்றவர்களை சிரிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கிறார். அவர் சினிமாவில் இல்லாதபோதும் சிரிக்க வைத்தார்.
தனி காமெடியனாக எப்போது நடிப்பீர்கள்?</b>
சில இயக்குனர்கள் அந்த வாய்ப்பை தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதனால் விரைவில் நான் தனி காமெடியனாக நடிக்கும் படங்கள் வெளியாகும். மேலும், பெரிய திரையில் கிடைக்காத பெயரை விஜய் டிவி வாங்கிக்கொடுத்து வருகிறது. எந்த ஷோவாக இருந்தாலும் பாலாஜி இருப்பார் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு விஜய் டிவி என்னை ஆதரித்து வருகிறது. அதோடு, விஜய் டிவியில் அனைவரையும் பேமிலி மாதிரி என நினைப்பார்கள். எங்களது பிறந்தநாள், திருமண நாளைகூட இணைந்து கொண்டாடி மகிழ்வார்கள். தலைமையில் இருந்து செக்யூரிட்டி வரைக்கும் பேமிலி மாதிரிதான் பழகுவார்கள். அதுதான் விஜய் டிவி. என்ன பிரச்சினை, என்ன தேவை என்றெல்லாம் கேட்டு செய்வார்கள். சில சேனல்கள் என்னை கூப்பிட்டும் நான் போகவில்லை. அப்படி போய் விட்டால் நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். அதனால் விஜய் டிவியை விட்டு நான் போகவே மாட்டேன்.
ஒரே நிகழ்ச்சிக்கு ஐந்து நீதிபதிகள் தேவையா?
ஒவ்வொருத்தரும் ஒரு பாய்ண்ட் சொல்வார்கள். சிலர் மனசு நோகாம பொதுவாக சொல்வார்கள். இதைத்தான் நான் பண்ணிக்கொண்டிருக்கிறேன். ஒரே ஆள் இருந்தால் பர்பாம் பண்ணுபவர்களுக்கும் அவர் சொல்வதுதான் முடிவு என்பதால் ஒருவித பயம் இருக்கும். ஆனால், 5 பேர் இருக்கும்போது அதில் ஓரிருவராவது தங்களது பர்பாமென்ஸ் நன்றாக இருப்பதாக சொல்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும். அதற்காகத்தான் பலரை ஜட்ஜ்களாக உட்கார வைக்கிறார்கள்.
காமெடிகளில் ஓவராக கலாய்ப்பது பற்றி?
நாகேஷ் காலத்தில் பாடிலாங்குவேஜ் காமெடி இருந்தது. இப்போது டயமிங்காகி விட்டதே. சந்தானம் என் நண்பர்தான். சூரி உடம்புக்குள்ளேயும் வடிவேலு இருக்கிறார். கவுண்டமணி-செந்தில் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. அதேமாதிரி விஜய் டிவியில் நானும் ஈரோடு மகேசும் கெமிஸ்ட்ரியுடன் நிகழ்ச்சி பண்ணி வருகிறோம். எங்களுக்கிடையே ஈகோவே வந்ததில்லை. என்னடா லூசு மாதிரி பேசுறே என்பார். அப்போதுகூட நான் லூசுங்கிறதை மத்தவங்களுக்கு காட்டுறியா என்பேன். நான் சீனியர் என்னையா இப்படி சொல்றே என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன். என்னை கலாய்ப்பதைகூட காமெடியாக்கி விடுவேன்.
கான்செப்ட் ரெடி பண்ணி நிகழ்ச்சி பண்ணும் ஐடியா உள்ளதா?
தற்போது ஒரு நிகழ்ச்சி நடத்தப்போகிறேன். அதற்கான கான்செப்ட் ரெடி பண்ணி ஓகே வாங்கி விட்டேன். செலிப்பிரிட்டி மற்றும் ஆடியன்ஸ்கிட்ட உடனுக்குடன் பேசும் நிகழ்ச்சி அது. சகல - ரகளை நிகழ்ச்சியில் சந்தானம், சின்னி ஜெயந்த் பண்ணியதை ஒரு புது பாணியில் கான்சப்ட் ரெடி பண்ணி பண்ணப்போகிறேன்.
டிவியினால் சினிமா வரவேற்பு குறைகிறதா?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ரஜினி நடித்த லிங்கா படவாய்ப்பே விஜய் டிவியைப் பார்த்துதான் வந்தது. கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட ரொம்ப நாளா சான்ஸ் கேட்டு வந்தேன். எதேச்சையாக டிவி பார்த்திருக்காரு. அப்பத்தான் லிங்கா படத்தில் நடிக்க கூப்பிட்டார். விஜய் டிவி மூலமா வந்த அந்த வாய்ப்பில் ரஜினிக்கு ப்ரண்டாவே நடித்துவிட்டேன்.
குடும்பப் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் பற்றி?
குடும்பப் பிரச்சினையைப்பற்றி சில ஷோக்கள் வருது. எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதை பண்றவங்க பேமிலியாவது நல்லா இருந்தா பெறவாயில்லை. அவங்களே பிரச்சினையில் இருக்காங்க. வர்றவங்களும் நான் அவர்கூட இருந்தேன். இப்ப இன்னொருத்தரோட இருக்கேன் என்கிறார்கள். இதைப்பார்க் கிறவர்கள் நம்ம குடும்பம் எவ்வளவோ பெறவாயில்லை என்கிறார்கள். பிரச்சினையை தூண்டுற மாதிரி உள்ளது.
நான் என்ன சொல்ல வர்றேன்னா. கேள்வி கேட்கிறவங்க, இதை மாதிரி அவங்க பக்கத்து வீட்டுல ஒரு பிரச்சினைன்னா போய் தீர்த்து வைப்பாங்களா. அப்பவும் சுத்தி சுத்தி கேமராவதான் பார்ப்பாங்க.
விஜய் டிவியில்கூடதான் அது இது எதுவில் கலாய்க்கிறீர்களே?
மனசு நோகாம கலாய்க்கலாம். ஆரம்பத்தில் அது இது எதுவில் கொஞ்சம் கலாய்த்தார்கள். இப்போது அப்படி யாரையும் கலாய்ப்பதில்லை. ரோபோ சங்கர் ரஜினி, விஜய்காந்த் மாதிரியெல்லாம் பண்ணினார். மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் என்னைதான் கன்டசன்ட் கலாய்ப்பாங்க. அதைகூட நான் ஜாலியா காமெடியா எடுத்து பண்ணுவேன். விஜய் டிவியைப்பொறுத்தவரைக்கும் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதை கருத்தில்கொண்டுதான் தற்போது நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறோம் என்கிறார் தாடி பாலாஜி.
நன்றி: தினமலர்
-
8th February 2017 02:51 AM
# ADS
Circuit advertisement
-
4th March 2017, 06:02 AM
#432
Moderator
Diamond Hubber
சீரியல் இயக்குனர் ஆனார் ராஜ்கபூர்
பெரிய திரை இயக்குனர்கள் தற்போது சின்னத்திரை தொடர் இயக்க வருவதுதான் இப்போதைய டிரண்ட். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கிறார் ராஜ்குமார். தாலாட்டு கேட்குதம்மா, சின்ன ஜமீன், சீமான், வள்ளல், அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே. சமஸ்தானம், குஷ்தி உள்பட20 படங்களை இயக்கியவர். படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் நந்தினி தொடரை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. தற்போது ராஜ்குமார் இயக்குகிறார். சுந்தர்.சி தயாரிப்பாளராக இருக்கிறார். தொடர் இயக்குவது பற்றி ராஜ்கபூர் கூறியதாவது:
நான் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளேன். பெரிய திரையை சின்னத்திரைக்கு கொண்டு வரும் முயற்சியே தற்போது நாங்கள் செய்துள்ள முயற்சி. இது ரசிகர்களுக்கு தொடர் நிகழ்ச்சி பார்த்த அனுபவமாக இல்லாமல் திரைப்படம் பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும். இதில் பணியாற்றும் அனைவரும் திரைப்பட துறையை சார்ந்தவர்கள். இதை நாங்கள் சினிமாவாகவே எடுத்து அதை தொடராக உங்களுக்கு கொடுக்கின்றோம். ஒரு பாம்புக்கும் பேய்க்கும் இடையில் நடக்கும் ஒரு சண்டை தான் தொடரின் கதையாகும். இதில் பாம்பாக ஒரு பெண்ணும் பேயாக இன்னொரு பெண்ணும் நடிக்கிறார்கள் . என்கிறார் இயக்குநர் ராஜ் கபூர்
நன்றி: தினமலர்
-
4th March 2017, 06:07 AM
#433
Moderator
Diamond Hubber
சினிமாவில் நடிக்க ஆசையில்லை! -சீரியல் நாயகி கிருத்திகா -
திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமானவர் கிருத்திகா. அதையடுத்து செல்லமே, என் இனிய தோழியே, கேளடி கண்மணி, பாசமலர் என பல சீரியல்களில் நடித்தவர் தற்போது வம்சம் சீரியலில் நடித்து வருகிறார். மேலும், பெரும்பாலான டிவி நடிகைகளுக்கு அடுத்தபடியாக சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்கிற ஆசை இருந்து வரும் நிலையில், கிருத்திகாவோ தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளியும் இல்லை என்கிறார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், சீரியல்களில் நான் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறேன். ஒரு சீரியலில் பாசிட்டிவான வேடம் என்றால், இன்னொரு சீரியலில் நெகடீவ் கலந்த வேடம். மற்றொரு சீரியலில் இல்லத்தரசி வேடம் என நடிக்கிறேன். அப்போது அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப முழுமையான நடிப்பை வெளிப்படுத்துகிறேன். இதனால் டிவி சீரியல் பார்க்கம் நேயர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருந்து வருகிறது.
தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் நடிக்கிறேன். இந்த சீரியல் எனக்கு நல்ல ரீச் கொடுத்துள்ளது. இதில் பிசியாக இருப்பதால் வேறு சீரியல்களில் நடிக்க நேரம் இல்லை என்று கூறும் கிருத்திகாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் துளியும் இல்லையாம். காரணம், சீரியலிலேயே நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. அதோடு அலுவலகம் செல்வது போன்று காலையில் ஸ்பாட்டுக்கு சென்றால் மாலை வீடு திரும்பி விடலாம். அதனால் இதுவே எனக்கு போதுமானதாகவும், மனநிறைவாகவும் உள்ளது என்கிறார் கிருத்திகா.
நன்றி: தினமலர்
-
11th April 2017, 09:28 PM
#434
Moderator
Diamond Hubber
மேடை நிகழ்ச்சிகளுக்கு 3 நீதிபதிகள் தேவையா? -அர்ச்சனா பதில்
சின்னத்திரை சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் இசை, நடனம், காமெடி போன்ற மேடை நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவார். அப்போது அவர்களது திறமைக்கு மதிப்பெண் போடுவதற்கு 3 அல்லது 4 சீனியர் கலைஞர்கள் நீதிபதிகளாக இடம்பெற்று வருகிறார்கள். ஆனால் அதைப்பார்த்து, திறமைக்கு மதிப்பெண் கொடுக்க ஒரு ஜட்ஜ் போதாதா? இத்தனை பேர் தேவையா? என்கிற கருத்துக்கள் நேயர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதுகுறித்து இளமை புதுமை அர்ச்சனாவிடம் கேட்டபோது, தற்போது நான் பங்குபெற்று வரும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ், குஷ்பு மற்றும் நான் என 3 பேர் ஜட்ஜ்களாக இருக்கிறோம். சிறுவர் - சிறுமிகள் நடிக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர்களின் திறமையை மதிப்பிட 3 பேர் தேவையா? என்று கேட்டால், கண்டிப்பாக தேவை என்றுதான் நான் சொல்வேன்.
ஏனென்றால், நாங்கள் மூன்று பேருமே வேற வேற பரிமாணங்களை சேர்ந்தவர்கள். பாக்யராஜ் சார் இயக்குனர், குஷ்பு மேடம் நடிகை, நான் தொகுப் பாளினி. இப்படி இருப்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கலைஞர்களின் திறமையை மதிப்பிடுவோம். அதாவது ஒருவர் டயலாக் டெலிவரியை ஆராய்ந்தால், இன்னொருவர் பாடிலாங்குவேஜை கவனிப்பார். மற்றொருவர் ஆடியன்ஸ் பார்வையில் இருந்து அதற்கு ஒரு மதிப்பெண் கொடுப்பார். இந்த மூன்று கோணங்களையும் ஒரேயொரு நீதிபதி கவனித்து ஜட்ஜ்மென்ட் கொடுக்க முடியாது. அதனால்தான், மேடை நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் மூன்று சீனியர் கலைஞர்களை நீதிபதிகளாக நியமிக்கிறார்கள் என்கிறார் அர்ச்சனா.
நன்றி: தினதந்தி
-
11th April 2017, 09:57 PM
#435
Moderator
Diamond Hubber
நெகடீவ் ரோல்தான் பிடித்திருக்கிறது! -வாணி ராணி ஸ்ருதி
வாணி ராணியில் ராதிகாவின் மருமகளாக பவித்ரா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ஸ்ருதி. ஆரம்பத்தில் பாசிட்டீவாக இருந்த இவரது கதாபாத்திரம் தற்போது நெகடீவாக மாறி வருகிறது. அதனால் நேயர்களின் நேரடி கவனத்துக்கு வந்துவிட்டார் ஸ்ருதி.
இந்த ரீச் பற்றி அவர் கூறும்போது, வாணி ராணியில் நான் நடித்து வரும் பவித்ரா என்ற வேடம் முதலில் பாசிட்டீவாக இருந்தது. ஆனால் இப்போது நெக டீவாகிக்கொண்டிருக்கிறது. அதனால் நேயர்கள் கவனிக்கப்படும் கேரக்டராகியிருக்கிறது. எனக்கு நடிப்பதற்கும் நிறைய ஸ்கோப் உள்ளது. மேலும், ராதிகா மேடம் காம்பினேசனிலேயே எனக்கான காட்சிகள் இருப்பதால் நேயர்களின் நேரடி கவனத்துக்கு வந்து விட்டேன். அதனால் வாணிராணியில் எனது கேரக்டர் கடந்த இரண்டு மாதங்களாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு சீன்களில் வந்து விடுகிறேன். இதுவரை நெகடீவ் வேடங்கள் பற்றி தெரியாமல் இருந்த எனக்கு இப்போதுதான் அதன் அருமை புரிந்திருக்கிறது. ஒரு ஆர்ட்டிஸ்டாக நெகடீவ் வேடம்தான் எனக்கு பிடித்திருக்கிறது.
அதோடு, ராதிகா மேடத்துடன் நடிப்பதால் அவ்வப்போது எனக்கு நடிப்பு பற்றிய டிப்ஸ் கொடுக்கிறார். சில காட்சிகளில் நான் அதிகப்படியாக நடித்தால் இவ்வ ளவு வேண்டாம் என்று நான் எப்படி நடித்தால் சரியாக இருக்கும் என்று சொல்லித்தருகிறார். அது எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது. அதனால் எனது நடிப்பில் எந்தவித குறையும்இல்லாமல் நடித்து வருகிறேன். மேலும், இப்போது எனது கேரக்டர் பெரிதாக ரீச்சாகி வருவதால், மேலும் சில சீரியல் வாய்ப்புகள் வருகிறது. ஆனால் தற்போது நான் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பைனல் இயர் படித்து வருவதால் என்னால் அதிகப்படியான சீரியல்களில் நடிக்க முடியவில்லை. தற்போது எக்சாம் நடந்து வரும் நிலையில், எக்சாம் முடிந்ததும் கோவையில் இருந்து சென்னையில் குடியேறப்போகிறேன். அதன்பிறகு அதிகப்படியான சீரியல்களில் நடிப்பேன் என்கிறார் ஸ்ருதி.
நன்றி: தினதந்தி
-
11th April 2017, 10:00 PM
#436
Moderator
Diamond Hubber
ரம்யாகிருஷ்ணன், ஸ்ரேயாரெட்டிக்கு பிறகு நான்தான்! -சொல்கிறார் மைனா சூசன்
பிரபுசாலமன் இயக்கத்தில் விதார்த்-அமலாபால் நடித்த படம் மைனா. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்த தம்பி ராமைய்யாவுக்கு தேசிய விருது கிடைத்து. மேலும், இந்த படத்தில் அதிரடியான வில்லியாக நடித்தவர் சூசன். அந்த படத்தில் அவரது வில்லி வேடம் பெரிய அளவில் ரீச் ஆனது. முக்கியமாக, வெளியிடங்களில் சூசனை பார்க்கும் ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்தனர். அப்படியொரு கொடூரமான வில்லியாக நடித்தார் சூசன். அதை யடுத்து பல படங்களில் நடித்த அவர், தற்போது சின்ட்ரெல்லா என்ற படத்தில் மீண்டும் ஒரு அதிரடி வில்லியாக உருவெடுத்துள்ளார். முண்டாசுப்பட்டி ராம் குமார் இயக்கும் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் சூசன்.
இதுபற்றி சூசன் கூறுகையில், மைனா படம் எனக்கு மிகப்பெரிய ரீச் கொடுத் தது. பல பாசிட்டீவ் வேடங்களில் நடித்தபோது கிடைக்காத ரீச் ஒரேயொரு நெகடீவ் வேடத்தில் கிடைத்தது. அந்த வேடம்தான் என்மீது வெளிச்சம் பாய்ச்சியது. அதையடுத்து கவனிக்கப்படும் நடிகையான நான், பல படங்களில் நடித் தேன். ஆனால் இப்போது முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கும் சின்ட்ரெல்லா படத்தில் மைனாவை மிஞ்சும் ஒரு அதிரடியான வில்லியாக நடித்து வருகிறேன். அதனால் மைனா படத்தை விட இந்தபடம் திரைக்கு வரும்போது ரசிகர்களிடம் இன்னும் அதிகமான திட்டு வாங்கப்போகிறேன்.
மேலும், படையப்பா ரம்யா கிருஷ்ணன், திமிறு ஸ்ரேயா ரெட்டி ஆகியோர்தான் எனது ரோல் மாடல். நான் நிஜத்தில் சாப்ட்டான கேரக்டர்தான். ஆனால் கோபம் வந்தால் பயங்கரமாக மாறி விடுவேன். அதைத்தான் எனது வில்லி நடிப்பில் வெளிப்படுத்தி வருகிறேன். என்னைத்தேடி பல வேடங்கள் வந்தாலும் வில்லிக்குத்தான் முதலிடம் கொடுக்கிறேன். ரம்யா கிருஷ்ணன், ஸ்ரேயாரெட்டிக்குப்பிறகு மைனா சூசன்தான் என்று சொல்லப்படும் அளவுக்கு அதிரடியான நெகடீவ் வேடங்களை எதிர்பார்க்கிறேன். தற்போது சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்கிறேன். என்றாலும் சினிமாவுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறேன். தவிர தெலுங் கிலும் சில படங்களில் நடிக்கிறேன் என்று கூறும் சூசன், இந்த 2017ம் ஆண்டு என்னை அதிரடி வில்லி நடிகை பட்டியலில் சேர்த்து விடும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.
நன்றி: தினதந்தி
-
11th April 2017, 10:01 PM
#437
Moderator
Diamond Hubber
தமிழ் சீரியலுக்கு வரத் துடிக்கும் வரதா
சுல்தான், மகன்டே அச்சன், உத்தரா ஸ்வயம்வரம் உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்தவர் வரதா. சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது மலையாள சின்னத்திரையின் முன்னணி நடிகையாகிவிட்டார். மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான அமலா என்ற தொடர் அவருக்கு சின்னத்திரையில் பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது பிரணயம் தொடரில் நடித்து வருகிறார்.
என்றாலும் வரதாவிற்கு தமிழ் சீரியலில் நடிக்க வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. இதற்கு முன் அவர் காதலிக்கலாமா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். இதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார்.
"சினிமா வாய்ப்பு நன்றாக கிடைத்தபோதே சின்னத்திரைக்கு வந்தேன். அது எனக்கு பிடித்திருந்தது. தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசை எப்போதும் உண்டு. சில முயற்சிகள் சரியாக அமையவில்லை. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சின்னத்திரையாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் ஓகே" என்கிறார் வரதா.
நன்றி: தினதந்தி
-
11th April 2017, 10:03 PM
#438
Moderator
Diamond Hubber
கன்னட சீரியல்களில் தமிழன் போய் நடிக்க முடியுமா?- நடிகர் அசோக் கேள்வி
சின்னத்திரைகளில் நூற்றுக்கணக்கான சீரியல்களில் நடித்தவர் அசோக். டப்பிங் சீரியல்களின் ஆதிக்கத்தினால் தமிழ் சீரியல்களில் நடிப்பவர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லை. இந்தநிலையில், தமிழில் உருவாகி வரும் சீரியல்களுக்கு சமீபகாலமாக வேற்று மொழி நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து வருகிறார்கள். இதனால் தமிழ் சீரியல் நடிகர் நடிகைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது என்கிறார் அவர்.
அதுகுறித்து தினமலர் இணையதளத்திற்கு நடிகர் அசோக் அளித்த பேட்டியில்,
தமிழ் சீரியல்களை நம்பி ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் நடிக்க போதுமான வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில், மொழியே தெரியாத புது ஆர்ட்டிஸ்டுகளை கொண்டு வந்து நடிக்க வைக்கிறார்கள். ஆனால் அது டப்பிங் சீரியல் மாதிரி உள்ளது. டப்பிங் சீரியல்களை ஒழிக்கனும்னு போராடிக்கிட்டிருக்கோம். இப்ப என்னடான்னா தமிழ் சீரியலே டப்பிங் சீரியல் மாதிரி மாறிக்கிட்டிருக்கு. இங்கே இருக்கிறவங்களுக்கே வேலை இல்லை. தமிழ் சீரியல்களில் தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகர் நடி கை களை கூட்டி வந்து நடிக்க வைக்கிறார்கள்.
சினிமா மாதிரி புதுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆடியன்ஸ் அதை விரும்பவில்லை. என்கிட்டயே ஒரு மிடில் கிளாஸ் லேடி சொன்னார்கள். தெரிஞ்ச முகம் இருந்தால்தான் சீரியல் பார்க்க நல்லாயிருக்கும். இப்ப புதுசு புதுசாக நடிகர்கள் நடிக்கிறதனால டப்பிங் சீரியல் பார்த்த மாதிரிதான் இருக்கு என்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், சேனல்களில் அந்த மாதிரி கேட்கிறாங்க என்கிறார்கள். எது உண்மைன்னு தெரியல.
மேலும், தமிழே தெரியாதவர்கள் தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமல் பேசி நடிக்கிறார்கள். எங்களை மாதிரி பழைய ஆர்ட்டிஸ்டுங்களை மட்டுமே நடிக்க வையிங்கன்னு நாங்க சொல்ல வரல. நல்லா தமிழ் தெரிஞ்ச தமிழ் நடிகர் நடிகைங்களை நடிக்க வைக்கலாமே. கன்னட மொழி சீரியல்களில் தமிழன் போய் நடிக்க முடியுமா? அவங்க மாநிலத்தில் உள்ளவர்கள்தான் நடிக்க முடியும். இது ஏன் இங்க இருக்கிறவங்களுக்கு புரிய மாட்டேங்குது என்று தனது மன ஆதங்கத்தை சொல்கிறார் நடிகர் அசோக்.
நன்றி: தினதந்தி
-
10th May 2017, 05:53 AM
#439
Moderator
Diamond Hubber
பேஷன் டிசைனராகும் தொகுப்பாளினி மகேஸ்வரி
ஜீ தமிழ் சேனலில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மகேஸ்வரி. இவருக்கு ஃபேஷன் டிசைனராகி சென்னையில் ஒரு ஸ்டோர் திறக்க வேண்டும் என்பதுதான் எதிர்கால ஆசையாம். அதனால் தற்போது ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் பயின்று வருகிறார். இதுகுறித்து தொகுப்பாளினி மகேஸ்வரி தினமலர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...
சின்னத்திரையில் தொகுப்பாளினி, நடிகை என செயல்பட்டு வரும் எனக்கு, எதிர்காலத்தில் பிஸ்னஸ் பண்ணலாம் என்ற ஐடியா உள்ளது. அதனால் இப்போது ஃபேஷன் டிசைனிங் பயின்று வருகிறேன். சென்னையில் ஒரு சின்ன ஸ்டோர் ஓப்பன் பண்ணும் ஐடியா உள்ளது. எனக்கு அதில் ஆர்வம் என்பதோடு, பீல்டில் இருப்பவர்களுக்கே டிசைன் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்போது நான் பங்கும் பெறும் நிகழ்ச்சிகளுக்கு தேவையான டிசைன்களை எனது அக்கா லேகா பண்ணி தருகிறார். அவர் ஏற்கனவே இந்த கோர்ஸ் முடித்து டிசைனிங் பண்ணி வருகிறார். அடுத்து நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து டிசைனிங் பண்ண திட்டமிட்டிருக்கிறோம். சின்னத்திரை மட்டுமின்றி சினிமாப் படங்களுக்கும் காஸ்டியூம் டிசைனிங் பண்ணிக்கொடுக்கும் ஐடியா உள்ளது.
மேலும், தற்போது நான் பங்குபெற்றுள்ள ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளர்களுக்கு நல்ல சுதந்திரம் கொடுக்கிறார்கள். குறிப்பாக, இப்போது நாங்கள் நடத்தும் ஷோக்களுக்கு ஸ்கிரிப்டெல்லாம் கிடையாது. வரும் விஐபிக்களைப் பொறுத்து நாங்களே பேசி விடுகிறோம். அது நல்ல இயல்பாகவும் இருக்கிறது. இயக்குனர்களும் இப்படித்தான் பண்ண வேண்டும் என்று சொல்லாமல், எங்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கிறார்கள். அதனால்தான் எங்களால் நினைத்தபடி பேச முடிக்கிறது. முன்பெல்லாம் இயக்குனர்கள் சொல்வதைத்தான் செய்கிற மாதிரி இருந்தது. இப்போது அது மாறி வருகிறது.
அதோடு, சினிமாவிலும் நல்ல வேடங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. தோழி, அக்கா, தங்கச்சி என நாலு சீனில் வந்தாலும் அந்த கேரக்டர் மனதில் நிற்கிற மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குறிப்பாக, ப.பாண்டியில் திவ்யதர்ஷினி நடிச்ச மாதிரி கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன் என்கிறார் மகேஸ்வரி.
நன்றி: தினதந்தி
-
10th May 2017, 05:55 AM
#440
Moderator
Diamond Hubber
சீரியல்களில் ஹீரோவாக கலக்கும் தங்கவேலு பேரன்
பழம்பெரும் காமெடி நடிகர்கள் நாகேஷ், ஜசரி கணேஷ் ஆகியோரது பேரன்கள் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போது டனால் தங்கவேலுவின் பேரன் அஸ்வின் குமார் மட்டும் சினிமா பக்கம் கரை ஒதுங்காமல் சீரியல்களில் ஹீரோவாக நடிக்கிறார்.
ஆரம்பத்தில் அஸ்வினும் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார் ஆனாலும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அஸ்வின் அம்மாவும், ராதிகாவும் நெருங்கிய தோழிகள். ஒரு நாள் அஸ்வின் அம்மா ராதிகாவிடம் மகன் சினிமா வாய்ப்பு தேடி அலைவதை பற்றிக் கூறியிருக்கிறார். முதலில் சின்னத்திரை சீரியலில் நடித்து பயிற்சி எடுக்கட்டும் அதன்பிறகு சினிமாவில் நடிக்கலாம் என்று கூற ராதிகாவின் சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தவர் நிரந்தரமாகவே சீரியலில் தங்கிவிட்டார்.
தற்போது லட்சுமி கல்யாணம் தொடரில் ஹீரோவாக நடிக்கிறார். டைட்டில் கேரக்டரான கல்யாண் கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா நடிக்கிறார். அடுத்து தாமரை சீரியலில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நீலிமா நடிக்கிறார். "சினிமா ஆசை இருந்தது உண்மைதான். இப்போது சீரியல்களில் மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் நடித்து வருகிறேன். தினமும் ஒரு புதிய விஷயத்தை கற்றுத் தருகிறது சின்னத்திரை" என்கிறார் அஸ்வின். தான் தங்குவேலுவின் பேரன் என்பதை யாரிடமும் சொல்லிக் கொள்ளாததும், காட்டிக் கொள்ளாததும் அஸ்வின் ஸ்பெஷல்.
நன்றி: தினதந்தி
Bookmarks