-
6th May 2016, 06:43 PM
#541
Moderator
Diamond Hubber
சாலக்குடியில் இருந்து திரும்பும் ஆதிரா சீரியல் யூனிட்!
சி.ஜே. பாஸ்கர் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ஹாரர் தொடர் ஆதிரா. ஸ்ரீவாணி, அஞ்சு அரவிந்த், ஜெய் தனுஷ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த சீரியல், ஆரம்பத்தில் இருந்தே கேரளாவில் உள்ள சாலக்குடியில்தான் படமாக்கப்பட்டு வருகிறது. காரணம், இந்த அமானுஷ்ய தொடருக்கு ஏற்ற அடர்ந்த காட்டுப்பகுதி லொகேசன்கள் அந்த பகுதியில் அதிகமாக உள்ளதாம். அதனால் வெகுதூரம் செல்லாமல் அடுத்தடுத்த பகுதிகளிலேயே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறதாம்.
அதன்காரணமாக, இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களை நடிகைகளை சினிமா படப்பிடிப்புகளுக்கு அவுட்டோருக்கு அழைத்து செல்வது போன்று கூட்டிச்சென்று அங்கு ஹோட்டல்களில் தங்க வைத்து ஷூட்டிங் நடத்தி வந்தனர். இதன்காரணமாக ஆதிரா சீரியல் பட்ஜெட்கூட எகிறிக்கொண்டே போகிறதாம். ஆனால் அடுத்தபடியாக கதையில் சில மாற்றங்கள் ஏற்படப் போகிறதாம். அதனால், இதுவரை சாலக்குடியில் முகாமிட்டு ஆதிரா சீரியலை படம் பிடித்து வந்த சி.ஜே.பாஸ்கர், யூனிட்டுடன் விரைவில் சென்னை திரும்புகிறாராம். இனிமேல் சென்னையில்தான் படப்பிடிப்பு தொடரப்போகிறதாம்.
நன்றி: தினமலர்
-
6th May 2016 06:43 PM
# ADS
Circuit advertisement
-
11th May 2016, 06:35 PM
#542
Moderator
Diamond Hubber
சமையல் நிகழ்ச்சியில் விதவிதமான ஆடையில் கலக்கும் பஃரீனா
பொதுவாக சமையல் நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறவர்களும் சரி, அதை தொகுத்து வழங்குகிறவர்களும் சரி எளிமையான ஹோம்லி ஆடையைத்தான் அணிந்து வருவார்கள். ஆனால் அதை உடைத்தெறிந்து முன்னணி சேனலில் ஒளிபரப்பாகும் கிச்சன் கலாட்டா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பஃரீனா ஆசாத் விதவிதமான ஆடையில் வந்து கலக்குகிறார் சமைப்பது எப்படி என்று பார்க்கிறவர்களை விட பஃரீனா இன்று எந்த உடை அணிந்து வருகிறார், அது எப்படி இருக்கிறது என்று பார்க்கிற பார்வையாளர்கள்தான் அதிகரித்து கொண்டிருக்கிறார்களாம். பஃரீனாவின் உடையை டிசைன் செய்வதற்கென்றே தனி காஸ்ட்யூம் டிசைனர்கள் இருக்கிறார்களாம்.
இதுவரை மூன்று சேனல்களில் பணியாற்றியுள்ள பஃரீனா மூன்றிலுமே சமையில் நிகழ்ச்சியைத்தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சரியாக சமைக்கத் தெரியாது என்பது தனிக் கதை. “எந்த நிகழ்ச்சிக்குமே அழகுணர்ச்சி மிகவும் முக்கியம். விதவிதமாக உடை அணிந்து சமையல் நிகழ்ச்சி நடத்தினால் என்ன என்று தோன்றியது. முயற்சித்து பார்த்தோம். அது ஒர்க் அவுட்டாகி விட்டது. இப்போது நான் எங்கு சென்றாலும் சமையல் பற்றி கேட்பதில்லை. எனது உடைகள் பற்றித்தான் கேட்கிறார்கள்” என்கிறார் பஃரீனா. சமையல் நிகழ்ச்சியில் எதற்கு கண்ணை உறுத்துகிற உடை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
நன்றி: தினமலர்
-
11th May 2016, 06:37 PM
#543
Moderator
Diamond Hubber
லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் தேர்தல் பிரச்சாரம்
பெரிய திரையில் குணசித்திர நடிகையாக அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர். இடையில் மூன்று படங்களை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்தவர் இப்போது மீண்டும் சின்னத்திரையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் திரென்று தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளார். சென்னையை சேர்ந்த வானதி சீனிவாசன், லட்சுமி ராமகிருஷ்ணனின் நெருங்கிய தோழி. அவர் தற்போது கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதாக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தனது தோழிக்கு ஆதரவாக களத்தில் குதித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவருக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். தேர்தல் பிரச்சாரத்துடன் இணைந்த கருத்தரங்கில் பேசினார்.
“வானதி சீனிவாசன் எனது நெருங்கிய தோழி. சமூக அக்கறை மிக்கவர். தனியாக போராடி மதுக்கடைகளை மூடியவர். பெண்களின் நலனின் அக்கறை கொண்டவர். துணிச்சலானவர். அவரது செயல்பாடுகளும், எளிதில் பழகும் குணமும் எனக்கு பிடிக்கும் அதானல்தான் எந்த கட்சியையும் சாராத நான் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். என்று விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி: தினமலர்
-
18th May 2016, 06:18 PM
#544
Moderator
Diamond Hubber
"தலையணை பூக்கள்" தொடரில் நிஷா கிருஷ்ணன்

மகாபாரதம் தொடரில் திரவுபதியாக நடித்து புகழ்பெற்றவர் நிஷா கிருஷ்ணன். மகாபாரதம் தொடரின் இறுதி பகுதி எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் மகாபாரம் தொடர் நிறைவடைகிறது. இந்த நிலையில் நிஷா கிருஷ்ணன் தலையணை பூக்கள் என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது நடித்து வருகிறார்.
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலை அதே பெயரில் தொடராக உருவாக்குகிறார்கள். காஞ்சிபுரம் பின்னணயில் நடக்கிற கதை. பட்டு நெசவு தொழில், தங்க நகை தொழிலாளர்களின் பின்னணியில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திலும், அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. ராம்குமார் இயக்குகிறார். நிஷா கிருஷ்ணன் சமீபத்தில் திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்கும் தொடர் தலையணை பூக்கள்.
நன்றி: தினமலர்
-
18th May 2016, 06:32 PM
#545
Moderator
Diamond Hubber
சின்னத்திரைக்கு வருகிறார் அரவிந்த்சாமி
ஒரு காலத்தில் அழகு நடிகனாக கொண்டாடப்பட்ட அரவிந்த்சாமி, சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகி தொழில்துறையில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படம தோல்வி அடையவே மீண்டும் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தனி ஒருவன் படத்தில் வில்லனாக எண்ட்ரி கொடுத்து தனது இரண்டாவது ரவுண்டை துவக்கி விட்டார். தற்போது ஜெயம்ரவியுடன் போகன் படத்தில் வில்லனான நடித்து வருகிறார். டீயர் டேட் என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.
அரவிந்த்சாமியின் அடுத்து அவதாரம் சின்னத்திரை தொகுப்பாளர். விஜய் டி.வியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் 3வது சீசனை தொகுத்து வழங்க வருகிறார் அரவிந்த் சாமி. சூர்யா, பிரகாஷ்ராஜ் அமர்ந்த நாற்காலியில் உட்கார இருக்கிறார் அரவிந்த்சாமி. விரைவில் துவங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல புதிய அம்சங்களுடன் விரையில் ஒளிபரப்பாக இருக்கிறது.
நன்றி: தினமலர்
-
25th May 2016, 06:40 PM
#546
Moderator
Diamond Hubber
மே 30 முதல் அரவிந்த்சாமியின் ஆட்டம் ஆரம்பம்
விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'. வினாடி வினா டைப்பிலான இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் ஒரு கோடி வரை பரிசாக பெறலாம். பங்கேற்பவர்கள் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயாவது பரிசாக பெறுவார்கள். இதன் முதல் சீசனை சூர்யா தொகுத்து வழங்கினார், இரண்டாவது சீசனை பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினார். 3வது சீசனை அரவிந்த்சாமி தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி வருகிற 30ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன் வரை 3 நாட்கள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் புரமோவில் அரவிந்த்சாமி கூறியிருப்பதாவது: போட்டியென்றால் பயமா, கப்பலை ஏன் கரையில் கட்டி வைக்கிறோம் கண்காட்சிக்கா இல்லை. கடலை தாண்டுவதற்கு, இதுவா அதுவா என்ற குழப்பம் வாழ்க்கையில் எப்போதுமே வரக்கூடாது. வாங்க விளையாடலாம். போட்டி உங்களுக்கும் எனக்கும் இல்லை. நான் உங்க பக்கம்தான் என்கிறார் அரவிந்த்சாமி.
நன்றி: தினமலர்
-
30th May 2016, 06:49 PM
#547
Moderator
Diamond Hubber
விஜய் டிவியின் அதிரடி நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி!
விஜய் டிவியின் நம்பர்-ஒன் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய, காபி வித் டிடி, ஜோடி நம்பர்-ஒன், விஜய் அவார்ட்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. அந்த வகையில் 12 வருடங்களாக விஜய் டிவியின் பிரதான தொகுப்பாளினியாக இருந்த டிடியின் காபி வித் டிடி நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, அவர் அந்த டிவியில் இருந்தே விலகி விட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த டிடி, மீண்டும் நான் விஜய் டிவியில் பிஸியாவேன் என்று கூறி வந்தார். அதற்கேற்ப தற்போது காபி வித் டிடி மட்டுமின்றி, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் டிடி அடுத்தபடியாக அச்சம் தவிர் என்ற நிகழ்ச்சியை வழங்கப்போகிறார். ஜூன் 2-ந்தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், சின்னத்திரை, சினிமா என இரண்டு மீடியாக்களில் உள்ள நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்களாம். டாஸ்க் அடிப்படையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை சேனல்களில் வெளியான ஷோக்களை விட அதிரடியாக இருக்கப்போகிறதாம். இந்நிகழ்ச்சி யில் நெஞ்சை பதபதக்க வைக்கும் போட்டிகளும், பார்வையாளர்களை அச்சுறுத்தும் மோதல்களும் இடம்பெறுகிறதாம். இந்நிகழ்ச்சி திவ்யதர் ஷினிக்கும் ஒரு சவாலான நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்.
நன்றி: தினமலர்
-
7th June 2016, 07:20 PM
#548
Moderator
Diamond Hubber
சீரியல்களுக்கு குட்பை சொல்கிறார் குயிலி
பூவிலங்கு; படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் குயிலி. பல படங்களில் நடித்த பிறகு ;நாயகன்; படத்தில் “நிலா அது வானத்து மேலே... பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அதன்பிறகு குத்தாட்ட நடிகை ஆனார். அதுவும் ஒரு கட்டத்தில் சலித்து விட குணசித்ர நடிகையானார். சின்னத்திரையில் சீரியல்கள் புகழ்பெறவும் சின்னத்திரை சீரியல் நடிகையானர்.
குணத்சித்ர கேரக்டர் என்பதால் ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடித்தார். சரவணன் மீனாட்சி தொடர் அவரது கேரியரில் முக்கியமான சீரியல். அதன் பிறகு அ.தி.மு.வில் இணைந்து அரசியல் பணியும் செய்தார். தற்போது தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். அரசியலிலும் பிசியாக உள்ளார். சர்வதேச பட விழாக்களிலும் தீவிரமாக இருக்கிறார். அதை விட முக்கியமாக அவரது குழந்தைகள் மும்பையில் படித்து வருகிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. இப்படி வேலை பளுக்கள் அதிகமாகி விட்டதால் சின்னத்திரை சீரியல்களிலிருந்து விலகி வருகிறார் குயிலி. திரைப்படங்களில் நல்ல கேரக்டர் அமைந்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார். குழந்தைகள் படிப்பிற்காக மும்பையில் செட்டிலாக போகிறார் என்கிற தகவலும் உண்டு.
நன்றி: தினமலர்
-
7th June 2016, 07:22 PM
#549
Moderator
Diamond Hubber
ஜோடி நம்பர்-ஒன் சந்துருவும் ஹீரோவாகிறார்!
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அடுத்தடுத்து சினிமாவில் ஹீரோவாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து வானவராயன் வல்லவராயன் படத்தில் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவானார். சாரல் படத்தில் அசார் ஹீரோவாகியிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது காதல் காலம் என்ற படத்தில் சந்துரு என்ற ஜோடி நம்பர்-ஒன் டான்சரும் ஹீரோவாகியிருக்கிறார்.
இந்த சந்துரு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்-1, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். ஆக, நடனத்தில் வல்லவர் என்பதால் இந்த காதல் காலம் -படத்தில் சந்துருவுக்கு பாடல் காட்சிகளில் அதிரடி நடனம் கொடுக்கப்பட்டுள்ளதாம். தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதால் அடுத்த படத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சந்துரு.
நன்றி: தினமலர்
-
7th June 2016, 07:35 PM
#550
Moderator
Diamond Hubber
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஹனுமன்
தொலைக்காட்சி தொடர்களில் ராமாயணம், மகாபாரத்திற்கு பிறகு அதிகமான வரவேற்பை பெற்றிருப்பது ஹனுமன் கதைதான். தமிழ் தொலைக்காட்சிகளில் ஏதாவது ஒன்றில் ஹனுமன் கதை ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும். தற்போது ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மலையாளம், தெலுங்கு, கன்னட சேனல்களிலும் ஹனுமன் கதை ஒளிபரப்பாகிறது.
இந்த நிலையில் சோனி டி.வி பிரமாண்டமாக தயாரித்து ஒளிபரப்பிய ஜெய் அனுமான் என்ற தொடரை தென்னிந்திய முன்னணி சேனல் ஒன்று வாங்கி உள்ளது. இந்த தொடரை அந்த சேனலுக்கு உட்பட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்புகிறது. தமிழ் சேனலில் நாளை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்புகிறது. அதேபோல சோனி நிறுவனத்திடமிருந்து நாகின் என்ற இந்தி தொடரின் தமிழ் உரிமத்தையும் வாங்கி உள்ளனர். இந்த தொடர் நாக கண்ணி என்ற பெயரில் வருகிற 27ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்புகிறது.
நன்றி: தினமலர்
Bookmarks