Page 51 of 400 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #501
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கலை வேந்தன் சார்

    மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பல பெருமைகள் சேர்த்த 1972 ஆண்டின் பற்றிய கட்டுரை மிகவும் அருமை .1972ல் வெளி வந்த மக்கள் திலகத்தின் 6 படங்களை பற்றிய மினி தகவல்கள் சூப்பர்.குறிப்பாக 1972 அக்டோபர் மாதம் - நடந்த பல சரித்திர நிகழ்வுகள் - அரசியல் மாற்றங்கள் மறக்க முடியாத வரலாறாகும் . புரட்சி நடிகர் எம்ஜிஆர் - புரட்சித்தலைவராக உயர்வு பெற்ற பொற்காலம் . தொடர்ந்து மக்கள் திலகம் பற்றிய பதிவுகளை பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த நாளில் அன்று (1.10.1973); பிரிவினை கோரிக்கை மறைமுகமாகவும் அ.தி.மு.க. எழுப்பாது; எம்.ஜி.ஆர். பேச்சு

    இந்த நாளில் அன்று (1.10.1973)

    பிரிவினை கோரிக்கை மறைமுகமாகவும் அ.தி.மு.க. எழுப்பாது;

    எம்.ஜி.ஆர். பேச்சு

    சென்னை, செப்.30 - அண்ணா தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையை மறைமுகமாகவும் எழுப்பாது என்று அக்கட்சியின் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் திட்டவட்டமாக அறிவித்தார்.

    காலஞ்சென்ற அண்ணாதுரையின் 65வது பிறந்த தினத்தையொட்டி அண்ணா தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். பெருமழையையும் பொருட்படுத்தாமல் திருவல்லிக்கேணி சீரணி அரங்கத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டனர்.

    தமது கட்சியினுடைய அரசியல், பொருளாதாக் கொள்கைகளை விளக்கிப் பேசிய எம்.ஜி.ராமச்சந்திரன், மாநில - மத்திய அரசுகள் சம பங்காளிகள் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு சோஷலிச சமுதாயத்தை அமைப்பதில் இரண்டு அரசுகளுக்கும் சமமான பொறுப்பு உண்டு என்றும் கூறினார்.

    கருணாநிதி அமைச்சரவை லஞ்சத்திற்கு ஆளாகி விட்டதாகக் குற்றஞ்சாட்டிவிட்டு, அந்த அரசை வெளியேற்றும் வரை தமது கட்சி ஓய்ந்திருக்கப் போவதில்லை என்றும் எம்.ஜி.ஆர். கூறினார்.

    courtesy - dinamani

  4. #503
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சின்னப் பிள்ளையிலிருந்தே எம்.ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும், என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.
    இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம். 1943_44_ல் நான் சென்டிரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள, ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.
    `லட்சுமிகாந்தன்' நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம்.ஜி.ஆர், அவரது தாயார், சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.
    நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம்.ஜி.ஆர். "பசிக்கிறது" என்றாலும், "இருப்பா! கணேசன் வரட்டும்" என்பார்கள், அவருடைய அம்மா. அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.
    எம்.ஜி.ஆர். அவர்கள் இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச்செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சீபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.
    அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் முதலில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.
    ஒரே காலக்கட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதே சமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.
    என்னை அவர் விமர்சிப்பார், அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான். பர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.
    பல வருடங்கள் சென்றபின் அவர் முதல்_மந்திரியானார். அவர் பதவியிலிருந்தபோது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் அவார்டுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.
    எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில், என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம்.ஜி.ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து, எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.
    தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச்சிலையைத் திறந்து வைத்ததில், அவர் மகிழ்ச்சியடைந்தார்.
    - சிவாஜி - பிரபு சாரிட்டி டிரஸ்ட் வெளியிட்ட
    ' எனது சுய சரிதை ' நூலிலிருந்து

  5. #504
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    உலகின் மோசமான மனிதர்கள் பட்டியல்!


    சென்னை - 28-Sep-2014

    உலகின் மோசமான மனிதர்களை வரிசைப்படுத்தி, 'The All Time Worst People in history' என்ற தலைப்பில்'ரேங்கர்.காம்' (www.ranker.com) எனும் இணையதளம் புள்ளி விபரங்களோடு விபரம் வெளியிட்டிருக்கிறது. தொடர்ந்து வாக்கு பதிவு நடந்து வருகிறது. மோசமான மனிதர்கள் என்றால் (லைக் பட்டனை அழுத்தவும்), இல்லையென்றால் (டிஸ்லைக் பட்டனை அழுத்தவும்).

    அதில் முதலிடம் ரஷ்யாவின் சர்வாதிகாரியாக இருந்த ஜோசப் ஸ்டாலினுக்கு. 2வது இடம் சர்வாதிகாரி இட்லருக்கு. 3வது இடம் போல் வாட், 4வது இடம் ஓசாமா பின்லேடன், 5வது இடம் இடி அமீன் என்ற வரிசையில் நம்ம ஊர் மு.கருணாநிதி 8வது இடத்திற்கு வந்திருக்கிறார்.

    ஊழலில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்திக்கொண்டு வருபவர், 'மோசமான மனிதர்கள்' பட்டியலில் இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேக்கு அடுத்ததாக 20 க்குப்பின் இருந்த கருணாநிதி, தற்போதுள்ள நிலவரப்படி ராஜபக்சேயை (14 வது இடம்) பின்னுக்கு தள்ளி விட்டு 8வது இடத்திற்கு முன்னணிக்கு வந்திருக்கிறார்.

    கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த தயாநிதி மாறன் 25வது இடத்திலும், கனிமொழி 42, கலாநிதி மாறன் 47, மு.க.ஸ்டாலின் 53 என்ற வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

    ஈராக் சர்வாதிகார அதிபராக இருந்து, அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட சதாம் உசேன் 10வது இடத்திலும், நம்ம ஊர் சுப்பிரமணிய சாமி 18வது இடத்திலும், ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே 11வது, இன்னொரு தம்பி பசில் ராஜபக்சே - 21, சோனியா காந்தி- 28, ப.சிதம்பரம்-37, நித்தியானந்த சாமியார் - 44, ஜார்ஜ் புஷ் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி) - 48, திராவிடர் கழக கி.வீரமணி - 60, ராகுல் காந்தி - 64, நடிகை குஷ்பூ - 124, லல்லு பிரசாத் யாதவ் - 141, சந்திரிகா குமாரதுங்கா (இலங்கையின் முன்னாள் அதிபர்) - 146வது இடத்தில் அணி வகுக்கிறார்கள்.

    ஆக தமிழக, இந்திய, உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நல்லதொரு தர நிர்ணயத்தை உருவாக்கியுள்ளது சாதனையே.

  6. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  7. #505
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    HERO FOR EVER - M G R



    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 1st October 2014 at 01:28 PM.

  8. Likes Russellisf liked this post
  9. #506
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Superb writings sir hats off

    தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை பெற்றார். அவரா வைத்துக் கொண்டார்? அதிக தொகையை சம்பளமாக அவர் பெறுவதே மக்களுக்கு கொடுப்பதற்குத்தானே?


    நான் ஏன் பிறந்தேன்? வித்தியாசமான கதையமைப்பு கொண்ட திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே, நான் ஏன் பிறந்தேன்? என்று ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டும் பாடல். குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்பதற்கு அறிவுரை கூறும் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’. இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்த நம் அழகனை பெண்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ‘என்னம்மா சின்னப் பொண்ணு’. தன்னை எத்தனை பேர் விரும்பினாலும் கட்டிய மனைவியுடன் மட்டுமே ஒழுக்கமான வாழ்வை வலியுறுத்தும் ‘உனது விழியில் எனது பார்வை’. குடும்பம், குட்டி, பிழைப்பு என்று மட்டுமே இல்லாமல் சமூக சிந்தனையுடன் தொழிலாளர் நலனில் அக்கறையை வெளிப்படுத்தும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த ‘சித்திரச் சோலைகளே’ வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தின் பாடல்களில் விளக்கிய அற்புதம்.


    தலைவர் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப் படமாக வெளிவந்து வசூலை வாரிக் குவித்த அன்னமிட்ட கை. பாரதியுடன் தலைவர் நடித்த கனவுக் காட்சியான ‘மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு’ பாடலும் காட்சியமைப்பும் அருமை. தலைவரைக் கண்டு நாமே மயங்கும்போது பாரதி மயங்குவதில் வியப்பென்ன? தொழிலாளர் மேன்மையை உணர்த்தும் பாடலான ‘அன்னமிட்ட கை’ பாடலை யார்தான் மறக்க முடியும்? முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் மறக்கவே முடியாதே. இன்னும் அந்தக் கட்சிக்கு சில ஓட்டுக்களாவது கிடைக்க இந்தப் பாடலும் ஒரு காரணம்.





    முதன் முதலில் மதுரையில்தான் தாமரைப்பூ சின்னத்துடன் மதுரையில் தொண்டர்கள் கழகக் கொடி ஏற்றினர்.
    *தலைவரின் படம் ஒட்டப்படாமல் எந்த ஒரு வாகனமும் இயங்க முடியாது என்ற நிலை.
    *திமுக ஆட்சியின் ஊழல் குறித்து கவர்னர் மாளிகை நோக்கி பிரம்மாண்ட பேரணி.
    *மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் திமுக ஊழல்கள் குறித்து தலைவர் மனு. இதற்காக ரயில் மூலம் மதுரைக்கு தலைவர் சென்ற ரயில் வழிநெடுக மக்கள் அளித்த மகத்தான வரவேற்பு காரணமாக 16 மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்தது. இது எந்த தலைவராலும் முறியடிக்கப்படாத உலக சாதனை.



    Quote Originally Posted by kalaiventhan View Post
    1972 மறக்க முடியுமா? மக்களின் நாயகனை?

    அக்டோபர் மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நமது நாயகர் புரட்சி நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி புரட்சித் தலைவராக உயர்ந்ததுதான். ஆம். அக்டோபர் 17ல் தான் இருண்டு கொண்டிருந்த தமிழகத்துக்கு ஒளிவிளக்கேற்ற நம்மை ஆளாக்கிய பேரறிஞரின் பெயரால் அண்ணா திமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கினார். அந்த ஆண்டு 1972.
    அந்த 1972ம் ஆண்டில் தலைவரின் அரசியல், கலையுலகம் என்னும் இரு வேறுபட்ட துறைகளில் அவர் நிகழ்த்திய பிரம்மாண்டமான வரலாற்று சாதனைகளை சற்று நினைவுகூர்வோம்.
    * ரிக்க்ஷாக்காரன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக இந்த ஆண்டில்தான் தலைவருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்பதற்கான பாரத் விருது கிடைத்தது.
    *தேவர் பிலிம்சின் நல்ல நேரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது. தமிழக மக்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளிபிறக்க அதிமுகவை தலைவர் தொடங்குவதற்கான ‘நல்ல நேரம்’ பிறந்து விட்டது என்பதை கட்டியம் கூறியது.
    * தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை பெற்றார். அவரா வைத்துக் கொண்டார்? அதிக தொகையை சம்பளமாக அவர் பெறுவதே மக்களுக்கு கொடுப்பதற்குத்தானே?
    * அவரது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் வசூலையும் பார்த்து தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டனர். பிரபல தயாரிப்பாளர்களின் 15 புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    *திரையுலக சக்கரவர்த்தி, வசூல் மன்னன் என பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன.
    * நான் ஏன் பிறந்தேன்? வித்தியாசமான கதையமைப்பு கொண்ட திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே, நான் ஏன் பிறந்தேன்? என்று ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டும் பாடல். குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்பதற்கு அறிவுரை கூறும் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’. இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்த நம் அழகனை பெண்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ‘என்னம்மா சின்னப் பொண்ணு’. தன்னை எத்தனை பேர் விரும்பினாலும் கட்டிய மனைவியுடன் மட்டுமே ஒழுக்கமான வாழ்வை வலியுறுத்தும் ‘உனது விழியில் எனது பார்வை’. குடும்பம், குட்டி, பிழைப்பு என்று மட்டுமே இல்லாமல் சமூக சிந்தனையுடன் தொழிலாளர் நலனில் அக்கறையை வெளிப்படுத்தும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த ‘சித்திரச் சோலைகளே’ வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தின் பாடல்களில் விளக்கிய அற்புதம்.
    *தலைவர் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப் படமாக வெளிவந்து வசூலை வாரிக் குவித்த அன்னமிட்ட கை. பாரதியுடன் தலைவர் நடித்த கனவுக் காட்சியான ‘மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு’ பாடலும் காட்சியமைப்பும் அருமை. தலைவரைக் கண்டு நாமே மயங்கும்போது பாரதி மயங்குவதில் வியப்பென்ன? தொழிலாளர் மேன்மையை உணர்த்தும் பாடலான ‘அன்னமிட்ட கை’ பாடலை யார்தான் மறக்க முடியும்? முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் மறக்கவே முடியாதே. இன்னும் அந்தக் கட்சிக்கு சில ஓட்டுக்களாவது கிடைக்க இந்தப் பாடலும் ஒரு காரணம்.
    * புரட்சிக் கவிஞரின் பாடல் தலைப்பைக் கொண்டு கரு. சடையப்ப செட்டியாரின் வள்ளி பிலிம்ஸ் ‘சங்கே முழங்கு’ வெளியாகி வெற்றி பெற்றது. இதில் அதுவரை தமிழ் திரைப்படத்தில் எந்த கதாநாயகனும் ஏற்றிராத கிர்பால் சிங் என்ற சீக்கியர் வேடமும் அது தலைவருக்கு பொருந்திய விதமும் அற்புதம். நீதிமன்ற காட்சியில் கிர்பால் சிங்காக தலைவர் எடுத்து வைக்கும் வாதங்களும் அசோகனை மடக்கும் இடங்களும் உற்சாகம் கொப்பளிக்க வைக்கும். வாழ்க்கை தத்துவத்தை விளக்கும் டி.எம்.எஸ்.சின் உருக்கும் குரலில் நாலு பேருக்கு நன்றி பாடலும் அதற்கு முஸ்லிம் வேடத்தில் ரயில் செல்வது போல உள்ள காட்சிக்கு ஏற்ப தலையை ஆட்டிக் கொண்டே கண்ணீர் வழிய யாரிடமும் சொல்ல முடியாமல் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி பார்ப்பவரை கலங்க வைக்கும். (பிறவி நடிகரின் என்ன ஒரு இயற்கையான நடிப்பு). இந்தக் காட்சிக்காவே 1972ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைக்காதது ஏமாற்றமே.
    * திருவளர் செல்வியோ, நல்லது கண்ணே, உள்ளம் உந்தன் ஆராதனை பாடல்களில் காஷ்மீரின் அழகை கொள்ளையடித்த ராமன் தேடிய சீதை ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கல். அதிகமான உடையலங்காரத்தில் தலைவர் ஜொலித்த படம்.
    * அதிமுகவை தொடங்கிய பிறகு முதலில் வெளியாகி பெருவெற்றி பெற்ற இதய வீணை. இதிலும் காஷ்மீரின் அழகு. பத்திரிகையாளர் மணியனை படத் தயாரிப்பாளராக தலைவர் உயர்த்தி விட்ட படம்.
    *இந்தப் படங்களில் நல்ல நேரம், இதயவீணை படங்களைத் தவிர மற்ற படங்கள் 100 நாள் என்ற எண்ணைத் தொடாவிட்டாலும் வசூலை வாரிக்குவித்து ரசிகர்களையும் திருப்தி செய்த படங்கள்.
    *100 நாள் தொடாத படங்கள் கூட மறுவெளீயீடுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றே வந்து வசூலையும் அள்ளி வழங்கின. மற்ற படங்கள் முதல் வெற்றியோடு சரி. உதாரணமாக கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் பணமா? பாசமா? முதல் வெளியீட்டில் சக்கை போடு போட்டது. அதோடு அவ்வளவுதான். ஆனால், தலைவர் படங்கள் அப்படி அல்ல. எப்போது வெளியிட்டாலும் வெற்றிப்படங்கள்தான்.
    இனி அரசியல்:
    * செப்டம்பர் மாதத்தில் தலைவரின் புகழை மறைக்கும் முயற்சிகள். சோதனைகள் அதையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து மக்களின் மனங்களில் நின்றார் நம் தலைவர்.
    *அந்தப் பொறாமையால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவரை மக்கள் வாரி அணைத்துக் கொண்டனர்.
    *முதன் முதலில் மதுரையில்தான் தாமரைப்பூ சின்னத்துடன் மதுரையில் தொண்டர்கள் கழகக் கொடி ஏற்றினர்.
    *தலைவரின் படம் ஒட்டப்படாமல் எந்த ஒரு வாகனமும் இயங்க முடியாது என்ற நிலை.
    *திமுக ஆட்சியின் ஊழல் குறித்து கவர்னர் மாளிகை நோக்கி பிரம்மாண்ட பேரணி.
    *மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் திமுக ஊழல்கள் குறித்து தலைவர் மனு. இதற்காக ரயில் மூலம் மதுரைக்கு தலைவர் சென்ற ரயில் வழிநெடுக மக்கள் அளித்த மகத்தான வரவேற்பு காரணமாக 16 மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்தது. இது எந்த தலைவராலும் முறியடிக்கப்படாத உலக சாதனை.
    * கலைத்துறையில் புரட்சி நடிகராக கோலோச்சியவர் புரட்சித் தலைவராக விஸ்வரூபம் எடுத்த ஆண்டு. மறக்க முடியுமா? 1972ஐ.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. #507
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #508
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. #509
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. #510
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •