கடந்த ஞாயிறன்று ntfans சார்பில் நடைபெற்ற ""செல்வம் "" திரை காவியத்தின் சீரிய விழா குறித்து நமது முரளி சார் அவர்களின் நேர்த்தியான நேர்முக வர்ணணைக்காக எதிர்நோக்கியிருக்கிறோம்.
நடிகர்திலகத்தின் மிக மிக சிறப்பான காதல்காட்சிகளாக நான் கருத்துபவை,
1)வசந்த மாளிகை ஆதிவாசி குடில் காட்சி.
2)சிவகாமியின் செல்வனின் எத்தனை அழகு.
3)சுமதி என் சுந்தரியில் பலூன் காட்சி.
4)இரும்புத்திரையில் நதியோர உரையாடல்.
5)அன்னை இல்லத்தின் மடிமீது தலை வைத்து.
6)சிவந்த மண்ணின் ஒருநாளில் உருவானதே
7)நவராத்திரி ஆனந்தன் -நளினா .
8)அண்ணன் ஒரு கோவில் நாலு பக்கம் வேடருண்டு
9)புதையல் துரை -பரிமளா காட்சிகள்.
10)ராஜா-ராணி காட்சிகள்.
இதில் கடைசி ஐந்தை நான் வேண்டிய மட்டும் அலசி துவைத்து பிழிந்து விட்டதால் முதல் ஐந்தை பார்ப்போம். (வாசு நீ முணுமுணுப்பது கேட்கிறது, எத்தனை அழகில் நடிகர்திலகத்தை விட அதிகம் பிழிந்து விடவில்லையா என்று.எத்தனை பிழிந்தாலும் காமசாறு வழிந்தோடும் அதனை மீண்டும் எடுக்கத்தான் எடுப்பேன்.)
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
இந்தக் காட்சிக்கு உயிரோட்டமான, உணர்வு பூர்வமான பின்னணி இசையமைத்த திரை இசைத் திலகத்தைப் பற்றிச் சொல்லாமல் விட்டு விட்டீர்களே,
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
அவனோ செல்வம் தந்த சுகத்தில் திளைத்து கரைகண்டவன். இழந்த பாசத்தை மீட்டு இதமாக வாழ துடிப்பவன். ஏழையான ,சுயநல உறவுகளில் களைத்த அவளோ ,காட்டிய அக்கறையால் அக்கரை கண்ட மன்மதனின் மேல் உரிமையான நேசம் உயிர்ப்பதை உணர்ந்தவள். அந்நியத்தன்மை துறந்தவள் . இதன் பின்னணியில் காட்சியில் நுழைவோம்.
அவனுடைய மேலங்கியை அங்கீகரித்தவள் ,தன் மேலாடை துறந்து ஈரம் பிழிவதை ,அந்நியனாக அவன் இருப்பை உணராமல் இயல்பாக செய்வாள் ,அவன் மேல் நம்பிக்கை,
அவனோ காமம் காட்டிய வழியெல்லாம் சென்று கடனுக்காக காமம் பெற்றவன்.காதலுக்காக காமம் யாசிப்பதை தவறாக யோசியாதவன். அலையும் கதவுக்கு தாழ்ப்பாளிடுபவன்,அலையும் மனதை சிறிதே கட்டுக்குள் வைப்பான். காதலின் காமம் கவர்ந்து பெறுவதில்லை.கனிந்து பெறுவதாயிற்றே.அவனோ அவசர காமுகன்.ஆனாலும் காதலுற்ற காமுகன்.
அந்த பார்வையில் தான் கண்ட உன்னத கனியை சுவைக்கும் ,தனிமையும்,ஈரமும்,வாடையும்,உரிமையும் தந்த உயிர்ப்பால் பார்வை திரிந்தாலும் ,பதிந்தாலும், சுவைத்து கடிப்பதென்னவோ வயிற்று பசி தீர்க்கும் கனியை. நமக்கு கொடுப்பதென்னவோ அவன் சுவைக்க விரும்பிய கன்னியின் கனியின் சுவையை.கண்டதை சுவைத்து களித்தவனுக்கு, தான் சற்று முன் கண்டதை உரிமையுடன் கடித்து சுவைக்கும் உன்மத்த நினைவு.
இதன் பின்னணி இசையை கவனியுங்கள். வயலின், வீணை, மோர்சிங் என்ற மூன்றே மூன்று. இதமாக மெல்லிய காமம் படரும் உணர்வு. முதலில் மழையை போன்று இதம் தந்து மனதில் காதல் தீயை மூட்டி, மெல்லிய காமத்துடன் பயணம் செய்யும். காதுகளை பதம் பார்க்காமல் திரை இசை திலகம் தந்த இசை, காட்சியுடன் இசைந்து,மனத்தை பிசைந்து மெல்லியதாக்கும்.
மனதின் நெருப்பை புகை போட்டு இதமாக்க அவன் நாடுவது தீக்குச்சியை அல்ல (அதைத்தான் உறியவள் சிற்றுந்தியிலேயே காற்றையும் மீறி அளித்து விட்டாளே )எரியும் கொள்ளியை , அதில் புகை பற்றுவது ,மனத்தை சொல்லி விடாதா ,அது லேசான தீயா?
உரியவளோ நாணத்தால் விலகி நிற்க, மனத்தின் திண்மையை,தன்மையை,தண்மையை ,ஆண்மையை அண்மையாய் அளிக்கும் நோக்கில் ,சீட்டியொலி போல உஸ் என்று ,வாயேன் இங்கே , என்று கண் சாடை காட்டி , பசிக்குதா ,குளிருதா ,வேறே எப்படி என்று பெண்மையின் ஆழம் காண முயலும் அற்புத காட்சி.
பெண்மையின் உரிமை கலந்த நாணம், அழைப்புக்கு உளம் கனிந்தாலும் ,உடலால் சற்றே கூசி விலகும் பெண்மை,அழைப்பை ஏற்று அப்பாவியாய் நடிக்கும் பாவம் , ஏற்று கொண்டதை சொல்லும் மௌனம் என அப்பெண்ணின் உணர்வுகள் ,ஆணுக்கு ஈடாய் புரியும் ரசாயன விந்தை.
கண்டு மகிழுங்கள்.தமிழின் மிக சிறந்த காமம் தோய்த்த கவிதை.
Bookmarks