Page 44 of 401 FirstFirst ... 3442434445465494144 ... LastLast
Results 431 to 440 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #431
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் -62
    (From Mr.Sudhangan's Facebook)

    1962ம் ஆண்டு வெளிவந்த படம் ` ஆலயமணி’ இந்த படத்தை தயாரித்தவர் வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பா!
    படத்தின் துவக்கமே விறுவிறுபாக இருக்கும்! `ஆலயமணி’ ஒரு காலத்தில் இந்த ஆலயமணி அடித்து பிழைத்து வந்த ஆறுமுகம் பிள்ளை! வறுமையின் பிடியில் விழுந்து மரணப்பாறையில் விழுந்து வாழ்வை முடிக்க நினைத்தார்!
    அவரை காத்தது ஆலயமணி! மடியப்போகும் நேரத்தில் அவரை தடுத்து வாழ்வைத் தந்தது ஆலயமணி!
    கோவில் மணி அடித்து பிழைத்து வந்த குடும்பத்தை கோடிஸ்வரனாக்கியது இந்த ஆலயமணி!
    அவர் குடும்பத்து குலதெய்வமே ஆலயமணி! அந்த ஆறுமுகம் பிள்ளையின் வழியில் வந்தவர் தான் தியாகராஜன்!
    அந்த தியாகராஜன் கதாபாத்திரம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
    ` முருகா! வெற்றியின் உருவே! எம்மையும் எமது நாட்டையும் வாழ வைய்யப்பா ! என்கிற வசனத்தோடு அவர் கோவிலில் முருகனை கும்பிடுவது போன்ற காட்சியோடு தான் படம் துவங்கும் பிறகு தான் படத்தின் டைட்டில் கார்டே வரும்! இந்தப் படத்தின் மூலக்கதையும் நான் ஏற்கெனவே படித்த ஜி.பாலசுப்ரமணியம்தான்!
    திரைக்கதை வசனத்தை எழுதியிருந்தவர் ஜாவர் சீதாராமன்! இந்தப் படத்தை இயக்கியவர் கே. சங்கர்!
    எந்த ஒரு சிறு தோல்வியையும் தாங்க முடியாத ஒரு கதாபாத்திரம் சிவாஜியுடையது!
    ஒரு டென்னிஸ் போட்டில் தோல்வி என்றால் கூட மனம் வெதும்புவார்! அந்த ஆரம்ப காட்சிகளில் அவர் காட்டும் அந்த பணக்கார மிடுக்கு! பேசும் ஆங்கிலம்! அதை உச்சரிக்கும் விதம்! ஒரு பரம்பரை பணக்க்காரனுக்கு கூட அத்தனை மிடுக்கு இருக்குமா என்று சந்தேகம் படும்படியாக ஒரு ஆரம்ப அறிமுகம் அந்த கதாபாத்திரத்திற்கு!
    அவருடைய அருமை நண்பராக எஸ்.எஸ்.ஆர். நடித்திருப்பார்! அதில் ஒவ்வொரு வசனத்திலும் ஜாவர் சீதாராமனின் அறிவு கூர்மை பளிச்சிடும்!
    ஏழை எஸ்.எஸ்.ஆரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து தனக்கு இணையான அந்தஸ்தை கொடுப்பார் பணக்கார சிவாஜி!
    அப்போது அதை ஏற்றுக்கொள்ள எஸ்.எஸ்.ஆர் தயங்குவார்!
    அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு ஒரு வசனம்!`நானோ தன்மான உணர்ச்சி அதிகமுள்ள ஒரு ஏழை. உன்னைப் போல ஒரு பணக்காரனுக்கு நண்பனாக இருப்பது என்பது கூரிய கத்தியை எடுத்து தானே குத்திக்கொள்வதைப் போன்றது’ என்பார்!
    அன்றைய கதாசிரியர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தான் வாழ்க்கையின் யதார்த்தங்கள் எத்தனை அவர்கள் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது!
    அதை ஆலயமணி படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரியும்! இந்த படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ். வீரப்பாவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்! தமிழ்த் திரையுலகம் இதுவரையில் எத்தனையோ வில்லன்களைப் பார்த்திருக்கிறது!
    வில்லன் என்றால் வீரப்பா தான் என்பதற்கு அடையாளமாக அமைந்தது அவருடைய அந்த அட்டகாசமான அந்த வில்லன் சிரிப்பு! இவரால் திரையில் வஞ்சிக்கப்பட்ட கதாநாயகிகள் ஏராளம்! சாவித்திரி, அஞ்சலிதேவி,. பத்மினி, வைஜெயந்திமாலா, தேவிகா என்று பலரைச் சொல்லலாம்! ஆனால் எல்லாமே படத்தோடு சரி! நேரில் மிகவும் அமைதியானவர் பி.எஸ். வீரப்பா ! அதிர்ந்து கூட பேசமாட்டார்! ஆனால் திரையில் ஏராளமான அட்டகாசங்களை செய்வார்! வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் மிகவும் பிரபலமானது அந்த வைஜெயந்தி மாலா பத்மினி போட்டி நடனம்! அதற்கு நடுவே ` சபாஷ் ! சரியான போட்டி’ என்று இவரது மந்தகாசமான குரல் தனித்து ஒலிக்கும்!
    முன்பு ஒரு பெண்ணை காதலிப்பவர்கள் கூட இவரது வசனத்தைத் தான் சொல்வார்கள்!
    கே.பி.சுந்தராம்பாளின் நட்பு கிடைத்து அதன் மூலமாக அவர் நடித்த மணிமேகலை படத்தில் இவருக்கு முதலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது! தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வந்த வீரப்பா ஐம்பதுகளின் இறுதியில் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் என்று ஒரு சொந்த பட நிறுவனத்தை துவங்கினார்! இவரது நிறுவனம் தயாரித்த முதல் தமிழ்ப் படம் `பிள்ளைக் கனியமுது’ எஸ்.எஸ்.ஆர் – ஈ.வி.சரோஜா ஜோடி! வில்லன் வீரப்பா!
    அடுத்து ஜெமினி – அஞ்சலிதேவி ஜோடியாக நடித்த ` வீரக்கனல்’ படத்தை தயாரித்தார்!
    இதற்கடுத்து வந்த திரைப்படம் தான் ` ஆலயமணி’ இந்த படத்தின் வேலைகள் 1961 களில் துவங்கியது! 1962ம் வருடம் படம் வெளிவந்தது!
    இவரது நிறுவனத்தின் எம்ப்ளமே ஆலயமணிதான்!
    `ஆலயமணி’ படத்திற்கு கல்கண்டு இதழில் தமிழ்வாணன் கேள்வி – பதில் பகுதியில் இப்படி எழுதினார்
    `வீரப்பா பட்ட பாட்டிற்கெல்லாம் விடை கிடைத்துவிட்டது! `ஆலயமணி’யின் வெற்றி டாண் டாண் என்று ஒலிக்கத் துவங்கிவிட்டது! `ஆலயமணி யின் வெற்றி இதனை இந்தியிலும் தயாரிக்கும் ஆர்வம் பலருக்கும் இருந்தது!
    பலர் வீரப்பாவை அணுகி இந்தி உரிமையைக் கேட்டார்கள்! இதற்கு ஒரு காரணம் இருந்தது! ஜி.என்.வேலுமணி தமிழில் பாகப்பிரிவினை படத்தை சிவாஜியை வைத்து எடுத்தார்! படம் தமிழில் மகத்தான வெற்றியடைந்த படம்!
    பலரும் இந்தியின் தயாரிக்க வேலுமணியை அணுகினார்கள்! ஆனால் `பாகப்பிரிவினை’ கிராமியப் பின்னனி கொண்ட கதை! இதை இந்தியின் எடுக்க பயந்த வேலுமணி அதன் இந்தி உரிமையை வாசுமேனன் என்கிற தயாரிப்பாளருக்கும் விற்றார்! அவர் இந்தியில் சுனில் தத்தை கதாநாயகனாக வைத்து எடுத்தார்.படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றி! வேலுமணியின் கணிப்பு பொய்த்தது! இந்த சம்பவம் வீரப்பாவின் நினைவில் வந்தது! பலர் ஆலயமணி யின் கதையை இந்தியில் எடுக்கும் உரிமையைக் கேட்டு பலர் வந்தார்கள்! வீரப்பா எந்த முடிவையும் எடுக்கவில்லை!
    மனதில் அவருக்கு ஏகக் குழப்பம்!
    வேலுமணியின் அனுபவத்தை பல நண்பர்கள் வீரப்பாவிற்கு நினைவு படுத்தினார்கள்! நண்பர்கள் வேறு தூபம் போட்டார்கள்! `இத்தனை தயாரிப்பாளர்கள் வந்து உரிமை கேட்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமலா இருக்கும்? என்கிற கேள்வியை அவர் மனதில் விதைத்தார்கள்! அங்கே தான் விதி விளையாடியது!


    (தொடரும்)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Likes Russellmai, eehaiupehazij, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #432
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் – 63
    (From Mr.Sudhangan's Facebook)


    ஜி.என். வேலுமணி தன்னுடைய `பாகப்பிரிவினை’ கதையை யாருக்கோ விற்றார். அந்தத் தயாரிப்பாளர் லாபமடைந்தார் இப்போது `ஆலயமணி’ கதை ஏன் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் நாமே எடுத்தால் என்ன ?
    ஆசை பி.எஸ். வீரப்பாவின் மனதில் அலை புரண்டது! தானே இந்தியிலு எடுக்க முடிவு செய்தார்! அப்போது இந்தியின் நட்சத்திர நடிகர் தீலிப்குமார்! அவர் தான் கதாநாயகன் என்று முடிவாகி, தமிழில் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படம் இந்தியின் வண்ணப்படமானது! படத்திற்கு தலைப்பு `ஆத்மி’ படத்தை எடுக்க ஆரம்பித்தவுடனேயே ஏன் காலை வவத்தோம்! என்கிற மாதிரி ஆனது! எப்போது இந்திப் படத்தில் நடிகர்கள் குறிப்பிட்ட நேரத்திறு வரமாட்டார்கள்.
    அதனால் ஏற்பட்ட கால விரயம்! அதிகமான பணச் செலவு, அதையும் மீறி படம் வெளி வந்த போது படம் படுதோல்வி!

    சரி தமிழில் வெற்றி `ஆலயமணி’ ஏன் இந்தியிட எடுபடவில்லை!
    அப்போது விமர்சகர்கள் சொன்னது! சிவாஜி,எஸ்.எஸ்.ஆர் கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கூடவே இங்கே திரைக் கதைக்கு ஜாவர் சீதாராமன்!
    அங்கே இந்த காம்பினேஷன் எங்கேயிருந்து? என்று திரை விமர்சகர்கள் கேட்டார்கள்!
    அது ஒரு வகையில் உண்மைதான்!
    இயல், இசை நாடகம் என்கிற முப்பரிமாணமும் கொண்ட படம் ஆலயமணி!
    ஆமாம்! பாடல்கள் ஆலயமணிக்கு ஒரு பெரிய பலம்!
    `மானாட்டம் தங்க மயிலாட்டம்’ ` தூக்கம் உன் கண்களை தழவட்டுமே’ ` கண்ணான கண்ணனுக்கு அவசரமா ‘ பொன்னை விரும்பு பூமியிலே என்னை விரும்பு ஒருயிரே’
    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா’ ` சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ என்று எல்லா பாடல்களுமே அற்புதமான ஹிட்!
    சிவாஜி ஒரு முறை என்னுடம் பேசும்போது சொன்னார், ` காதலும், கவிதையும், வாழ்க்கைத் தத்துவமும் இணைந்த பாடல்கள் கொண்ட படம் ஆலயமணி!. எல்லா பாட்டும் ஹிட்டானாலும், எனக்கு அந்த படத்தில் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த பாடல் ` சட்டி சுட்டதடா கைவிட்டதடா~! புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா ‘ பாடலுக்காகவே பல முறை படம் பார்த்தவர்கள் உண்டு!.
    ஆட்டம் போட்ட அடங்கிய மனிதர்களின் குரலாகவே அந்த சட்டி சுட்டதடா பாட்டை பார்த்தார்கள்! வாழ்க்கையில் ஆட்டம் போட்ட அடங்கிய பல பெரிய மனிதர்கள் தங்களின் இன்றைய நிலையை வெளியே சொல்ல முடியாமல் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
    ஒரு முறை நான் பொள்ளாச்சிக்கு ஒரு படப்பிடிப்புக்கு போயிருந்தேன். தொலைவில் ஒரு பெரியவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பிற்கு உதவுகிறார் என்பதையும், அந்த ஊரில் முக்கிய புள்ளி என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் அவர் முகம் மட்டும் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.
    அவரை அருகில் அழைத்து பேசியபோதுதான் தெரிந்தது. அப்போது அவர் சொன்னார், `ஆலயமணி’யில வர்ற உங்க கதாபாத்திரம் தாங்க நான்! தோல்வியே வரக்கூடாதுன்னு நினைத்த ஒரு பொறாமைக்காரன்! அதனால் பணத்தையும் சொத்தையும் இழந்தேன். இப்போது என் நிலைமை நீங்க பாடின ஆலயமணி பாட்டு மாதிரிதாப் ` எலும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என் உள்ளத்த்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா ‘ என்றார்.
    அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்’ என்றார் சிவாஜி!
    அதே போல் சிவாஜிக்கு தன் படத்தில் எஸ்.எஸ். ஆர் இருக்க வேண்டும் என்று நினைப்பார்! சிவாஜி எஸ்.எஸ். ஆர் இணைந்து நடித்த பல படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. ` தெய்வப் பிறவி’ `கைகொடுத்த தெய்வம்’ படங்களைச் சொல்லலாம்!
    எஸ்.எஸ். ஆர். முதல் முறையா ராஜ்ய சபா எம்.பியானார். அப்போது சிவாஜி எஸ்.எஸ். ஆர் வீட்டிற்கே போய் முதலில் வாழ்த்தினார். பிறகு எஸ்,எஸ், ஆர் டெல்லி போவதில் தனக்கு விருப்பமில்லை என்பதையும் தெரிவித்தார் சிவாஜி. அதற்கு சிவாஜி சொன்ன காரணம், ` என் நடிப்புக்கு பெருமையே உன்னாலதான்!. நீ என் படத்தில் இருந்தா நான் இன்னும் எச்சரிக்கையாக நடிப்பேன்.நீ என்னோடு நடிக்கும்போது நீ நடிகனாகவே எனக்குத் தெரிய மாட்டே அந்த கதாபாத்திரமாகத்தான் தெரிவே’ என்றாராம் சிவாஜி!
    இதை எஸ்.எஸ். ஆர் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்!
    சினிமாவில் வெற்றி என்பது நிரந்தரமல்ல என்பதை உணர்ந்தவர்கள் தான் அன்றைய திரைக் கலைஞர்கள்!
    அதற்குக் காரணம் இருந்தது!
    1962ம் வருடம் `ஆலயமணி’ மிகப்பெரிய வெற்றி கண்ட அதே ஆண்டு, சிவாஜி, பத்மினி, நடித்த செந்தாமரை படம் வெளியானது.
    இந்த படத்தை தயாரித்தவர் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனுவாசன். அப்போது அவர் பெரிய தயாரிப்பாள்ர்!
    படத்திற்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி! படத்தை இயக்கியவர் ஏ.பீம்சிங்!
    ஏனோ படம் நீண்ட நாள் தயாரிப்பாக போனது!
    வெகு நாள் கழித்து படம் வெளியானது!
    அந்த படத்தில் தான் பத்மினி ஆண்டாளாக தோன்றி ` வாரணமாயிரம் சூழ வலம் வந்து’ பாட்டாய் பாடியிருப்பார்.
    அதில் வரும் திருப்பாவை பாடலுக்கு குரல் கொடுத்திருந்தவர் எம்.எல் வசந்தகுமாரி!
    சிவாஜி தன் பட வரிசையில் ` செந்தாமரை ‘ படமும் உண்டு என்று சொன்னாலே லேசாக முகத்தைச் சுளிப்பார்!
    அப்படி ஒரு தோல்வி கண்ட படம் `செந்தாமரை’ ஒரே காம்பினேஷனின் முதல் படம் வெற்றி கண்டவர்கள் அடுத்த படத்திலேயே படு தோல்வியையும் கொடுத்தார்கள்.
    சினிமாவின் போக்கே அலாதியானது என்பதை 1962ம் வருட சிவாஜி படங்களை வைத்தே சொல்லலாம்!
    அந்த வருடத்தின் ஆரம்பத்தில் அவருக்கு வெற்றியை கொடுத்த படம் ` பார்த்தால் பசி தீரும்’
    அதற்கடுத்த பெரும் வெற்றியை தந்தது ` பலே பாண்டியா’ பதினைந்தே நாளில் எடுக்கப்பட்ட படம்
    படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர் பந்துலு! அந்த படத்தில் பல சிறப்பம்சங்கள் இருந்தன! சிவாஜிக்கு மூன்று வேடங்கள்!
    சிவாஜியை வைத்து ஒரு முழு நீள நகைச்சுவை படம் எடுக்க முடியுமா? என்கிற பிரமிப்பில் பலரை ஆழ்த்திய படம்
    இந்தப் படத்திற்கு பின் சிவாஜியை வைத்து பல விதங்களில் கதைகளை யோசிக்க ஆரம்பித்தார்கள்

    ( தொடரும்)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. Likes Russellmai, eehaiupehazij, kalnayak liked this post
  6. #433
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    11/3/2015 அன்று 43 ஆண்டுகளை கடக்கும் ஞான ஒளி படத்தின் நினைவாக..... வாசு வர வாய்ப்புக்கள் உள்ளது.

    ஞான ஒளி-1972


    பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.

    ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.

    ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.

    Typical Behaviours of an orphan-

    1)Poor Self Regulation
    2)Emotional Volatility.
    3)Act on Impulse.
    4)Immediate Urge for self-gratification.
    5)Mixed Maturity levels.
    6)Self parenting syndromes-Taking justice in their hands.
    7)Learned Helplessness
    8)Extreme Attention seeking.
    9)Indiscriminate friendliness.
    9)Absessive compulsive Tendencies.
    10)Idiosynchrasies.


    மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .

    அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.

    தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.

    poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
    தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.

    obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?

    துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?

    இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.

    இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.

    நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.

    நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.

    அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.

    நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.

    பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.

    இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....

    மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.
    Last edited by Gopal.s; 9th March 2015 at 08:55 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes KCSHEKAR, sss, Harrietlgy liked this post
  8. #434
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலை வேந்தன்,

    உங்களிடம் எனக்கு பிடித்த அம்சம் ,நீங்கள் சொல்ல போவதை யூகிக்க முடிகிறது. வலையில் சுலபமாக விழுகிறீர்கள்.

    நாங்கள் என்ன சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கூறியதை மட்டுமே சொல்லி பீற்றி கொண்டிருக்கிறோமா?எந்த பாத்திரத்திலும் நல்ல கருத்துக்களை மட்டுமே சொல்வோம் என்று கதைக்கிறோமா?

    நாங்கள் எடுத்த பாத்திரம் எதை செய்ய வேண்டுமோ,அதை மட்டுமே செய்பவர்கள்.

    என்னிடம் நிறைய நீதி கருத்துக்கள் ஸ்டாக் உண்டு தெரியுமோ?

    பி.கு- நான் வஞ்சனையில்லாமல் சாப்பிடுவேன். இதற்கு ஆத்திர பட்டு நம் சந்திப்பில் வடையிலோ,தோசைகளிலோ கை வைத்து விடாதீர்கள்.
    Last edited by Gopal.s; 9th March 2015 at 08:55 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #435
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    கட்டபொம்மன் உங்களை வரவழைத்ததில் திரியின் புதிய வாசகர்களுக்கு கிடைத்தது ஒரு அரிய விருந்து. இந்த பதிவுகளைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்பே நாம் அலசியதை நினைவு கூர்ந்தேன். இதைப் படித்தவுடன் school of acting திரிக்கு சென்று மீண்டும் பல பதிவுகளை படித்தேன். நடிகர் திலகம் என்ற மகா கலைஞன் நடத்திய கலைப் பயணம், அந்த பயணத்தின் மைற்கற்களை கடந்து செல்லும் உங்களின் ஒவ்வொரு பதிவும் அதற்கு எதிர் வினையாற்றிய கார்த்திக், வாசு மற்றும் ராகவேந்தர் சார் பதிவுகள் அனைத்துமே மீண்டும் புதிதாய் படிக்கும் உணர்வை தந்தது.

    நன்றிகள் பல!

    அன்புடன்

  10. Likes sss liked this post
  11. #436
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1972 ஆம் ஆண்டு ....மற்றும் ஒருமுறை திரை உலகில் யாருடைய வருடம் என்று தமிழகமே அறிந்த உண்மை.

    வெளியான படங்கள் :

    1) ராஜா - - 100 நாட்கள் மேல்.
    தேவி பாரடிச திரை அரங்கில் வசூலில் ஒரு பிரளயம்.

    2) ஞான ஒளி - சொல்லவே வேண்டாம்..ஆதாரங்கள் பேசும் வெறும் வாய்ஜாலம் அல்ல - பிளாசாவில் புதிய சரித்திரம் படைத்தது. - 100 நாட்கள் மேல்

    3) பட்டிகாடா பட்டணமா - தமிழில் வெளிவந்த அனைத்து கருப்பு வெள்ளைபடங்களிலேயே அதிகபட்ச வசூல் செய்த தேவர் ! - 184 நாட்கள்

    4) தர்மம் எங்கே - அந்த ஆண்டின் சுமார் ரகம்..ஓட்டத்தில் தோல்வியே என்றாலும் வசூலில் சோடை போகாத படம்.

    5) தவப்புதல்வன் - மீண்டும் ஒரு கருப்பு வெள்ளை 100 நாட்கள் படம்.

    6) வசந்தமாளிகை - அன்றும் இன்றும் என்றும் ....1000 காதல் மன்னர்கள், இளவரசர்கள் வந்தாலும் ....காதலுக்கு ஒரு வசந்தமாளிகை - இது தமிழ் திரை உலக புதுமொழி....மீண்டும் ஒரு 175 நாட்கள் (TOTAL RUN DAYS 200) படம்...இலங்கையில் 250 நாட்களுக்கும் மேல் ... திராவிட மன்மதனாக நடிகர் திலகம் !

    7) நீதி - இரெண்டே இரண்டு costume படம் முழுதும் - நினைத்து பார்க்க விடுவார்களா பிற கதாநாயகர்கள் ? செய்து காட்டியவர் நடிகர் திலகம் ! - 100 நாட்கள் என்ற தகவல் உண்டு பத்திரிகை விளம்பரம் கிடைக்கவில்லை.


    ஆயிரம் பேர் ஆயிரம் கதை புனையலாம் ....ஆனால் தமிழ் திரை உலகை பொருத்தவரை 1972 அது மற்றொரு நடிகர் திலகம் ஆண்டு என்பதற்கு மேற்கூறியவயே சாட்சி !

    வெளிவந்த 7 படங்களில் 4 படங்கள் - 100 நாட்கள் மேல் ஓடிய படங்கள் -
    2 படங்கள் - 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் !

    கலர் படங்களின் ஆதிக்யம் தொடங்கி மக்கள் கலர் படங்கள் விரும்பதொடங்கியும் .....ஒரே ஆண்டில் மூன்று கருப்பு வெள்ளை படங்கள் - ஒன்று வெள்ளிவிழா ..மற்ற இரண்டு 100 நாட்கள்....சாதனைகளின் உச்சம்.

    நடிகர் திலகம் அவர்களின் திரைப்படங்கள் வெளிவரும் சமயம் பலர் புகைச்சலுக்கு ஆளாவார்கள் என்றால் 1972 மீண்டும் அதீத புகைச்சல் ஒரு சிலர்க்கு.

    என்ன செய்தாலும் இவரின் ஓட்டத்தை தடுத்து வாட்டத்தை கொடுக்க இன்னும் முடியவில்லையே என்று ..!

    என்ன செய்வது கலைவாணியின் அருள் இவருக்கு மட்டும்தானே உள்ளது ! ..சாதாரண அருளா என்ன ?


    Rks
    Last edited by RavikiranSurya; 10th March 2015 at 11:37 AM.

  12. Likes Russellmai, kalnayak, Harrietlgy liked this post
  13. #437
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    திரு rks சார் அவர்களே
    வசந்தமாளிகை எங்களது மதுரை நியூ சினிமாவில் 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது

  14. #438
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சந்திரசேகர் சார்,

    சுதாங்கனின் செல்லுலாயிட் சோழன் தொடர் பல சுவையான செய்திகளை வாசகர்களுக்கு வழங்குகிறது. அனைவரும் ரசிக்கும் வண்ணம் எழுதும் சுதாங்கனுக்கு வாழ்த்துகள்!

    கோபால்,

    ஒரு சில நேரங்களில் ஒரு சில விவாதங்கள் எவ்வித பலனையும் தராது. நீங்கள் என்ன சொன்னாலும் அதை ஒப்புக் கொள்ள மறுப்பர் எனும்போது ஏன் உங்கள் நேரத்தை வீணாக இதற்கு செலவிடுகிறீர்கள்?

    ஆர்கேஎஸ்,

    அணி வகுத்து வந்த ஞான ஒளி விளம்பரங்கள் கோர்வையாக தொகுக்கப்பட்டிருந்தன. வாழ்த்துகள்! கோபாலுக்கு சொன்ன அதே அறிவுரைதான். விட்டுத் தள்ளுங்கள்

    அன்புடன்

  15. #439
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1955 - திராவிட இயக்கங்கள் வேரூன்ற தொடங்கிய காலம் நாத்திகம் மெல்ல மெல்ல நல்ல பாம்பை போல படம் எடுக்க தொடங்கிய காலம். மக்கள் மனதில் பொய் விதைகள் பலவற்றை தொடர்ந்து விதைக்க தொடங்கிய காலம். உண்மை தமிழனை, உன்னத தமிழ் நடிகனின் வளர்ச்சி பொறுக்க முடியாமல் அதை தடுக்க பல கூட்டணிகள் திரை உலகில் அமைந்த காலகட்டம்.

    ஒரு மாமாங்கமாக முயற்சி செய்து முடியாதவர்கள் இங்கு இருக்க இவன் மட்டும் என்ன செய்துவிட முடியும் என்று எகத்தாளம் பேசியவர்கள் வளர்ந்துகொண்டிருந்த காலம்.

    அத்துணை சதிகளையும் முறியடித்து தமிழ் திரைப்பட உலகின் மூன்றில் ஒரு பங்கு வர்த்தகத்தை தன்னுள் அடக்கி தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமல்ல....உலக திரைப்பட உலகின் சிறந்த நடிகர் என்று நடிக்க வந்த ஏழே வருடத்தில் உண்மையான ஒரு முதல் உலகநாயகனாக விஸ்வரூபம் கண்ட நடிகர் திலகம்.

    நாத்திகம் வளர திரை உலகை தவறாக பயன்படுத்த நினைத்த பொய்யர்களுக்கு சவால் விடும் வகையில் ஆதிகம் சார்ந்த படங்களும், தமிழ் குடும்பங்களின் நெஞ்சங்களில் குடும்பம் என்றால் என்ன...எப்படி அதை வழிநடத்தவேண்டும் எந்த விதத்தில் உறவுகள் இருக்கவேண்டும் இப்படி பல நல்ல கருத்துக்களை தனது திரைப்படங்கள் மூலம், தனது நடிப்பின் மூலம் தமிழக மக்களுக்கு வேரூன்ற செய்த தவப்புதல்வன் நடிகர் திலகம்.

    நடிகர் திலகம் நடிக்க வந்ததால் தமிழகத்தில் இன்றளவும் பாசம், பந்தம், கலாசாரம், பற்று, தேசபற்று முதலியன வலுப்பெற்றது. அடிதடிகள் இரெண்டாம் பட்சமாக ஒதுங்கின. மக்களிடையே தேசியமும் தெய்வீகமும் வலுபெற்றன !

    1952 தீபாவளி வரை வறண்ட பாலைவனமாக இருந்த தமிழ் திரையுலகில் பாலைவன சோலையாக, ஊற்றெடுத்து ஓடும் வற்றாத ஜீவ நதியாக தமிழகத்தில் ஓடத்துடங்கியது நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு.

    சாமானியனாக, சாதுர்யனாக, தேச தொண்டனாக, இறைவனாக, இறை அடிகளாக, உத்தமனாக, படை வீரனாக, வரலாற்று நாயகனாக ...பல பல உருவில் தமிழர் நெஞ்சங்களில் அன்றும் இன்றும் என்றும் தமிழகம் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து மக்கள் மனதில் என்றும் உள்ளவர் நமது நடிகர் திலகம்.

    தமிழக மக்கள் நடிகர் திலகத்தை தம் குடும்பத்தில் ஒருவராக மனதார கருதியதால் வந்த விளைவு ....தமது குடும்ப உறுப்பினர் அரசியல் என்ற சாக்கடையில் விழுந்து நாற்றமடிக்க கூடாது என்ற முடிவு எடுத்ததன் பலன் தமிழக அரசியலில் நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரு வீழ்ச்சி.

    ஆயிரம் பேர் நாடாளலாம் சாத்தியமே .....ஆனால் உலக திரை உலகை ஆள இனியும் ஒருவர் பிறக்க முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை !

    அது நடிகர் திலகத்தோடு முடிந்துவிட்டதொன்று !

    நடிகர் திலகம் படைத்திட்டது வெறும் சாதனை அல்ல ...சகாப்த்தம் !

    நடிகர் திலகம் அவர்களின் திரை பயணம் ஒரு சாதாரண வரலாறின் பக்கம் அல்ல ......அது ஒரு இரெண்டாம் உலகம் !


    Rks

  16. Thanks sss, ifohadroziza thanked for this post
    Likes sss, ifohadroziza, eehaiupehazij, kalnayak liked this post
  17. #440
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vcs2107 View Post
    திரு rks சார் அவர்களே
    வசந்தமாளிகை எங்களது மதுரை நியூ சினிமாவில் 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது
    SORRY Sir...I Forgot to mention that ..Will update it

  18. Thanks ifohadroziza thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •