Page 190 of 400 FirstFirst ... 90140180188189190191192200240290 ... LastLast
Results 1,891 to 1,900 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1891
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
    Likes JamesFague, sivaa, Harrietlgy, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1892
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like


    நினைவு தெரிந்த நாள் முதல்

    நினைவலைகளில் நீக்கமற நிறைந்திருக்கும்

    நிகரற்ற கலைஞனே!

    நெஞ்சிருக்கும் வரை உன்

    நினைவிருக்கும்!


    அன்புடன்

  5. Thanks Gopal.s thanked for this post
  6. #1893
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    nenjurukkumvarai UN NINAIVU IRUKKUM THALAIVA...

  7. Likes JamesFague, Gopal.s liked this post
  8. #1894
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    இரவென்ற ஒன்று
    வந்து விட்டால்
    இருள் சூழ்தல்
    இயல்பு.


    அந்த இருள்
    நிரந்தரமானதல்ல.


    நிலவையோ,
    செயற்கை வெளிச்சங்களையோ,
    அதிகாலைச் சூரியனையோ
    கண்டு
    அரண்டோடுவதுதான்.


    அய்யா...!
    2001-ஜுலை '21 அன்று
    முன்னிரவிலும்
    உங்கள் மறைவுச் செய்தியோடு
    ஒரு இருள் சூழ்ந்தது.


    அந்த இருள்
    நிலவுக்குப்
    பயப்படவில்லை.


    செயற்கை வெளிச்சங்களின்
    அதட்டும் குரலுக்கு
    அந்த இருள்
    அச்சப்படவில்லை.


    அடுத்த நாளில் வந்த
    அதிகாலைச் சூரியனே
    அழுது கொண்டு வந்ததால்
    அதனிடம் பயப்பட
    அவசியமில்லாமல் போயிற்று
    அந்த இருளுக்கு.


    அந்த தினம்-
    வெளிச்சங்கள்,
    இருளுக்குள் கிடந்து
    அழுத தினம்.


    அந்த தினம்-
    புனிதனை மீண்டும்
    பூமிக்குத் தர வேண்டி
    இயற்கையே இறைவனை
    தொழுத தினம்.


    அந்த தினம்-
    மனித உயிர்கள்
    ஒவ்வொன்றுக்குள்ளும்
    எவ்வளவு கண்ணீரிருக்குமென்று
    காலம் கண்டுபிடித்த தினம்.


    அந்த தினம்-
    சிவாஜி வாழும்
    இதயவெளிகளில்
    காலன் குண்டு வெடித்த தினம்.


    அய்யா...!
    கடைசிப் பக்கம் கிழிந்து போன
    மர்மநாவல் போல்
    எங்களைத் தவிக்க விட்டது
    தங்களின் மறைவு.


    நெஞ்சோடு பொருந்தியவர்கள்
    நம்மைப் விட்டுப் பிரிவதை,
    பிரிக்கப்படுவதை
    ஏற்றுக் கொள்ளவே
    முடிவதில்லை.


    எமன் என்று
    ஒரு முரட்டு முட்டாள்
    இருக்கிறான்..
    சாக மாட்டாமல்.


    பூலோகத்தை
    நரகமாக்கி விட்டு
    எங்கள் சொர்க்கத்தை
    திருடிப் போன கிறுக்கன்.


    எதையோ சொல்லி நடித்து
    உங்களை அழைத்துப் போயிருக்கிறான்.
    அந்த எமன்.


    நீங்களே நம்பினீர்களென்றால்
    அவன் பெரிய நடிகன்தான்.


    ஆனால்
    அவனொன்றும்
    சிவாஜியாகி விட முடியாது.


    யாருக்குமே பிடிக்காதவன்
    எப்படி சிவாஜியாக முடியும்?


    எல்லோருக்கும்
    பிடித்தவன்தானே
    சிவாஜியாக முடியும்?


    எல்லோரும் வெறுக்கும்
    எமனாகவும் நடித்து
    ரசிக்க வைக்க
    யாரால் முடியும்...
    உங்களைத் தவிர..?


    பதினைந்து ஆண்டுகளாய்
    அழுது தீர்த்தாலும்
    கண்ணீர் வற்றாத
    பல கோடிக் கண்களைத்
    தனதென்று உரிமை கொள்ள
    யாரால் முடியும்...
    உங்களைத் தவிர..?


    இன்னும்
    பத்துத் தலைமுறைக்குப் பின்னும்
    என்னைப் போல் ஒரு எளியவனைத்
    தன்னைப் பற்றி
    எழுத வைக்க
    யாரால் முடியும்
    உங்களைத் தவிர...?


    பிறப்பு துவங்கி
    நெருப்பு வரைக்கும்
    குழந்தையாகவே இருப்பதற்கு
    யாரால் முடியும்...
    உங்களைத் தவிர..?


    கூட்டுக்கு ஒரு அடுப்பும்,
    குழம்புக்கு ஒரு அடுப்புமாய்
    குடும்பங்கள் சிதறிக் கிடக்கும்
    உலகத்தில்
    கூட்டுக் குடும்பத்தின்
    மகத்துவம் உணர்த்த
    யாரால் முடியும்...
    உங்களைத் தவிர..?


    பெருங்கூட்டம் பின்னே வர
    முன் நடக்க
    நிறையப் பேர் ஆசைப்பட...
    "உன் கடமையைச் செய்
    என் பின்னே வராதே"என
    அன்போடு கடிந்து கொள்ள
    யாரால் முடியும்...
    உங்களைத் தவிர..?


    தான் மலர
    தரையான தாயை
    மழையாகிக் குளிர்விக்க
    யாரால் முடியும்...
    உங்களைத் தவிர..?


    பத்தடி இடைவெளி விட்டே
    மனைவியை வரச் சொல்லும்
    புருஷர்கள் திரியும் பூமியில்,
    மரணப்படும் நொடி வரைக்கும்
    மனைவியைப் பிரியாதிருக்க
    யாரால் முடியும்...
    உங்களைத் தவிர..?


    "என் அரசியல் பொய்யில்லை"
    என்று நெஞ்சு நிமிர்த்திச்
    சொல்வதற்கு
    யாரால் முடியும்...
    உங்களைத் தவிர..?


    சார்த்திய கதவுகள் என்றாலும்
    சாவித்துவாரத்தில்
    கண் பொருத்தும்
    சண்டாள உலகம்
    வெட்கித் தலைகுனிய
    விரியத் திறந்த கதவுகளோடு
    ஒரு "அன்னை இல்லம்"
    எழுப்புவதற்கு
    யாரால் முடியும்...
    உங்களைத் தவிர..?


    எங்களுக்குப் பிரியமான
    ராகமே..!


    எங்களை வாழ்விக்கப்
    பொழிந்த மேகமே..!


    காலம் எழுதிய
    காவியமே..!


    கடவுள் தீட்டிய
    ஓவியமே..!


    கலை என்ற
    மறுபெயர் கொண்ட மனிதனே..!


    கையெடுத்து
    நாங்கள் வணங்கும்
    புனிதனே..!


    உன் நினைவு தினம்
    சொல்லும் நிஜம்...


    உனைத் தினம்
    நினைப்பது கடமை.


    உனக்காக அழுவது பெருமை.

  9. Thanks Harrietlgy thanked for this post
  10. #1895
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like


    ஆண்மைக்கும்,அழகுக்கும்,கம்பீரத்துக்கும் இலக்கணம் கண்டவன்,தமிழ் மொழியின் ஆண்மை மிகு கம்பீரத்தை குரலால் உயர்த்தி சொன்னவனே,மன்னனாக நீ ஆண்டிருந்தால் தமிழகத்தின் தலைவிதி மாறியிருக்குமே ?


    தமிழர்கள் ,தங்கள் தலையில் தானே மண்ணள்ளி போட்டு கொள்ளும் யானைகளாக விளங்கிய படியால் ,இந்த பட்டத்துக்குரிய ஆண்மை யானை போல குலம் அரவணைத்து, சிம்மம் போல ஆளுமை கொண்டு,எருது போல இலக்கை நோக்கி சீறி பாயும் உண்மை தமிழனை கலைக்கு மட்டும் என்று தாரை வார்த்தார்களோ?

    நீ ஆண்டு கொண்டிருக்கிறாய் அனைத்து தமிழர் இதயத்தை. அரசுகள் போகும் வரும். நீ நிரந்தர ஆட்சியாளன்.

    நீ வருடம் ஒரு முறை இந்த நாளில் மட்டும் வந்து ,புண்பட்டு துடிக்கும் எங்கள் மனதை தேற்றி செல்ல கூடாதா?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1896
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆண்டவனை ஆண்டவனே ஆட்கொண்ட தினம் இன்று.

    நான் வணங்கும் ஒரே தெய்வமே!
    என் உயிர் பிரிந்ததும் இதே நாளில்தான்


    Last edited by vasudevan31355; 21st July 2016 at 09:04 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks Russellmai thanked for this post
  13. #1897
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    நீ பிறந்தாய் உலகம் உன்னதமானது
    நீ சிரித்தாய் உலகம் உவகையடைந்தது
    நீ நடந்தாய் உலகம் கர்வப்பட்டது
    நீ அழுதாய் உலகம் அழுது புரண்டது
    நீ பேசினாய் உலகம் அளவளாவி மகிழ்ந்தது
    நீ மறைந்தாய் உலகம் இருண்டு போனது

    அசையும் பொருளை நிற்கவும், நின்ற பொருளை அசையவும் செய்த அசகாய சூரனே!

    மரணம் உன்னை பிரிக்கலாம்
    மனதிலிருந்து பிரிக்க எவரால் இயலும்?

    கண்களில் கண்ணீரையும், பன்னீரையும் ஒருசேர வரவழைக்க உன் ஒருவனால் மட்டும்தானே இயலும்.

    அப்பா.... அம்மா என்று உச்சரித்ததைவிட உன் பெயரைத்தான் அதிகம் உச்சரித்திருக்கிறோம். கோவிலில் தெய்வங்களை பார்த்தத்தைவிட உன்னைத்தானே அதிகம் தரிசித்திருக்கிறோம்.

    மரணத்திற்கு மரணம் நிகழலாம்
    உனக்கேது?
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks Russellmai thanked for this post
  15. #1898
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியுமா எங்கள் மன்னவனை மாற்றத்தான் முடியுமா எங்களை


    Endrum ungal ninaivil



    S Vasudevan

  16. Likes Harrietlgy, sivaa liked this post
  17. #1899
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்துடன் நான்.



    உங்கள் அருகே உங்களுக்கு நிகராக எனக்கு சரியாசனம் தந்து, உங்கள் அருகில் அமரத் தயங்கிய என்னிடம் செல்லக் கண்டிப்பு காட்டி, என்னை உங்களோடு அமரச் செய்து, 'போட்டோ சரியாக விழவில்லை' என்று உங்கள் அனுபவ மதியால் கண்டு பிடித்து, 'மீண்டும் ஒருமுறை எடு' என்று புகைப்படக்காரரை சரியாக எடுக்கச் சொல்லி, என்னை அன்போடு அணைத்து அரவணைப்பு காட்டிய அன்பு தெய்வமே! எவருக்கு கிடைக்கும் இப்பேற்பட்ட பாக்கியம்!

    நீ விண்ணுலகில் இருக்க நான் மண்ணுலகில் ஏன் இன்னும் வாழவேண்டும்?
    Last edited by vasudevan31355; 21st July 2016 at 10:04 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks Russellmai thanked for this post
  19. #1900
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    334
    Post Thanks / Like
    நித்திரை தவிர யாரும் பிரிக்கமுடியாது
    அண்ணனின் நினைவுகளை

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  20. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •