Page 155 of 337 FirstFirst ... 55105145153154155156157165205255 ... LastLast
Results 1,541 to 1,550 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1541
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    நன்றி!

    'பட்டு வண்ணச் சிட்டு' பாடலுக்கான தங்கள் ஏக்கமும், அந்தப் பாடலை அலசிய விதமும் அருமை. (எஸ்.வி சார் மனம் குளிர்ந்திருப்பார். உங்களுக்கு ட்ரீட் நிச்சயம் உண்டு) பெண் நளின நடை அசைவுகள் தலைவருக்கு கை வந்த கலை. தாங்கள் சொல்லியிருந்தபடி எம்.ஜி.ஆர் அவர்களும் இந்தப் பாடல் காட்சியில் நன்றாகவே செய்திருப்பார். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அறிஞரின் பொன் வாக்கியத்தை அப்படியே நீங்கள் பிரதிபலித்திருப்பது பாராட்டுக்குரியது. தங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் யோகானந்த் தலைவரின் பல படங்களை இயக்கியவர் என்பதால் இந்தப் பாடல் காட்சியில் தலைவர் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை தங்களுக்கு எழுந்தது நியாயமே.

    எனக்குக் கூட 'சுடரும் சூறாவளியும்' படத்தில் 'அனுபவம் தானே வரவேண்டும்' என்ற பாடல் தலைவருக்குக் கிடைக்காமல் போய் விட்டதே என்று மிகவும் மனம் வருந்தும். 'பாடகர் திலகம்' முத்துராமனுக்குப் பாடுவதை கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் அப்படியே நடிகர் திலகத்திற்கு பாடியது போலவே இருக்கும். கூட ராட்சஸி வேற. நிர்மலாவிற்கு குரல் தந்திருப்பார். ரொம்ப அருமையான தலைவருக்கு ஏற்ற பாடல். நான் அப்போதெல்லாம் சிலோன் வானொலியில் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இது தலைவர் படத்தின் வெளிவராத 'ஞாயிறும் திங்களும்' படப் பாடல் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். நிஜமாகவே இணைய உறவு வந்த பின்தான் இந்தப் படம் 'சுடரும் சூறாவளியும்' என்றே தெரியும்.



    பாடலின் ஆரம்ப இசையே ஆனந்தம் கூட்டி விடும்.

    'நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்' என்று ஈஸ்வரி பாடும் போது தலைவராக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? 'ஓகே' என்பது போல எவ்வளவு அழகாக தலையசைவில் 'சொல்லித்தர சம்மதம்' என்பது போல காட்டியிருப்பார். முத்து இதுக்கெல்லாம் ரொம்ப தூரம். அவர் இதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார்.

    'ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்' என்ற ஆண் குரலுக்கு அவர் வெகு இலகுவாக கைவிரல்களை காதலி மீது பிரயோகிக்கும் காட்சி கண் கொள்ளாத அளவு நிறைந்திருக்குமே.

    முதல் சரணம் தொடங்குமுன் ஒலிக்கும் இடையிசைக்கு முத்துராமன் ஓட்டமும் நடையுமாக நிர்மலாவை நோக்கி வருவார். இதே தலைவரின் ஓட்டமும், நடையும் அந்த இடத்தில் இருந்திருந்தால் கொட்டகை கைத்தட்டல் ஓசையில் இடிந்து விழாதோ! ஒலிக்கும் ஷெனாய் இசைக்கு நிர்மாலாவின் இடுப்பை பின்னாலிருந்து அணைத்தபடி அவர் கழுத்தில் முகம் புதைத்து கண்களை மேலிருத்தி தூள் கிளப்பியிருக்க மாட்டாரா?

    'தலை சாயும் பெண்ணுக்கு சந்தோஷம் என்ன?'

    என்று நிர்மலாவின் முகத்தை ஆட்காட்டி விரலால் தூக்கி நிறுத்தி, ஒரு கண்ணை ஸ்டைலாக அடித்து நம்மை சந்தோஷப்பட வைத்து இருப்பாரே! முத்துவோ நிர்மலாவின் கன்னத்தில் விரலால் பொட்டு வைத்துக் கொண்டிருப்பார்.

    'இது கன்னந் தொட்டு, கையைத் தொட்டு எண்ணங்களை உண்டாக்கும் காதல் பாடம்'

    என்ற வேகமான வரிகளுக்கு நிர்மலா இடையசைத்து முன்னால் நடந்து வர, 'நடிகர் திலகம்' அதைப் பாடியபடியே அப்படியே சைட் வாக்கில் ஒரு வேகமான வாக் நடந்து வந்து அள்ளியிருப்பாரே!

    'ரிரகமததமாரி'

    என்று அவர் வாயசைப்பில் பின்னி, நிர்மலாவின் மேல் கைகளால் தாளம் போட்டபடி அசத்தியிருப்பாரே! முத்து அங்கிருக்கும் பூச்செடி ஒன்றில் இருக்கும் பூவை பிடித்து ஆட்டியபடி தனியே இதைப் பாடுவார்.

    'சசரிகமபபசச'

    என்ற ஈஸ்வரியின் அமர்க்களத்திற்கு நிர்மலா 'சொர்க்கம் பக்கத்தில்' 'எங்க மாமா' பாடலில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து ஆடுவது போலவே ஆடிக் காட்டுவது வேறு நமக்கு 'இந்த இடத்தில் நடிகர் திலகம் இல்லையே' என்று இன்னும் வெறியைக் கூட்டும்.

    இப்படி பாடல் முழுதும் சொல்லிக் கொண்டே போகலாம். இன்னொரு 'காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்', 'பத்துப் பதினாறு முத்தம் முத்தம்' போல அற்புதமான நடிகர் திலகத்தை நாம் இப்பாடலில் கண்டு ரசித்திருக்கலாம். ம்...நாகையா பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

    நிர்மலாவுடன் நடிகர் திலகத்திற்கு அதிகமான பாடல்கள் இல்லை. ஆனால் பல பாடல் காட்சிகளில் தலைவருடன் தோன்றியிருப்பார். தங்கச் சுரங்கம், லஷ்மி கல்யாணம் இப்படி.

    ஜோடியாக நடித்த 'தங்கைக்காக' படத்தில் ஒரு அருமையான டூயட் பாடல், அப்புறம் நம் எல்லோருக்கும் பிடித்தமான 'சொர்க்கம் பக்கத்தில்' பாடல். 'லஷ்மி கல்யாணம்' படத்தில் 'போட்டாளே... போட்டாளே... உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே' பாடலில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து கும்பலோடு நிர்மலாவும் ஆடுவார். இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் பாவனைகளும், கேலிகளும், கிண்டல்களும், நக்கல்களும், குத்துக்களும், நையாண்டி சிரிப்புகளும், கொள்ளை அழகும், எளிமையான உடையும் எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வளவு அற்புதமாக ஆடியிருப்பார். முழுப் பாடலையும் ஆய்வு செய்து எழுத மனம் துடிக்கிறது.

    நம் கற்பனைக்கு வடிகாலாக இந்தப் பாடலைப் பார்த்து நம் தாகத்தை தணித்துக் கொள்ளுவோம். இந்தப் பாடல் உங்களின் உயிர்ப்பாடல் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் அனுபவித்து என்னிடம் பலமுறை போனில் உரையாடி இருக்கிறீர்கள். தலைவர் ஒவ்வொரு பிரேமிலும் நிர்மலாவுடன் கலக்குவார். அதுவும்

    'எனைத் தேடி வரும் எதிர்காலம்' என்று அவர் பாடலை ஆரம்பிக்கும்போது கைவிரல்களை நீட்டி சொடுக்குப் போட்டவாறே கைகளை கொஞ்சம் கொஞ்சமாக மடக்குவாரே! (மதுண்ணா! கவனிக்க)

    'அதைத் தெரிவிப்பதே இந்த நேரம்'

    வலதுகை ஆட்காட்டி விரலை தோள்பட்டைக்குப் பின் வட்டமடிக்க வைத்து நிர்மலாவிடம் படுஸ்டைலாக சின்னப் பையன் போல ஒரு நடை நடந்து வருவாரே!

    போங்க ராகவேந்திரன் சார்! இனிமே தாங்காது.

    Last edited by vasudevan31355; 16th November 2015 at 08:26 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks RAGHAVENDRA thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1542
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
    பரிசு படத்தில் இடம் பெற்ற பட்டு வண்ண சிட்டு பாடலை பற்றியும் மக்கள் திலகத்தை பற்றியும் தாங்கள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி .இனிய நண்பர் திரு வாசு சார் கூறியது போல் மனம் குளிரிந்து விட்டது .இன்று காலை வரை 5 முறை தொடர்ந்து பட்டு வண்ண சிட்டு பாடலை வீடியோவில் பார்த்து மகிழ்ந்தேன் .நன்றி .
    நடிகர் திலகத்துடன் தாங்கள் இருக்கும் நிழற் படம் அருமை ராகவேந்திரன் சார் .

  5. Thanks RAGHAVENDRA, vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #1543
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

    நடிகர் திலகத்துடன் தாங்கள் இருக்கும் நிழற் படம் அருமை ராகவேந்திரன் சார் .
    ஆமாம் ராகவேந்திரன் சார். நேற்றே கவனித்தேன். தங்கள் நியூ அவதார் அமர்க்களமோ அமர்க்களம். தெய்வத்துடன் ஈடு இணையில்லா பக்தர். அருமை.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks RAGHAVENDRA thanked for this post
  8. #1544
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    என்ன ஒரு டெலிபதி சார். தாங்கள் குறிப்பிட்ட அதே சுடரும் சூறாவளி பாடலை நானும் நினைத்திருந்தேன். இந்தத் தொடரில் கொண்டு வரவும் இருந்தேன். என் மனதில் உள்ளதை அப்படியே தங்கள் எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்.

    சொல்லப் போனால் தாங்கள் நடிகர் திலகத்தை அந்தப் பாடல் காட்சியில் உருவகப் படுத்திய விதம்... ஆஹா... அப்படியே கண் முன்னால் தலைவர் அந்த ஸ்டைலையெல்லாம் செய்கின்றார்... மனக்கண்முன் அந்தக் காட்சி அப்படியே விரிகிறது. பிரமாதம்.

    இந்தத் தொடரின் முழுப் பரிமாணத்தையும் நோக்கத்தையும் என்னை விட தாங்களே மிகச் சரியாக கொண்டு வந்து விட்டீர்கள். இதற்காகத் தங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

    வெண்ணிற ஆடை நிர்மலா ஒத்துழைப்புத் தந்திருந்து, சிவகாமியின் செல்வன் படத்தில் நடித்து முடித்திருந்தால், அந்த ஆடிக்குப் பின்னே பாடலின் பரிமாணமே இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும். லதாவும் நன்றாகவே செய்திருந்தார். என்றாலும் நிர்மலா அந்தப் படத்திற்கு கூடுதல் போனஸாக அமைந்திருப்பார்.

    அதுவும் ஈஸ்வரியின் குரல் நிர்மலாவிற்கு மிக அழகாகப் பொருந்தும். இதற்கு இன்னொரு உதாரணம், அன்னையும் பிதாவும் படத்தில் இடம் பெற்ற பொன்னாலே வாழும் புதிய உலகமிது.

    தங்கைக்காக படத்தையும் நினைவு கூர்ந்து நமக்குள்ளே மீண்டும் தலைவரின் மேல் உள்ள பக்தியை அதிகமாக்கி விட்டீர்கள். இந்தப் பாடல் காட்சியை மீணடும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதுவும் அந்தக் கையை சொடுக்குப் போடும் ஸ்டைல்... ஆஹா...

    யோகானந்த் பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் வித்தியாசமாக செய்வார். கண்ணியமாக இருக்கும். ஆர்ப்பாட்டங்கள் அதிகம் இருக்காது. அதுவும் நடிகர் ,திலகம் நடிக்கிறார் என்றால் நுணுக்கங்கள் கண்டிப்பாக இடம் பெற்று விடும். இதற்காகவே அவர் என்னுடைய ஃபேவரிட் இயக்குநராகிறார். குறிப்பாக அவர் படங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு மிகவும் subtle ஆக இருக்கும்.

    தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
    Last edited by RAGHAVENDRA; 16th November 2015 at 10:00 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #1545
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    சுசீலா 80

    தென்னகத் திரையுலகின் மறக்க இயலாத பாடகிகளில் ஒருவரான சுசீலாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 80 வயது. ஞானகோகிலம் என்று பெருமையுடன் அழைக்கப்படும் பி.சுசீலா தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தலைமுறைகளைக் கடந்தும் நினைவில் நிற்கும் பாடல்களைப் பாடியவர். ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனத்தால் மாதச் சம்பளம் கொடுத்து அமர்த்தப்பட்ட அரிதான பாடகி அவர். பாடல் வரிகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் பாடலின் முழு உணர்வையும் பாவத்தையும் கொண்டுவரும் மேதை என்று புகழப்பெற்றவர்.

    கேரளத்தில் இன்றும் தாலாட்டுப் பாடலாகத் தாய்மார்களால் பாடப்படும் ‘பாட்டுப்பாடியுறக்கம் ஞான்’ பாடல்தான் இவரது முதல் மலையாளப் பாடல். இசையமைப்பாளர் வி.தக்ஷிணாமூர்த்தி. தென்னிந்தியாவில் அதிகபட்ச ரசிகர்களைக் கொண்ட ஒரே பாடகி இவர்தான் என்கிறார் பாடகர் ஜெயச்சந்திரன். ‘சொன்னது நீ தானா’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘நலந்தானா’ முதலிய அமரத்துவம் வாய்ந்த பாடல்களைப் பாடிய சுசீலாவை வாழ்த்துவோம்.

  11. Likes Russellmai liked this post
  12. #1546
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes rajeshkrv liked this post
  14. #1547
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ஹேமமாலினியின் உருவ ஒற்றுமையோடு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கப் பெற்ற பத்மப்ரியாவின் நினைவு நாள் இன்று.

    ஹீரோ 72 படத்தில் நடிக்க ஸ்ரீதர் முதலில் அணுகியது ஹேமமாலினி அவர்களை. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர்களால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட பத்மப்ரியா ஸ்ரீதரின் கண்ணில் பட்டு விட தமிழ் சினிமாவில் கிடைத்த புதிய கதாநாயகியாக, மோதிரக்கையால் குட்டுப்படும் வாய்ப்பினையும் பெற்றார். முதல் படத்திலேயே நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடித்தவர்.

    இதைத் தொடர்ந்து அவருக்கு நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த படங்களில் மன்னவன் வந்தானடி, அவன் ஒரு சரித்திரம், டாக்டர் சிவா, எங்கள் தங்க ராஜா, அவன் தான் மனிதன் உள்ளிட்ட பல படங்கள். ஆனால் ஸ்ரீதரின் ஒப்பந்தம் காரணமாக வெளிப்படங்களில் நடிக்க முடியவில்லை என ஒரு சமயம் அவர் வருத்தப்பட்டு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அந்தப் படங்களெல்லாமே மஞ்சுளா அவர்களுக்குப் போயின. அதற்குப் பிறகு சில மற்ற படங்களில் நடித்தார். அவருடைய பெயர் சொல்ல ஒரு படமாக உறவு சொல்ல ஒருவன் படம் அமைந்தது. மற்றும் வாழ்ந்து காட்டுகிறேன் படமும் நல்ல பெயரைத் தந்தது.

    நேற்று நம்முடைய நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பாக வைர நெஞ்சம் திரையிட இருந்தது. மழை காரணமாக நிகழ்ச்சி நடத்த முடியவில்லை. அவ்வாறு நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால் இவருடைய நினைவு நாளைப் பற்றிக்குறிப்பிட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

    பத்மப்ரியா நினைவாக இரு பாடல்கள்..

    காவிரி நகரினில் - வாழ்ந்து காட்டுகிறேன்



    பனிமலர் நீரில் ஆடும் அழகு - உறவு சொல்ல ஒருவன்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, madhu, vasudevan31355 liked this post
  16. #1548
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நவம்பர் 17 தமிழ்த்திரையுலகின் காதலின் முடிசூடா நிரந்தர சக்கரவர்த்தி ஜெமினி கணேசனின் 95வது பிறந்த நாள்!!

    Heroes on heels! Vs Heroes on Wheels!
    Part 1 : The King of Romance Gemini Ganesan's Birthday remembrance!!

    காதலில் ஓடுவதும் ஓட்டுவதும் !
    ரொமாண்டிக் ஹீரோ காதல்மன்னரின் ஆற்றல் !
    காதல் காட்சிகளில் பூங்காக்களில் மரங்களை சுற்றி ஹீரோ ஓடி ஆடி கதாநாயகியை சுற்றுவதும் வாகனங்களில் அமர்த்தி ஓட்டுவதும் சாதாரணமப்பா!!


    GG on heels !!





    GG on Wheels !!!



    Last edited by sivajisenthil; 16th November 2015 at 08:48 PM.

  17. Likes Russellmai, chinnakkannan liked this post
  18. #1549
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,



    அழகுப் பதுமையாம் பத்மபிரியாவின் நினைவு நாளை நினைவூட்டி அவருக்கு சிறந்த நினைவாஞ்சலி செய்து விட்டீர்கள். நடித்தது கொஞ்சமே ஆயினும் அனைவர் மனதிலும் தன் இளமையாலும், அழகாலும் மிக எளிதாக இடம் பிடித்த கலப்படமற்ற கலர்ப்பட கதாநாயகி. அவருடன் 'வைரநெஞ்சம்' படப்பிடிப்பில் பேசி மகிழ்ந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. நடிகர் திலகம் முதற்கொண்டு அத்தனை பெரிய நடிகர்களுடனும் நடித்தவர். கன்னடம், தெலுங்கு என்று அந்த மொழித் திரைப்படங்களிலும் புகழ் பெற்றவர்.

    அவரது நினைவாக நான் 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் எழுதிய, தற்போது நீங்கள் பதிந்துள்ள 'பனி மலர் நீரில் ஆடும்' பாடலின் ஆய்வை இங்கே மறுபதிவாக இடுகிறேன். அவர் பாடல்களிலேயே எனக்குப் பிடித்த முதன்மையான பாடல் இது.



    1975-இல் வெளிவந்த 'உறவு சொல்ல ஒருவன்' கருப்பு வெள்ளைத் திரைப்படம். விஜயபாஸ்கரின் அற்புத இசையமைப்பில் நமதருமை சுசீலா அவர்களின் கோடிகோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத முழுமையான இனிமையான குரலில் நம்மை அணுஅணுவாக இன்ப சாகரத்தில் மூழ்க வைக்கும் ஒரு பாடல்.

    இப்படி ஒரு குரலின் மூலம், இப்படி ஒரு டியூன் மூலம் நம்மை அப்படியே கட்டிபோட்டு விட முடியுமா?

    'முடியும்' என்கிறார்கள் இப்பாடலைப் பாடிய பாடகியர் திலகமும், இசையமைத்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கரும்.

    அப்படி நம் ரத்த நாளங்களில் புகுந்து இன்ப அதிர்வுகளை நமக்குள்ளே அதிரச் செய்யும் பாடல்.

    முத்துராமன், பத்மபிரியா முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

    தனக்கு வரப்போகும் வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டும்...தனக்கு வாய்க்கும் கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்... என்று கற்பனை செய்து செய்து வைத்திருக்கிறாள் இந்த இளம் நங்கை.
    அவள் நினைத்தது போலவே எல்லாம் நடக்க ஆரம்பிக்கிறது. வசதியான வாழ்வு அவளுக்குக் கிட்டவிருக்கிறது.

    மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, தன் தோழியர் கூட்டத்திடம் தான் நினைத்திருந்த வாழ்வு கிட்டப் போவதை எண்ணி அவள் ஆனந்தமாய்ப் பாடுவதைக் கவனியுங்கள்.

    அந்தக் குரலில் என்ன ஒரு மகிழ்ச்சி கலந்த ஆணவம்!

    'என்னை மாதிரி இந்த உலகிலே யார் அதிர்ஷ்டசாலி இருக்க முடியும்?' என்ற களிப்பான கர்வம்.

    'மகராணி போல மகராசியாய் வாழப் போகிறேன்' என்று கொக்கரிக்கிறாள்.

    அளவு கடந்த ஆனந்தத்தால் அவள் எதைக் கண்டாலும் அது அவளுக்கு சுகமாகவே தெரிகிறது.

    'எல்லோருக்கும் நினைத்த வாழ்வு எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை அவர்கள் ரசித்து அனுபவிப்பதில்லை. அப்படியே ரசித்தாலும் அந்த வாழ்வு அவர்களுக்கு நிலைப்பதில்லை.

    ஆனால் என்னைப் பாருங்கள்.

    நிலையான, என்றென்றும் நான் ரசித்து மகிழும் வாழ்வு எனக்குக் கிடைத்து விட்டது. நான் மகராணியல்லாமல் வேறு என்ன?'

    அந்த சந்தோஷத் தாரகை அழகுப் பதுமை பத்மப்ரியாதான். கொலு பொம்மை போல் நம் எல்லோரையும் தன் அளவான உடலமைப்பால் கவர்ந்தவர். கலர்ப்பட கதாநாயகி. அழகுமுகம். எடுத்த எடுப்பிலேயே நடிக இமயத்தின் ஜோடியாகி நம் 'வைர நெஞ்சங்'களில் ஊடுருவியவர்.

    அவர் தோழிகளுடன் ஆடிப்பாடும் இந்த உற்சாகப் பாடலைப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் பத்மப்ரியா இன்னும் நன்றகப் பண்ணியிருக்கலாம். ஆனால் அவர் அழகுத் தோற்றமும், ஸ்லிம்மான உடலும் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகின்றது.

    முழுக்க முழுக்க சுசீலாம்மா ஆக்கிரமிப்பு செய்த என் நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்ட ஒரு பாடல்.

    தெள்ளத் தெளிவான ஆணித்தரமான தமிழ் உச்சரிப்பு, குரலில் தெரியும் கர்வம், குரல் பாவம், 'நச்'நச்'சென்று வாயிலிருந்து விழும் வார்த்தைகள்

    இந்த 'தென்னகத்துக் குயில்' இப்பாடலில் செய்துகாட்டும் மாயாஜாலங்கள் தான் என்ன! உலகத்தில் வேறெந்தப் பாடகிக்காவது இவ்வளவு இனிமையான, முழுமையடைந்த குரல் இருக்கிறதா என்ன!

    (இந்த மாதிரி தற்பெருமை பொங்கும் இன்னொரு பாடலை 'புது வெள்ளம்' படத்தில் சுசீலா 'நான் ராஜாவீட்டுக் கன்னுக்குட்டி...கன்னுக்குட்டி' என்று பாடி அசத்தியிருப்பார். கன்னட மஞ்சுளா படுதிமிர் கொண்ட ஜமீந்தார் வீட்டுப் பெண்ணாக அருமையாக நடித்திருப்பார்)

    பஞ்சு அருணாச்சலம் இயற்றிய இப்பாடல் படத்தின் கதாநாயகியின் பாத்திரத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. இயக்கம் தேவராஜ் மோகன்.

    இனி பாடலின் வரிகளைப் பார்க்கலாம். பின் பாடலைப் பார்க்கலாம்.

    பனிமலர் நீரில் ஆடும் அழகை
    ரசிக்க மனதில் சுகமே
    நினைவுகள் கோலம் போடும்
    இளமை குலுங்கும் தங்க ரதமே
    பனிமலர் நீரில் ஆடும் அழகை
    ரசிக்க மனதில் சுகமே

    (முத்துராமன் பத்மப்ரியா கேட்ட நகை, புடவையெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறாரே! பின் ஏன் பத்மாவுக்கு சந்தோஷம் பொங்காது?)

    எண்ணங்கள் இனிக்கட்டுமே
    வண்ணங்கள் மலரட்டுமே
    வாலிபம் சிரிக்கட்டுமே
    வாழ்க்கையில் தொடரட்டுமே
    மகராணி நான் மகராசி நான்
    மகராணி நான் மகராசி நான்

    மனது போலவே வாழ்வு கிடைத்தது
    பார்க்கும் யாவையும் சுகம் சுகமே

    பனிமலர் நீரில் ஆடும்
    அழகை ரசிக்க மனதில் சுகமே

    கண்ணான கண்ணன் வந்தான்
    கண்ணோடு கண்ணை வைத்தான்
    பொன்னான புன்னகையில்
    பெண் என்னைத் தழுவிக் கொண்டான்
    மகராணி நான் மகராசி நான்
    மகராணி நான் மகராசி நான்

    இரவு போனது பொழுது விடிந்தது
    எனது நெஞ்சிலே சுகம் சுகமே

    பனிமலர் நீரில் ஆடும்
    அழகை ரசிக்க மனதில் சுகமே

    எல்லோரும் நினைப்பதில்லை
    நினைத்தாலும் கிடைப்பதில்லை
    கிடைத்தாலும் ரசிப்பதில்லை
    ரசித்தாலும் நிலைப்பதில்லை
    மகராணி நான் மகராசி நான்
    மகராணி நான் மகராசி நான்

    நினைத்த யாவையும் உண்மையானது
    இறைவன் கருணையால் சுகம் சுகமே

    பனிமலர் நீரில் ஆடும் அழகை
    ரசிக்க மனதில் சுகமே
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Likes Russellmai, chinnakkannan liked this post
  20. #1550
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பத்மப் ப்ரியா கொஞ்சம் அழகு தான் எனச் சொல்லவேண்டும்..அழகிலும் நடிப்பிலும் லதாவுடன் கடும் போட்டி இவருக்கு.. இருவருமே அழகு இருவருக்குமே நடிக்க வராது! இருவருமே இருக்கும் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்..

    அமுதோர் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ.. புலமைப் பித்தன் பாடல் என நினைக்கிறேன்.. சோழ ராஜ குமாரியாக நடித்திருப்பார் என நினைவு.. ஆடியோ தான் கிடைத்தது.. நல்ல பாடல்..




    இன்னொரு ஜெய் பத்மப்ரியா என நினைவு நல்ல பாட் ஆனால் மனதில் நினைவுக்கு வரவில்லை எதையோ தே டி அன்று சிந்திய ரத்தம் கிடைத்தது..அதுவும் 6.10க்கு ஆரம்பிக்கும் பாட்டு..பத்மப் ப்ரியா அண்ட் ஜெய் அண்ட்.. பில் இன் த ப்ளாங்க்..



    மோகனப் புன்னகையில் ந.தியின் முறைப்பொண்ணாக வந்து சிலோன் நடிகையைச் சுட்டுவிட்டு தானும் விஷமருந்தி இறப்பார் என நினைவு..

    அவரே பலவருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதாக - ட்யூ டூ ஜாண்டிஸ் ஆர் வேறு வியாதியாலோ - படித்த நினைவு..இப்போது தேடினால் ஃபேஸ்புக்கில் அக்கெளண்ட் இருக்கிறது..டம்மி என நினைக்கிறேன்..

    இன்னொரு ஜெய் ப பி பாட் உண்டு.. வாஸ்ஸு நினைவுக்கு வர மாட்டேங்குதே..


    ஆமாம்.. மோ.சு.பி யில் காத்திருந்த கண்களே - மணிமாலாவிற்கும் ந.திக்கும் கொடுத்திருக்கலாம் ஃப்ளாஷ் பேக்கில்..

  21. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •