Page 5 of 11 FirstFirst ... 34567 ... LastLast
Results 41 to 50 of 105

Thread: 24 - Suriya, Samantha, Nitya Menon ~ AR Rahman

  1. #41
    Junior Member Senior Hubber Mr.GreyShirt's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Ottawa, Canada
    Posts
    0
    Post Thanks / Like
    24 A.K.A Coincidence: The Movie.

    Very good pacing and screenplay kept me entertained but every incidence in the movie fell conveniently in place. I did not know how easy it is to make a time machine lol I guess everyone can do it even without education.

    Otherwise a good movie. A one time watch.
    It is difficult to say what is impossible, for the dream of yesterday is the hope of today and the reality of tomorrow.
    - Robert H. Goddard

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    திரை விமர்சனம்: 24 - tamil hindu

    காலம் ஒருவனின் காதலியாக மாறினால் என்ன நிகழும்? அதுதான் ‘24’
    விஞ்ஞானி சேதுராமன் (சூர்யா) காலத்தினூடே பயணம் செய்ய உதவும் கைக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்கிறார். அதைக் கைப்பற்றத் துடிக்கும் ஆத்ரேயா (அண்ணன் சூர்யா), சேதுராமனையும் அவர் மனைவியையும் (நித்யா மேனன்) கொலை செய்கிறார். சேதுராமன் தன் குழந்தையையும் டைம் மிஷின் வாட்சையும் காப்பாற்றிவிடுகிறார்.

    இது நடந்தது 26 ஆண்டுகளுக்கு முன்பு. கதை இப்போது நிகழ்காலத்துக்கு வருகிறது. சேதுராமனின் மகன் மணி (சூர்யா) வாட்ச் மெக்கானிக். அப்பா கண்டுபிடித்த டைம் மிஷின் வாட்ச் அவரிடம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அதன் பயன் என்ன என்பது அவருக்குத் தெரியவருகிறது.

    26 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தால் கோமாவில் படுத்துவிட்ட ஆத்ரேயா இப்போது விழித்து எழுகிறார். அந்த வாட்சைக் கைப்பற்றுவதில் அவரது வெறி இம்மியளவும் குறையவில்லை. ஆத்ரேயாவின் பணபலத்துக்கும் மிருக வெறிக்கும் இளம் சூர்யாவால் ஈடுகொடுக்க முடிந்ததா என்பதே கதை.

    கால இயந்திரம் என்னும் சிக்கலான கருத்தை விறுவிறுப்பான சம்பவங்கள், திருப்பங்களுடன் சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் விக்ரம் கே. குமார். வாட்ச் இளம் சூர்யாவிடம் வந்ததும் படம் வேகமெடுக்க வேண்டும். ஆனால், காமெடி, காதல் பாதைக்குள் நுழைந்துவிடுகிறது. அதிலிருந்து வெளியேறி சீரியஸான பாதைக்குள் நுழைந்த பிறகு வேகமெடுக்கிறது.

    ஆத்ரேயா - மணியின் காய் நகர்த்தல்கள் படத்தை விறுவிறுப்பாக்குகின்றன. யாரிடம் அசல் வாட்ச் இருக்கிறது என்பதை ஆத்ரேயா கண்டுபிடிக்கும் விதம், செக்கில் கையெழுத்து போடுவதால் வரும் சிக்கலிலிருந்து தப்பிக்கும் விதம், ஆத்ரேயாவின் நிஜ முகம் வெளிப்படும் இடம் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவை. கிளைமாக்ஸ் திருப்பம் ரசிக்கும்படி இருக்கிறது.

    மழை, கிரிக்கெட் ஸ்டேடியம், துப்பாக்கி குண்டு துளைக்கும் திசை நோக்கி ஆத்ரேயாவைத் திருப்பிவிடுவது என்று காலத்தை உறையவைக்கும் காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. சூர்யாவின் ‘இமாஜினோ ரொமான்ஸ் ஃபீலியா’ குறும்பும் அதை சமந்தா எதிர்கொள்ளும் விதமும் ரசனையும் ரகளையுமாய் இருக்கின்றன. ஆனால் காதல் காட்சிகளில் தாராளமாகக் கத்திரி போட்டிருக்கலாம். குடும்ப சென்டிமெண்ட் காட்சிகளும் அப்படியே.

    சூர்யாவுக்கு மின் அதிர்ச்சி ஏற்படுவது முக்கியமான திருப்புமுனை. அப்படி ஏற்படுவதற்கான காரணத்தை வலுவாக முன்வைத்துவிடுகிறார் இயக்குநர். வில்லன் சூர்யா இளம் சூர்யாவை ஏமாற்றும் விதத்திலும் தர்க்கம் கச்சிதமாக இருக்கிறது. ஆனால், வாட்சைத் திறக்கும் சாவி சூர்யா கையில் வருவதில் எந்தத் தர்க்கமும் இல்லை. சேப்பாக்கத்தில் இந்தியா இலங்கை கிரிக்கெட் போட்டி நடப்பதாகக் காட்டப்படுகிறது. கதை நடப்பது 2016-ல். இந்த ஆண்டில் இந்த அணிகளுக்கிடையே சேப்பாக்கத்தில் போட்டியே இல்லை.

    இதையெல்லாம் விட்டுவிடலாம். ஆனால், ஆத்ரேயா இளம் சூர்யாவிடம் வாட்சைத் திரும்பக் கொண்டுபோய்ச் சேர்க்கும் காட்சியின் தர்க்கப் பிழை மிக முக்கியமனது. கையில் வாட்ச் வந்ததும் பின்னோக்கிப் பயணிக்கும் ஆத்ரேயா, அதற்கு முன் தினத்துக்குப் போகிறார். அந்த தினத்தில் அவர் கையில் வாட்ச் இருந்திருக்க வாய்பில்லை. முன் தினத்தில் இருக்கும் அவர், இளம் சூர்யாவைக் கொல்ல வேண்டாம் என்று மட்டும் முடிவெடுக்கவில்லை. விளம்பரம் கொடுத்து அவரை வரவழைக்க வேண்டாம் என்றும் முடிவெடுக்கிறார். ஆக, வாட்ச் ஆத்ரேயா கையில் வர வாய்ப்பே இல்லை. அப்படியானால் அவரால் சூர்யாவிடம் வாட்சை எப்படிச் சேர்ப்பிக்க முடியும்? சூர்யாவை வரவழைக்க வேறு யுக்தியை யோசித்திருக்கலாம்.

    மூன்று கதாபாத்திரங்களுக்கும் நன்கு வித்தியாசம் காட்டியிருக்கிறார் சூர்யா. காதல், பாசம் ஆகிய இடங்களில் அவர் நடிப்பு அவரது முந்தைய படங்களை நினைவுபடுத்துகிறது. வில்லன் ஆத்ரேயா தனித்து நிற்கிறார். புஜபலம் கொண்ட வில்லனாகச் சீறும் காட்சிகளைவிடவும் சக்கர நாற்காலியில் கூனிக் குறுகி உட்கார்ந்திருக்கும் காட்சிகளில் சூர்யாவின் நடிப்பும் உடல் மொழியும் அபாரம்.

    சிறிய வேடம் என்றாலும் அழுத்தமான தடம்பதிக்கிறார் நித்யா மேனன். சமந்தா வரும் இடங்கள் அழகு. கண் கலங்கும் இடங்களில் சரண்யா நெகிழ வைக்கிறார். கிரிஷ் கர்னாடை இயக்குநர் வீணடித்திருக்கிறார்.
    ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை அற்புதம். பாடல்கள் கேட்கும்படி இருக்கின் றன. கலை இயக்குநர் அமித்ரா, சுப்ரதா சக்ரபோர்டி இருவரின் கைவண்ணத்தில் உருவான அறிவியல் ஆய்வுக்கூடம் ஆச்சரியப்படுத்துகிறது. மேகமலையின் அழகை அள்ளித்தரும் திருநாவுக்கரசுவின் கேமரா, சண்டைக் காட்சிகளுக்குத் தேவையான பரபரப்பையும் காட்டியிருக்கிறது.

    ஒரு சில குறைகள், இழுவையான சில காட்சிகளை மீறிப் படத்தின் புதுமையும் விறுவிறுப்பான திருப்பங்களும் ஈர்க்கின்றன.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #43
    Senior Hubber
    Join Date
    Nov 2010
    Location
    India
    Posts
    0
    Post Thanks / Like
    24 tv serial rage ku slow ....indru netru naalai Better than this...

  5. #44
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

    அடேங்கப்பா.. 7 அடப்போங்கப்பா குறிப்புகள்! - ’24’ விமர்சனம் #24themovie #24 movie - VIKATAN



    டைம் டிராவல் என்கிற கனமான, ரசிகர்கள் எளிதில் நம்பமுடியாத சப்ஜெக்டை, நம்பவைப்பது போல படமாக்குவது ரியல்லி ரிஸ்கி. படம் பார்க்கும் ரசிகனுக்குப் புரிந்து, இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அவன் மனதில் கேள்விகள் எழாமல் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். ’24’ டீம் அதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறதா?
    டைம் மெஷினை ஒரு கடிகாரத்துக்குள் அடக்குமளவுக்கு ஜீனியஸ், ’ட்வின்ஸ்’ சகோதரர்களில் ஒருவரான சூர்யா. அந்தக் கடிகாரத்தைக் கைப்பற்ற தன் தம்பியையே கொல்லவும் தயங்காத வில்லன் அண்னன் சூர்யா (ஆத்ரேயாயாடா..!). இதனால் 1990-ல் சகோதரர்களுக்குள் நடைபெறும் களேபரத்தில் சயிண்டிஸ்ட் சூர்யா உயிரிழக்கிறார். 26 வருடங்கள் கழித்து சயின்டிஸ்ட் சூர்யாவின் மகன் சூர்யா (ஆமாம்பா ஆமாம்... மூணாவது சூர்யாதான்!) அப்பா கண்டுபிடித்த கடிகாரத்தை வைத்து என்ன செய்கிறார் என்பதை நீளளளமாகச் சொல்லியிருக்கிறார்கள்!

    சிக்கலான டைம் டிராவல் சங்கதியில் ஆங்காங்கே சிக்சர் அடித்திருந்தாலும், பலஇடங்களில் மெகா சீரியல், ‘பழம்பெரும்’ காதல் காட்சிகள் என இனிமா மிக்சர் கொடுக்கிறது திரைக்கதை. படத்தின் ‘அடேங்கப்பா’, ‘அடப்போங்கப்பா’ காட்சிகளின் பட்டியல் இதோ!

    அடேங்கப்பா 1:

    சூர்யா!
    சேதுராமன், ஆத்ரேயா, மணி என்று மூன்று கதாபாத்திரங்கள். சொல்லவே தேவையில்லை... இவர்களில் ஆத்ரேயாதான் அரை செஞ்சுரி அடிக்கிறார். ரஃப் அண்ட் டஃப் வில்லனாக சூர்யாவின் லுக்கும் கிக்கும் செம. ஆனால், ஆத்ரேயாவுக்கு வழக்கமான ‘டாய் டூய் வில்லன்’ செய்யும் வேலைகள்தான். இதைச் செய்ய, தமிழ் சினிமாவின் ‘குட் பாய்’ இமேஜை 99 வருட குத்தகைக்கு எடுத்திருக்கும் சூர்யா ஏன்? கெட்ட பையன் கேரக்டரில் இன்னும் கெத்து சேர்த்திருக்க வேண்டாமா? மணி பாத்திரம் ’அயன்’ காட்சிகளை நினைவூட்டும் குறும்புத்தனம்.

    அடேங்கப்பா 2:

    இடைவேளைக்கு முன் நிகழும் கடிகார நிறுவன சம்பவங்கள்... டி-20 பவர் ப்ளே விறுவிறுப்பு. இதே போன்ற பரபரப்பு, சமந்தாவுக்கு உண்மை தெரியும் சமயத்திலும், சர்ச் உரையாடலின்போதும் உண்டாகிறது. ஆனால், இவ்வளவு நீள ‘டைம் டிராவல்’ சினிமாவில் அதுதான் ‘ரேஸ் சேஸ்’ காட்சிகள் என்பது... யானை-பசி- சோளப் பொரி!



    அடேங்கப்பா 3:

    கலை இயக்கம். பார்த்தேயிராத பல கேட்ஜெட்டுகள் படத்தின் அத்தனை நிகழ்வுகளையும் நம்பவைக்கிறது. தமிழில் இத்தனை டெக்னிக்கல் நிறைகளோடு ஒரு கால இயந்திர சினிமா என்பது... பெரிய ஜம்ப்!

    அடேங்கப்பா 4:

    VFX அணியினருக்கு ஆவ்ஸ்ம் லைக்ஸ்.. மழைத்துளியை பாதியில் நிறுத்தும் அழகியலாகட்டும், டைம் டிராவல் உண்டாக்கும் கிராபிக்ஸ் ஆகட்டும் தூள்! டைம் டிராவல் கடிகாரத்தை கையில் கட்டும்போது கச்சிதமாகவும், ‘ஜூம்’ பார்வையில் சுவாரஸ்யமான இயக்கங்களுடனும் காட்டியிருப்பது... அட்றா சக்க... அட்றா சக்க!

    அடேங்கப்பா 5:

    ‘திரு’வின் ஒளிப்பதிவு. கோபால சமுத்திரத்திற்கும், சென்னைக்கும் டோனிலேயே வேறுபாடு காண்பித்திருக்கிற கேமரா, சுரங்கப்பாதையில் சடுகுடுவென ஓடும்போதும் எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் பணியாற்றியிருக்கிறது.
    இனி.... அடப்போங்கப்பா பட்டியல்!

    அடப்போங்கப்பா 1:

    நம்பவே முடியாத தற்செயல்கள். 26 வருடங்களாக துரும்பு கூட நகராமல் இருக்க, திடுக்கென ஒரு சுபயோக சுபதினத்தில், பெட்டி சாவி முதல் மாமன் பெண் வரை அத்தனை ‘கோ-இன்சிடெண்டு’கள். படத்தில் சமந்தாவுக்கு இமாஜினோ ரொமான்ஸோ ஃபீலியா என்றால் இயக்குநருக்கு கோயின்சிடெண்டோ ஃபீலியா போல!

    அடப்போங்கப்பா 2:

    படம் ஆங்காங்கே ஸ்பீட் எடுப்பதற்குள், சரண்யா பொன்வண்ணனின் ஃப்ளாஷ்பேக், கோபாலசமுத்திரம், குடும்ப உற்சவம், வெள்ளிக்கிழமை மௌனவிரதம் என குடும்பக் காவியமாகவும் இல்லாமல், விறுவிறு சயின்ஸ் ஃபிக்*ஷனாகவும் இல்லாமல்... எல்லாம் இருக்கு... ஆனா, எதுவுமே நச்னு இல்லை என்பதாக இருக்கிறது!

    அடப்போங்கப்பா 3:

    ’தெறி’க்கவிட்ட சமந்தாவா இது? அவரைச் சொல்லியும் குற்றம் இல்லை. அழகாக, ஸ்லீக்காக இருக்கிறார். ஆனால், காதலும் இல்லாமல், காமெடியும் இல்லாமல்... ஏதோ ஒரு விநோத ரசமஞ்சரியாக இருக்கும் காதல் அத்தியாயம் ஜவ்வ்வாய் இழுக்கிறது. கோபாலசமுத்திரம் வீட்டில் சூர்யா- சமந்தா இருவரும் அட்ரஸ் அட்ரஸாகப் பேசிக்கொள்ளும் காட்சியில், நாமே ஸ்க்ரீனுக்குள் குதித்து சூர்யாவின் வாட்சில் 20 நிமிடங்களை தள்ளிவைத்துவிடலாமா என்று பரபரக்கிறது.

    அடப்போங்கப்பா 4:

    கட் & பேஸ்ட் வசனங்கள். ‘நான் ஒரு வாட்ச் மெக்கானிக்’, ’ஜெனரலா ஒரு ஜெனரல் நாலேட்ஜ்’, சமந்தா - சூர்யா பரஸ்பரம் அட்ரஸ் சொல்லிக் கொள்வது, ’நான் 26 வருஷத்துக்கு அப்பறம் திரும்ப வந்தது...’ என அத்தனை சுவாரஸ்யமில்லாத வசனங்கள்... அவ்வளவு தடவை ரிப்பீட் அடிப்பது!

    அடப்போங்கப்பா 5:

    இயக்குநர் விக்ரம் குமாரின் ’யாவரும் நலம்’, ஒன்லைனராகச் சொன்னால் நம்பவே முடியாத ஒரு கதை. ஆனால் தில், த்ரில் திரைக்கதை மூலம் அதை நம்பும்படி செய்திருப்பார். ’24’ படத்தில் அப்படியான கிறுகிறுப்போ, விறுவிறுப்போ மிஸ்ஸிங். வேகத்தைக் குறைக்கும் ரொமான்ஸ் டிராமாக்கள், பொருத்தமற்ற இடத்தில் பாடல்கள் என்று...ப்ச்! ஏ.ஆர்.ரகுமான் இசை என்பது டைட்டில் கார்டில் மட்டுமே தெரிகிறது.

    அடப்போங்கப்பா 6:

    அப்படி ஒரு வாட்ச் கிடைத்தால், அதை சமந்தாவை கரெக்ட் செய்ய மட்டுமேவா உபயோகிப்பார் ஒருவர்? அதுவும் அந்த கிரிக்கெட் காட்சிகள்... வேணாம்... அழுதுருவோம்!

    அடப்போங்கப்பா 7:

    Sci-Fi மூவி என்று எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டு, அறிவியல், காதல், ‘வானத்தை போல’ குடும்பம் என எதுவுமே முழுமையாக ஒட்டாத டைம் டிராவல்!

    டெய்ல்பீஸ்:-இயக்குநர் - எடிட்டர் கூட்டணி சுறுசுறுவென ஓவர்-டைம் பார்த்திருந்தால், கடிகார கால இயந்திர படம் பார்க்கும்போது, யாரும் தங்கள் கடிகாரத்தை அடிக்கடி பார்த்திருக்க மாட்டார்கள்!
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #45
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Todays Ad
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #46
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by Nasc View Post
    the movie isnt actually much of a sci fi as such .its more a brilliant thriller.
    +1

    Quote Originally Posted by Nasc View Post
    i thot the songs were rightly placed.
    +1 too.

    Rather than the songs, what we should really worry about in our films is the symbolic power and metaphorical implications getting explained inside the film itself. And when it's not done, it becomes a complaint - Aararoo from 24 is a perfect exemple.

    The utilisation of songs and background score points the difference in the scenes, time and suituations. Hats off ARR ji.

    The lullaby song, is not a lullaby song, it's part of the script. We are pioneers in Musical Films, and that's our prettiness. Just like the opening song about creation in Enthiran, this mother's song in 24 is about the first 'baby' of Sethu Raman - Project 24. Listen to the lyrics and the thematic music along with the visuals - Samples :

    Un Siru Kaiyin Asaivinile (En) Boomi Sulandridum (Aararo) => hands of a clock.
    Un Oor Idhaya Thudipinile (En) Kaalam Adangidum (Aararoo) => the ticking of a clock.
    Endhan Artham Nee Dhaane => amibition.
    Indha Varathai Naan Perave Ethavathai Purindhen (Aararo) => intelligence / invention / innovation.

    ... so on.
    Last edited by mappi; 9th May 2016 at 04:02 PM.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  8. Thanks Nasc thanked for this post
    Likes Nasc liked this post
  9. #47
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    29,480
    Post Thanks / Like
    Just watched.
    Very satisfied.
    Congratulations Suriya for acting in movies that take the industry forward.

    Sent from my SM-G935F using Tapatalk
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. Thanks Nasc thanked for this post
    Likes Nasc, mappi liked this post
  11. #48
    Junior Member Senior Hubber Mr.GreyShirt's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Ottawa, Canada
    Posts
    0
    Post Thanks / Like
    I think my problem with the movie was, I went into the film expecting an intelligent take on time travel but it was not. It was just a linear narrative with good guys and bad guys. They did not try to take any risk or attempt something new. Because I was expecting some intelligence to this movie I could not help but find faults throughout and nitpick everything. Which is why I wouldn't be able to sit through it again.
    It is difficult to say what is impossible, for the dream of yesterday is the hope of today and the reality of tomorrow.
    - Robert H. Goddard

  12. #49
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Mr.GreyShirt,

    As Nasc had pointed out by shifting the adjective 'Brillant' from 'Sci-fi', and placing it before 'Thriller', 24-The Movie does not exploit much the time-travel. It just takes in the simple concept (yet it's complex on it's own right). But the packaging is wonderful - all the 3 Acts have longer thrills (opening, interval, climax), plus, Atreya's tricks are a bonus.

    The time concept adapted by Vikram is under the 'casual loop' context. Simply put, it's not the time but it's based on the path. Just like getting tired while walking, the state of body gets blown each time the self enters in and out of the events irrespective to past or future. The time travel concept imagined by Vikram is not a 'closed time-like curve' where the space time bends itself with the time lines to create loops. It is more like a 'grandfather paradox', strictly keeping time as relative between chosen points of intersection, without considering the loop it generates but keeping only the alteration permanent.

    Technically the freeze frames (ex: Matrix) or bullet time (ex: Max Payne) or time stopping (Ex: X-Men: Days of Future Past) used by Vikram are based on the Markov Time (property & chain model) : a continuous-time stochastic process which means that future behaviour of the model (both remaining time in current state and next state) depends only on the current state of the model and not on historical behaviour. Such a process is a sequenc of states.

    There are other works with immpecable imagination juggling with time, the loops they handle will explode the brains, but Vikram keeps it simple and that's a beauty too.

    Kalam En Kathali, is an important song that registers and educates about the climax. It's the first experience of Mani with the Time Stopping. The song begins wonderfully with the frame freeze, suspending the rain drops in mid air. Moreover, the spitting guy seen in the song links to the climax.
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  13. Likes Freedom liked this post
  14. #50
    Junior Member Senior Hubber Mr.GreyShirt's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Ottawa, Canada
    Posts
    0
    Post Thanks / Like
    I understand and agree with everything you are saying. My problem is not with how the director used time to tell his story, my problem is with me. I went into the movie thinking it would be more than just that. It is my own fault for over analyzing the trailer and thinking of all the possibilities that could have happened which left me disappointed.

    If I think it as just a thriller than yea it is a good movie but it is not anything special like some people claim it to be. There were many issues with movie involving time and science that kept me from enjoying the movie as I should have.
    It is difficult to say what is impossible, for the dream of yesterday is the hope of today and the reality of tomorrow.
    - Robert H. Goddard

Page 5 of 11 FirstFirst ... 34567 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •