-
22nd August 2015, 08:20 PM
#21
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
22nd August 2015 08:20 PM
# ADS
Circuit advertisement
-
11th September 2015, 07:19 PM
#22
Junior Member
Devoted Hubber
வாக்கு மூலம்
கடும் வெயில் காயும் மரத்தடி
சுடும் வேளை சோர்ந்த நேரமடி
திடும் என்றே இருவர் வந்தனர்
எடும் அந்த அரிவாள் என்றனர்
கொடும் அரக்கர் அவர் கண்டு என்
குலை நடுங்கியது தொலைந்தேன்
கூட்டத்தில் மறைந்திருந்தேன்
குறிப்பாய் ஒருவர் கண்டு விட்டார்
உன்னைத்தான் தேடினேன் என்றே
ஓங்கினார் கை வீசினார் – அன்பே !
சரிந்தேன் நங்கை உன் மடியில்
உதிர்ந்தேன் நுங்காய் ஒரு நொடியில்
....... நுங்கின் ஓலம் ஓலையிடம்
Last edited by Muralidharan S; 25th September 2015 at 11:04 AM.
-
25th September 2015, 11:32 AM
#23
Junior Member
Devoted Hubber
எதிர்கொள்வேன் எதையும் என்றாயே அன்று
இறப்பையும் தாங்கும் இதயம் உண்டென்று
என்னாயிற்று இன்று வா வா நேரமாயிற்று
இழுத்தான் காவலாளி தர தரவென்று
அழுதான் ஓவென தொழுதான் தூக்குக் கைதி
என்னால் முடியாது முடியவே முடியாது
என்றுமே முடியாது என்றான் கைதி
ஆர்பாட்டம்! அமர்க்களம் ! அம்மாடி
என்னை விடுங்கள்! வேண்டினான் கைதி
ஆகாது ! ஆகாது ! அது எங்கள் விதி
அரை மணி தானே ! வா ! வா இது அதிகாரி
அனுபவி !என் செய்ய ! அது உன் தலை விதி !
இழுத்து சென்றனர் கைதியை எல்லோருமாய்
கழுத்து தொங்கி கண் தாழ்த்தி சென்றான் கைதி
அவனது மனைவியை பார்க்க ! அறுவை கேட்க !
அது சிறையின் பார்வை நேரம் !
/ * எங்கோ படித்த ஜோக்/
Last edited by Muralidharan S; 2nd October 2015 at 08:36 AM.
-
6th November 2015, 06:14 PM
#24
Junior Member
Devoted Hubber
ஆறு வார்த்தைகள் !
ஆறப்போவது ஓர்நாள் ஆன்மா - ஆயின்
தீரப்போவது எப்போது இப்பாவம் ?
சேரப்போவது எப்போது அவன் பாதம் ?
நேரப்போவது எப்போது எந்தன் முக்தி ?
இளையாழ்வான் கணைகளை கொடுக்க
எடுத்து திருக்கச்சி நம்பி தொடுத்து
அருளாளன் கச்சி வரதனிடம் விடுக்க
ஆண்டவனும் அவர் சொல் செவிமடுத்தார்
வரந்தரும் வரதனின் ஆறு வார்த்தைகள்
வைணவர் வாழ்வுதனில் ஒளி விளக்காய்
விசிட்டாத்வைத பொறியாய் அறநெறியாய்
வந்ததே எம்பெருமான் வாய் வேதப்பொருளாய் !
'அஹம் ஏவ பரந்தத்வம்' என்றான் இறைவன்
அடைய வேண்டிய பரம்பொருள் நானே என்றான்
அடுத்து அவன் 'பேதமே தரிசனம்' என்றான்
ஆண்டவன் வேறு நாம் வேறேதான் அன்றோ !
அவனடி சேர அறவழி 'உபாயம் ப்ரபத்தியே!'
அகங்காரத்தை விடு என் கதி பற்று – என்றான்
ஐயனே மரணம் வருங்கால் உனை மறப்பேனோ
அப்போதைக்கு இப்போதே நின் பாதம் பற்றவோ
ஐயம் கொண்ட கேள்விக்கு அவன் ஆசுவாசம்
'அந்திம ஸ்மிருதி வேண்டாம்' -தப்பாமல் தினம்
எனை நினை ! உன் நினைவு தப்புங்கால்
தப்பாமல் காப்பேன் அந்நாளில் உனை
ஐந்தாவதாய் மொழிந்தான் : சரண் கொண்டால்
ஆன்மா அகலும் போழ் 'அக்கணமே மோட்சம்'!
ஆறாவதாய் சொன்னது 'சத் ஆச்சார்யம் சமாஸ்ரைய! '
ஆண்டவனை அடைய ஆன்மிக குருவை பற்று !
பேரருளாளன் சொல் கேட்டு இளையாழ்வானும்
பெரியநம்பி பற்றவே வைணவம் தழைத்ததே
ஆறு வார்த்தையால் ஆண்டவன் நெறி பற்றி
அழகாய் திருவடி காட்டிய திருக்கச்சி நம்பி வாழி !
Last edited by Muralidharan S; 6th November 2015 at 06:16 PM.
-
17th November 2015, 04:06 PM
#25
Junior Member
Devoted Hubber
வானிலை மையம்
பெய்யும் என்றிடும் வானிலை மய்யம்
பெய்யாது அன்று பொய்த்து விடும் வானம்
பெய்யாது இன்று என்றால் கருவுடை மேகம்
பிய்த்துக் கட்டி வெளுத்து விடும் திண்ணம்
வாடியே வாடி வருந்தியே வருந்தி வழி
தேடியே தேடி மையம் எடுத்த நல்முடிவாம் !
வானம் மேகமூட்டமாய் காணலாம் இன்று
விட்டு விட்டும் பெய்யலாம் : இங்குமங்கும்
விடாமல் தொடர் மழை மற்றும் கனமழை
வேகமான காற்று இடியுடன் சில இடங்கள்
வானிலை அறிக்கை இனி பட்டும் படாமல்
வம்பெதற்கு! போதும் போதும் பட்டது!
இரவி இருக்கும்போது விண்மீன் தெரியாது
இரவு நேரத்தில் இருள் சூழ வாய்ப்பு - என
ஒரே மூச்சில் சொன்னால் உலகம் நம்பும்
இப்படித்தான் இனி நம் அறிக்கை இருக்கும்
இது போல் அப்பத்தாவும் சொன்னார் வருமென்று
ஆகாயம் பார்த்து கண் சுருக்கி ஜன்னல் வழியாய்
அது போல் கொட்டியது மழை நேற்று விடிய விடிய
அடடா! என் பாட்டியும் ஒரு வானிலை மையமே !
***
நகைச்சுவைக்காக எழுதியது ..
நமது வானிலை அறிக்கை நம்பும் படியாகத்தான் இருக்கிறது .
One more Bite :
Whether the weather be fine,
Whether the weather be not,
Whether the weather be cold,
Whether the weather be hot,
We’ll weather the weather,
Whatever the whether,
Whether we like it or not
~Author Unknown
Last edited by Muralidharan S; 23rd November 2015 at 09:38 AM.
-
19th February 2016, 07:02 PM
#26
Junior Member
Devoted Hubber
காப்பாற்று ! கடவுளே !
காப்பாற்று கடவுளே எனக்கு கருணை காட்டு !
கேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு!
கண்ணனின் கதறல் கரியவன் காதோ செவிடு
கைவளை ஓசை ! கதவு தட் தட்டு !அம்மா அதட்டு !
பள்ளி கொண்டது போதும் கண்ணா எழுந்திரு
பள்ளிக்கு நேரமாச்சு பார் பர பரவென்றே எழு
பக்கத்து வீட்டு பையன் கூட போய் விட்டான்
பிடிவாதம் வேண்டாம் போகத்தான் வேண்டும்
பள்ளிக்கா? மாட்டேன் அம்மா ! போகமாட்டேன் !
புரிந்து கொள் அம்மா ! பாடம் சொல் வாத்திகளுக்கும்
பின்னே பசங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையே
போகத்தான் வேண்டுமெனில் ஏனென்று சொல்?
.
.
.
.
.
.
(விடை கீழே பார்க்க ! )
அம்மாவின் பதில் :
படுத்தாதே கண்ணா ! பள்ளி ஆசிரியரே நீ தான் !
Last edited by Muralidharan S; 19th February 2016 at 07:07 PM.
-
21st February 2016, 01:01 PM
#27
Junior Member
Devoted Hubber
மனநோய் !
உன்மத்தமாய் மகன் ஆடுகிறான்
ஊரைக்கூட்டி யாருடனோ பாடுகிறான்
உறக்கத்தில் யாரையோ தேடுகிறான்
உண்மையென்ன சொல்லுங்கள் டாக்டர்
கண்மணியின் கவலை இது கலங்கினாள்
கண்ணன் சின்ன குழந்தை அவன்
கண்முன் தான் யாரும் இல்லையே பின்
காரணம் என்ன டாக்டர் ?
கவலை வேண்டாம் - டாக்டர் தில்லை
காரணம் இது மனநோய் இல்லை
கற்பனைக்கு கடிவாளம் இல்லை
கண்ணனுக்கு ஒன்றுமேயில்லை
கூட்டி வா உன் மகனை சரியாகும் !
கூட வந்த கணவனுக்கோ ஆச்சரியம்
அதெப்படி சாத்தியம் டாக்டர் ?
அவளுக்குத்தான் மகனே இல்லையே !
-
26th February 2016, 03:36 PM
#28
Junior Member
Devoted Hubber
-
5th March 2016, 08:04 AM
#29
Junior Member
Devoted Hubber
ஈரம்
தகவல் வந்தது தங்கள் தனயன்
தீரன் வீரன் அசகாய சூரன் அவன்
தண்ணீரில் தவித்தவனை
தன்னலம் இன்றி தரை சேர்த்தனன்
மறுநாள் மீண்டும் வந்த தகவல்
மீட்ட உம் மகன் உதவி வியர்த்தமே
உயிர் மீண்டவன் இன்று மாண்டான்
மனநோய் ! மரத்து தூக்கில் தொங்கினான்
அரண்டான் என் மகன் ஆகாது ஆகாதே
அவனாகவா தொங்கினான் ? தகாது தகாதே
அன்பாய் ஈரம் போக உலர்த்தினேனே !
அவனை காயப்போட்டதே நான்தானே !
Last edited by Muralidharan S; 5th March 2016 at 09:38 AM.
-
27th April 2016, 10:49 AM
#30
Junior Member
Devoted Hubber
சம்பவாமி யுகே யுகே !
மறையது உண்டு அவனியில் இன்று
அல்லாரை அழிக்க நல்லாரை காக்க
ஆண்டவன் அவதாரம் என்று!
மறைந்தது ஆதவன் மறைத்தது மாதவன்
மன்னவன் சயத்ரதன் சிரம் கொய்ய
மகா பாரதத்தில் அன்று !
மாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி
மறை பட்டர் காக்க மன்னன் சினம் போக்க
மாயன் தங்கையால் : நன்று !
அழித்தல் காத்தல் போல் ஆக்கவும்
அவன் அவதாரம் ஏதேனும் உண்டா
அன்புடன் சொல்வீர் !
கண்ணன் சொன்னது கீதையில் :
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்|
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||4-8||
(நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.)
Last edited by Muralidharan S; 27th April 2016 at 11:35 AM.
Bookmarks