-
26th August 2015, 10:36 AM
#2971
Senior Member
Diamond Hubber
செந்தில் சார்!
நடிகர் திலகம் குளியல் சீன்கள் சில இருக்கின்றனவே!
ராஜஸ்ரீயுடன் நடிகர் திலகம் நீச்சல் குளத்தில் 'ஓ...லக்ஷ்மி...ஓ ஷீலா... ஓ மாலா...உதவிக்கு வாருங்கள்' என்று குட்டிக் கரணமெல்லாம் போட்டு இளமைத் துள்ளாட்டம் போடுவாரே!
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th August 2015 10:36 AM
# ADS
Circuit advertisement
-
26th August 2015, 11:16 AM
#2972
Senior Member
Diamond Hubber
இதோ இன்னொரு வித்தியாசமான பாடல்.
'மை நேம் ஈஸ் ரோஸி'
ராட்சஸி பாடியது. ராட்சஸியின் வித்தியாசங்களில் ஒன்று. (குரல் நடுக்கங்கள் அபாரம்) ஆனால் பிரபலமாகாதது. அது பற்றிக் கவலை இல்லை. இப்படி ஒரு மியூஸிக் ஒரு பாடலுக்கு அமைந்து கேட்டிருப்போமா என்பது சந்தேகமே. இப்போது கேட்டாலும் வியப்பு தீர வில்லை. இசைக்கருவிகள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டி போடுகின்றன ஈஸ்வரியின் குரலோடு சேர்ந்து.
தலையில் ஒற்றை ரோஜாவுடன் கண்களை அப்படியே சொக்க வைத்து, செருக வைத்து, விஜயலலிதா 'வல்லவன் ஒருவன்' படத்தில் 'பளிங்கினால் ஒரு மாளிகை' போலவே எலக்ட்ரிக் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ரகசிய உளவுத்துறை அதிகாரியை போட்டுத் தள்ளப் பார்க்க (விஜி அழகாக இருக்கிறார் சேலையில்) இந்தப் பாடல் அந்தக் கால டேப் ரெகார்டரில் ஒலிக்கும். டிரம்ஸ், பாங்கோஸ் எல்லாம் வெளுத்து வாங்குகின்றன. புல்லாங்குழல் திகிலூட்டுகிறது. பியானோ பிய்ந்து போகிறது. ஆர்கனும், வயலினும் பின்னிப் பிணைகின்றன.
மை நேம் ஈஸ் ரோஸி
என்னை நீ நேசி
கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈஸி
வந்ததோ மாலை
தந்ததோ போதை
என்னமோ தேவை
சொல்லுவாள் பாவை
நல்லதோர் நேரம்
உள்ளதோ கொஞ்சம்
இன்று நீ இங்கே
நாளை நீ எங்கே
அவ்வளவுதான். எலக்ட்ரிக் சேரில் அமர்ந்திருந்த துப்பறியும் அதிகாரி அப்படியே பொசுங்கி புகைந்து விடுவார்.
அடுத்த குறி ஜெய் மீது. இப்போது விஜி மாடர்ன் டிரஸ்ஸில் கண்களை மேலும் சொக்க வைத்து, முறைத்து, அதே டிரம்ஸ் ஒலி பின்னி பயமுறுத்த, ஜெய் கூட ஆடியபடி அதே வரிகளில் பாடல் டேப்பில் ஒலிக்க,
மை நேம் ஈஸ் ரோஸி
என்னை நீ நேசி
கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈஸி
ஜெய் விடுவாரா? நைசாக அதே சேரில் விஜியை உட்கார வைத்து விடுவாரே! நம்ம தமிழ் பிஸ்வஜித் முகத்தை அஷ்டகோணலாக சுருக்கிக் கொண்டு வேறு காத்திருப்பார்.
இன்று நீ இங்கே
நாளை நீ எங்கே
எனும்போது நாற்காலி புகையும் என்று ஜெய்க்குத் தெரியாதா? தானும் தப்பித்து உட்கார்ந்திருக்கும் விஜியையும் இழுத்துக் காப்பாற்றி விடுவார்.
உடனே டிரம்ஸும், கிடாரும் இணைய, டிரம்பெட் அதம் பண்ண, பேஸ் கிடார் பேஜார் கிளப்ப, விஜியின் காபரே ஆரம்பமாகும். இடைவிடாத இசையின் ஆதிக்கம். வயலின், சாக்ஸ் என்று இன்னும் கூடும்.
நான் ரொம்ப ரொம்ப என்ஜாய் பண்ணி கேட்கும், பார்க்கும் பாடல் இது.
கிட்டத்தட்ட ஆறு நிமிஷங்கள். நான்ஸ்டாப் மியூஸிக். அதுவும் வித்தியாசமாக. இனிமையாக. பிரம்மாண்டமாக. அதிசயப்படத்தக்க வகையில். ஆச்சர்யப்படத்தக்க வகையில்.
இசை 'வல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன். உதவி கோவர்த்தன்
அனுபவிக்கத் தயாராகுங்கள்.
Last edited by vasudevan31355; 26th August 2015 at 12:00 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
26th August 2015, 11:50 AM
#2973
Senior Member
Diamond Hubber
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் மணிமண்டபத்தை தமிழக அரசே கட்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார். முதல்வருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th August 2015, 12:20 PM
#2974
Senior Member
Senior Hubber
நி.க.கா பாடல்கள் பற்றி ஒரு வியாசமே எழுதலாம் வாசு.. ஜில்லென்று காற்று வந்ததோ.. எங்கேயோ பார்த்த முகம்.. ம்ம் இரண்டுக்கும் எனது ஊரின் வடகிழக்கில் இருக்கும் வாழைத்தோப்பை எழுதி வைப்பேன்!
விபிகேபி.. யில் இருந்து மீண்டாச்சா. உங்கள் ஐந்து வயது மகன் ரசித்ததைப் பற்றி மகிழ்ச்சி!.ஏன் நெய்வேலியில் எல்லாம் போட மாட்டார்களா..? ம்ம் எனக்கு இங்கெல்லாம் வராது..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th August 2015, 01:14 PM
#2975
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
நி.க.கா பாடல்கள் பற்றி ஒரு வியாசமே எழுதலாம் வாசு.. ஜில்லென்று காற்று வந்ததோ.. எங்கேயோ பார்த்த முகம்.. ம்ம் இரண்டுக்கும் எனது ஊரின் வடகிழக்கில் இருக்கும் வாழைத்தோப்பை எழுதி வைப்பேன்!
விபிகேபி.. யில் இருந்து மீண்டாச்சா. உங்கள் ஐந்து வயது மகன் ரசித்ததைப் பற்றி மகிழ்ச்சி!.ஏன் நெய்வேலியில் எல்லாம் போட மாட்டார்களா..? ம்ம் எனக்கு இங்கெல்லாம் வராது..
மீள்வதா? அப்படினா என்ன?
ஐந்து வயது இல்லை சின்னா பதினெட்டு வயது.
படம் ரொம்ப காஸ்ட்லி சின்னா! தென் ஆற்காட், பாண்டி இங்கு திரையிடப் படவில்லை.
ஆமாம். பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் எங்கேயோ பார்த்த முகத்துக்கு போய் விட்டீர். பாடல் எப்படியிருந்தது? கேட்டிருக்கிறீரா? அதைச் சொல்லும் சாரே! அதை விட்டுபுட்டு.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th August 2015, 01:42 PM
#2976
Senior Member
Diamond Hubber
நேற்று 'சிரித்த முகம்' பாடல்கள் அலசலின் போது அதே 'சிரித்த முகம்' என்று ஆரம்பிக்கும் வேறு படப் பாடல்களும் நினைவில் ரீங்காரமிடுகின்றன.
ஒன்று
'பொண்ணு மாப்பிள்ளே' படத்தில் காஞ்சனாவும், ஜெய்யும் பாடும் 'சிரித்த முகம்... உன் சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா'
பாடல்.
அடுத்தது.
T.R.ராதாராணி என்ற அபூர்வ நடிகை (கொஞ்சம் பானுமதி ஜாடை. சட்டி முகம்) சொந்தமாகத் தயாரித்து நடித்த 'கண்ணாடி மாளிகை' என்ற படத்தில் சுசீலாம்மா பாடிய அருமையான பாடல். குரலினிமைக்கு ஈடு இணையே இல்லை. படத்தில் நடிகவேள் ராதாவும் உண்டு
'சிரித்த முகம் வேணுமடி பெண்ணே!
அதுதான் சேவை செய்யும் பெண்களுக்கு
அழகு தரும் கண்ணே!
மலைவாழ் ஜாதியினரின் பாடல் போல தேயிலை பறித்துக் கொண்டு ராதாராணி கோஷ்டியினருடன் பாடும் பாடல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th August 2015, 01:44 PM
#2977
Senior Member
Senior Hubber
இன்னும் முழுக்க நி.க கா படம் பார்க்கவில்லை என்றால் நம்ப வேண்டும்.. இந்த மை நேம் இஸ் லூசி.. நன்னாத் தான் இருந்தது.. ஒரே புகை புகையா முதல் ஆள் மரணிக்க ஜெய் எஸ்ஸ்கேப் ஆவது..ம்ம்
சிரித்தமுகமும் கண்டு..என அ.ஓ பாட்டும் நினைவுக்கு வருது..
-
26th August 2015, 01:45 PM
#2978
Senior Member
Senior Hubber
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்....
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்...
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்...
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்..
இதுவும் நினைவுக்கு வருதுங்க்ணா..எழுதும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th August 2015, 01:52 PM
#2979
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்....
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்...
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்...
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்..
இதுவும் நினைவுக்கு வருதுங்க்ணா..எழுதும்
ம்..ஏமாற மாட்டேனே! அது தொடரில்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th August 2015, 01:55 PM
#2980
Senior Member
Diamond Hubber
ஆமாம்! ரேர் சாங் ஒன்று போட்டீர்களே! போ..ச்
'மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி'
'கன்னித்தாய்' இன்னைக்கு கண் திறந்துட்டாங்களே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks