-
30th May 2015, 06:50 PM
#511
Moderator
Diamond Hubber
இனியெல்லாம் சுகமே என்ற படத்தில் அப்பாஸூக்கு ஜோடியாக நடித்தவர்தான் தென்றல் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதிராஜ். அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் தனது தாய்மொழியான மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் சில ஆண்டுகளாக நடித்து வந்த அவர், மறுபடியும் காதல் டாட் காம், மந்திரன், ஜெர்ரி ஆகிய படங்கள் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார். ஆனால் அந்த படங்களும் வெற்றியை கொடுக்கவில்லை.
அதனால்தான் சினிமா தனக்கு ராசியில்லை என்று ஒரு மாற்று முயற்சியாக 2009ல் தென்றல் சீரியலில் நடித்தார். அந்த சீரியல் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆபீஸ் சீரியலில் நடித்து வரும் ராஜி கேரக்டர் பெண்கள் மனதில் அவருக்கு தனி இடத்தை பிடித்துக்கொடுத்தது.
இப்போது ஜீ டிவியில் வெளியாகும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற சீரியலிலும் நடித்து வரும் ஸ்ருதிராஜ், ரொம்ப பிசியாக இருக்கிறார். அதனால் கிட்டத்தட்ட சினிமாவை நினைத்துப்பார்க்ககூட அவருக்கு நேரம் இல்லையாம். ஆனால் இப்போது அவர் பேசப்படும் நடிகையாகி விட்டதால், சினிமாவில் இருந்து வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் செல்கிறதாம்.
ஆனால், அந்த வாய்ப்புகளை ஏற்கும் நிலையில் இப்போது ஸ்ருதிராஜ் இல்லையாம். காரணம், அவர் நடிப்பது தினசரி சீரியல்களாக இருப்பதால், ஓய்வு கிடைப்பதே அரியதாக உள்ளதாம். மேலும், அவர் எங்காவது ஷாப்பிங் செல்லும்போது அங்கே அவரை பார்க்கும் பெண்கள் ஓடிவந்து கட்டித்தழுவிக்கொள்கிறார்களாம். அவரது நடிப்பை ரொம்பவே புகழ்ந்து பேசுகிறார்களாம். இன்னும் சில பெண்கள் எங்கள் வீட்டுக்கு ஒருநாள் அவசியம் வர வேண்டும் என்று அன்புக்கட்டளை போடுகிறார்களாம்.
இந்த அளவுக்கு இல்லத்தரசிகள் தங்களது குடும்பத்தில் ஒருவராக தன்னை நினைப்பதை சொல்லி பெருமை கொள்ளும் ஸ்ருதிராஜ், இன்னும் அழுத்தமான குடும்பக்கதைகளில் நடிப்பதிலும் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் சொல்கிறார்.
நன்றி: தினமலர்
-
30th May 2015 06:50 PM
# ADS
Circuit advertisement
-
30th May 2015, 06:54 PM
#512
Moderator
Diamond Hubber
ராதிகா தயாரித்து, நடிக்கும் வாணி ராணி தொடரில் கவுதம் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் விக்கி. தனது நேர்த்தியான நடிப்பால் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல இடத்த பிடித்திருக்கும் கவுதமிற்கு சினிமாதான் இலக்காம்.
"சொந்த ஊர் மதுரை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் லட்சியம் இதற்காகத்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தேன். சினிமா வாய்ப்பு கிடைக்க தாமதமானது. அதுவரை சும்மா இருக்க வேண்டாமே என்று சீரியல் வாய்ப்பு தேடியபோது வாணி ராணியில் பெரிய வாய்ப்பு கிடைத்துது.

ராதிகா மேடத்தின் அறிமுகம், வழிகாட்டுதல் எனக்கு பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. அவர்களிடம் நடிப்பு, டிசிப்ளின், தொழில் பக்தி எல்லாவற்றையும் கற்று வருகிறேன். வாணி ராணி டீம் எனக்கு குருகுலம் மாதிரி இருக்கிறது. தற்போது தீவிரமாக சினிமா வாய்ப்பு தேடி வருகிறேன். விரைவில் என்னை பெரிய திரையில் காணலாம். அதற்கான நேரம் கைகூடி வந்து கொண்டிருக்கிறது" என்கிறார் விக்கி.
நன்றி: தினமலர்
-
18th June 2015, 09:20 PM
#513
Moderator
Diamond Hubber
மேடை நாடகத்தில் நடிக்கிறார் யுவஸ்ரீ
சின்னத்திரை நடிகைகளில் முக்கியமானவர் யுவஸ்ரீ. திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டுப் பெண் என்ற தொடரில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி நடிக்கும் சொப்பன வாழ்வில் என்ற மேடை நாடகத்தில் நடிக்கிறார். யுனைடெட் அமெச்சூர்ட் ஆர்ட்டிஸ் தயாரிக்கும் இந்த நாடகத்தில் யுவஸ்ரீ ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியாக நடிக்கிறார்.
இதுபற்றி யுவஸ்ரீ கூறியதாவது: நாடகம் எனக்கு புதில்லை. ஒய்.ஜி.மகேந்திரன் சார் குரூப்பில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். சீரியல், சினிமாவில் நடித்ததால் நாடகத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. சொப்பன வாழ்வில் கேரக்டரில் நீதான் நடிக்க வேண்டும் என்று மகேந்திரன் சார் கேட்டுக் கொண்டதால் மறுக்க முடியாமல் நடிக்கிறேன். சில திரைப்பட வாய்ப்புகளும் வந்திருக்கிறது. என்றாலும் நாடகத்திற்கு தனியாக நேரம் ஒதுக்கி இருக்கிறேன். சீரியில், சினிமாவில் நடிப்பதை விட நாடகத்தில் நடிக்கும்போதுதான் ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அதற்காகவே நாடகத்தில் நடிக்கிறேன். என்றார்.

நன்றி: தினமலர்
-
18th June 2015, 09:35 PM
#514
Moderator
Diamond Hubber
சிறந்த வில்லன் நடிகருக்கான கின்னஸ் விருது பெற்ற கோபி!
அழகி, நாதஸ்வரம், பைரவி உள்பட பல மெகா தொடர்களில் நடித்திருப்பவர் கோபி. இதில் நாதஸ்வரம் தொடரில் அவர் நடித்த ராஜேஷ் என்கிற வில்லன் ரோல் அவரை மிகப்பெரிய அளவில் பேச வைத்தது. அதோடு, அந்த தொடரின் ஆயிரமாவது எபிசோடை கின்னஸ் சாதனைக்காக லைவாக படமாக்கினார்கள். மொத்தம் 23 நிமிடங்கள் படமான எந்த எபிசோடில், கோபியின் அதிரடியான நடிப்பை பாராட்டி அவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அதையடுத்து இப்போது அந்த தொடரின் சிறந்த சின்னத்திரை வில்லன் நடிகருக்காக அவரை தேர்வு செய்ய வேண்டி அந்நிறுவனத்தின் சார்பில் தமிழக அரசிடமும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாம்.
இதுபற்றி கோபி மேலும் கூறும்போது, நான் இந்த சின்னத்திரை உலகில் நீண்ட காலம் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன். அதனால்தான், கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல், என்னைதேடி வரும் வாய்ப்புகளில் நல்லதை மட்டுமே ஓகே செய்து நடித்து வருகிறேன். அப்படி நடிப்பதால்தான் நான் நடிக்கிற ஒவ்வொரு கேரக்டருமே என்னை பேச வைத்து வருகிறது என்று கூறும் கோபி, நாதஸ்வரம் தொடரில் நடித்த ராஜேஷ் என்ற வில்லன் வேடத்திற்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்திருப்பதோடு, அடுத்து சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழக அரசின் விருதினையும் பெறுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது என்கிறார்.

நன்றி: தினமலர்
-
18th June 2015, 09:38 PM
#515
Moderator
Diamond Hubber
குலதெய்வம் சீரியலில் மெட்டிஒலி திருமுருகன் நடிக்கவில்லை!
மெட்டி ஒலி மெகா தொடரை இயக்கி அதில் ஒரு கேரக்டரிலும் நடித்தவர் திருமுருகன். அதையடுத்து, தேனிலவு, நாதஸ்வரம் ஆகிய தொடர்களை இயக்கி நடித்தவர், தற்போது குலதெய்வம் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.
மேலும், பரத்தை நாயகனாக வைத்து எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களையும் இயக்கினார். பின்னர் மீண்டும் டிவிக்கே திரும்பி விட்ட திருமுருகன், தற்போது குலதெய்வம் சீரியலை இயக்கி வருகிறார். தான் இயக்கும் எல்லா சீரியல்களிலுமே திருமுருகனும் ஒரு கேரக்டரில் நடித்து வந்ததால், தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலிலும் அவர் ஒரு கேரக்டரில் எப்படியும் நடிப்பார் என்றுதான் நேயர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்த குலதெய்வம் தொடரில் திருமுருகன் நடிக்கவில்லையாம். தான் நடிக்க உருவாக்கியிருந்த ஒரு கேரக்டரில்கூட வேறொரு நடிகரை நடிக்க வைத்திருக்கிறாராம். காரணம், அடுத்தபடியாக அவர் ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம். சீரியல் வேலைகள் நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சீரியலில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினால் படம் இயக்க சிரமம் ஏற்படும் என்பதால் இந்த குலதெய்வம் சீரியலில் அவர் நடிக்கவில்லையாம்.
மேலும், தனது 3வது படத்தில் நடிக்க சில இளவட்ட ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார் திருமுருகன்.
நன்றி: தினமலர்
-
27th June 2015, 07:04 PM
#516
Moderator
Diamond Hubber
அஜித் பட வாய்ப்பை மறுத்த சித்து
சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி தொடரில் சின்ன பாப்பாவாக நடித்து வருகிறார் சித்து. தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக வளர்ந்தவர். சமீபத்தில் அவருக்கு அஜீத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதை மறுத்து விட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தொகுப்பாளினி நான் விரும்பி தேர்வு செய்த வேலை. நடிப்பு பொழுதுபோக்கிற்காக நான் தொடங்கியது. இப்போது அதுவே முழு நேர வேலையாகிவிட்டது. ஒரு நிகழ்ச்சியை தொகுக்கும்போதும், ஒரு சீரியலில் நடிக்கும்போது செய்யப்போகிற வேலையை தெளிவாக புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் இதுவரை செய்து வருகிறேன். இப்போது அனுபவம் வாய்ந்த நளினி, நிரோஷாவுடன் போட்டிபோட்டு நடிப்பதை பார்த்து சினிமாவிலும் நடிக்க அழைத்தார்கள். அஜீத் படத்தில்கூட நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால் சினிமாவில் நடிப்பதை என் பெற்றோர் விரும்பவில்லை. அவர்கள் விருப்பத்தை மீறி இதுவரை எதுவும் செய்ததில்லை. அதனால் நடிக்கவில்லை என்கிறார் சித்து
நன்றி: தினமலர்
-
1st July 2015, 08:26 PM
#517
Moderator
Diamond Hubber
விஜய் டிவியிலிருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டி.டி. வெளியேறிவிட்டதாக பல வதந்திகள் வெளிவந்தன. அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைத்துள்ளார் டி.டி.
டிடி என்கிற திவ்யதர்ஷினி சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டவர். விஜய் டிவியில் காஃபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு தொகுப்பாளர். அவரின் நிகழ்ச்சிகளில் கலகல கலாய்ப்பும், டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. சமீபத்தில் விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவில் டிடியும், கோபிநாத்தும் இணைந்து நிகழ்சியை தொகுத்து வழங்கினர். அந்த நிகழ்சியில் டிடி சொதப்பியதாக கூறப்படுகிறது.
இதற்காக அவரை விஜய்டிவியிலிருந்து வெளியேற்றிவிட்டதாகவும், இவரே ராஜினாமா செய்துவிட்டதாகவும் வதந்திகள் கிளம்பின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த ஞாயிறு அன்று “ எங்கள் வீட்டுச் செல்லம் “ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது விஜய்டிவி. ‘காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு ஒரு இடைவெளி தேவைப்படுவதால் சில வாரங்கள் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. மற்றபடி நான் விஜய் டிவியை விட்டுப் போகவில்லை. இந்த டிவியின் செல்லம் நான்மட்டும் தான்’ என்று அந்த நிகழ்ச்சியில் பேட்டியளித்தார் டிடி. இதன் மூலம் தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு ஃபுல் ஸ்டாப் வைத்தார் டி.டி.
தொடர்ந்து “ எங்க வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன் போல எங்க வீட்டுச் செல்லம் டிடி என்று ஒருவர் ட்விட் செய்ததை டிடி ரீட்விட் செய்துள்ளார். மேலும் விஜய் டிவியின் தலைமை நிர்வாகி கே. ஸ்ரீராம் ட்விட்டரில், “ நம்ம வீட்டுச் செல்லம் நிகழ்ச்சி, டிடி பற்றிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கும் என்று நம்புகிறேன். டிடி சிறந்த தொகுப்பாளினி” என்று ட்விட் செய்தார். அதற்கு டிடியும் நன்றி தெரிவித்துள்ளார்
நன்றி: தினகரன்
-
18th July 2015, 06:37 AM
#518
Moderator
Diamond Hubber
பாசமலர் தொடரில் நடித்து வந்தவர் லட்சுமி விஸ்வநாத்.
பாசமலர் தொடரில் நடித்து வந்தவர் லட்சுமி விஸ்வநாத். அவரது நடிப்பும் கேரக்டரும் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று அதிலிருந்து விலகி மலையாள சீரியலுக்கு சென்று விட்டார். இங்கு ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் மலையாள ரீமேக்கான நில விளக்கு தொடரில் நடித்தார்
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு 7ம் உயிர் தொடரில் நடிக்க வந்திருக்கிறார். இதிலும் அவருக்கு முக்கிய கேரக்டர். "பாசமலர் தொடரில் இருந்து ஏன் விலகினேன் என்பது இப்போது தேவையில்லாதது. மலையாளத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறேன். இயக்குனர் அழகர், 7ம் உயிர் திகில் தொடர் அதில் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அழைத்ததால் மீண்டும் வந்திருக்கிறேன். மீண்டும் தமிழில் கவனம் செலுத்த இருக்கிறேன். இதற்காக தமிழ் கற்று வருகிறேன். கேரளாவில் பட்டப்படிப்பும் படித்து வருகிறேன். படித்துக் கொண்டே நடிக்க முடிவு செய்திருக்கிறேன். திகில் தொடரில் நடிப்பதால் இரவில் தூங்கும்போது பயமாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு 7ம் உயிரில் காட்சி அமைப்புகள் இருக்கிறது" என்கிறார் லட்சுமி விஸ்வநாத்.
நன்றி: தினமலர்
-
8th August 2015, 12:43 AM
#519
Moderator
Diamond Hubber
ஆதிரா சீரியலுக்காக கேரளாவில் முகாமிட்ட சி.ஜே.பாஸ்கர்!
ராதிகா நடித்த அண்ணாமலை, சித்தி தொடர்களை இயக்கிய சி.ஜே.பாஸ்கர், அதையடுத்து மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்ரி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார். வம்சம் தொடரை முதலில் இயக்கினார். பின்னர் கதை விசயத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார். அதையடுத்து, இனிமேல் சீரியலே இயக்கப்போவதில்லை என்றும் கூறி வந்தார். ஆனால் இப்போது மறுபடியும் அவர் சீரியல் பக்கம் வந்து விட்டார். தற்போது ஆதிரா என்ற தொடரை இயக்கி வருகிறார். சீரியல்கள் வழக்கம்போல் அதாவது அடுத்தவர்களின் குடும்பத்தை கெடுக்கும் கதைக்களத்தில் இருந்து மாறி புதிய பாணிக்கு வர வேண்டும் என்று கூறி வந்த சி.ஜே.பாஸ்கர், இந்த ஆதிரா சீரியலை, த்ரில்லர், ஹாரர் கதையில் இயக்கி வருகிறார். மேலும், பெரும்பாலும் மெகா சீரியல் குழுவினர் சென்னையை விட்டே வெளியேற தயங்கி வரும் நிலையில், இவரோ, ஆதிரா சீரியலை கேரளா சென்று படமாக்கி வருகிறார். ஹாரர் கதை என்பதால் அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வரும் சி.ஜே.பாஸ்கர், சினிமாவுக்கு இணையாக இந்த சீரியலின் காட்சிகளிலும், லொகேசன்களிலும் தனி கவனம் செலுத்தி வருகிறாராம்
நன்றி: தினமலர்
-
26th November 2015, 09:20 PM
#520
Moderator
Diamond Hubber
மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார் கணேஷ் பாபு
சின்னத்திரைக்கு பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட கணேஷ் பாபு 25க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார், 40க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமா இயக்குனரானார். இவர் இயக்கிய யமுனா படம் பரவலான பாராட்டை பெற்றாலும் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை. அடுத்து ஒரு ஸ்கிரிப்ட் தயார்செய்து வைத்துக்கொண்டு தயாரிப்பாளர் தேடினார் யாரும் கிடைக்கவில்லை.
அதனால் இப்போது மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி விட்டார். குலதெய்வம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். "அடுத்த படம் இயக்கத் தயார் நிலையில் இருக்கிறேன். ஆக்ஷன் த்ரில்லருக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது. பெரிய ஹீரோ நடிக்க வேண்டிய பெரிய பட்ஜெட் படமாக அது இருக்கும். அந்தப் படம் ஆரம்பிக்கும் முன் சற்று நேரம் கிடைத்தது. திருமுருகன் சாரும் அழைத்தார் மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டேன். இயக்குனர் ஆகிவிட்டாலும் அவ்வப்போது படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் அடுத்த படத்தை இயக்குவேன்" என்கிறார் கணேஷ் பாபு

நன்றி: தினமலர்
Bookmarks