Page 3 of 400 FirstFirst 123451353103 ... LastLast
Results 21 to 30 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #21
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    CONGRATULATIONS TENALI RAJAN SIR FOR STARTING OUR GOD THREAD NO 14





  2. Likes Russelldvt liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #22
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Likes Russelldvt liked this post
  6. #23
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    THANKS to ALL OUR TEAM MEMBERS FOR COMPLETING our GOD THREAD NO 13 within SHORT PERIOD




    Last edited by Yukesh Babu; 3rd February 2015 at 08:16 AM.

  7. Likes Russelldvt liked this post
  8. #24
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    பொன் தைத்திங்கள் மங்கலதிருநாளாம்
    மகிழ்ந்தனரே மாதோர்குலமும், மக்களுமே;
    தரணியிலே ஒளிவெள்ளம், தங்க திருமகனின் பிறப்பாலே
    தாயோரின் மகிழ்ச்சி உள்ளம்; தர்மத்தின் தலைவனை
    தாலாட்டி பாடுகின்றார் எங்க வீட்டு பிள்ளை இவனென்று;.
    மாதவம் செய்தனரோ, நோன்பு வளர்த்தனரோ
    மன்னாதி மன்னனின் வருகைக்காக, மன்னவனின்
    அருளுக்காக, ஆட்சிக்காக, இணையில்லா ஈகைக்காக.
    மக்களின் துயர் நீக்க வந்த நாடோடி மன்னனுக்காக.

    இறைவன் வந்தானே இன்னிசை இசைப்பிரே;
    துள்ளியோடி, துதிபாடி இசை பாடுங்கடி, ஆடுங்கடி,
    தூயோன் வரவுதனை, புரட்சி தலைவன் வந்தானே.
    சிங்கம் வளர்த்த எங்கவீட்டுபிள்ளை அவன்தானே
    ஏழையின் சிரிப்பினில் இறைவனை கண்டானே
    எட்டாவது வள்ளலின் ஏற்றமிகு எழில்தானே
    சிந்தையில் வைப்போமே தெய்வதாய் திருமகனின் திருப்புகழை
    கதிர்காம கந்தனோ, கண்டியில் பிறந்தானே, காவிய தலைவனே,
    காலத்தை வென்றவனே, கடமையின் உயர்கோன் அரசனே.

    பொன்னொளிர் மேனியன், தன்னோளிர் துயவன்,
    மாயோன், மக்களின் காவலன், மக்கள் திலகம் -
    புவிபுகழும் மாதவன் - மேய்ப்பன் - மறையோன்.
    ஆனந்த ஜோதியாம் அருள் மழைஜோதியே,
    மக்களின் ஒளிவிளக்கே, மாலை நாம் அணிந்தே-அவன்
    திருப்புகழை நாம் வளர்ப்போம் ஆண்டாள் அவள்போலே;
    அவன் திருநாமம் தான் உரைத்து, திருப்புகழை ஏற்றி வைப்போம்.

    ஏழையின் இறைவன் அவன் எங்கவீட்டுபிள்ளை வரம்
    மறையாத புகழ் கொண்ட மன்னாதி மன்னன் அமரன்
    மக்களின் அருள் விளக்கே, மாற்றாரும் மனம் விரும்பும்
    அன்னமிட்ட ஆலயமே;சீலோர்கள் வணங்கும் சக்ரவர்த்தி திருமகனே.
    மறை ஆளும் மக்கள் திலகமே, திரை ஆண்ட தென்னவனே;
    நல்ஆட்சிக்கோர் நாயகன், வெற்றிகோர் விண்எட்டும் வாமனன்.
    Last edited by Tenali Rajan; 5th February 2015 at 11:28 AM.

  9. Likes Russelldvt, ainefal liked this post
  10. #25
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    [FONT=Arial Black]

    அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.
    அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
    புகழெல்லாம் எம்.ஜி.ஆர்.
    பொன்மனம் எம்.ஜி.ஆர், பொன்மனம் எம்.ஜி.ஆர்.

    சத்யஅருளாலே தரணிக்கு வந்தவன்,
    தத்துவ சோலையிலே தவமாக பூத்தவன்;
    தவமாக பூத்தவன்.
    அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.
    அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
    புகழெல்லாம் எம்.ஜி.ஆர்.
    பொன்மனம் எம்.ஜி.ஆர்,
    பொன்மனம் எம்.ஜி.ஆர்,/FONT]



    காவிய தலைவன் அவன்,
    கருணையின் வடிவம் அவன்;
    மன்னாதி மன்னன் அவன்,
    மக்களின் திலகம் அவன்,
    மக்களின் வேந்தன் அவன்.
    அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.
    அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
    புகழெல்லாம் எம்.ஜி.ஆர்.
    பொன்மனம் எம்.ஜி.ஆர்,
    பொன்மனம் எம்.ஜி.ஆர்.


    அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.
    அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
    புகழெல்லாம் எம்.ஜி.ஆர்.
    பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
    பொன்மனம் எம்.ஜி.ஆர்
    .
    Last edited by Tenali Rajan; 5th February 2015 at 11:31 AM.

  11. Thanks Richardsof thanked for this post
    Likes Russelldvt liked this post
  12. #26
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    கடவுள், இறைவன், ஆண்டவன், தெய்வம், கோவில், என்ற சொல்லை தனது பாடல்களில் அதிகமான அளவில் புகுத்தி, தெய்வ உணர்வினை எளிதாக மக்கள் மனதில் வலியுறுத்தி, நிலை நிறுத்தி "மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்" "வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்" என்று நிரூபித்து, மெய்ப்பித்து காட்டிய தலைவன் பொன்மன செம்மல், புரட்சி தலைவன், எங்க வீட்டு பிள்ளை, வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.



    காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
    கடலில் தவழும் அலைகளிலே
    இறைவன் இருப்பதை நான் அறிவேன்
    என்னை அவனே தான் அறிவான்

    இறைவன் ஒருவன் இருக்கின்றான்
    இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
    இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்.

    கடவுள் என்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி
    விவசாயி .... விவசாயி ....
    கடவுள் என்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி
    விவசாயி .... விவசாயி ...


    வருக வருக தேடி வந்த செல்வமே
    நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே.

    கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

    ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
    அதை எப்போதும் காத்திருப்பேன்.

    பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
    தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
    மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
    அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்.

    பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
    சாமிக்கு நிகர் இல்லையா
    பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை இல்லையா.

    கோவில் என்றால் கோபுரம் காட்டும்
    தெய்வம் உண்டு அங்கே
    உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
    எண்ணம் வேண்டும் இங்கே
    கோவில் என்றால் கோபுரம் காட்டும்
    தெய்வம் உண்டு அங்கே
    உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
    எண்ணம் வேண்டும் இங்கே
    பிறந்த நாடே சிறந்த கோவில்
    பேசும் மொழியே தெய்வம்
    இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
    கோபுரமாகும் கொள்கை.

    ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
    அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்.

    ஆதி கடவுள் ஒன்றேதான்
    அதைக் காண முடியாது
    ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
    இதில் பேதம் கிடையாது
    உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
    உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
    ஆதிகடவுள் ஒன்றே தான்.

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி
    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி.

    வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
    பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
    நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
    பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
    நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
    வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்.

    கடவுள் வாழ்த்து பாடும்
    இளங்காலை நேரக் காற்று
    கடவுள் வாழ்த்து பாடும்
    இளங்காலை நேரக் காற்று
    என் கைகள் வணக்கம் சொல்லும்
    செங்கதிரவனைப் பார்த்து
    கதிரவனைப் பார்த்து

    தாயின் வடிவில் வந்து
    என் தெய்வம் கண்ணில் தெரியும்
    தாயின் வடிவில் வந்து
    என் தெய்வம் கண்ணில் தெரியும்
    அவள் தாழ் பணிந்து எழுந்தால்
    நம் தொழிலில் மேன்மை விளையும்.

    மண்குடிசை வாசலென்றால்
    தென்றல் வர வெறுத்திடுமா
    மாலை நிலா ஏழையென்றால்
    வெளிச்சம் தர மறுத்திடுமா
    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
    ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை.

    உள்ளமென்றொரு கோவிலிலே
    தெய்வம் கண்டேன்
    அன்பே வா.

    அன்பில் வாழும் இதயம் தன்னை
    தெய்வம் கண்டால் வணங்கும்
    எங்கே சொல்லு
    வணங்கும்.

    காத்தும் மழையும் யாருக்கும்தான்
    பொதுவில் இருக்குது
    அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
    கருத்து இருக்குது.

    இறைவா உன் மாளிகையில்
    எத்தனையோ மணி விளக்கு
    தலைவா உன் காலடியில்
    என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
    நம்பிக்கையின் ஒளி விளக்கு


    ஆண்டவனே உன் பாதங்களை
    நான்கண்ணீரில் நீராட்டினேன்
    இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
    இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா...
    (ஆண்டவனே)


    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
    என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
    உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
    விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
    (ஆண்டவனே)


    மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும்
    வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
    உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன்
    மன்னன் உயிர் போகாமல்
    இறைவா நீ ஆணையிடு
    இறைவா நீ ஆணையிடு.....ஆணையிடு
    இறைவா....இறைவா....இறைவா....


    சத்தியம் நீயே தரும தாயே
    குழந்தை வடிவே தெய்வ மகளே
    சத்தியம் நீயே தரும தாயே
    குழந்தை வடிவே தெய்வ மகளே

    ஒன்றே குலமென்று பாடுவோம்
    ஒருவனே தேவனென்று போற்றுவோம்
    அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

    கடவுளிலே கருணை தனை காணலாம்
    அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
    நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
    அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

    பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
    என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
    இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
    நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

    இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
    அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
    அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
    நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.

    தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
    வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை
    தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
    துயரம் தெரிவதில்லை.

    பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
    அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
    பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
    அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்

    போயும் போயும் மனிதனுக்கிந்த
    புத்தியைக் குடுத்தானே-
    இறைவன் புத்தியை குடுத்தானே -
    அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
    பூமியைக் கெடுத்தானே -
    மனிதன் பூமியை கெடுத்தானே
    போயும் போயும் மனிதனுக்கிந்த
    புத்தியை குடுத்தானே

    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
    பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
    பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
    கலைகளை தெய்வமாய் காண வேண்டும்

    ஒருவன் மனது ஒன்பதடா
    அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
    உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
    அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

    கருணை கொண்ட மனிதரெல்லாம்
    கடவுள் வடிவம் ஆகும்.

    என் ஆலயத்தின் இறைவன்
    ஆலயத்தின் இறைவன்

    என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
    என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
    ஒரு குற்றமில்லாத மனிதன் -
    அவன்கோவில் இல்லாத இறைவன்

    என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ
    காவலில் எத்தனை தெய்வமோ
    மன்னனுக்கெத்தனை உள்ளமோ
    மனதில் எத்தனை வெள்ளமோ.

    காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க
    கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க.

    கடவுள் செய்த பாவம்
    இங்கு காணும் துன்பம்
    யாவும் என்ன மனமோ என்ன குணமோ
    இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
    மனிதன் கொண்ட கோலம்.

    கடவுள் ஏன் கல்லானான் -
    மனம் கல்லாய் போன மனிதர்களாலே.




    Last edited by Tenali Rajan; 5th February 2015 at 11:36 AM.

  13. Thanks Richardsof thanked for this post
    Likes Russelldvt liked this post
  14. #27
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணாவின் நினைவுநாள் போஸ்டர்
    இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கம் இணைந்து நினைவு நாள் ஏற்பாடுகளை செய்கிறது

  15. Likes Russelldvt, ainefal, Richardsof liked this post
  16. #28
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  17. Likes Russelldvt liked this post
  18. #29
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    மக்கள் திலகம் திரி பாகம் 14 ஐ தொடங்கி வைத்திருக்கும் கவிஞர் திலகம் திரு.தெனாலிராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பாகம் 13 ஐ 34 நாட்களில் முடித்து (திரு.எஸ்.வி.சார் சொல்லியிருப்பது போல) என்னை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கும் சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    நம்பவே முடியவில்லை. என்ன ஒரு ஆச்சரியம். நேற்று இரவு நான் கடைசியாக பார்த்தபோது கடந்த திரி 369வது பக்கத்தில் இருந்தது. நிறைவடைய இன்னும் ஓரிரு நாட்களாவது ஆகும் என்று நினைத்திருந்தேன். இன்று பார்த்தால் அதற்குள் பக்கங்கள் நிறைவடைந்து புதிய திரியே ஆரம்பிக்கப்பட்டு சாதனை படைத்து விட்டது.

    குறுகிய காலத்தில் இந்த சாதனை நிகழ்த்த காரணமான அனைவருக்கும் நன்றி. குறிப்பாக நேற்று ஒரே இரவில் விடிய விடிய கண் விழித்து 30 பக்கங்களுக்கும் மேல் பதிவிட்ட திரு. ராமமூர்த்தி, திரு.வி.பி.சத்யா, திரு.முத்தையன் அம்மு ஆகியோருக்கு நன்றிகள்.

    ‘தோன்றிற் புகழோடு தோன்றுக....’ என்ற குறளுக்கேற்ப புகழோடு தோன்றியவர் புரட்சித் தலைவர். அவர் பெயரால் தொடங்கப்பட்டுள்ள திரியின் 14ம் பாகமும் தோன்றிய இரண்டு மணி நேரத்திலேயே 5 நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்டது. ஏற்கனவே, சமீபத்தில் 12 மற்றும் 13ம் பாகங்களுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.

    ஏதேது? இனி மையம் தளத்தில் 5 நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வேண்டுமென்றால் மக்கள் திலகம் பெயரால் திரி தொடங்க வேண்டும் போலிருக்கிறது. இந்த சாதனைக்கு காரணமாக விளங்கும் சகோதரர்கள் அனைவருக்கும், பதிவர்களுக்கும், திரியை பார்வையிட்டு ஆதரவு அளிக்கும் நல்ல உள்ளங்களுக்கும் குறிப்பாக, மையம் இணைய நிர்வாகிகளுக்கும் பணிவான நன்றிகள்.

    இந்த சாதனைகள் போதாதென்று மன்னாதி மன்னன் விஜய் டி.வி. நிகழ்ச்சியை யூ டியூபில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 13 நாட்களில் 70,000த்தை நெருங்கி விட்டது.

    விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபமெடுத்து நிற்கும் நம் சாதனை மன்னனை வியந்து போற்றி பதம் பணிவோம். பலம் பெறுவோம். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  19. Likes Russelldvt liked this post
  20. #30
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    கடந்த 64 வருடங்களுக்கு முன்பு, 02-02-1951 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “மர்மயோகி” பற்றிய சிறப்புக்கள் : :

    1. தமிழ்த்திரையுலகில், முதன் முதலில் பஞ்ச் டயலாக் (PUNCH DIALOGUE) இடம் பெற்றது இந்த காவியத்தில்தான். அந்த பஞ்ச் டயலாக் : குறி வைத்தால் தவற மாட்டேன் தவறுமாயின் குறி வைக்க மாட்டேன் .



    2. முதன் முதலில், திகில் காட்சிகளுக்காக மட்டுமே (வன்முறை, ஆபாசம் போன்ற காட்சிகள் இல்லை என்பது கவனத்தில் கொள்ளவும்) வயது வந்தவ ர்களுக்கு மட்டும் என்று தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைக்காவியம்.



    மக்கள் திலகத்தின் அறிமுக காட்சி :

    போட்டிகள் பலவற்றில் வெற்றி பேற்ற வீராங்கனுக்கு (எஸ். வி. சகஸ்ரநாமம்) ராணியாக வரும் அஞ்சலிதேவி பரிசு வழங்குவார் என்று அறிவிக்கப்பட, “ வேண்டாம்” என்ற குரல் கணீரென்று ஒலிக்கும். அவையினர் அனைவரும் குரல் வந்த திசையில், ஆச்சரியத்துடன், அதிசயத்துடன் பார்க்க அங்கே குதிரை மீது வேகமாக சவாரி செய்தபடி அரண்மனை மைதானத்துக்குள் நுழைவார் நம் மக்கள் திலகம். இந்த அறிமுக காட்சியில் ரசிகர்களின் பலத்த கைதட்டல் எதிரொலிக்கும். பின், யார் நீ என்று அரசன் வினவ, அதைப்பற்றி உங்களுக்கென்ன என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் திரும்ப பதிலளிக்க, திரையரங்கே அதிரும் அளவுக்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புதான். வேண்டுமானால், வீராங்கன் என்னோடு போட்டியிடட்டும் என்று சவால் விட்டு, பின்பு போட்டியில் வெற்றி பெற்ற கரிகாலனாகிய நம் மக்கள் திலகத்தை ராணியின் கரங்களால் பரிசு வாங்க அழைக்கப்படும் போது, “ ராணி, என்று அலட்சியமாக கூறி. மனதிலே ஈரமின்றி மக்களை கசக்கி பிழியும் இவள் கையால் பரிசு வாங்க மாட்டேன்” என்று, கரிகாலனாக நடிக்கும் நம் கலைப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் கூறிய பின், ராணி “பிடியுங்கள் அவனை” என்று கூக்குரலிடும் பொழுது, நம் நடிகமன்னன், தனக்கே உரிய இயல்பான நடிப்பால், குதிரை மீது ஏறி அரண்மனையை விட்டு வெளியேறும் காட்சியை, கூடியிருக்கும் மக்கள் கூட்டம் கரிகாலனுக்கு ஜே என்று முழங்கும் போது, படத்தை பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் ஜே என்று முழங்குவதை மறக்க முடியாது.

    நம் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள் பட்டத்து ராணியை எதிர்த்து ஆக்ரோஷமாக பேசும் வசனக்காட்சிகள் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். பின்னாளில் இது போன்ற கதையமைப்பு கொண்ட படங்களுக்கு, நம் இதய தெய்வத்தின் இந்த காவியம் தான் முன்னோடி என்றே கூறலாம். அரண்மனை அவைக்குள் தனி ஒரு நபராக, சாரவிளக்கு ஊஞ்சலை பிடித்தபடி நுழைந்து சவால் விட்டு பேசி மீண்டும் திரும்பும் போது புரியும் சண்டைக்காட்சிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

    இப்படத்தில் நம் மக்கள் திலகம் அவர்கள்; காட்டில் வாழும் ஏழை கூட்டத்திற்கு தலைவராகவும், எவர் உதவி என்று நாடி வந்தாலும் உதவி செய்பவராகவும் நடித்துள்ளார். கணீர் என்று ஒலிக்கும் குரல், பேசிக் கொண்டிருக்கும் போதே அம்பை விடும் வேகம், இயற்கையான நடிப்பு ஆகியவையெல்லாம் பொருந்திய இந்த காவியத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தப்படும். .குதிரையின் மீது அமர்ந்து கொண்டே சண்டையிடும் காட்சியும், அரண்மனைக்குள் வந்து ராணியின் முன்பு அம்பு விடும் காட்சியும், திரைச்சீலைகளை கொண்டு தாவித் தாவி வரும் காட்சியும் அற்புதமானவை.

    மக்கள் திலகத்தின் துள்ளல் நடிப்புக்கும், அட்டகாசமான சாகச சண்டை காட்சிகளுக்கும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த எழுச்சி மிகு ஆரவாரமும், வரவேற்பும், கைதட்டல்களும், நம் பொன்மனசெம்மலை யோசிக்க வைத்தது. ரசிகர்கள் தன்னிடம் எதை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் இதய வேட்கையை தணிக்கும் வண்ணம் தனக்கென்று ஒரு பார்முலாவை வகுத்து கொண்டது இந்த காவியத்தின் வெற்றி மூலம்தான்.

    ஏழைகளுக்கு இரங்கும் ராபின்ஹுட் பாணி படம் என்று அந்த நாட்களில் பேசப்பட்டது. ஆனால் அதிலும் தனது தனித்துவத்தைக் காட்டி இருப்பார், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

    எம்.ஜி.ஆர் குதிரையில் ஏறி நடிக்கும் காட்சிகளை தவிர்ப்பார் என்று சிலர் கதை விட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில், இந்தப்படத்தில் பல காட்சிகளில் குதிரையில் லாவகமாக அதே நேரத்தில் மிக வேகமாக ஓட்டி நடித்திருப்பதோடு சண்டை செய்யும் காட்சியும், குதிரையின் மீது அமர்ந்து வேகமாகப் பாய்ந்து சண்டை செய்யும் காட்சியும் மிக அருமை. (பின்னாளில், ஜெனோவா, குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், ராஜா தேசிங்கு, ராணி சம்யுக்தா உட்பட பல படங்களில் குதிரையேற்றத் திறமையை வெகு அழகாகக் காட்டி அற்புதமாக நடித்திருப்பார். .

    கரிகாலன் ராணியை அவருடைய தர்பாரில் சந்திக்கும் அந்த காட்சி பிற்காலத்தில் படையப்பா படத்தில் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டது என்றும் கூறலாம்.

    பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், கம்பீரமான நடிப்பு, அழுத்தமான, ஆழமான நடிப்பு, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

    வசனக்காட்சிகளில் அவரது குரல்வளம் அற்புதம். நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் குண்டடி பட்ட பின்பு பேசும் வசனக்காட்சிகளை மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் இந்த காவியத்தில் இடம் பெறும் வசனக் காட்சிகளை மிமிக்ரி செய்ய முடியாமல் திண்டாடுவர் என்பது நிச்சயம்.

    என்ன ஒரு நேர்த்தியான நடிப்பு. டூப் போடாமல் தானே தாவித்தாவி பாய்ந்தோடும் காட்சி அசரவைத்தது.

    நம் வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும், அவர் ஒரு தலைசிறந்த சண்டை நடிகர் என்றும் நிருபித்த காவியம்.

    மொத்தத்தில், இன்றைய தலைமுறை ரசிகர்களையும் காந்தம் போல் கவர்ந்திழு க்கும் காவியம் “மர்மயோகி” என்று சொன்னால் அது மிகையாகாது.

    இதே கதை தெலுங்கு மொழியில் பின்னர் என்.டி.ராமாராவ் அவர்களை கதாநாயகனாக கொண்டு தயாரிக்கப்பட்டு, 1964ல் வெளியிடப்பட்டது. .


    புரட்சித்தலைவரின் 2 3 வது காவியம் "மர்மயோகி" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்த்கத்தின் முன் அட்டை தோற்றம் :



    பின் அட்டையில் ஜுபிடர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக "ராணி" விளம்பரம். விளம்பரத்தில், நடிகை பானுமதி மற்றும் சந்திரபாபு ஆகியோர் தோற்றமளிக்கின்றனர். எனவே, பின் அட்டை தோற்றம் பதிவிடப்படவில்லை.
    ஆரம்பமே அமர்க்களம். மர்மயோகி விமர்சனம் சூப்பர். நன்றி திரு.செல்வகுமார் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Page 3 of 400 FirstFirst 123451353103 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •