-
26th November 2015, 09:22 PM
#521
Moderator
Diamond Hubber
நிஜத்திலும் நான் பாசக்கார பெண்! - நடிகை சந்திரா லட்சுமண்
தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சந்திரா லட்சுமண். அதன்பிறகு காதலிக்க நேரமில்லை, வசந்தம், மகள் போன்ற தொடர்களில் நடித்த அவர், தற்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறார்.
இதுபற்றி சந்திரா லட்சுமண் கூறுகையில், தமிழ் சீரியல்களில் நடிப்பதற்கு முன்பே நான் பல மலையாள சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதோடு, பெரும்பாலும் செண்டிமென்டான வேடங்களாகவே நடித்தேன். அதனால் கேரளா பெண்கள் மத்தியில் எனக்கு ரொம்ப நல்ல பெயர் இருந்து வருகிறது. ஆனால் தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலேயே வில்லி போன்ற ஒரு வேடத்தில்தான நடித்தேன். அந்த வேடத்தில் என்னை ஓப்பன் செய்தபோது பெரிய பில்டப் கொடுத்து படமாக்கினார் இயக்குனர் திருச்செல்வம்.
ஆனபோதும், அந்த சமயத்தில் மலையாள சீரியல்களிலும் நான் பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால், தமிழில் அடுத்தடுத்து வந்த டைட்டில் வேடங்களில் உடனடியாக என்னால் கமிட்டாக முடியாதநிலை இருந்தது. ஆனால் அதன்பிறகு தமிழுக்கு வந்து விட்டேன். அதோடு, ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி உள்பட சில படங்களிலும் நடித்திருக்கிறேன்.
மேலும், தற்போது நான் நடித்து வரும் பாசமலர் தொடரில் அண்ணன் - தங்கையை மையப்படுத்திய கதையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் தங்கை வேடத்தில் நடிக்கும் நான் எனது செண்டிமென்டான நடிப்பினால் ஏராளமான குடும்பப் பெண்களை கவர்ந்துவருகிறேன். அதனால் சில சீரியல்களில் நெகடீவாக நடித்தபோது என்னை திட்டியவர்களே இப்போது பாராட்டுகிறார்கள். இதையடுத்து இனிமேல் தொடர்ந்து செண்டிமென்ட்டான வேடங்களுக்கு முதலிடம் கொடுக்க முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறும் சந்திரா லட்சுமண், நான் நிஜத்திலும ரொம்ப பாசக்கார பெண். அனைவரிடமும் பாசமாக பழகுவேன். அதைத்தான் இந்த சீரியலில் பிரதிபலித்திருக்கிறேன் என்கிறார்.
நன்றி: தினமலர்
-
26th November 2015 09:22 PM
# ADS
Circuit advertisement
-
26th November 2015, 09:25 PM
#522
Moderator
Diamond Hubber
ராதிகாவுடன் போட்டி போட்டு நடித்தேன்! - நீலிமா ராணி
சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்பட பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் நீலிமா ராணி. இப்போது வாணி ராணி, தாமரை, பவானி ஆகிய தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். பாசிட்டீவான வேடங்களை விட நெகட்டீவான வேடங்களில் நடிப்பது தான் சவாலானது என்கிறார் அவர்.
மேலும், இதுவரை தான் நடித்துள்ள வேடங்கள் பற்றி நீலிமா ராணி கூறுகையில், நான் சினிமாவில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். தேவர் மகன் தொடங்கி இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். அந்த வகையில், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் கவனிக்கப்படும் வேடங்களில் நடித்தேன். இப்போதும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
அதேசமயம், சின்னத்திரையில்தான் நான் அதிகப்படியான தொடர்களில் நடித்துள்ளேன். ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொருவிதமான வேடங்கள். ஒரு தொடரில் அமைதியான கேரக்டர் என்றால் இன்னொரு படத்தில் அதிரடியான வேடம். மற்றொரு தொடரில் செண்டிமென்ட் வேடம். இப்படி சின்னத்திரையில் நான் ஏராளமான கேரக்டர்களில் நடித்து விட்டேன். அதனால் சின்னத்திரை என் பண்பட்ட நடிகையாக மாற்றி விட்டது. அதனால் இப்போது முன்பைவிட சவாலான வேடங்களாக தேடிப்பிடித்து நடிக்கிறேன்.
குறிப்பாக, வாணி ராணி தொடரில் எனக்கு நெகடீவ் ரோல். ராதிகா மேடத்தையே டென்சன் செய்யக்கூடிய வேடம். அதனால் அவருக்கு இணையாக அந்த வேடத்தில் நிமிர்ந்து நின்று போட்டி போட்டு நடித்தேன். அது எனக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்து விட்டது. ராதிகா மேடம் உள்ளிட்ட சக கலைஞர்கள் கூட எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். அதனால், இன்னும் சவால் விடக்கூடிய நிறைய வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது என்கிறார் நீலிமாராணி.
நன்றி: தினமலர்
-
15th December 2015, 01:00 AM
#523
Moderator
Diamond Hubber
சின்னத்திரைக்கு குட் பை சொல்கிறார் ஓ.ஏ.கே.சுந்தர்
பழம்பெரும் நடிகர் ஓ.ஏ.கே தேவரின் மகன் ஓ.ஏ.கே.சுந்தர். தந்தையை போலவே சினிமாவில் அறிமுமாகி குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். விருமாண்டி, குசேலன், பேராண்மை, வேல் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தார்.
திடீரென சின்னத்திரைக்கு வந்தார். மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடிக்க ஆரம்பித்தார். நீண்ட நெடிய தொடரான அதில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. தற்போது மகாபாரதம் தொடரில் இவரது போர்ஷன் முடிந்து விட்டதால் சின்னத்திரைக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.
தற்போது புத்தன் ஏசு காந்தி, ஜே உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். "வில்லன், குணசித்திரம், காமெடி என விதவிதமான கேரக்டர்களில் நடித்து சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் இனி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன்" என்கிறார் ஓ.ஏ.கே.சுந்தர்.
நன்றி: தினமலர்
-
15th December 2015, 01:02 AM
#524
Moderator
Diamond Hubber
நான் சென்னை தமிழச்சி- சந்திரா லட்சுமண்
தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் ஒரு முக்கியமான நெகடீவ் ரோலில் நடித்தவர் சந்திரா லட்சுமண். அதையடுத்து பல தொடர்களில் நடித்த அவர் தற்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறார். மேலும், அவரது பேச்சில் மலையாள வாடை அடிப்பதால் சின்னத்திரை வட்டாரங்களில் அவரை மலையாள நடிகை என்றே நினைத்துக்கொள்கிறார்கள்.
இதுபற்றி சந்திரா கூறும்போது, நான் மலையாள சினிமாவில் 6 படங்களில் நடித்து விட்டுத்தான் தமிழுக்கு வந்தேன். ஸ்ரீகாந்த்-திரிஷா நடித்த மனசெல்லாம் என்ற படத்தில் தங்கை வேடத்தில் நடித்தேன். அதன்பிறகு திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடரில் நடித்தேன். பின்னர் தமிழ், தெலுங்கு என பல சீரியல்களில் பிசியாகி விட்டேன். மேலும், என்னுடன் நடிப்பவர்கள் அனைவருமே எனது தமிழில் மலையாளம் வாடை இருப்பதால் என்னை மலையாளி என்றே நினைத்துக்கொள்கிறார்கள். சிலர் என்னிடம்கூட நீங்கள் மலையாளியா என்கிறார்கள்.
ஆனால், நிஜத்தில் நான் மலையாளி அல்ல. பாலக்காட்டு அய்யர் பெண் நான். எங்கள் வீட்டில்கூட அனைவருமே தமிழில்தான் பேசுவோம். சீரியல்களில் தமிழில் இருக்கும் டயலாக் பேப்பரைகூட படித்துதான் நடிக்கிறேன் என்று கூறும் சந்திரா லட்சுமண், நான் பிறந்து வளர்ந்தது என்னவோ பாலக்காடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக சென்னைவாசியாகி விட்டேன். ஆக, இப்போது நான் சென்னை தமிழச்சி என்கிறார்.
நன்றி: தினமலர்
-
7th January 2016, 08:23 PM
#525
Moderator
Diamond Hubber
தாரை தப்பட்டை மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறது டி-ஸ்கவரி சேனல்
டிஸ்கவரி சேனலுக்கும், சினிமாவுக்கும் சம்பந்தமில்லைதான். ஆனால் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் டிஸ்கவரி தமிழ் சேனல் சினிமாவில் கால் பதிக்கிறது
பாலா இயக்கி உள்ள 'தாரை தப்பட்டை' படம் தஞ்சாவூரில் வாழும் கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பற்றியது. கதைப்படி டிஸ்கவரி தமிழ் சேனல் நிருபரும், கேமராமேனும் தஞ்சையில் உள்ள பிரபலமான கரகாட்ட கலைஞர் சாமி புலவரை பேட்டி எடுக்கச் செல்கிறார்கள். அவர் இறந்துவிட அவரது மகன் சன்னாசியிடம் (சசிகுமார்) கரகாட்டம் பற்றி கேட்கிறார்கள். அவர் சொல்லும்போது அது கதையாக விரிகிறது.
இதுபற்றி பாலா, டிஸ்கவரி சேனல் அதிகாரிகளிடம் சொன்னபோது அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட சேனல், அதையே தாங்களும் ஒரு டாக்குமெண்டரியாக தயாரித்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு பால ஒப்புக் கொள்ள தற்போது இரண்டு பணிகளும் முடிந்திருக்கறிது.
"தென்னிந்தியாவில் எங்கள் சேனலுக்கு நல்ல மதிப்பு உள்ளது. தென்னிந்திய கலைகளை பற்றி உலகிற்கு தொடர்ந்து சொல்கிறோம். தாரை தப்பட்டை மூலம் கரகாட்டக் கலையை ஆய்வு செய்து அதனையும் சொல்ல இருக்கிறோம். ஒரு நல்ல பணியில் பாலாவுடன் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் டிஸ்கவரி சேனலின் தென்னிந்திய பொது மேலாளர் ராகுல் ஜோரி.
நன்றி: தினமலர்
-
7th January 2016, 08:29 PM
#526
Moderator
Diamond Hubber
சினிமாவில் பிசியாகும் "அது இது எது" டைகர் தங்கதுரை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அது இது எது' நிகழ்ச்சியில் சுமார் 60 எபிசோடுகளில் நடித்திருப்பவர் டைகர் தங்கதுரை. சின்னத்திரையில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது சினிமாவில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் தங்கதுரை. தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் அளித்த தகவல்கள் இங்கே இடம்பெறுகிறது...
2014-ல் நான் விஜய் டிவியில், 'அது இது எது' நிகழ்ச்சியில் என்ட்ரி ஆனேன். டைரக்டர் தாம்ஸன் கொடுத்த வாய்ப்பு காரணமாக ஒவ்வொரு எபிசோடுகளிலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தேன். குறிப்பாக, எந்திரன் படத்தில் ரஜினி நடித்த சிட்டி கேரக்டரில் நான் நடித்ததற்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அதேபோல் அரங்கநாதர் என்றொரு கேரக்டரில் நடித்தேன். அதில் நான் பேசவே மாட்டேன். எப்போதாவது பேசினாலும் பழைய ஜோக்குகளாகத்தான் சொல்வேன். அதனால் அதன்பிறகு எனக்கு பழைய ஜோக்கு தங்கதுரை என்ற பெயர் உருவானது. சில ஊர்களில் அந்த நிகழ்ச்சியை மேடைகளில் செய்கிறபோது பழைய ஜோக் தங்கதுரை புது ஜோக்காக சொல்லுங்கள் என்று ரசிகர்களே சொல்லும் அளவுக்கு அது பெரிய அளவில் ரீச் ஆனது.
ஆக, சின்னத்திரையில் தோன்றிய ஒரே வருடத்தில் நான் பெரிய அளவில் பிரபலமாகி விட்டேன். அதற்கு காரணம் டைரக்டர் தாம்ஸன் தான். அதனால் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மேலும், எங்கேயும் எப்போதும், வாலு போன்ற படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறேன். இப்போது மன்னர் வகையறா, அட்டி, வடசென்னை, சைனா உள்பட அரை டஜன் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறேன். அந்த வகையில், சின்னத்திரை, சினிமா என்று இரண்டு மீடியாக்களிலும் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் டைகர் தங்கதுரை.
நன்றி: தினமலர்
-
7th January 2016, 08:32 PM
#527
Moderator
Diamond Hubber
சீரியல் இயக்குனராகிறார் பாத்திமா பாபு
சின்னத்திரையில் நட்சத்திர செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமாபாபு. அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் பொறுப்பு வகித்தார். அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வருகிறார்
பாத்திமா பாபுவின் அடுத்த அவதாரமாக அவர், இப்போது நாடக இயக்குனராகியிருக்கிறார். அவ்வப்போது நாடகங்களிலும் நடித்து வந்த பாத்திமா, இப்போது தாலியா தகரமா என்ற காமெடி நாடகத்தை இயக்கி, அதில் ஹீரோயினாக நடித்தும் வருகிறார். இந்த நாடகத்தை சித்ராலயா ஸ்ரீராம் எழுதியுள்ளார்.
அடுத்து பாத்திமா சின்னத்திரையில் காமெடி சீரியல் ஒன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார், சித்ராலயா ஸ்ரீராமுடன் சேர்ந்து இதற்காக கதையை உருவாக்கி வருகிறார். இதற்கு சரியான தயாரிப்பாளரையும் தேடிக் கொண்டிருக்கிறார். சினிமா காமெடி நடிகர்களுடன் சின்னத்திரை காமெடி நடிகர்களும் நடிக்கும் தொடராக இது இருக்கும் என்று தெரிகிறது.
நன்றி: தினமலர்
-
7th January 2016, 08:34 PM
#528
Moderator
Diamond Hubber
மீண்டும் சின்னத்திரைக்கு வர காத்திருக்கிறார் பெப்சி உமா
பெப்சி உமாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. முதல் நட்சத்திர தொகுப்பாளினி அவர்தான். அவர் நடத்தியது ஒரு டெலிபோன் நிகழ்ச்சிதான். ஆனால் அவர் உடுத்தி வரும் பட்டுப்புடவைக்காக பெண்களும், அவரது சிரிப்புக்காக ஆண்களும் காத்துக் கிடந்தார்கள். பல வருடங்கள் ஒளிபரப்பானது அந்த நிகழ்ச்சி. பின்னர் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
தற்போது பெப்சி உமா ஏற்றுமதி இறக்குமதி, மற்றும் கட்டிடத்துறை தொடர்பான ஒரு சர்வதேச நிறுவனத்தின் தமிழ்நாட்டு பிரிவுக்கு அதிகாரியாக இருக்கிறார். பல சேனல்கள் அவரை மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைத்தபோது மறுத்துவிட்டார். சும்மா அரட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் தோன்ற விருப்பமில்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் தனக்கு புகழ்தேடிக்கொடுத்த சின்னத்திரையை மறந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். புதிய கான்செப்ட்டோடு நல்ல நிகழ்ச்சி அமைந்தால் மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஐடியாக இருக்கிறதாம் பெப்சி உமாவுக்கு.

நன்றி: தினமலர்
-
19th January 2016, 11:24 PM
#529
Moderator
Diamond Hubber
இரண்டு பதவி வகிக்கும் சோனியா!
செல்லமே, முகூர்த்தம், மாதவி உள்பட சில தொடர்களில் நடித்து வருபவர் சோனியா. சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் நடித்து வரும் இவர், மேற்படி இரண்டு துறைகளிலும் இரண்டு பதவி வகித்து வருகிறார். அதாவது, நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது அதில் செயற்குழு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டு அதில் வென்றார் சோனியா. அதையடுத்து சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோதும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆக, ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகித்து வருகிறார் சோனியா.
இதுபற்றி அவர் கூறுகையில், ''நான் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். தமிழைப்பொறுத்தவரை ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை தொடங்கி சமீபத்தில் வெளியான ஈட்டி வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளேன். அதேபோல் பல மெகா சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதனால் என்னை சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் எல்லோருக்குமே நன்றாக தெரியும். அதனால்தான் இரண்டு சங்க தேர்தல்களிலுமே போட்டியிட்டேன். அப்படி போட்டியிட்டு இரண்டு மீடியாக்களிலும் வெற்றி பெற்றேன். என்னதான், நடிப்பில் பிசியாக இருந்தாலும், பொறுப்பை உணர்ந்து சம்பந்தப்பட்ட பணிகளையும் செவ்வனே செய்து வருகிறேன்--; என்கிறார் சோனியா.
நன்றி: தினமலர்
-
19th January 2016, 11:26 PM
#530
Moderator
Diamond Hubber
ஆஸ்ரமத்தில் ஒய்வெடுத்த ரம்யா
சின்னத்திரை தொகுப்பாளினி, பண்பலை தொகுப்பாளினி மாடல் அழகி மற்றும் பெரியதிரை நடிகை இப்படி பன்முகங்களை கொண்டவர் ரம்யா. மிகவும் ஜாலியான டைப்பான ரம்யாவுக்கு சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகள். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்தார். இனி மாடலிங் மற்றும், சினிமாவில் தீவிரமா இறங்க முடிவு செய்தார். ஓகே கண்மணி படத்தில் நடித்த அவர் ஒரு ஸ்பா காலண்டருக்கு மாடலாக பணியாற்றி உள்ளார்.
புத்துணர்ச்சியோடு பணிகளை கவனிக்கவும், கவலைகளை மறக்கவும் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள மலையடிவாரத்தில் இயங்கும் சித்த வைத்திய ஆஸ்ரமம் ஒன்றில் ஒரு வாரம் தங்கி விட்டு வந்திருக்கிறார். மனதுக்கும், உடலுக்கும் இதம் தரும் சிகிக்சைகள் எடுத்து திரும்பியிருக்கிறார். செல்போன், இண்டர்நெட் எந்த தொடர்பும் இல்லாமல், யாருடனும் பேசாமல் ஆசிரமத்தில் கொடுக்கும் உணவு, தரும் சிகிச்சையை பெற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறார். ரம்யா இப்போது புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை துவங்கி இருக்கிறார்.
நன்றி: தினமலர்
Bookmarks