-
15th July 2014, 11:27 PM
#461
Moderator
Diamond Hubber
காயத்ரி ரிட்டர்ன்ஸ்!
காயத்ரியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ் நாட்டு மக்களையெல்லாம் ஒரே நாளில் அழவைத்து தெருவெங்கும் கண்ணீர் வெள்ளத்தை ஓட வைத்த மெட்டிஒலி சீரியலின் சரோ தான் காயத்ரி. மளமளவென சீரியல்களில் நடித்தவர் திடீரென விலகிச் சென்றார். கல்யாணிதான் அவர் கடைசியாக நடித்த சீரியல். இப்போது மீண்டும் நெஞ்சத்தை கிள்ளாதே மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
அதுபற்றி அவர் பகிர்ந்து கொண்டவை... ஒரு சீரியல்ல நடிக்கும்போது இன்னொரு சீரியல்ல நடிக்க கூடாதுங்ற பாலிசி உடையவள் நான். கடைசியா நடிச்ச கல்யாணிக்கு பிறகு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது. எந்த கதையுமே பிடிக்கல. நடிக்க வாய்ப்பே இல்லாம அழுது வடியுற சீரியல். நல்லா அழுவுறதுதான் நடிப்புன்னு வந்தாங்க வேண்டாமுன்னு சொல்லிட்டேன். சீரியல்ல நடிச்ச காலத்துல பேமிலியை ரொம்ப மிஸ் பண்ணினேன். இனி பேமிலிக்கு டயம் ஒதுக்குவோம்னு முடிவு பண்ணி சீரியல்லேருந்து விலகி இருந்தேன்.
ரொம்ப நாளைக்கு பிறகு வந்ததுதான் நெஞ்சத்தை கிள்ளாதே 30 வயதை தாண்டினவங்களோட காதல் கதை. அழவைக்கிறதுக்கோ, அனுதாபப்பட வைக்கிறதுக்கோ தேவையே இல்லாத அழகான கதை. எனக்கும் முப்பது வயதை தாண்டிட்டதால உடனே ஒத்துக்கிட்டேன்.
இனி கேப் விடாமல் நல்ல சீரியல்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நல்ல சினிமா வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன். சும்மா பத்தோட ஒண்ணா இல்லாம நல்ல கேரக்டரா வந்தால் நடிப்பேன். சினிமாவுக்கு நான் புதிதில்லை. அஜீத்துக்கு ஜோடியா நடிச்சிருக்கேன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா. ராஜாவின் பார்வையிலேங்ற படத்துல விஜய்யும், அஜீத்தும் சேர்ந்து நடிச்சாங்க. அதுல நான் அஜீத்துக்கு ஜோடி. அப்போ எனக்கு வயது 15. என்கிறார் காயத்ரி.
நன்றி: தினமலர்
-
15th July 2014 11:27 PM
# ADS
Circuit advertisement
-
15th July 2014, 11:29 PM
#462
Moderator
Diamond Hubber
சினிமா பின்னணி பாடகியாகவேண்டும்: ஸ்ரீரஞ்சனியின் ஆசை
புதுயுகம் தொலைக்காட்சியில் கேள்வி பாதி கிண்டல் பாதி, ஆர் யு தி அப்பா டக்கர் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி. சென்னையில் எலெக்ட்ரானிக் மீடியா படித்து முடித்து விட்டு எப்.எம்.மில் ஆர்.ஜேவாக பணியை துவக்கினார். இந்தி, கன்னட எப்.எம்.களில் ரசிகர்களை கலாய்த்து விட்டு இப்போது புதுயுகம் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகி விட்டார். ஆனாலும் சினிமா பாடகியாக வேண்டும் என்பதுதான் ஸ்ரீரஞ்சனியின் விருப்பம்.
தனது ஆசை பற்றி அவர் கூறியிருப்பதாவது: சின்ன வயதிலிருந்தே பாட்டு பாடுவது எனக்கு பிடித்தமான ஒன்று முறையாக சங்கீதம் படிச்சிருக்கேன். மேடைகளில், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறேன் எப்.எம் ரேடியோவில் புரமோசன் பாடல்கள் பாடியிருக்கிறேன். அதில் ஒன்றை கேட்டுவிட்டுத்தான் கோலிசோடா படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து சினிமாவில் நிறைய பாடல்கள் பாட வேண்டும் என்பது ஆசை. சின்னத்திரையில் இசை தொடர்பான ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்பதும் எனது ஆசை என்கிறார் ஸ்ரீரஞ்சனி.
நன்றி: தினமலர்
-
15th July 2014, 11:30 PM
#463
Moderator
Diamond Hubber
செந்தில்-ஸ்ரீஜா ரகசிய திருமணம்: சீரியல் ஜோடி வாழ்க்கையிலும் இணைந்தது5
சரவணன்-மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்றவர்கள் நடிகர் செந்திலும், நடிகை ஸ்ரீஜாவும். அதற்கு முன்பே இருவரும் மதுரை என்ற தொடரில் நடித்தார்கள். அந்த தொடரின் கேரக்டர் பெயர்தான் சரவணன், மீனாட்சி. அதில் இருவரின் காதல் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்த தொடருக்கு சரவணன் மீனாட்சி என்றே பெயர் வைத்தனர்.
சரவணன் மீனாட்சி தொடரில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருவரும் ரொமான்ஸ் பண்ணினார்கள். அதனால் இருவருக்குமே நிஜமான காதல் ஏற்பட்டது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள். இதற்கிடையில் ஸ்ரீஜாவுக்கு பதில் இன்னொருவர் சரவணன் மீனாட்சியில் நடிக்க வந்தார். அவருக்கும் செந்திலுக்கும் காதல் என்ற செய்திகள் வந்தது. பின்னர் இருவரும் பிரிந்தார்கள்.
செந்தில் இப்போது திரைப்படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கிவிட்டார். அவர் நடித்த பப்பாளி என்ற படம் வருகிற 11ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் செந்திலும் ஸ்ரீஜாவும் ரகசிய திருமணம் செய்து கொண்ட செய்தியும் வெளியாகி இருக்கிறது. கடந்த 4ந் தேதி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது. இதில் இருவரின் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். நெருங்கிய நண்பர்களுக்குகூட அழைப்பில்லை. தற்போது இருவரும் கேரளாவில் உள்ள ஸ்ரீஜாவின் வீட்டில் இருக்கிறார்கள்.
"திருப்பதியில் திருமணத்தை முடித்து விட்டு கேரளாவுக்கு வந்து விட்டோம். பப்பாளி படம் ரிலீசாகுறதால அதுக்கு பிறகு முறைப்படி எல்லோருக்கும் சொல்ல முடிவு பண்ணியிருந்தோம். அதுக்குள்ள லீக் ஆயிடுச்சு" என்கிறார் செந்தில்
நன்றி: தினமலர்
-
15th July 2014, 11:32 PM
#464
Moderator
Diamond Hubber
ரசிகர்கள் திட்டினால் வெற்றிதான்: வீணா நாயர்
மலையாள நாட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிகைகள் வருவதைப்போல சின்னத்திரைக்கும் நடிகைகள் வருகிறார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் வீணா நாயர். தமிழில் ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் மலையாள ரீமேக்கான நில விளக்கில் நந்தினி கேரக்டரில் நடித்தவர் வீணா நாயர். அதன் மூலம் இப்போது தமிழ் சீரியலுக்கு வந்திருக்கிறார். தென்றல் தொடரின் மிரட்டும் வில்லியான மாயா கேரக்டரில் நடிக்கிறார். நிஜத்தில் 25 வயதான வீணா 35 வயது மாயாவாக நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: மாயா கேரக்டரை பிடிச்சுதான் பண்றேன். அந்த கேரக்டரின் பவர்புல்லான வில்லித்தனம்தான் என்னை நடிக்க வைத்தது. தென்றல் பார்க்கும் எல்லா வீட்டிலும் தினமும் என்னை திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் என்னை திட்ட திட்ட நான் வெற்றி பெறுகிறேன் என்று பொருள். நான் நன்றாக நடிக்கிறேன் என்று பொருள்.
மலையாள தொடர்கள், தமிழ் தொடர்கள் இரண்டையும் இரு கண்ணாக நினைக்கிறேன். சீரியல் தவிர மலையாள படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்கிறேன். இதுதவிர நான் பரத நாட்டியத்தில் பட்டப்படிப்பு முடித்திருப்பதால் கோட்டயத்தில் நடன பள்ளி நடத்துகிறேன். நடிப்பு இல்லாத நேரத்தில் எனது நடன பள்ளிதான் என் கோவில் என்கிறார் வீணா.
நன்றி: தினமலர்
-
30th July 2014, 11:36 PM
#465
Moderator
Diamond Hubber
எம்.எஸ் விஸ்வநாதன், வைரமுத்துவுக்கு புதிய தலைமுறை தமிழன் விருது
புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டு கலைத்துறையில் சாதனை படைத்தற்காக இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநானுக்கும், புத்தர் கலைக்குழு மணிவாணனுக்கும். இலக்கியத்துறையில் சாதனை படைத்தற்காக பாடலாசிரியர் வைரமுத்து, ஆர்.வெங்கடேசுஷ் ஆகியோருக்கும் தமிழன் விருது வழங்கியது.
அறிவியில்துறைக்காக சுப்பையா அருணன். டாக்டர் இந்திராஅருள்செல்வி ஆகியோருக்கும். சமு்க சேவைக்காக அரவிந்த் கண் மருத்துவணை டாக்டர் நாச்சியாருக்கும். டாக்டர் இளங்கோவிற்கும் வழங்கப்பட்டது.
தொழில் துறையில் சி.கே.ரங்காஜன்,ஆர்.ஜனநாதன் ஆகியோரும். விளையாட்டு துறையில் கிரி க்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும். வீராங்கணை தீபிகாவும் விருது பெற்றனர். சென்னை வர்த்தக மையத்தில் நடந்த விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரி வேந்தர். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைவர் சத்யநாராணயன், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமலர்
-
30th July 2014, 11:39 PM
#466
Moderator
Diamond Hubber
ஹீரோயின் ஆனார் அஸ்ருதா
சொந்த பந்தம், உயிர்மை, சித்திரம் பேசுதடி தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அஸ்ருதா. தெகிடி படத்தில் ஜனனி அய்யரின் தோழியாகவும், திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் ஜெய்யின் முறைப்பெண்ணாகவும் நடித்தார். தற்போது கடல் தந்த காவியம் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகிவிட்டார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்து வரும் தொடர்களில் நான் ஹீரோயினாக இல்லாவிட்டாலும் எனது கேரக்டர் முக்கியமானதாக இருக்கிறது. சீரியல்களில் எனது நடிப்பை பார்த்துதான் சினிமா வாய்ப்புகள் வந்தது. இப்போது கடல் தந்த காவியம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். வடக்கன்குளம் மேரி மாதாவின் அற்புதங்களை சொல்லும் பக்திப் படம். இந்த படத்தில் நான் ஹீரோயினாக அறிமுகமானது நான் செய்த பாக்கியம். என்கிறார் அஸ்ருதா.
நன்றி: தினமலர்
-
14th August 2014, 07:11 PM
#467
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் வளர்ந்து வரும் தொகுப்பாளினி சவுமியா. மற்ற தொகுப்பாளினிக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் கையில் எப்போதும் மைக்குடன் இருப்பார்கள். இவர் மட்டும் கையில் கேமராவுடன் இருப்பார். சினிமா ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதுதான் சவுமியாவின் லட்சியம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
"என்னோட அப்பா ரகுநாத் பெரிய போட்டோகிராபர். அவர் மாதிரியே போட்டோகிராபர் ஆகணுங்கறது என்னோட சைல்டுவுட் ஆம்பிசன். விசுவல் மீடியா படிச்சப்போ இண்டன்ஷிப்புக்காக டி.வி ஸ்டேஷன்களுக்கு போனேன். அந்த வேலை, ஸ்டைல் பிடித்ததால் படிச்சு முடிச்சிட்டு தொகுப்பாளியாக வந்துட்டேன். நிறைய சீரியல்ல நடிக்க கூப்பிட்டாங்க. அதுல எனக்கு விருப்பம் இல்லை.
உலகம் முழுக்க சுற்றி நிறைய படங்கள் எடுத்து வச்சிருக்கேன். அதை வைத்து ஒரு கண்காட்சி நடத்தணும். போட்டோகிராபி துறையில பெண்கள் ரொம்ப குறைவு அதை மாற்றி அதுல நிறைய சாதிக்கணும். சினிமால ஒளிப்பதிவாளராகி அதுலேயும் உசரத்தை தொடணும்" என்கிறார் சவுமியா.
நன்றி: தினமலர்
-
14th August 2014, 07:12 PM
#468
Moderator
Diamond Hubber
சவுகார் ஜானகி இடத்தை பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது: ரேகா சொல்கிறார்
தொடர்ச்சியாக சீரியல்களில் பல வேடங்களை போட்டுக் கொண்டிருந்த ரேகா. இடையில் காணாமல் போனர். சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் பிசியாகிவிட்டார். பாசமலர், மரகதவீணை சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நடிப்பிலும், தோற்றத்திலும் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் சாயல் இருப்பதால் இவரை சின்னத்திரை சவுகார் என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
"நான் வில்லியாக நடிக்கவில்லை. ஆனாலும் என்னுடைய கேரக்டர்கள் பெண்கள் திட்டுகிற கேரக்டர்களாகவே அமைந்து விடுகிறது. அடிக்கடி அழுது நடிப்பதால் சின்னத்திரை சவுகார் ஜானகி என்கிறார்கள். அவ்வளவு பெரிய ஜீனியசோடு என்னை ஒப்பிட்டு பேசுவது சந்தோஷமாக இருக்கிறது. 63 நாயன்மார்கள் தொடரில் சிவகாமியாக நடித்ததை பார்த்தவர்கள் திருநீலகண்டர் படத்தில் சவுகார் ஜானகி நடித்த மாதிரியே இருந்தது என்றார்கள். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இடையில் எனது சொந்த பிரச்சினைகள் காரணமாக ஒதுங்கி இருந்தேன். இனி தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்துவேன். என்கிறார் ரேகா.
நன்றி: தினமலர்
-
14th August 2014, 07:13 PM
#469
Moderator
Diamond Hubber
ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்ததுதான் வாழ்க்கை - சந்தோஷியின் அனுபவம்!1
பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத்திரை, பெரிய திரையில் நடித்து வருகிறார் சந்தோஷி, தற்போது இளவரசி தொடரில் ஹீரோயினாகவும், 63 நாயன்மார்கள் தொடரில் காரைக்காலம்மையாராகவும் நடித்து வருகிறார். ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்கிறார் சந்தோஷி. இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது... அம்மு தொடர் மூலமாக அறிமுகமானேன் அப்போது எனக்கு 18 வயசுதான். அதற்கு பிறகு நிறைய தொடர்களில் நடித்தேன். ராதிகா மேடத்தின் அத்தனை தொடர்களிலும் நடித்தேன். திடீர்னு பிரண்ட்சுங்க சினிமா ஆசையை தூண்டி விட்டாங்க. ரொம்ப எதிர்பார்ப்போட பாபா படத்துல நடித்தேன். முதல் படமே சூப்பர் ஸ்டார் படம் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும்னு நினைச்சேன். படம் தோல்வி அடைந்ததால் சினிமா வாய்ப்பும் இல்லாமல் சீரியல் வாய்ப்பும் இல்லாமல் தவிச்சேன். இடையில் உன்னை சரணடைந்தேன், ஆசை ஆசையாய் படங்களில் தங்கை கேரக்டரில் நடிச்சேன். அதிலிருந்து தங்கை கேரக்டர்களாக குவிந்ததால் போரடித்து சினிமாவிலிருந்து ஒதுங்கினேன்.
பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராதிகா மேடம் கைகொடுத்தாங்க. இளவரசி தொடர் மீண்டும் லைஃப் கொடுத்தது. அதில் ஜோடியாக நடிச்சவரே நிஜ வாழ்க்கையிலும் ஜோடியானார். இப்போது 63 நாயன்மார்கள் தொடரில் காரைக்காலம்மையராக நடிக்கிறேன். மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏற்றமும், ஏமாற்றமும் நிறைஞ்சதுதான் வாழ்க்கை இரண்டையும் ஏத்துக்கிட்டு வாழ பழகணும் இது என்னோட அனுபவம். என்கிறார் சந்தோஷி.
நன்றி: தினமலர்
-
14th August 2014, 07:14 PM
#470
Moderator
Diamond Hubber
கடைசிவரை வில்லியாகத்தான் நடிப்பேன்: ரேகா குமார்1

கன்னட சீரியல்களில் இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் ரேகா குமார். தெய்வமகள் தொடரில் காயத்திரி என்ற வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். "வில்லியாக நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து வில்லியாகத்தான் நடிப்பேன்" என்கிறார் ரேகா குமார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடிகையாக அறிமுகமானது கன்னட சினிமாவில்தான். 75 படங்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு கன்னட சீரியல்களில் நடித்தேன். அதை பார்த்து விட்டு மலையாள சீரியல்களில் வாய்ப்பு வந்தது. அதை பார்த்து தெய்வதிருமகள் சீரியல் வந்தது. மூன்று மொழிகளிலும் வில்லி கேரக்டர் என்றால் என்னைத்தான் கூப்பிடுகிறார்கள்.
வாழ்க்கையில் பாசிட்டிவாக இருக்கும்போது சீரியலில் நெகட்டிவாக நடிக்கத்தான் பிடிச்சிருக்கு. வெளியில்போகும் அதோ போறா பாரு அவள் தான் காயத்திரி சண்டாளி என்று பெண்கள் திட்டுகிறார்கள். அது என் நடிப்புக்கு கிடைத்த வெற்றி.
பெங்களூர் சொந்த ஊர். மூன்று மொழிகளில் நடிப்பதால் திருவனந்தபுரம், சென்னை, பெங்களூருக்கு பறந்துகொண்டே இருக்கிறேன். தற்போது தமிழில் ராஜா ராஜேந்திரா என்ற படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவில் பவர்புல் வில்லியாக புகழ்பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளது. என்கிறார் ரேகாகுமார்.
நன்றி: தினமலர்
Last edited by aanaa; 29th August 2014 at 03:35 AM.
"அன்பே சிவம்.”
Bookmarks