-
23rd September 2016, 07:16 AM
#571
Moderator
Diamond Hubber
செய்தி வாசிப்பாளர்களுக்கு விருந்து கொடுத்த பாத்திமா பாபு

ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்தவர் பாத்திமா பாபு. செய்தி எப்படி இருந்தாலும் இவர் முகத்தை பார்ப்பதற்கென்றே அன்று செய்தியை பார்த்தவர்கள் இருக்கிறார்கள். தனித்தன்மை வாய்ந்த உச்சரிப்பும், செய்திக்கேற்ற புருவ அசையும் பாத்திமாவின் தனித்தன்மை. அவரைப் பற்றி அப்போது பரபரப்பாக வதந்தி கிளம்பி பின்னர் அடங்கும்.
ஒரு காலத்தில் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்றவர் பின்னர் நடித்தார். தற்போது செய்தி வாசிப்பிலிருந்தும், நடிப்பிலிருந்தும் விலகி இருக்கும் பாத்திமா பாபு. அ.தி.மு.கவில் இணைந்து அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
தற்போது செய்தி சேனல்கள் பெருகிவிட்டது. புதிது புதிதாக செய்தி வாசிப்பாளர்கள் வந்து விட்டார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி ஸ்டைலுடன் செய்தி வாசிக்கிறார்கள். இந்த இளம் செய்தி வாசிப்பாளர்களுக்கு விருந்து கொடுத்து கவுரவிக்க விரும்பிய பாத்திமா பாபு, அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார். அப்போது தனது செய்தி வாசிப்பு அனுபங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதில் அனைத்து செய்தி சேனல்களையும் சேர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமலர்
-
23rd September 2016 07:16 AM
# ADS
Circuit advertisement
-
23rd September 2016, 07:26 AM
#572
Moderator
Diamond Hubber
விழா தொகுப்பாளினி ஆனார் நிவேதிதா
சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அத்தனை தொகுப்பாளினிகளுக்கும் பொது விழாக்களில் தொகுப்பாளினியாகவேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். காரணம் அதில் விளம்பர வெளிச்சமும் அதிகம், சம்பளமும் அதிகம், பலரின் அறிமுகமும் கிடைக்கும். அந்த வசையில் செந்தமிழ் பெண்ணே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிவேதிதாவுக்கு அடித்தது பெரிய அதிர்ஷ்டம்.
சமீபத்தில் பிரமாண்டமாக நடந்த விளம்பரத்துறைக்கான டி.அவா£ட் நிகழ்ச்சியை அசாருடன் இணைந்து தொகுத்து வழங்கினார். நிவேதிதாவின் நுனிநாக்கு ஆங்கிலமும், டைமிங் சென்சும் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த திவ்யதர்ஷினி நிவேதிதாவை கட்டிப்பிடித்து பாராட்டினார். பிலிம்ஃபேர் அவார்ட் மாதிரியான பெரிய நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலக்க வேண்டும் என்பதே நிவேதிதாவின் ஆசையாம்.
நன்றி: தினமலர்
-
28th September 2016, 08:06 PM
#573
Moderator
Diamond Hubber
பர்சனல் பற்றி பேச மறுக்கும் தொகுப்பாளினி ரம்யா!
பெப்ஸி உமாவுக்கு பிறகு பேசப்படும் சில இளையதலைமுறை தொகுப்பாளினிகளில் ரம்யா குறிப்பிடத்தக்கவர். மொழி மற்றும் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். சேனல்கள் தவிர பல விழாக்களிலும் தொகுப்பாளினியாக பங்கேற்று தனது கலகலப்பான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
மேலும், 2014ல் அபராஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்யா, ஒரே வருடத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதோடு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில், யாராவது மீடியாவினர் தான் தாய் வீட்டில் வாழ்ந்து வருவது பற்றி கேட்டால், மீடியாவின் நான் பங்கேற்று வரும் நிகழ்ச்சிகள் பற்றி கேளுங்கள் சொல்கிறேன். ஆனால் சொந்த விசயம் பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார் ரம்யா.
நன்றி: தினமலர்
-
28th September 2016, 08:09 PM
#574
Moderator
Diamond Hubber
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் ராதிகா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 17ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இது மற்ற நடன நிகழ்ச்சிகளிலிருந்து வித்தியாசமானது. வெற்றி பெறுபவர்களுடன் நடிகைகள் இணைந்து ஆட இருக்கிறார்கள். இதற்கான போட்டியாளர்கள் தமிழ்நாடு முழுவதிலிமிருந்து தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களுடன் நடனமாட பியா, அனுயா, சாண்ட்ரா, மிஷா கோஷல் உள்ளிட்ட நடிகைகள் தயாராக இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முதலில் நடிகை ராதிகாவும், சினேகாவும் நடுவர்களாக பணியாற்றுவார்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. தற்போது ராதிகா நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கு பதிலாக நடிகை சுதா சந்திரன் இணைந்துள்ளார். கூடுதலாக கவுதமியும் நடுவராக சேர்ந்துள்ளார்.
ராதிகா விலகியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ராதிகா கேட்ட சம்பளத்தை சேனல் தரத் தயங்கியது ஒரு காரணம். அவரது தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வரும் சேனல் நிர்வாகம் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ஒளிபரப்பாகும் தொடர்கள் நிறுத்தப்படும் என்று எச்சரித்ததால் விலக நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. நடுவர்களில் சினேகா மட்டுமே இளம் நடிகை என்பதால் அவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
-
28th September 2016, 08:13 PM
#575
Moderator
Diamond Hubber
ஹீரோவானார் டி.வி தொகுப்பாளர்
சந்தானம், சிவகார்த்திகேயன், மா.பா.கா.ஆனந்த் வரிசையில் ஹீரோவாகிவிட்டார் தொகுப்பாளர் சஞ்சய். மியூசில் சேனலில் நேயர்களோடு கடலை போட்டுக்கொண்டிருந்தவர் மியாவ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவர். ஹீரோவானது பற்றி அவர் கூறியதாவது:
எனக்கு சின்ன வயசுலேர்ந்தே சினிமால நடிக்கணும்னு தான் ஆசை. ஆனா படிச்சது ஹோட்டல் மேனேஜ்மெண்ட். முடிச்சுட்டு செஃப்பா வேலை பார்த்துட்டு இருந்தப்ப நடிக்க சான்ஸ் கேட்டு ஒவ்வொரு ஆபிஸா ஏறி இறங்கினேன். நான்கு ஆண்டுகள் அப்படியே போனது. எந்த வழியில உள்ளே போறதுனு தெரியாம சேனல்ல ட்ரை பண்ணலாம்னு அந்த முயற்சிகள்ல ஈடுபட்டேன். மியூசிக் சேனல் தொகுப்பாளராகிவிட்டேன். விஜேங்ற அடையாளம் தான் என்னை ஹீரோவாக்கியது.
சில படங்கள்ல பேசிக்கிட்டு இருக்கேன். லீட் ரோல்ஸ் பண்ணனும். இல்லைன்னா பெரிய ஹீரோக்கள் படங்கள்ல சப்போர்டிவ் ரோல் பண்ணனும். பிடிச்ச கேரக்டர் தான் பண்ணனும்னு உறுதியா இருக்கேன். என்கிறார் சஞ்சய்.
நன்றி: தினமலர்
-
28th September 2016, 08:16 PM
#576
Moderator
Diamond Hubber
சீரியல் தயாரிப்பாளரானார் சரத்குமார்
கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சரத்குமார், பத்து படங்களுக்குமேல் வில்லனாக நடித்துவிட்டு அதன் பிறகு நம்ம ஊரு மாரியம்மா படத்தின் மூலம் ஹீரோவானர். சேரன் பாண்டியன் அடையாளம் கொடுத்தது, இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அரசியலுக்கு சென்ற சரத்குமார், தி.மு.கவில் இணைந்து பாரளுமன்ற உறுப்பினர் ஆனார். பின்பு தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 9 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடைசியாக தலைவராக இருந்தார்.
இப்படி ஏறுமுகமாக இருந்த சரத்குமாரின் வாழ்க்கையில் சமீபகாலமா சற்று சரிவு. பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நடிகர் சங்க தேர்தலில் தோற்றார். சட்டமன்ற தேர்தலிலும் தோற்றார். இப்போது நடிகர் சங்க ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார். தற்போது ஹீரோ ஆசையை விட்டுவிட்டு குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிகர் சங்கத்திலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அரசியலிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.
இந்த நிலையில் சரத்குமார் அடுத்த அவதாரமாக சீரியல் தயாரிப்பாளராகியிருக்கிறார். இதற்காக தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அவர் முதலில் தயாரிக்கப்போகும் தொடருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பல சின்னத்திரை சீரியல்களை தயாரித்த அனுபவம் மிக்க சுந்தர்.கே.விஜயன் இயக்குகிறார்.
இளசுகளின் காதலை மையப்படுத்தி உருவாக இருக்கும் இந்த தொடரில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. சீரியல் தயாரிப்புக்காக விஜய் டி.வியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் சரத்குமார். ஒரே நேரத்தில் பல தொடர்களை தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.
மனைவி ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுனமான ரேடான் நிறுவனத்திடமிருந்து தனித்த இந்த நிறுவனம் இயங்கும் என்று கூறப்படுகிறது. சரத்குமார் சின்னத்திரைக்கு புதியவர் அல்ல. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்தியவர் "நான் ரெடி நீங்க ரெடியா" என்ற அவரது வசனம் புகழ்பெற்றது. இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
நன்றி: தினமலர்
-
28th September 2016, 08:18 PM
#577
Moderator
Diamond Hubber
மீண்டும் மலையாள சீரியலில் நடிக்கிறார் சந்திரா
பாசமலர் தொடரில் நடித்து வருகிறவர் சந்திரா லக்ஷ்மண். இந்த தொடர் மூலம் பெண்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர். ஆயிரம் எபிசோட்களிலும் வந்த ஒரே நடிகை என்ற பெயரும் சந்திராவுக்கு உண்டு.
சந்திராவுக்கு தனது தாய்மொழியான மலையாள சீரியல்களில் நடிக்கும் ஆர்வம் எப்போதும் உண்டு. 7 வருடங்களுக்கு முன்பு மழையறியாதே என்ற மலையாள தொடரில் நடித்தார். மேலும் சில தொடர்களிலும் நடித்துள்ளார். பாசமலருக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் மலையாள தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் அதுபற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட இருக்கிறது. "மலையாள தொடர்களின் கதைகள் ஆழமாக இருக்கும். நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கும். அதனால்தான் மலையாள சீரியல்கள் மிகவும் பிடிக்கும்". என்கிறார் சந்திரா லக்ஷ்மண்.
நன்றி: தினமலர்
-
28th September 2016, 08:23 PM
#578
Moderator
Diamond Hubber
நச்சுன்னு கேள்வி கேட்டால் விஜய் சேதுபதியை சந்திக்கலாம்; ஜீ தமிழ் சேனல் ஏற்பாடு
ஜீ தமிழ் சேனல் புதிய நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. முன்னணி நட்சத்திரங்களை நோக்கி ரசிகர்களுக்கு நிறைய கேள்வி இருக்கும். அந்த கேள்விகளை ஜீ தமிழ் சேனல் டுவிட்டரில் கேட்க வேண்டும். நச்சுன்னு கேள்வி கேட்டவர்களை தேர்வு செய்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து சம்பந்தப்பட்ட நடிகரை, நடிகையை நேரில் சந்திக்க வைத்து, இன்னும் பல கேள்விகள் கேட்க வைத்து அதையே ஒரு நிகழ்ச்சியாக தயாரித்து ஒளிபரப்ப இருக்கிறார்கள். அதேபோல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபல நடிகர்களின் வசனத்தை டப்மாஸாக பேசி அனுப்பியும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
இந்த நிகழ்சியின் முதல் செலிபிரிட்டி விஜய் சேதுபதி. அவரிடம் கேள்விகளை டுவிட்டர் மூலம் இப்போதே கேட்கலாம். தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் விஜய் சேதுபதியை சந்திக்கலாம். நேரில் இன்னும் பல கேள்விகளை கேட்கலாம். டி.வியிலும் தோன்றலாம்.
நன்றி: தினமலர்
-
7th October 2016, 05:01 AM
#579
Moderator
Diamond Hubber
அம்மா கணக்கு, விசாரணை: விஜய் டி.வியின் ஆயுத பூஜை விருந்து.
வெற்றி மாறன் இயக்கி பல வெற்றியையும் விருதுகளையும் அறுவடை செய்த படம் விசாரணை. அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசை, ஆர்.ராமலிங்கம் ஒளிப்பதிவு. சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்த படம்.
போலீசின் விசாரணை வளையத்துக்குள் சிக்கும் அப்பாவிகளின் துயரத்தை வலியும், ரத்தமுமாய் சொன்ன படம். வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் 6 மாதங்களுக்கு பிறகு விஜய் டி.வியில் ஆயுதப பூஜை விருந்தாக வருகிற 10ந் தேதி பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நில் பட்டே சனட்டா. அஸ்வின் அய்யர் திவாரி இயக்கிய இந்தப் படம் அப்படியே தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அஸ்வின் அய்யர் திவாரியே இயக்கினார். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்தது. அமலா பால், ரேவதி, சமுத்திரகனியுடன் யுவலட்சுமி நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார், கவுமிக் யு அரி ஒளிப்பதிவு செய்திருந்தார். படிப்பு மீது அக்கறை இல்லாத மகளை படிக்க வைக்க தானே மாணவியாக மாறி பள்ளிக்குச் செல்லும் ஒரு தாயின் கதை. அமலாபால் மற்றும் யுவலட்சுமியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட படம்.
கடந்த ஜுன் மாதம் வெளிவந்த இந்தப் படம், வெளிவந்து 3 மாதங்கள் ஆன நிலையில் சின்னத்திரைக்கு வந்து விட்டது. வருகிற 11ந் தேதி அன்று விஜயதசமி பூஜையை முன்னிட்டு விஜய் டி.வி. அம்மா கணக்கு படத்தை பகல் 12 மணிக்கு ஒளிபரப்புகிறது. திரையரங்கில் தவறவிட்ட ஒவ்வொரு அம்மாக்களும் காண வேண்டிய படம்.
நன்றி: தினமலர்
-
7th October 2016, 05:03 AM
#580
Moderator
Diamond Hubber
சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் மகேஸ்வரி
புதுக்கவிதை, தாயுமானவன் தொடர்களின் நாயகி மகேஸ்வரி. அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களையும், பெண்களையும் டி.வி.முன் கட்டிப்போட்டவர். புகழின் உச்சியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகியிருக்கும் நிலையில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், சீரியலில் அல்ல சினிமாவில்.
மகேஸ்வரிக்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை. கணவரை பிரிந்து வாழ்க்கிறார். இந்த நிலையில் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்து தண்ணீர் தண்ணீர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்/
சீரியலில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் சீரியலில் நடிப்பது சினிமா வாய்ப்புக்கு பாதகமாக இருக்கும் என்பதால் சீரியலில் நடிப்பதை தவிர்த்து விட்டார். ஆனால் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் தொடர முடிவு செய்திருக்கிறார்.
நன்றி: தினமலர்
Bookmarks