Page 1 of 401 1231151101 ... LastLast
Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #1
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like

    Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

    நடிகர்திலகம் சிவாஜிகணேசன்-
    பாகம் -17
    ____________________________________________[/URL]


    பொன்னல்ல பொருளல்ல
    புவியாளும் மன்னர் தரும்
    என்னவெல்லாம் அறியாத
    எதுவுமல்ல
    மின்னி வரும்
    மெய்க்கவியின் மெய்யழகை
    காண்போர் தம்
    கண்ணில் வரும்
    ஒரு துளியே
    கலைஞனுக்கு கோடி.
    இந்த கவிதையைத்தான்
    நடிகர்திலகம்
    அடிக்கடி நினைவு கூர்வார்.
    தன் ரசிகர்களின் வாழ்த்துக்களே
    பெரிதென வாழ்ந்த நடிகர்திலகத்திற்கு நாம் செய்யும் அர்ச்சனைப்பூக்களில் ஒன்றுதான் இந்த திரி.
    இதில் நடிகர்திலகத்தின் நடிப்பைப் போற்றும் அனைவரும் பங்கு பெற்று நடிகர்திலகத்தின் புகழை மேலும் வளர்ப்போம்.
    "நடிகர்திலகத்தால் இணைந்தோம்
    இணைந்ததை வளர்ப்போம்"
    இதுவே இந்த திரியின் தாரக மந்திரமாக இருக்கட்டும்.

    இந்தத்திரியைஆரம்பித்து வைக்க
    எனக்கு வாய்ப்பு வழங்கிய
    திரு முரளி சீனிவாஸ் அவர்களுக்கும்,
    என்னை வழி மொழிந்த
    திரு.ராகவேந்திரா
    திரு.வாசுதேவன்
    திரு .சிவாஜி செந்தில்
    திரு.ஆதிராம்
    திரு.KC.சேகர்
    திரு.சுப்ரமணியம் ராமஜெயம்
    திரு.சிவா
    திரு.ஆதவன் ரவி
    திரு.பரணி
    மற்றும்
    என்னை பாராட்டி ஊக்கமூட்டும்
    திரி நண்பர்கள்
    திரு.ரவி கிரண் சூர்யா
    திரு.மதுரை சுந்தரராஜன்
    திரு.கோபு
    திரு.ராதாகிருஷ்ணன்
    திரு.ஜோ
    திரு.சின்னக்கண்ணன்
    திரு.கோபால்
    திரு.ஹரீஸ்
    திரு.முத்தையன் அம்மு
    ஆகியோருக்கும் என் உள்ளத்தில் இருந்து வரும் நன்றிகள்.
    பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.



    ________________
    Last edited by Senthilvel Sivaraj; 29th October 2015 at 08:58 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    340
    Post Thanks / Like
    அன்பின் செந்தில்வேல் சிவராஜ் சார்
    தங்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நடிகர்திலகத்தின் புகழ் பாடும் திரி-17
    நடிகர்திலகத்தின் பல்வேறு சிறப்புகளை உலகறியச் செய்யும் விதத்தில் அமைந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. Likes Russellmai liked this post
  5. #3
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் திரியின் 17-வது பாகத்தினைத் துவக்கி உள்ள செந்தில்வேல்
    சிவராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    கோபு.

  6. #4
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகம்-பாகம் 17-ஐ இனிதே துவக்கியிருக்கும் சகோதரர் செந்தில்வேல் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! உங்களின் அருமையான பங்களிப்பு மேன் மேலும் தொடரட்டும்!

    இந்த நேரத்தில் செந்தில்வேல் அவர்கள் விரும்பி கேட்டிருப்பது போல் நமது அனைத்து பங்களிப்பாளர்களும் திரியில் மீண்டும் இணைந்து தங்களது படைப்புகளை தர வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

    அன்புடன்

  7. #5
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    செந்தில்வேல்,

    என்னையும் பெரிய இடைவெளியில்லாமல் பதிவிட கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! சில நேரங்களில் எதிர்பாராத விதமாக பல்வேறு அலுவல்கள் காரணமாக இடைவெளி விழுந்து விடுகிறது. குறிப்பாக அந்த நாள் ஞாபக தொடரை அதிக இடைவெளியில்லாமல் எழுதுமாறு ஆதிராம், தம்பி பெங்களூர் செந்தில், நீங்கள் மற்றும் வாசு போன்றவர்கள் சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள். அப்படிதான் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். வேலை பளு மட்டும் காரணமில்லாமல் பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்ததை மீண்டும் பதிவு செய்யும்போது அதில் ஏதும் தவறு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. காரணம் இருக்கும் ஒரே source மனதில் பதிந்து இருப்பதுதான். எப்படியோ சீரிய இடைவெளியில் அதை தொடர முயற்சிக்கிறேன்.

    அன்புடன்

  8. #6
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அன்பின் செந்தில்வேல் .. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. கலக்குங்கள்..

  9. #7
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Russellmai liked this post
  11. #8
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்புமிக்க முத்தையன்
    ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கும் பிம்பங்கள். இங்கு ஒவ்வொருவருக்கும் எந்தெந்த போஸ் நெஞ்சில் இருக்கிறது என்பதனைத் துருவித்துருவி ஆராய்ந்து வழங்கியது போல் அவ்வளவு அருமையாக உள்ளன.

    தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

    தொடர்ந்து தங்களின் பங்களிப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #9
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் புகழ் பாட வரும்
    திரு.செந்தில்வேல் அவர்கள் பயணம்
    சிறப்பாக நகர்ந்து செல்ல வாழ்த்துக்கள்

  13. #10
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    அள்ள அள்ள வற்றாத அமுதசுரபியாம் நம் ஆண்டவனுக்கு அடுத்த பாக திரி ஏற்றி வழிபாடு. திரியை சுடர் விட்டு பிரகாசமாய்த் துவங்கி வைத்த தம்பி செந்திவேல் அவர்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். திரிக்குத் தூண்டுகோலாய் அத்தனை பேரும் துணை நின்று தங்களுக்குத் தோள் கொடுப்போம்.

    ஞான ஒளியாய் எங்கும் நிறைந்த பரம்பொருளாய் நீக்கமற நிறைந்திருக்கும் நடிப்பின் தெய்வத்திற்கு அடுத்த கட்ட புகழ்மாலை.

    வழக்கம் போல திரிகளில் மணிமகுடம் சூட்டி முதலிடம் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் திரியை இன்னும் வளப்படுத்துவோம். செம்மைப் படுத்துவோம். அருமைத் தலைவனின் புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைப்போம்.

    திரி செழிக்க மீண்டும் என் வளமான வாழ்த்துக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 1 of 401 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •