வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் ஆறுதல் கூறி வருகிறார்.
தற்போது இரண்டாவது நாளாக நேற்றும் சென்னையில் உள்ள பல தெருக்களுக்கு வீதி வீதியாக சென்று மக்கள் குறை கேட்டு அதை பூர்த்தி செய்து வருகிறார்.
இந்நிலையில் 1 லட்சம் போர்வைகளை இளையராஜா வழங்கியுள்ளார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் அவரை மனதார பாராட்டியுள்ளனர்.
வசூலில் ரஜினியை நெருங்கிய அஜித்- முழு விவரம் தமிழ் சினிமாவில் வசூல் மன்னர்கள் என்றால் ரஜினி, விஜய், அஜித் தான். இவர்களின் சாதனையை இவர்களே உடைத்தால் தான் உண்டு.
அந்த வகையில் விஜய், அஜித்திற்கு மேல் என்றும் எதிலும் நம்பர் 1ஆக இருப்பது சூப்பர் ஸ்டார் தான். அந்த இடத்தை அடைய தான் இருவரும் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் வேதாளம் மலேசியா பாக்ஸ் ஆபிஸில் தற்போது வரை MYR 8,063,792 வசூல் செய்து 3ம் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் சிவாஜி MYR 8,589,800 வசூல் செய்துள்ளது.
இன்னும் சில வாரங்கள் இதே வசூல் நீடித்தால் வேதாளம் சிவாஜியை பின்னுக்கு தள்ள வாய்ப்பிருக்கின்றது. ஆனால், எவரும் எட்ட முடியாத இடத்தில் எந்திரன் தான் இன்றும் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தியமாக யாராலும் முடியாது- சித்தார்த் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடி ஓடி உதவியவர் சித்தார்த். இவர் இன்று கடலூர் சென்றுள்ளார்
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழக முதல்வரால் தான் இத்தனை சீக்கிரம் இயல்பு நிலைக்கு வர முடிந்தது.
வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஆகியிருந்தால் இத்தனை சீக்கிரம் மீண்டிருக்க முடியாது, என தமிழக முதல்வரை புகழ்ந்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அள்ளிக்கொடுத்த ரகுமான் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் சமீபத்தில் சென்னை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மிகவும் வருந்தி ஒரு சில கருத்துக்களை வெளியிட்டார்.
சமீபத்தில் வந்த தகவலின்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரகுமான் ரூ 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளாராம்.
இதுமட்டுமின்றி பல பிரபலங்கள் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
கடலூர் முழுவதும் சிவகார்த்திகேயன் பேச்சு தானாம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவர் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த உயரத்தை அடைந்தார்.
இந்நிலையில் சென்னை மட்டுமின்றி கடலூரிலும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தற்போது தான் கடலூரை கவணிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலேயே பல உதவிகளை செய்துள்ளாராம். இதை டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ‘என்ன சார் கடலூரில் எங்கு சென்றாலும் உங்களை பற்றி தான் பேச்சு’ என்று கூறியுள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அதை மட்டும் செய்யாதீர்கள்- ஜெயம் ரவி வேண்டுக்கோள் தனி ஒருவன் 100வது நாள் வெற்றியெல்லாம் ஓரங்கட்டி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. இவர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்தார். அதில் அவர், ஒரு செய்தியை குறிப்பிட்டுயிருந்தார்.
அது என்னவென்றால், 'உதவி செய்யுங்கள், ஆனால், அவர்களிடம் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளாதீர்கள்' என கூறியிருந்தார்.
மக்களுக்காக இப்படி இறங்கினாரா பார்த்திபன்? படம் உள்ளே எப்போதும் தன் படங்களில் தொடர்ந்து புரட்சிகரமான களத்தை தொடுபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் பல உதவிகளை செய்தார்.
இதில் ஒரு படி மேலே சென்று தானே தண்ணீரல் இறங்கி மக்களுடன் இணைந்து வேலை பார்த்தார்.
இதைக்கண்ட மக்கள் அனைவரும் சினிமாவில் மட்டுமில்லை நிஜத்திலும் பார்த்திபன் ஹீரோ தான் என்று கூறியுள்ளனர்.
ஹன்சிகாவிற்கு நன்றி தெரிவித்த டிடி தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் டிடி. இவர் தான் சின்னத்திரை பெண் தொகுப்பாளர்களில் நம்பர் 1.
இவர் சென்னையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இது மட்டுமின்றி தன் சமூக வலைத்தள பக்கத்தில் பல விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை நிவாரணத்திற்கு ஹன்சிகா ரூ 15 லட்சம் கொடுத்துள்ளார். இதற்கு பிரபலங்களில் முதல் ஆளாக தன் நன்றியை டிடி, ஹன்சிகாவிற்கு கூறியுள்ளார்.
Bookmarks