-
5th May 2015, 10:27 PM
#661
Junior Member
Veteran Hubber
-
5th May 2015 10:27 PM
# ADS
Circuit advertisement
-
5th May 2015, 10:28 PM
#662
Junior Member
Veteran Hubber
பொன்மனச்செம்மல் நடித்த 38வது காவியம் " சக்கரவர்த்தி திருமகள் " கதைச்சுருக்கம் :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசர்களுக்கெல்லாம் அரசராக விளங்குகிறார் மருத நகரத்து சக்கரவர்த்தி மார்த்தாண்ட பூபதி. அவருடைய ஒரே மகள் கலா மாலினி. அவளை மணக்க பல நாட்டு இளவரசர்களும் போட்டியிட்டார்கள். அவளுக்கு தகுந்த கணவனை தேர்ந்தெடுக்க சக்கரவர்த்தி மூன்று போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெறுபவருக்கு கலாமாலினியுடன் மருத நகரத்து மணிமுடியும் கிடைக்கும் என அறிவித்தார். பல நாட்டு இளவரசர்களும் வந்து கூடி விட்டார்கள். இந்த நிலையில் -
தோழி துர்க்காவுடன் குதிரையேற்ற பயிற்சிக்கு ஆணுடையில் புறப்பட்ட கலா, கள்வர்களால் வழி மறிக்கப்படுகிறாள். காவேரிப்பட்டினத்து இளவரசனாகிய உதய சூரியன் கள்ளர்களோடு போரிட்டு, கலாவை காப்பாற்றுகிறான். கலா, தன்னுடைய பெயர் கலா மோகன் என்றும், போட்டியிலே கலந்து கொள்ளவே தானும் வந்திருப்பதாக கூறி விடை பெறுகிறாள்.. முதற் போட்டியிலேயே உதய சூரியன் வெற்றி பெறுகிறான். கலா, தோழி உடையிலேயே உதயசூரியனை சந்தித்து, தன்னை கலாமோகனின் தங்கை என்று கூறி, அன்பு பரிசாக ஒரு ரத்தின மாலையை கொடுத்து விட்டு போகிறாள்.
உதய சூரியன் இரண்டாவது போட்டியிலும் வெற்றியடைகிறான். உதய சூரியனின். அழகும், வீரமும், தோழி துர்க்காவின் மனதை கவருகின்றன. எப்படியாவது உதய சூரியனை அடைய வேண்டுமென்று திட்டமிடுகிறாள்.
கலாவுக்கும், உதய சூரியனுக்கும் காதல் வளருகிறது. உதய சூரியன், மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெறுகிறான். கலா தான் ராஜகுமாரி என்று உண்மையை கூறிகிறாள். உதய சூரியன் வியபடைகிறான். திருமணம் நடக்கிறது. முகத்திரை அணிந்திருக்கும் கலாவின் கழுத்திலே மாங்கல்யத்தை கட்டுகிறான் உதய சூரியன்.
தீயவளான துர்க்கா சூழ்ச்சியால், கலாவுக்கு மயக்க மருந்து அளித்து தளபதி பைரவனுடன் அனுப்பி வைக்கிறாள். கள்ளக்காதலனுடன் கலா ஓடி விட்டதாக சக்கரவர்த்தியை நம்ப வைக்கிறாள். துர்க்கா. மானத்தை காப்பாற்ற, துர்க்காவை கலாவாக நடிக்கும்படி வேண்டுகிறார் சக்கரவர்த்தி.
இதனிடையில், பைரவனிடமிருந்து தப்பிய கலா காட்டுக்கூட்டத்திடம் சிக்கி கொள்கிறாள். காட்டுத்தலைவன் கலாவை மணக்க நாள் குறிக்கிறான்.
சாந்தி முகூர்த்த அறையிலேயே கலாவை காண ஆவலுடன் வந்த உதய சூரியன் வேறு ஒருத்தியை கண்டு திடுக்கிடுகிறான். துர்க்கா தானே ராஜகுமாரி என்றும், வேறு யாரோ உதய சூரியனை ஏமாற்றி விட்டதாகவும் கூறுகிறாள். உதய சூரியன், கலாவை தேடிப் புறப்படுகிறான்.
காட்டு தலைவனுக்கும், கலாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அவர்கள் குல வழக்கப்படி மணப்பெண்ணுக்கு சூடு போட வருகின்றனர். கலா கதறுகிறாள். காட்டுப்பாதை வழியே சென்ற உதய சூரியன் கலாவின் குரல் கேட்டு ஓடி வந்து போரிடுகிறான். இது சமயம், சக்கரவர்த்தியின் மெய்காப்பாளனான துர்ஜயன் கலாவை கொல்ல அம்பு எய்கிறான். அம்பு குறி தவறி காட்டு ராஜாவை கொல்கிறது. சினமடைந்த காட்டு கூட்டம் கலாவை கல்லறையில் போட்டு மூடுகின்றனர்.
காட்டுப்பெண் திரிசடை கலாவை தப்புவிக்கிறாள். கலா சென்ற விபரத்தை உதய சூரியனிடம் தெரிவிக்கிறாள்.
தப்பித்து சென்ற கலா ஆற்று வெள்ளத்தில் சிக்கிய போது, அவளை நாட்டியக்காரி மோகனமாலை என்பவள் காப்பாற்றுகிறாள்.
துர்க்கா தனக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறாள். தன்னுடைய பெயரில் வேறொருத்தி இருப்பதையறிந்த கலா, விழாவில் வந்து நாட்டியமாடுகிறாள், கலாவை கண்ட துர்க்காவுக்கு தூக்கி வாரிப் போடுகிறது.
கலாவை தீர்த்து கட்டுவது என்ற முடிவுக்கு வருகிறாள்.
சதிகாரர்களின் கூற்று நிலைத்ததாக சரித்திரத்தில் சான்றுகள் கிடையாது. துர்க்காவின் வேடம் கலைந்தது.
எங்கே ? எப்படி ? எப்ப்போது ? ..................... பதில் வெள்ளித்திரையில் ! .
================================================== ==================================
-
5th May 2015, 10:33 PM
#663
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th May 2015, 09:05 PM
#664
Junior Member
Veteran Hubber
" சக்கரவர்த்தி திருமகள் " காவியத்தில் இடம் பெற்ற பாடல்கள் :
------------------------------------------------------------------------------------------------------------
பாடல் 1 டேப் பாடல் : சீர்மேவும் குருபதம் சிந்தையொடு வாக்கிலும் (தொகையறா)
சங்கத்து புலவர் பலர் - தங்கத்தோடப் பொற்பதக்கம்
(இயற்றியவர் : கிளவுன் சுந்தரம்)
பாடல் 2 குழுப்பாடல் ஆடவாங்க அண்ணாத்தே ... அஞ்சாதீங்க அண்ணாத்தே
. (இயற்றியவர் : கு. மா. பாலசுப்ரமணியம்)
பாடல் 3 குழுப்பாடல் கண்ணாளனே வாருங்க ... கண்ணாலே பாருங்க
(இயற்றியவர் : கு. மா. பாலசுப்ரமணியம்)
பாடல் 4 தனித்த குரலில் பெண் பாடும் பாடல் : சொல்லாலே விளக்கத்தெரியலே அதை சொல்லாமலும் இருக்க முடியலே
(இயற்றியவர் : கு. சா. கிருஷ்ணமூர்த்தி)
பாடல் 5 காதல் ஜோடிப்பாடல் : எல்லையில்லா இன்பத்த்திலே ... நாம் இணைந்தோம் இந்த நாளே
(இயற்றியவர் : கு. மா. பாலசுப்ரமணியம்)
பாடல் 6 குழுப்பாடல் நலுங்கிட்டு பார்ப்போமடி -- ராணிக்கு அலங்காரம் செய்வோமடி
(இயற்றியவர் : கே. டி. சந்தானம்)
பாடல் 7 தனித்த குரலில் பெண் பாடும் பாடல் : எண்ணமெல்லாம் இன்பக்கதை பேசுதே ... என்றும் இல்லா புது வசந்தம் வீசுதே !
(இயற்றியவர் : கு. சா. கிருஷ்ணமூர்த்தி)
பாடட்ல் 8 தனித்த குரலில் ஆண் பாடும் பாடல் : தில்லித்துருக்கர் செய்த வழக்கமடி ! பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
(இயற்றியவர் : மகாகவி. சுப்ரமணிய பாரதி)
பாடல் 9 தனித்த குரலில் பெண் பாடும் பாடல் ... ஏமாற்றம் தானா என் வாழ்விலே...இன்பம் வீசாதோ இனிமேலே
(இயற்றியவர் : எஸ். வரலட்சுமி)
பாடல் 9 ஜோடிப்பாடல் .......... நினைச்சதெல்லாம் தப்புண்ணு தாடையிலே போட்டுக்க வேணும்
(இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்,
பாடல் 10 தத்துவப்பாடல் பொறக்கும் போது, மனிதன் பொறக்கும் போது பொறந்த குணம்
(இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)
பாடல் 11 : எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ ? வஞ்சனையாலே .... வலை வீசியே
(இயற்றியவர் : கு. மா. பாலசுப்ரமணியம்)
பாடல் 12 : காதலென்னும் சோலையிலே ராதே ராதே ... நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே
(இயற்றியவர் : கு. மா. பாலசுப்ரமணியம்)
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th September 2015, 02:43 PM
#665
Junior Member
Senior Hubber
Originally Posted by
MGRRAAMAMOORTHI
மேலும் ஒரு மைல்கல்லாக பொன்மனச்செம்மல் எம்ஜியார்
திரியை அளித்து ஆனந்தகடலில் நீந்தவிட்ட பேராசிரியர்
திரு செல்வகுமார் சார் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
அதேபோல் திரி துவங்க காரணமாக இருந்த நண்பர்கள்
திரு வினோத் சார் ,திரு ராகவேந்திரன் சார் இருவருக்கும்
எனது நன்றிகள்
இணையற்ற தலைவனின்
இணையில்லாப் புகழ் தனை
இணையத்தில் வழங்கும்
இறைவன் எம் ஜி ஆரின்
இரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களுக்காக
இளமைக் கால திரைப்படங்கள்
இதுவரை காணா இலக்கியங்கள்
இனிய தமிழில் படைக்கும்
இறைவன் தொண்டன் அன்பன்
பேராசிரியர் : சௌ. செல்வகுமார்
அற்புதப் படைப்புகள்
நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து
தலைவன் புகழ் பாட
இறைவன் அருள் புரிவாராக
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th September 2015, 02:42 AM
#666
Junior Member
Senior Hubber
Originally Posted by
MGRRAAMAMOORTHI
அற்புதம்
அர்ஜுனனாக எத்தனை அழகு
நன்றி
Bookmarks