-
11th June 2016, 09:32 AM
#671
Junior Member
Platinum Hubber
15.4.1956
சுதேசமித்திரன் தின இதழ் வெளியிட்ட மக்கள் திலகத்தின் மதுரை வீரன் -திரைப்பட விமர்சனம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th June 2016 09:32 AM
# ADS
Circuit advertisement
-
11th June 2016, 11:20 AM
#672
Junior Member
Regular Hubber
எம்ஜிஆர் 100 | 83 - வென்றாரும் இல்லை வெல்வாரும் இல்லை!
m.g.r. நல்ல காரியங்களுக்கு நன்கொடை வழங்குவதிலும் சரி; நாட்டுக்கும், மொழிக்கும் உழைத்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதிலும் சரி, முதல் ஆளாக நிற்பார். அப்படி உதவுவதில் அரசு நடைமுறைகளால் தாமதமோ, விதிமுறைகள் மீறலோ இல்லாமல் பார்த்துக் கொள்வார்!
வெள்ளையருக்கு சிம்ம சொப்பன மாகத் திகழ்ந்த லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு புனேயில் வெண்கல சிலை வைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்தது. தேசியத் தலைவரான திலகரின் சிலை நிறுவ மற்ற மாநிலங்களின் பங்களிப் பும் இருக்க விரும்பி, எல்லா மாநிலங்களிடமும் மகாராஷ்டிர அரசு நிதி கோரியது.
திலகரின் பேரன் அந்த மாநிலத்தின் சட்ட மேலவைத் தலைவராக இருந்தார். சிலை அமைக்க நிதி கோருவதற்காக அவர் தமிழகம் வந்தார். அப்போது, தமிழக சட்ட மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.க்கு முன்கூட்டியே கடிதம் எழுதிவிட்டு, குறிப்பிட்ட நாளில் வந்து அவரை சந்தித்தார். அன்று தமிழக சட்டப்பேரவை மற்றும் மேலவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
மேலவைத் தலைவரான ம.பொ.சி- யின் அறையில் அவரை சந்தித்த திலக ரின் பேரன், முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அதை அறிந்து, பேரவை நடவடிக்கைகளில் பங்கு கொண்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் ம.பொ.சி.யின் அறைக்கு வந்துவிட்டார். திலகருக்கு சிலை அமைக் கப்பட இருப்பதையும் தமது வருகைக் கான நோக்கத்தையும் அவரிடம் திலகரின் பேரன் தெரிவித்தார். உடனே, தனது செயலாளரை அழைத்த எம்.ஜி.ஆர்., அவரது காதில் ஏதோ சொன்னார்.
செயலாளர் வெளியே சென்று முதல்வரின் அறையிலிருந்து காசோலை புத்தகத்தைக் கொண்டு வந்தார். காசோ லையில் ரூ.50 ஆயிரம் தொகையை எழுதி கையெழுத்திட்டு திலகர் சிலை அமைக்க இது என் நன்கொடை என்று கூறி திலகரின் பேரனிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.! இவ்வளவு பெரிய தொகையை, அதுவும் முதல்வர் தனிப் பட்ட முறையில் தருவார் என்று எதிர் பார்க்காத திலகரின் பேரன், அவருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். காசோலையைப் பெற்றுக் கொண்ட அவருக்கு மனதில் ஒரு சந்தேகம்.
அரசிடம் இருந்துதான் பணத்தை எதிர்பார்த்தேன். நீங்கள் சொந்தப் பணத் தில் இருந்தே கொடுத்து விட்டீர்களே? என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார். அரசு மூலம் கொடுக்காமல் நீங்களே கொடுத் தது ஏன்? என்ற அவரது சந்தேகம் அந்தக் கேள்வியில் தொக்கி நின்றது. அது எம்.ஜி.ஆருக்குப் புரியாமல் போய் விடுமா? அரசாங்க நிதியில் இருந்து கொடுப்பதென்றால் நான் எழுதும் கடிதம் முறைப்படி ஒவ்வொரு துறையாகச் சென்று ஒப்புதல் பெற்று பணம் கிடைக்க மாதக்கணக்கில் ஆகும். அதைத் தவிர்க் கவே என் சொந்தப் பணத்தைக் கொடுத் தேன். மேலும், திலகரின் சிலை அமைய நானே நன்கொடை வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி! என்று புன்முறுவலுடன் எம்.ஜி.ஆர். சொல்ல, நடைமுறைக்கேற்ப முடிவெடுக்கும் அவரது திறனையும் தேசப்பற்றையும் கண்டு சிலிர்த்தார் திலகரின் பேரன்!
தமிழக அமைச்சராகவும் சட்டப் பேரவைத் தலை வராகவும் இருந்த க.ராசாராமுக்கு வேண்டிய தமிழ்ப் பேராசிரியர் க.திருநாவுக்கரசு. திருக்குறள் சம் பந்தமான ஆய்வு நூல்களை எழு தியவர். திருக் குறள் ஆராய்ச்சி தொடர்பாக படித்தும் எழுதி யும் திருநாவுக் கரசுக்கு கண் பார்வையே மங்கி விட்டது. ஒருநாள் அவர் ராசாராமை சந்தித்து, எனது மகள் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்புகிறாள். ஆனால், தேவை யான மதிப்பெண் களைவிட, ஒன் றிரண்டு குறைவாக உள்ளது. என் மக ளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க முதல் வரிடம் கூறி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத் துக்கு ராசாராம் கொண்டு சென்றார். திருநாவுக்கரசு எழுதிய நூல்களையும் முதல்வரிடம் அளித்தார். ராசாராம் கூறி யதை அமைதியாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., தமிழுக்குத் தொண்டு செய்தவரின் மகளுக்கு உதவ முடிவு செய்தார். அவர் மனதுக்குள் தீர்மானித்து விட்டாலும் உடனடியாக வெளியே சொல்லவில்லை. எம்.ஜி.ஆர். மவுனமாக இருக்கவே, எப்படியாவது அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் ராசாராம்.
அதற்கு, செய்துவிடலாம் என்று எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வந்தது. என்ன இவ்வளவு சாதாரணமாக சொல்கிறராரே? நமக்காக ஒப் புக்கு சொல் கிறாரோ? என்ற எண்ணம் மேலிட, என்ன செய்யப் போகிறீர்கள்? என்று ராசாராம் வினவினார்.
தமிழ்த் தொண்டு செய்த குடும்பங்களைச் சேர்ந்தவர் களுக்கு மருத் துவக் கல்லூரி யில் இந்த ஆண்டு முதல் இரண்டு இடங்கள் ஒதுக் கப்பட வேண்டும் என்ற புதிய விதி முறையை உரு வாக்கி விட் டால் சரிதானே? என்று புன்ன கைத்த படியே கேட்டார் எம்.ஜி.ஆர்.! அசந்துபோய் நின்றார் ராசாராம்.
எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க சிபாரிசு செய்திருக்கலாம். முதல்வரே சொல்லும்போது மாணவிக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமா? ஆனால், தனது அதிகாரத்தை எம்.ஜி.ஆர். எப்போதுமே தவறாகப் பயன்படுத்தியதில்லை. மரபுகளையும் விதிகளையும் மீறாமல் அதே நேரம் அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரி யில் இடம் கிடைக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். அந்த மாணவி மட்டுமின்றி, தமிழ்த் தொண்டு செய்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எதிர் காலத்தில் பயனடையும்படியும் செய்து விட்டார். தமிழறிஞர் திருநாவுக்கரசு எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினார்.
எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் அவரது பண்புகளையும் பாராட்டி, இன்னொரு முக்கியமான தமிழறிஞரும் அவரை வாழ்த்தி, குன்றனைய புகழ் கொண்ட குணக்குன்றே... என்று தொடங்கி கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதையில்,
வென்றாரும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தண்மதியே!
தென்னாடும் தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்!
என்று அந்தத் தமிழறிஞர் வாழ்த்தியுள் ளார். அவர்... கலைஞர் மு.கருணாநிதி!
எதிரிகளும் பாராட்டும் தர்ம தெய்வம் வாழ்க!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th June 2016, 05:35 PM
#673
Junior Member
Diamond Hubber
உலகம் சுற்றும் வாலிபன்:-..........தொடர்கிறது. பச்சைக்கிளி பாடலைப்பற்றி சொல்ல மறந்துவிட்டேன்.டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங்...பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ? என்ன ஒரு வரி.டிங் டிங் டான்டக்கு டான்டக்கு டான்டக்கு டான்டக்கு டான்டக்கு டான்டக்கு பின்னணியில் ஒரு மேளம் கொட்டியிருப்பார் மெல்லிசை மன்னர். குட் மியூசிக் கம்போசிங்.அற்புதம். எனக்கு மிகவும் நன்றாக நினைவிருக்கிறது.HMV மியூசிக் கம்பெனி LB ரெகார்ட் அந்த நாளில் வெளியிட்டது.பொன்பட்டாடை மூடிசெல்லும் தென்சிட்டோடு மெல்ல என்று முடியும்.மறுபடியும் அந்த ரெகார்டை திருப்பி போடவேண்டும்.ஆர்வம் அதிகமாகும்.தாய்லாந்து நடிகை மேட்டாருங் ரீட்டா மிக அழகாக வாயசைத்திருப்பார் பாருங்கள்.மிகப் பொருத்தமாக close உப-இல் காண்பிப்பார்கள்.Athilum தலைவர் ராஜாவுடையில் பறந்து சென்று பாடுவதுபோல் படமாக்கியிருப்பார்.அதோடு நெஞ்சை அசைத்து அசைத்து ஒரு movement கொடுப்பார் பாருங்கள். சூப்பர்.மேட்டா தேடிவரும் ஹோட்டல் தூசிதியாணியின் பிரம்மாண்டம் நம்மை மிகவும் மிரட்டும்.தன்னை மேட்டா விரும்புகிறார் என்று தெரிந்ததும் MGR அழகாக எடுத்துசொல்லி அவருக்கு புரியவைக்கும் காட்சி அற்புதம்.அப்போது சந்திரகலா முகபாவனை அற்புதம்.தலைவரை மேட்டா நீ என்று அழைக்கும் வெகுளித்தனம் அருமை.இந்த பாடலின் போது தலைவர்-மேட்டா இருவரின் நடன அசைவு மிகவும் அருமை. தத்தை போல தாவும் பாவை பாதம் நோகும் என்று மெத்தை போல பூவை தூவும் வாடை கற்றும் உண்டு. கவிஞரின் வர்ணனையை பாருங்கள்.சரி இப்பாடலை theatre இல் எத்தனை முறை oncemore கேட்டார்கள் என்பது யாருக்குமே தெரியாது.
அடுத்து சண்டைக்காட்சி. முதல் fight மனோஹருடன் ஹோட்டல் அறையில்.கத்தியுடன் மனோகர் வந்தவுடனே லதா கேட்பார் ஜானி என்னவிசயம் என்று. அப்போதே நமக்கு தெரிந்துவிடும் fight ஆரம்பம் என்று. பின்னணி இசை பிரம்மாதம்.டான்டண்ட டான்டண்ட டான்டண்ட டான்டண்ட டான்டண்ட டான்டண்ட என்று ஒரு பின்னணியில் stunt .அதுவும் புதுமையான ஜூடோ stunt . இரு கட்டைவிரலையும் நிமிர்த்தி ஒரு அசைவு காண்பிப்பார் பாருங்கள். ஒரு கட்டத்தில் மனோஹரின் கட்டைவிரல் நகம் தலைவரின் கன்னத்தில் கிழித்து சதை பெயர்ந்தது தெரியும்.கோபமான தலைவர் மனோஹரின் இருகட்டைவிரல்களையும் தன் இரு கட்டைவிரல்களால் பிழிந்து விடுவார் பாருங்கள். பார்த்துகொண்டிருக்கும் எனக்கு மயக்கமே வந்துவிட்டது.ஏனெனில் நான் சின்ன பையன்.இப்போதில்லை..அதுவும் 1971இல்.தலைவர் விடும் ஒவ்வொரு பஞ்சுக்கும் மனோகர் முகம் வீங்குவதை V .ராமமூர்த்தியின் கேமரா கோணம் மிக தெளிவாக காட்டும்.
2. அடுத்த stunt ஜஸ்டிநுடன். சந்திரகலா பரத நாட்டியம் பல அரங்குகளில் மிக தெளிவாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.தாம் ததி கின தக தாம் ததி கின தக தாம் ததி கின தக என்ற ஜதியோடு டிங்டிடிடிங்டிங் டிங்டிடிடிங்டிங் டிங்டிடிடிங்டிங் என்ற பின்னணி இசைவேறு.தலைவரும் நாகேஷும் அதனை தொலைநோக்கு காமெராவில் பார்ப்பது அழகு.தலைவர் இதைப்பார்க்கும் படி நாகேஷிடம் காமெராவை கொடுத்தவுடன் அதனை அவர் அசட்டு சிரிப்புடன் பையில் போடும் காமெடி சூப்பர்.பின்பு justine சந்திரகலாவை விரட்ட stunt ஆரம்பம். இருவரும் இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் கட்டியபடி அரைகுறை ஆடையுடன் நிற்கும் ஆரனங்குகளுக்கு நடுவில் சண்டை செய்யும் அழகே தனி.இதில் தான் ஜஸ்டினுக்கு வசனம் வேறு.எல்லாப்படத்திலும் ஓகே பாஸ்.எஸ் பாஸ் என்பதுடன் முடிந்துவிடும்.ஆனால் இதில் இவளுக்காக பெரிய ஆளு மாதிரி என்னைப்போட்டு அடித்தாயே அய்யா என்பார். stunt சீன் சூப்பர்.
2. மூன்றாவது stunt நம்பியாருடன்.Highlight stunt சீன்.ஜப்பான் புத்தர் கோவில் போன்று சத்யா ஸ்டுடியோவில் செட் போட்டு எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி.இடையில் டயலாக் வேறு."எதற்கும் ஆசைப்படாத நீங்களா இப்படி?" என்பார் MGR .நான் புத்த பிட்சுவே அல்ல என்பார் நம்பியார்.அது புத்தமகனின் புனித இடம். நீ கொடுத்தே நான் வாங்கினேன். இப்போது எனக்கு ப்ளீஸ் ஒரு சான்ஸ் கொடேன்." என்பார் MGR சிரித்தபடி.நம்பியாரின் காலின் இடையில் படுத்து முதுகில் MGR கால்களால் மோதுவார் நம்பியார் நிலை தடுமாறி விழுவார். சண்டையை விவரிக்க வார்த்தயே இல்லை.சண்டை முடிந்தவுடன் நம்பியாரை தோல் மேல் தூக்கிசெல்லும் மனிதாபிமான காட்சி.
4.அடுத்த சண்டை அசோகனுடன்.மஞ்சுளாவை கெடுக்க முயல்வார். தலைவர் தான் விஞ்ஞானி ஆயிற்றே.. கதவுக்கூண்டை உடைத்து அசோகனை ஒரு வழி பண்ணிவிடுவார்.அதிலும் அவரை அடிக்கவேண்டும் என்ற ஆவலினால் அடிக்க முயல்வதால் சண்டை போல் தெரியாது. அடிபட்டு விழுந்தவுடன் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் என்ற tune MSV MSV தான் அய்யா.Athuvum அசோகன் அடிபட்டு விழுந்தவுடன் ஓடி வந்து வாட் happened என்பார் S .கோபாலகிருஷ்ணன் (DR ).கைக்குட்டையை எடுத்து அசோகன் வாயில் வரும் ரத்தத்தை துடைத்தவுடன் Thankyou டாக்டர்.என்பார் அசோகன் அப்பாவியாக.
5. கடைசி சண்டை Scatting சண்டை.முதலில் மைக்கில் ஒரு பெண் அறிவிப்பு செய்வார்.லேடீஸ் அண்ட் gentleman என்றவுடன் drums அதிர ஆரம்பிக்கும்.வெறும் கையுடன் மோதுபவர்கள் இப்போது கத்தியுடன் மோதுவார்கள் என்பர். அப்போது கருமையான புள்ளிகள் உள்ள வலை வைத்த முகமூடி அணிந்த தம்பி ராஜு MGRin முக உணர்வை பார்பதற்கு கண் கோடி வேண்டும்.இடையில் ட்றிங் ட்றிங் ட்றிங் ட்றிங் ட்றிங் என்று அண்ணன் முருகன் MGR சுழல் நாற்காலியில் சுழல வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படும் காட்சி அருமை.எல்லா வீரர்களுக்கும் தலைவர் தண்ணி காட்டுவார். ஆங்கிலப்படங்களுக்கு நிகரான காட்சி. இதில் பல முகங்களை MGR பிரதிபலிப்பார்.1.நடிகர் MGR - கள்.2.Stunt மாஸ்டர் MGR .3.Cameraman MGR .டைரக்டர் MGR .ஸ்டுண்ட் முடிந்தவுடன் அண்ணன் முருகன் MGRyai விடுவித்தவுடன் முகமூடியை கழட்டியவுடன் வியர்வையோடு புன்முருவலான முகத்தை தலைவர் காண்பிப்பார் பாருங்கள்.ஆஹா ஓஹோ. கடைசியில் தலைவர்1-மஞ்சுளா, தலைவர்2-சந்திரகலாவை விமானத்தில் வழி அனுப்பிவைப்பதுடன் எமது அடுத்த வெளியீடு கிழக்கு ஆப்ரிக்கா வில் ராஜு என்ற வாசகத்தோடு சுபம். அப்பா ஒருவழியாக உலகம்சுற்றும் வாலிபனை முடித்துவிட்டேன்.எவை எல்லாமே நான் 12 வயது சிறுவனாக இருந்தபோது பார்த்ததை கற்பனையில் கொண்டுவந்து எழுதியது.தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே.நாளை இதயக்கனி.
courtesy thalaivar fan sundar rajan sir in fb
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th June 2016, 05:45 PM
#674
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th June 2016, 05:48 PM
#675
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவர் உடல் நலன் பாதிக்கபட்டபோது அரசு தனக்கு செலவு செய்த தொகை ரூ.96 இலட்சத்தை குணமடைந்தபின் 30-06-85 அன்று அரசுக்கே திருப்பிச் செலுத்தினார்.
இந்த நேர்மை அன்று வாழ்ந்த மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th June 2016, 05:50 PM
#676
Junior Member
Diamond Hubber
இதயக்கனியை இன்று ஏகாந்திக்கிறேன்:- உலகம் சுற்றும் வாலிபனில் சொல்ல மறந்த ஒன்று. படத்தில் இடம் பெறாத பாடல் ஒன்று உண்டு. அது உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் வந்தவளே உறவுப்பாடலைப்பாடவும் ஆடவும் உரிமை கொண்டவளே! ஆஹா ஆஹா என்பதாகும்.படத்தின் நீளம் கருதியோ அல்லது அதை விட சிறப்பான வேறு பாடலுக்காகவோ இந்த பாடலை வெட்டியிருக்கலாம். ஆனாலும் இதுவும் வெற்றி பெற்ற பாடலே! ஒரு வரி:- நாடுகள் தோறும் நான் செல்லும் நேரம் என் முன்னே உன் கண்ணே என்பின்னே வந்தது.மந்திரம் தானோ மாயம் எதேனோ உன்கண்ணே என் நெஞ்சை வென்றது! ஓமை டார்லிங்! ஓமை டார்லிங்! ஓமை ஸ்வீட்டி! ஓமை ஸ்வீட்டி! இலங்கை வானொலியில் அதிகம் இடம் பெற்ற பாடல்! 'உலகம் உலகம் பாட்டுக்காக இதனை நீக்கியிருக்கலாம்! அப்பா நிம்மதி இதயக்கனிக்கு போகலாமா? பட டைடிலில் MSV ஆட்சி செய்திருப்பார்.கிடாரிலேயே கித்தாய்ப்பு செய்வார். டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங் டிங்டிங் டிடிடிங் டிடிடிங் டிங் டிடிடிங் டிடிடிங் அய்யோ என்ன மனிதனய்யா இவர். ஏ.ஜெகந்நாதனுக்கு வெற்றிப்பரிசை கொடுத்த படம்.நமது விஜயன் சாருக்கு நல்ல பத்திரிகை டைடிலை கொடுத்த படம். பின்னாளில் "தங்கமகன், காதல்பரிசு, நெருப்புக்குள் ஈரம் போன்றவற்றை சத்யாமுவீஸில் ஜெகந்நாதன் இயக்கியிருந்தார்.இதோ டைடில் முடிந்து தலைவர் வரப்போகிறார். அந்நாளில் பாடலுக்கு முன்பு தொகையரா என்ற ஒன்று இடம் பெறும்.அது பாடலுக்கு மிகவும் அழகு கொடுக்கும். இப்போது பாடலே இல்லை.தொகையராக்கு எங்கே போவது? எனக்கு தெரிந்து தமிழ் படத்தின் மிக நீளமான அழகான தொகையரா இடம் பெற்றது இதயக்கனியில்தான்."தென்னகமாம் இன்பத்திருநாட்டில் மேவுவதோ கன்னடத்து குடகுமலை கனிவயிற்றில் கருவாகி தலைகாவிரி என்னும் பெயரில் தாதியிடம் உருவாகி --------------பொறுமையில்லை "பிள்ளை என நாளும் பேச வந்த கண்மனியே! வள்ளலே எங்கள் வாழ்வின் இதயக்கனி இதயக்கனி இதயக்கனி! போங்க சார் எங்க தலைவர் வந்து விட்டார்! Fanta colour டிரஷ்ஷில் தலைவர் நம் ரசிக ரத்தங்களை கையெடுத்து கும்பிடுவார். வேறு யாருக்கு சார் ஓட்டு விழும்? நாடித்துடிப்பு சார்! அதோடு தலைவருடைய சத்யா தோட்டத்தை தரிசிக்கலாம்! டிட்டுடு டிட்டுடு டிட்டுடு உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்! உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.., மேடுபள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள் அண்ணா சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்! இது போன்ற பாடலை நமக்கு யார் தரப்போகிறார்கள்? எனக்கு அழுகை வருகிறது. மீதி நாளை தான்!
courtesy thalaivar fan sundarrajan in fb
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th June 2016, 05:51 PM
#677
Junior Member
Diamond Hubber
அரசு வாகனம் பயன்படுத்தவில்லை
விலையுர்ந்த சொகுசு காரை பயன் படுத்தவில்லை
அரசின் எந்த சலுகையும் பெறவில்லை
ஆட்சியில் இருந்த போது ஒரு துண்டு
நிலமோ எதுவும் வாங்கவில்லை
தன் சிகிச்சைக்காக அரசு செய்த சிலவை திருப்பி அரசுக்கே கொடுத்த தங்கதலைவன் எம் ஜி ஆர்
தன் உடமை பொருள் செல்வம் தன் புகழ் தன்னையே தமிழுக்கு தந்த தங்கமகனின் புகழ் இந்த அகிலம் உள்ளளவும் நிலைக்கும்
பொற்க்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை இந்த எம் ஜி ஆர் அரசு உலகவியக்க பிரம்மாண்டமாக நடத்தவேண்டும்
இதவே தமிழகம் அந்த தேவனுக்கு செய்யும் நன்றி
courtesy fb
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th June 2016, 07:49 PM
#678
Junior Member
Diamond Hubber
Courtesy - Mr.sailesh basu - fb
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th June 2016, 07:58 PM
#679
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th June 2016, 08:02 PM
#680
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks