-
30th May 2016, 09:08 AM
#391
Junior Member
Platinum Hubber
முரளி சார்
தங்களின பதிவை 2009லேயே படித்தேன் .மீண்டும் தங்களின் மீள் பதிவை படித்தேன் .
உன்னைத்தான் தம்பி -1973 ல் வெளிவந்ததா ? திரு கலைவேந்தன் தங்களிடம் கேட்க சொன்னார்.நன்றி
-
30th May 2016 09:08 AM
# ADS
Circuit advertisement
-
30th May 2016, 12:36 PM
#392
Senior Member
Senior Hubber
எஸ்.வி, முரளி, சி.செ.. //இந்த உன்னைத்தான் தம்பி படம்// ஆமாம் இந்தப் படத்தில் தானே மணிவிளக்கே மாங்கனியே பாட்டு இருக்கிறது .. படம் லிங்க் கிடைக்கவில்லை.. எப்படி இருக்கும் (ம்ம்..அவரவர் கவலை அவரவருக்கு )
-
30th May 2016, 01:27 PM
#393
வினோத் சார்,
நீங்கள் பதில் சொல்லுவதில் சமர்த்தர் என தெரியும். எப்போதும் பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு திருப்பி கேள்வி கேட்பதுதானே வழக்கம். என் பதிவில் வந்த சாராம்சம் அப்படியே அந்த ஹிந்து கட்டுரையில் வந்திருக்கிறது என்பதுதான் நான் குறிப்பிட்டது. அதற்கு உன்னைத்தான் தம்பி எந்த வருடம் வெளிவந்தது என்ற கேள்விக்கும் தொடர்பில்லை. காரணம் 1972-ல் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்ட பிறகு வெளிவந்த படங்களில் எவற்றிலெல்லாம் கணக்கு கேட்டதைப் பற்றி வசனம் வந்திருந்தாலும் அது 1972-ல் நடந்தவற்றைதான் குறிக்கும் என்பது அனைவரும் புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். எது எப்படியோ இந்த தகவல்கள் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் பயனளிக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
அன்புடன்
-
30th May 2016, 02:46 PM
#394
Junior Member
Platinum Hubber
பதிலுக்கு நன்றி முரளி சார்,
உன்னைத்தான் தம்பி, பணக்காரப் பெண் ஆகிய படங்களை திரு.கலைவேந்தனும் பார்த்திருக்கிறாராம். அந்தப் படங்கள் எல்லா ஊரிலும் ஓடியதாம். பணக்காரப் பெண் படத்திலும் ஜெய்சங்கர் ஒரு காட்சியில் கணக்கு கேட்பதுடன் விரைவிலேயே நிர்வாகம் எங்கள் கைக்கு வரும் என்ற வசனம் இடம் பெறுமாம்.
உன்னைத்தான் தம்பி படம் எந்த ஆண்டு வெளிவந்தது? என்று கேட்டது தவறான நோக்கத்தில் இல்லை. தவறான தகவல் பதிவாகி விடக் கூடாதே என்பதற்காகவாம். நீங்கள் குறிப்பிட்டதுபோல படம் 1973-ல் வெளிவரவில்லை. 1974-ம் ஆண்டு வெளிவந்தது. மேலும், திமுக ஆட்சி நீங்கள் குறிப்பிட்டது போல 1976-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கலைக்கப்படவில்லை. ஜனவரி 31-ம் தேதி கலைக்கப்பட்டது.
சந்திரசேகர் பிரதமராக இருந்தபோதுதான் 1991-ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி திமுக அரசு கலைக்கப்பட்டது. உங்களைப் பார்த்து காப்பி அடித்திருந்தால் அந்தப் பத்திரிகையிலும் தப்பாக அல்லவா போட்டிருப்பார்கள் என்றும் சொல்லச் சொன்னார்.
எப்படியோ? ஒரே அலைவரிசையில் நீங்களும் திரு. கலைவேந்தனும் சிந்திப்பது மகிழ்ச்சி திரு.முரளி சார். நீண்ட நாட்கள் கழித்து என் மூலம் (எஸ்.வி) தன்னை தொடர்பு கொண்டதற்கு திரு. கலைவேந்தன் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்.
-
30th May 2016, 03:45 PM
#395
நன்றி வினோத் சார்.
கலைவேந்தனுக்கும் நன்றி!
அன்புடன்
-
4th June 2016, 09:44 AM
#396
Senior Member
Devoted Hubber
அந்த நடிகருக்கு இப்படியும் கூட ஒரு முகம் உண்டு என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்..!
அந்த நடிகர் தனது வீட்டு விசேஷங்கள் எதுவாக இருந்தாலும் , ஏதாவது ஒரு அனாதை இல்லத்துக்குப் போய்த்தான் விருந்து வைத்து கொண்டாடுவாராம் !
முழு செலவையும் அவரே ஏற்று நடத்தி வைக்கும் அந்த விருந்தை , அவரே முன் நின்று பரிமாறுவதுதானே முறை..?
... அதுதான் இல்லை..!
ஒவ்வொரு விருந்துக்கும் , ஏதோ ஒரு பிரபலத்தை அழைத்து வந்து , அவர்கள் கையால் அந்த அனாதைக் குழந்தைகளுக்கு விருந்து பரிமாற வைத்து , அதைப் பார்த்து மகிழ்வாராம் அந்த நடிகர் ..!
அந்த நடிகர் .... ஜெய்சங்கர் ..!
[ அதுதான் படத்தைப் பார்த்து முதலிலேயே கண்டு பிடிச்சுட்டோமே..! ]
சரி...ஏன் இப்படிச் செய்தார் ஜெய்சங்கர்..?
புரிந்து கொள்ள முடியாத ஒரு நண்பர் , இந்தக் கேள்வியை ஜெய்சங்கரிடமே கேட்டு விட்டாராம்..!
ஏங்க ஜெய்... விருந்துக்கான எல்லா செலவையும் நீங்க பண்றீங்க... அதை பரிமாறி புண்ணியம் தேடிக் கொள்வது மட்டும் யாரோ ஒரு பிரபலமா...?
ஜெய்சங்கர் புன்னகைத்தாராம் !
நண்பர் விடவில்லை : சிரிக்காதீங்க ஜெய் .. ஒண்ணு நீங்க பரிமாறுங்க...அல்லது உங்க மனைவி , குழந்தைகளை விட்டு பரிமாற சொல்லுங்க ..யாரோ ஒரு மூணாவது மனிதர்....
-நண்பரின் பேச்சை இடைமறித்த ஜெய்சங்கர் சிரித்தபடி சொன்னாராம் இப்படி :
கொஞ்சம் பொறுங்க ... நான் கூப்பிட்டுட்டு வர்ற பிரபலங்களை கவனிச்சு இருக்கீங்களா..?அவங்க யாருமே இந்த மாதிரி அனாதை இல்லங்களுக்கெல்லாம் போய் உதவி செய்யற பழக்கம் இல்லாதவங்க... அதுக்கான நேரம் இல்லாதவங்க ... அது பற்றின விவரம் தெரியாதவங்களாக கூட இருக்கலாம்..!
அதனால, இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்தி , அவங்களை நான் கூப்பிடறேன்...! இந்த மாதிரியும் இடம் இருக்கு ... இப்படிக் கூட உதவி செய்யலாம் என்று அறிமுகப்படுத்துகிறேன் .. அவ்வளவுதான்...! இப்படி வர்ற பத்து பேர்ல , ஒரே ஒருத்தர் மனசில , இந்த உதவி பதிஞ்சா கூடப் போதுமே ... எதிர்காலத்தில அவங்களும் கூட இதுமாதிரி உதவிகளைச் செய்ய முயற்சி செய்யலாம் இல்லையா..? அதுக்காகத்தான் இப்படி கூப்பிடறேன் !
# ஜெய்சங்கரின் இந்தப் பதிலைக் கேட்ட நண்பர் மௌனமாகிப் போனாராம்...!
நானும் கூட மௌனமாகிப் போனேன்..!
# ஜூன் 3 : நடிகர் ஜெய்சங்கர் நினைவு தினம் இன்று.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks