-
18th August 2016, 12:59 AM
#561
Moderator
Diamond Hubber
டப்பிங் சீரியல்களால் கலாச்சாரம் அழிகிறது: சின்னத்தரை கலைஞர்கள் போராட்ட அறிவிப்பு
தமிழ் சேனல்களில் கடந்த சில வருடங்களாகவே இந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியிலும் சேனல் வைத்திருக்கும் விஜய், ஜீ தொலைக்காட்சிகள் இதனை ஆரம்பித்து வைத்தது, அதன் பிறகு பாலிமர், ராஜ், வசந்த், ஜெயா என அனைத்து சேனல்களும் டப்பிங் சீரியலுக்கு தாவியது. எந்தக் காலத்திலும் டப்பிங் சீரியலை ஒளிபரப்ப மாட்டோம் அது எங்கள் இமேஜை பாதிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த சேனல்கள்கூட இப்போது டப்பிங் சீரியலை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
இதனால் நேரடி தமிழ் சீரியல்கள் வெகுவாக குறைந்து நடிகர், நடிகைள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டப்பிங் சீரியல்களுக்கு எதிராக போராட்டம் நடத்த சின்னத்திரை கலைஞர்கள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் தளபதி கூறியதாவது: மொழிமாற்று தொடர்களால் தமிழ் தொலைக்காட்சியை நம்பி வாழும் சின்னத்திரை கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுக்க அறவழி விழிப்புணர்ச்சி போராட்டம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது. இதில் சின்னத்தரையின் அனைத்து சங்கத்தினரும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
அன்று முதல் இன்று வரை சின்னத்திரை சீரியல்களை விரும்பி பார்ப்பதே பெண்கள்தான் அவர்கள் தற்போது இந்தி சீரியல்களில் வரும் பெண்களின் ஆடைகள் முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் ரசனை நம் கலாச்சாரத்தைவிட்டு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. நம் கலாச்சாரத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து வேட்டையும் நடத்தவிருக்கிறோம். சின்னத்திரை முதல் பெரிய திரை வரை உள்ள அனைத்து சங்கங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் கையெழுத்து வாங்கி அதை தமிழக முதல்வரிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் . என்றார் தளபதி
நன்றி: தினமலர்
கலாச்சாரத்தை வளர்கிறவங்க கூறுகிறாங்க ;;
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறதாம்...
-
18th August 2016 12:59 AM
# ADS
Circuit advertisement
-
24th August 2016, 06:40 AM
#562
Moderator
Diamond Hubber
ராஜ் டி.வியில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை பலர் புத்தகமாக எழுதியுள்ளனர். அவரது வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சிகள் அவரது குடும்பத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை சிவாஜிராவ் டூ கபாலி என்ற தலைப்பில் ராஜ் டி.வி ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பின்னர் வார நாட்களில் மறு ஒளிபரப்பாகிறது.
இதில் ரஜினியின் குழந்தை பருவம், அவர் மூட்டை தூக்கி சம்பாதித்தது, கண்டக்டராக இருந்தது என்பதில் தொடங்கி கபாலி வரையிலான அவரது வளர்ச்சி காட்சிகளாக சித்தரிக்கப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் அவரது வளர்ச்சி, கடைபிடித்த ஸ்டைல், சந்தித்த வெற்றிகள், தோல்விகள் என அனைத்தும் இடம் பெறுகிறது. அதோடு ரஜினிக்கு நெருக்கமான எஸ்.பி.முத்துராமன், ஏவிஎம் சரவணன், கலைப்புலி தாணு, கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு உள்ளிட்ட அவரது சினிமா நண்பர்கள், தனிப்பட்ட நண்பர்களின் பேட்டிகளும் இதில் இடம்பெறுகிறது.
நன்றி: தினமலர்
-
24th August 2016, 06:42 AM
#563
Moderator
Diamond Hubber
கணவருடன் எந்த பிரச்னையும் இல்லை - திவ்யதர்ஷினி!
பெப்ஸி உமாவுக்கு பிறகு ஏராளமான தொகுப்பாளினிகள் சேனல்களுக்கு வந்த போதும், ஓரிருவர்தான் அதில் பேசப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபகாலமாக முன்னணி வகித்து வருபவர் விஜய் டிவி திவ்யதர்ஷினி. காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தனது கலகலப்பான தொகுப்புகள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று வைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு, விஜய் டிவியில் இருந்து டிடி வெளியேறி விட்டதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் அதையடுத்து அவர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர். ஆனால் தற்போது திவ்யதர்ஷினி-ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது.
ஆனால் இதை திவ்யதர்ஷினிதரப்பு மறுத்துள்ளனர். திவ்யதர்ஷினி கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கிடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. இந்த செய்தியை யாரோ வேண்டுமென்றே பரப்பி விட்டுள்ளனர் என்கிறார்கள்.

நன்றி: தினமலர்
-
24th August 2016, 06:48 AM
#564
Moderator
Diamond Hubber
சரித்திர தொடர் தயாரிக்கும் நடிகை குஷ்பு
பிரபல சினிமா நடிகையான குஷ்பு, கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பின்னர், ஜாக்பாட், பூவா தலையா, சிம்ப்ளி குஷ்பூ, நினைத்தாலே இனிக்கும் போன்ற நிகழ்ச்சிகளில் சில சேனல்களுக்காக தொகுத்து வழங்கினார். அதோடு, மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி உள்பட பல தொடர்களிலும் நடித்தார்.
இந்நிலையில், அடுத்தபடியாக அவர் ஒரு சரித்திர தொடரை முன்னணி சேனல் ஒன்றுக்காக தயாரிக்கப்போகிறாராம். இந்த சேனலில் நீண்டகாலமாக முக்கிய அங்கம் வகித்து வருபவரான ராதிகா நடிப்பில் தற்போது வாணி ராணி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், அடுத்தபடியாக ராதிகாவுக்கு கொடுக்கப்பட்டு வந்த நேரத்தில், குஷ்புவின் தொடரை ஒளிபரப்பு செய்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாம். அப்படி தான் நடிக்கும் தொடரில் குஷ்பு, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிப்பாளராக மட்டும் செயல்படப்போகிறாராம்.
நன்றி: தினமலர்
-
31st August 2016, 07:34 AM
#565
Moderator
Diamond Hubber
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு புதிய சிக்கல்..!
சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியே அதை திறம்பட நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனால் தான் பிரபலமானது என்பது உண்மை.. தவிர அந்த நிகழ்ச்சியின் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணனும் இன்னும் பிரபலமானார் என்பதும் உண்மை.. ஆனால் அந்த நிகழ்ச்சியை கிண்டலடித்தும், அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் சில வசனங்களை கிண்டலடித்தும் சில மாதங்கள் முன்புவரை ஒரு பெரிய அக்கப்போரே நடந்தது.. தற்போது அவை சற்றே அமுங்கியுள்ள நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வேறுவகையில் பிரச்சனை ஒன்று தலைதூக்கியுள்ளது..
இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை இரண்டு தரப்பினர் பங்கேற்கும்போது, இருவரின் அந்தரங்க உண்மைகள் அம்பலமாவது என்பது எழுதப்படாத விதி. தவிர இதுபற்றி கவலைப்படாதவர்கள் தான் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆனாலும் நீதிபதி (!?) லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும் தீர்ப்பு யாரோ ஒருவருக்குத்தான் சாதகமாக இருக்கிறதே, தவிர மற்றவருக்கு பாதகமாகத்தான் அமைகிறது.. அந்தவகையில் இதில் லேட்டஸ்டாக கலந்துகொண்ட நாகப்பன் என்பவர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில நாட்களிலேயே மன உளைச்சல் தாளாமல் தற்கொலை செய்துகொண்டாராம்..
இதற்கு காரணமாக அவரது உறவினர்கள் குறிப்பிடுவது, சம்பந்தப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தங்களது நாகப்பனை, ஜட்ஜ் பாணியில் லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்பவே அவமானப்படுத்தும் விதமாக, மனதை புண்படுத்தும் விதமாக கேள்விகளை கேட்டு நோகடித்து விட்டார் என்றும், அதனால் அவமானம் தாங்காமல் தான் தங்களது நாகப்பன் தற்கொலை செய்துகொண்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்களாம். இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் மேல் வழக்கு தொடுத்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்களாம்.
நன்றி: தினமலர்
-
8th September 2016, 07:32 PM
#566
Moderator
Diamond Hubber
சின்னதிரைக்கு வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி?
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது கை எண் 150 எனும் தனது 150வது படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக ஈடுபட்டு வரும் சிரஞ்சீவி சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மீலூ எவரு கோடீஸ்வரடு எனும் நிகழ்ச்சியை முதலில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார். இடையில் நிறுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை மீண்டும் சிரஞ்சீவி தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகவல் உறுதிபடுத்தப்பட்டால் சிரஞ்சீவி நடத்தும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுவாகும்.
சிரஞ்சீவியின் 150வது படத்தை அவரது மகன் ராம் சரண் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க கைதி எண் 150 என்ற பெயரில் உருவாகின்றது. காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை விஜயசாந்தி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றாராம்.

நன்றி: தினமலர்
-
8th September 2016, 07:33 PM
#567
Moderator
Diamond Hubber
மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் சரண்யா
புதிய தலைமுறை சேனலில் 4 ஆண்டுகளாக நட்சத்திர செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் சரண்யா. ‛சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது , ‛ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' போன்ற படங்களிலும் நடித்தார். திடீரென லண்டன் சென்றார். அங்கு சில மாதங்கள் இருந்துவிட்டு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார். தற்போது நியூஸ் 18 சேனலில் செய்தியாளராக பணிக்கு சேர்ந்திருக்கிறார்.
தற்போது செய்தியாளராக பணியாற்றினாலும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே சரண்யாவின் விருப்பமாம், இதனால் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது சர்வதேச படவிழாக்களில் நிறைய விருது வாங்கியது. எனக்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. நட்புக்காக அந்தப் படத்தில் நடித்தேன். மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தது. தற்போது தோழிகள் உனக்கு நடிப்பு நன்றாக வருகிறது என்று வற்புறுத்துவதால் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். எனது செய்தியாளர் பணிக்கு பங்கம் வராமல் நல்ல கேரக்டர்கள் வரும்போது நடிப்பேன். மரத்தை சுற்றி டூயட் பாடுகிற சாதாரண ஹீரோயின்கள் கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை. நல்ல அழுத்தமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்கிறார் சரண்யா.
நன்றி: தினமலர்
-
8th September 2016, 07:35 PM
#568
Moderator
Diamond Hubber
தொகுப்பாளினி ஆனார் விஜி சந்திரசேகர்
நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர். கே.பாலச்சந்தர் இயக்கிய தில்லுமுல்லு' படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் பின்னர் சின்னத்திரைக்கு வந்தார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான முப்பது கோடி முகங்கள் தொடர் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பந்தம், வாழப்பிறந்தவர்கள், ஜாதி மல்லி, அலைகள், பெண், அழகி உள்பட 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்தார். ஆரோகணம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது தொகுப்பாளினி என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் உறவைத் தேடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு நேர் எதிர்மாறான நிகழ்ச்சி. ஆண்டுக்கணக்கில் பிரிந்திருக்கும் சொந்தங்களை ஒரே இடத்தில் உட்கார வைத்து பேசி அவர்களுக்குள் இருக்கும் மனவருத்தங்களை போக்கி ஒற்றுமையாக்கி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி.
வருகிற 8ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சி வெற்றி பெற்றால் வார நாட்கள் முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.
நன்றி: தினமலர்
-
8th September 2016, 07:36 PM
#569
Moderator
Diamond Hubber
சினிமா ஹீரோவான சரவணன்-மீனாட்சி கவின்ராஜ்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன்-2வில் நாயகனாக நடித்தவர் கவின் ராஜ். அவர் நடித்த வேட்டையன் என்ற கதாபாத்திரம் பெரிய அளவில் ரீச் ஆனது. அதோடு, கனா காணும் காலங்கள், தாயுமானவன் போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கும் அவர், பீட்சா, இன்று நேற்று நாளை ஆகிய படங்களிலும் சிறிய வேடங்ளில் நடித்தார். தற்போது விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள முடிசூடா மன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் கவின்.
இந்த நிலையில், புதுமுக இயக்குனர் சிவகுமார் இயக்கும் நட்புனா என்னானு தெரியுமா -என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் பீட்சா, சேதுபதி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த ரம்யா நம்பீசன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆக, முதல் படத்திலேயே பிரபல நடிகை கவின்ராஜ்க்கு ஜோடியாக நடிக்கிறார். நட்பை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.
நன்றி: தினமலர்
-
23rd September 2016, 07:09 AM
#570
Moderator
Diamond Hubber
தெலுங்கு சேனலில் வித்யூலேகா ராமன்
தமிழில் வளர்ந்து வரும் காமெடி நடிகை வித்யூலேகா ராமன். பிரபல குணசித்ர நடிகர் மோகன் ராமனின் மகள். நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். விண்னைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் தோழியாக அறிமுகமானவர் இப்போது முக்கியமான காமெடி நடிகை. தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சரளமாக பேசக்கூடியவர் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த மாதத்தின் துவக்கத்தில் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட ஜீ சினிமாலு என்ற சேனலின் பிராண்ட் அம்பாசிடராகியுள்ளார். ஜீ குருப்பின் தெலுங்கு பிரிவின் கீழ் இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மூவீ சேனல். தொடங்கிய வேகத்தில் 60 கோடி ரூபாயில் 30 புதிய தெலுங்கு படங்களின் ஒளிபரப்பு உரிமைய பெற்றுள்ளது. இந்த சேனலில் வித்யூலேகா ராமன் டிராமா ஜுனியர் என்ற நிகழ்ச்சியை முதன் முறையாக தொகுத்து வழங்குகிறார். இது சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. ஜீ சேனல் தனது தென்னிந்திய சேனல் அனைத்திலும் இந்த நிகழ்ச்சியை வெவ்வேறு பெயர்களில் நடத்தி வருகிறது.

நன்றி: தினமலர்
Bookmarks