Page 267 of 401 FirstFirst ... 167217257265266267268269277317367 ... LastLast
Results 2,661 to 2,670 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2661
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இனி படத்தை பற்றி :

    இந்த படத்தை பற்றி எதை எழுதுவது , எதை விடுவது , எங்கே ஆரம்பிபது என்று நினைக்கும் பொது , ரொம்ப நேரம் எழுதும் புரியவில்லை , காரணம் சிவாஜி சாரின் emotional படங்களை விட அவரின் commercial entertainers என் personal சாய்ஸ் . சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம் ,ஒரு full length commercial entertainer மட்டும் தான் இந்த நிறுவனம் எப்போதும் தரும் . அப்படி பட்ட commercial entertainer தான் என் தம்பி . கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் படத்தை அழகாக எடுத்து சென்று இருப்பார் நடிகர் திலகத்தின் ஆஸ்தான இயக்குனர்களின் ஒருவரான AC திருலோகச்சந்தர் . ஆச்திலு, பாசத்திலு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இது , ஒரு படத்தை ரீமேக் செய்யும் பொது வெற்றியின் விதம் அதிகம் , அதே போல் தோல்வி பெறுவதற்கும் வாய்ப்பு அதிகம் . ஆனால் ACT தன் முத்திரையை பதித்து இருப்பர் படம் முழுவதும் .

    படத்தின் பலமாக நான் கருதுவது :

    கதை : commercial படமாக இருந்தாலும் நம்ப தகுந்த சம்பவங்களுடன் நகரும் திரைகதை .
    கத்தி சண்டை, தெற்கத்தி கள்ளனடா பாடல் (ஊரை கலக்கி கொண்டு இருந்தது என்று என் அப்பா , பெரியப்பா சொல்லி கேட்டு இருக்கேன் ) - ரசிகர்களை திருப்தி படுத்த

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2662
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்களை பற்றி :

    நடிகர் திலகம் :

    பா series படத்தில் சற்று குண்டாக இருந்தவர் பின்பு typhoid ஜுரம் வந்து உடல் மெலிந்து அழகாக action படத்துக்கு பொருத்தமாக இருந்தார் , அந்த நேரம் பார்த்து அவர் நடித்த படங்களிலும் action , காமெடி என்று கொஞ்சம் அதிகமாக சேர்த்து கொள்ளப்பட்டது . ஒரு குடும்ப படத்தில் சண்டை இருக்குமா ? இருந்தாலும் ரசிகர்கள் விரும்பும் படி இருக்குமா , இருக்கும் , கதையை கெடுக்காமல் இதை செய்ய முடியும் என்று நிருபித்து உள்ளார் திரு அக்ட

    இந்த படத்தில் நடிகர் திலகம் dual ரோல் என்று நினைக்கும் படி கொண்டு சென்று இருப்பர்கள் , ஆனால் படத்தில் அவர் ஒரே வேடம் தான் . but அதில் பல variations

    முதலில் கண்ணனை பற்றி :

    கண்ணன் ஒரு aristocrat . கம்பீரமாக அதே சமயம் கனிவாக அனைவரையும் handle செய்ய வேண்டும் தன்னிடம் உதவி கேட்டு வரும் வேலைகாரனிடம் பேசும் விதம் ஆகட்டும் , உடை உடுத்தும் விதம் ஆகட்டும் , தன் காதலி உடன் பேசும் விதம் , பழகும் விதம் ஆகட்டும் அங்கே சிவாஜி இல்லை , கண்ணன் என்ற aristocrat தான் .
    அதுவும் அவர் வெள்ளை உடை , வெள்ளை ஷு அணிந்து கொண்டு ஆபீஸ் ரூமில் உக்கார்ந்து வேலை பார்ப்பதும் , பிறகு வீட்டில் ராக்கிங் chair ல் உக்கார்ந்து புத்தகம் படிக்கும் snap இப்போதும் hot favourite ஒரு செல்வந்தர் அதுவும் படித்தவர் எப்படி அனைத்தையும் கையாள்வார் , ஒரு dignity , class உடன் , அதை பார்க்க வேண்டுமா , படத்தின் முதல் பாதியை பாருங்கள்


    சாமி கும்பிட போகும் போதும் ஒரு வித அமைதி , சந்தம் . இவர் கிளாஸ் என்றால் கந்தப்பா மாஸ் B & C ரசிகர்களுக்கு இவர் ஹாட் favourite . அதுவும் தெற்கத்தி கள்ளனடா பாடலில் அவர் அறிமுகம் ஆகும் பொது இப்பவே விசில் அடிக்கணும் போல் இருக்கிறது , அப்போ இருக்கும் சூழ்நிலை எப்படி இருந்து இருக்கும் நகைச்சுவையில் நாகேஷுக்கு சரியான போட்டி இந்த காட்சிகள் , அவர் கழுத்தை ஆட்டுவதும், நாகேஷ் சொல்லும் BUT PUT என்ற வார்த்தைகளை அவர் சொல்லும் விதம் , pant shirt போட்டு கொண்டு வரும் பொது சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது , மேலும் அவர் ஆற்றில் குதிக்கும் காட்சிகளும் , முடியை வெட்டும் காட்சிகளும் in short கந்தப்பா transformation காட்சிகள் சிரிப்பை வர வைத்து , வயிறை பதம் பார்க்கும்

  5. Likes chinnakkannan liked this post
  6. #2663
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அடுத்த variation

    கந்தப்பா தான் கண்ணன் என்று தன்னை தானே நிரூபிக்க செய்யும் , தன் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க வேஷம் போடும் சூழ்நிலையில் நடிகர் திலகத்தின் நடிப்பு , இது தான் திரைகதை என்று ஒரு ஒரு நொடியும் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் உக்தி , பிறந்த நாள் கொண்டததில் அறிமுகம் ஆகும் கந்தப்பா தான் கண்ணன் என்று சொல்லும் போதும் , அவர் ஒரு ஒரு அடியாக எடுத்து வைத்து நடக்கும் போதும் MSV யின் RR சூப்பர் . தனக்கும் சண்டை காட்சிகள் நன்றாக வரும் என்பதை ஏற்கனவே தங்கை படத்தின் மூலம் நிருபித்த நடிகர் திலகம் , இந்த படத்தில் கத்தி சண்டையில் , அதுவும் விஷம் தோய்ந்த கத்தியில் சண்டை போட்டு மனதை கொள்ளை அடிக்கிறார் , இந்த சண்டையும் , சாட்டையால் பூவை எடுக்கும் காட்சிகள் அனைத்திலும் அவர் நடித்து இருக்கும் விதம் அபாரம் , இது தான் தமிழில் முதல் இரட்டை வேட படம் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன் (உத்தமபுத்திரன் தான் சிவாஜி சாரின் முதல் இரண்டு வேடத்தில் நடித்த படம் இது தான் உத்தமபுத்திரன் என்று நினைத்து இருந்தேன் கத்தியை ஊன்றி அவர் நிற்கும் அழகை பார்த்து நான் இப்படி நினைத்து கொண்டு இருந்தேன். சிவாஜி தான் முதலில் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பவர் தமிழ் திரை உலகில் என்று தவறாக நினைத்து கொண்டு இருந்தேன்)
    பாலாஜியை சமாளிக்கும் காட்சிகள் டாப்

  7. Likes chinnakkannan liked this post
  8. #2664
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அடுத்த பரிணாமம் : செண்டிமெண்ட்

    நடிகர் திலகத்தின் படங்களில் செண்டிமெண்ட் இல்லை என்றால் எப்படி , இதில் siblings செண்டிமெண்ட் அதிகம் , அதுவும் தங்கச்சி செண்டிமெண்ட் சற்று தூக்கல் , but melodrama கிடையாது , காரணம் இதன் வசனம் எனக்கு மிகவும் பிடித்த ஆரூர் தாஸ் கிடையாது பாலாஜியின் ஆஸ்தான AL நாராயணன் , முக்கால்வாசி ரீமேக் படங்களுக்கு வசனம் இவர் தான் . தங்கையை சாப்பிட வைக்கும் அவர் கையாளும் யுக்தி , அவருக்காக பாடும் முத்து நகையே பாடலில் நடிகர் திலகத்தின் உருக்கம் நெஞ்சை பிழிகிறது .

    தான் தான் உண்மையான கண்ணன் என்று இவர் சொல்லும் பொது யாரும் நம்பாமல் இவரை சந்தேக பட , இவரோ ஒரு ஒரு விஷியமாக நினைவு படுத்த , இவர் காட்டும் தவிப்பு , பரபரப்பு அனைத்துக்கும் ஒரு ராயல் salute

  9. #2665
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாலாஜி :

    இவர் நன்றாக நடித்து இருக்கிறார் , பசு தோல் போர்த்திய புலியாக இவர் நடிப்பு மெச்சும் படி இருக்கிறது , நல்ல நடிகர் என்பதை விட நல்ல producer

    நாகேஷ் :

    இவர் படத்தில் running role . படம் முழுவதும் வருகிறார் , நகைச்சுவை செய்கிறார் , உருக வைக்கிறார் , திருப்புமுனைக்கு காரணமாக இருக்கிறார் மொத்தத்தில் ALL ROUNDER

    சரோஜா தேவி :

    புதிய பறவை போல் இவருக்கு முக்கியத்துவம் இல்லை , பாடல்கள் , மற்றும் சில காட்சிகளில் மட்டும் இவர் பங்கு

    பண்டரி பாய்

    ஸ்டார் mother பல ஹீரோக்களுக்கு இவர் தாயாக நடித்து இருக்கார் , இந்த படத்திலும் இவர் கணிசமான பங்கு வகிக்கிறார் .

    பாடல்களில் என் favourite

    தட்டட்டும் கை தழுவட்டும் - பாடலின் சுழல்

    அய்யையா மெல்ல தட்டு - WESTERN BEATS

    தெற்கத்தி கள்ளனடா - MASS

    முத்து நகையே - SENTIMENT

    மொத்தத்தில் SUPER


    நடிகர் திலகம் இந்த படத்தை பற்றி :

    பல ஆண்டுகளுக்கு பிறகு கத்தி வீச்சை பழகி கொண்டேன்

  10. Likes chinnakkannan liked this post
  11. #2666
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    DEAR Sivaji Senthil sir , Gopal sir, Ramadass Sir,

    Thanks for your kind words

  12. #2667
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரா..கு..ல்.. வேறு ஏதாகிலும் ஒரு படத்தை எடுத்து எழுதியிருந்தீர்களானால் கொஞ்சம் கமெண்டியிருப்பேன்..(ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை. .)..எ. த என்பதால் பிழைத்தீர்கள்..

    ஓ.. எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று..டைஃபாய்டில் இருந்து தேறி நடித்த படம் என்பது எனக்குத் தெரியாது..பட் பிஸிகலி ஃபிட் ஆக ஸ்மார்ட் ஆகத் தோன்றும் படங்களில் இதுவும் ஒன்று புட் பட் ஜோக்கிற்கு நானும் சிரித்திருக்கிறேன்..

    அய்யய்யா மெல்லத் தட்டுவில் சற்றே பூசிய உடற்கட்டோடு இருக்கும் சரோஜாதேவி தட்டட்டுமில் லாங்க் ஷாட் உபயத்தாலோ அல்லது சுடிதாரின் உபயத்தாலோ சற்றே ஒல்லியாய் இருப்பது போல இருப்பார்..இரண்டு பாட்டும் எனக்குப் பிடித்த பாட்டு தான் என்றாலும்..

    முத்து நகையே உன்னை நானறிவேன்.. பாடலில் ..பொன்னெதற்கு, கண்ணழகு பார்த்தால் பூவெதற்கு என்று சொல்லிக் கொண்டே வருகையில்..
    காலழகு பார்த்தால் ..காலழகு பார்த்தால் தெய்வத்திற்கு கருணை என்றொரு பேரெதற்கு”

    எனச் சொல்லி உணர்ச்சிவசப்படும் போதில் டிஎம் எஸ் குரலும் ந.தியும் பிரமாதப் படுத்தியிருப்பார்கள்..ம்ம் எழுதுங்கள்..எழுதுங்கள்

  13. #2668
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    The Gambia
    Posts
    0
    Post Thanks / Like
    ராகுல்ராம் சார்

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் படங்களில் " என் தம்பி " படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நடிகர் திலகத்தின் நடிப்பில் பல பரிமாணங்களைக் கொண்ட படங்களில் இப்படமும் ஒன்று.

    படத்தைப் போலவே தங்களின் எழுத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

  14. #2669
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பஞ்சாயத்து கூட்டம் போல் கூடியிருக்கிறார்கள். தலைவர் யாருமில்லை. பிராது கொடுத்திருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாட பலரிருக்கறார்கள். நீதி சொல்வதற்கு போன்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களும் வாதிடத்தான் வந்திருக்கிறார்கள். நீதிபதி இல்லாததால் நீதிமன்றம் இல்லை. இரண்டு அணிகளாக இருக்கிறார்கள் பட்டி மன்றம் இல்லை. ஏனெனில் நடுவர் யாரும் இல்லை.
    எங்கே என்று தெரிகிறதா? இந்த போரத்தி்ல்தான்.
    நதியின் பக்தர்களும் மதியின் பக்தர்களும் தான் இரு அணிகள். குற்றம் சுமத்துபவர்கள் மதியின் பக்தர்கள். குற்றம் சாட்டப்பட்டவர் நமது நண்பரும், நதியை குறைவாக சொல்லி தவறான தகவல்கள் தருவதை கண்டால் பாய்ந்து சென்று தகவல்கள் தவறென உறுதிப்படுத்தி வருவதை கடமையாகக் கொண்டிருக்கும் இரவிகிரண் சூர்யாவேதான்.
    சாட்டப்பட்டிருக்கும் குற்றம் - இரவிகிரண் சூர்யா தேவையில்லாமல் மதி திரியில் நுழைந்து வாதங்கள் வைப்பது, பின்பு பின் வாங்குவது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
    நதியின் பக்தர்கள் நண்பர் இரவிகிரண் சூர்யா எத்தனை முறை வாதங்கள் வைத்து பின்வாங்கியிருக்கிறாரென்று தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறார்கள்.
    கல்நாயக் இரவிகிரண் சூர்யா வைத்த வாதங்களை எடுத்துரைக்கிறார்.:
    கடைசியாக வைத்த வாதம் - எங்கள் வீட்டுப்பிள்ளையின் வசூலை உடனடியாக திருவிளையாடல் முறியடித்தது. மதியினர் சொல்லியது - இரவிகிரண் சூர்யா ஆதாரம் தரவில்லை. மதியினர் தந்த ஆதாரம் அடிமைப்பெண் வசூல் விபரம் அச்சடிக்கப்பட்ட ரசிகர் மன்ற நோட்டீஸ். செய்யாதது - இந்த இடத்தில் இரண்டு அணியினரும் முறையே எங்கள் வீட்டுப்பிள்ளை மற்றும் திருவிளையாடல் வசூல் விபரம் தராதது. தெரியாதது - இரவிகிரண் சூர்யா வாதம் வைத்து எங்கே பின்வாங்கியிருக்கிறார் என்பது. செய்திருப்பது - அவ்வாறு இரவிகிரண் சூர்யா வாதம் வைத்து பின்வாங்கியிருப்பது செய்ததாக குற்றம் சாட்டியது.
    இதற்கு திரு. முரளி சீனிவாஸ் சொன்ன பதிலுக்கு திரு. வினோத் என்ன பதில் தருவாரென்று பலர் காத்திருக்கிறார்கள். இல்லை இதையும் வழக்கம் போல் பின்வாங்கல் என்றே சொல்வார்களா தெரியவில்லை.
    அதற்கு முந்தைய வாதம் - கர்ணன் ஐம்பதாவது நாள் விளம்பரத்தில் தவறாக பாண்டி ருக்மணியை குறிப்பிட்டதாக சொன்ன தகவலுக்கு, இதே போன்ற தவறு ஆயிரத்தில் ஒருவன் விளம்பரத்திலும் நடந்தள்ளதை சுட்டிகாட்டி வாதம் வைத்தார். அதற்கு பதிலுமில்லை. அந்த பதிலுக்கு கைத்தட்டல் பாராட்டு பதிவுகளுமில்லை!!! இங்கே ஏது பின்வாங்கல்?
    அதற்கும் முன்பாக முக்தா சீனிவாசன் சொன்னதாக வந்த செய்தி - மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு மதியின் ஒரு படம் சமமென்று சொல்லி சென்னையைத்தவிர மற்ற இடங்களி்ல் 100-நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி என்று சொல்லியிருந்தார். அதில் என்ன தவறு என்று இரவிகிரண் சூர்யா சொல்லியிருந்தார்.
    அதற்குவந்த மறுப்பறிக்கை – “மக்கள் திலகம் நடித்த படத்தின் வெற்றிவிழாவிற்கு அவரை வைத்து படம் எடுக்காத திரு முக்தா ஸ்ரீனிவாசன் , இயக்குனர் பாலச்சந்தர் அவருடன் நடிக்காத திரு என் .டி .ராமாராவ் ,அந்த படத்தில் நடிக்காத திருமதி சௌகார் ஜானகி - மற்றும் பல திரை உலக பிரமுகர்கள் இதயக்கனி வெற்றி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது திரை உலக வரலாற்றில் இதுவே முதல் முறை(!!!) (எதுவாயிருந்தாலும் இந்த உலக வரலாற்றை வம்பிழுப்பதே பலரும் கடமையாகக் கொணடுள்ளனர்)

    அந்த விழாவில் பேசிய திரு முக்தா ஸ்ரீனிவாசனின் புள்ளி விவர பேச்சு - எம்ஜிஆரின் படங்களின் வசூலின் தாக்கம் -பற்றிய உரையின் பதிவு திரை உலகம் ஏட்டில் வந்ததை இங்கு பதிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்ட படங்களை பற்றி திரு முக்தா ஸ்ரீனிவாசன் சொல்லாமல் விட்டது அவருடைய தவறு .இதே போல் 1976ல் ஒருமுறை முக்தா ஸ்ரீனிவாசன் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் பேசிய நேரத்தில்மற்ற நடிகர்கள் வெள்ளிவிழா படங்களின் வசூலை எம்ஜிஆர் படங்கள் 100 நாளிலே வசூலாகிவிடும் .மற்ற நடிகர்கள் 100 நாட்கள் வசூலை 10 வாரங்களில் எம்ஜிஆர் படங்கள் பெற்று விடும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது .
    திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசியதற்கு திரை உலகம் இதழ் பொறுப்பாகாது.”
    அதற்கு பதிலளித்த இரவிகிரண் சூர்யா - "அதேபோல அப்படி பொறுப்பேற்க முடியாத விஷயம் உண்மை என்றும் ஏற்றுகொள்ள முடியாது !" என்றிருந்தார்.
    நிற்க - நானாயிருந்தால் இப்படி சொல்லியிருப்பேன்: மதியி்ன் ரசிகர்கள் முன்பு நதியின் படங்களையோ அவைகளின் வசூல் நிலவரம் பற்றியோ பேச அவரொன்றும் முட்டாளில்லை. மற்றபடி முன்னாளிருக்கும் மதியி்ன் ரசிகர்களை குஷிப்படுத்த ஒன்றிற்கு இரண்டாக அவருக்கு பேசத்தெரியாத என்ன? இதைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களைப்பற்றி ... (?)
    நான் சொல்லவேண்டாம். இதோ அவர்களே சொல்கிறார்கள் - " அவர் எவருடனும் ஒப்பிட முடியாத கலியுக கடவுள். அவரது திரைப்பட சாதனைகளை எவராலும் மிஞ்ச முடியாது. அரசியல் சாதனைகளும் அவ்வாறே ! அதனால் வீண் விவாதங்களுக்கு இடம் தர வேண்டாம்.”- அத்துடன் நாங்களும் இந்த கிணற்றை விட்டு வெளியே வரமாட்டோம் - அவர்கள் சொல்லாமல் சொல்வது.
    இவ்வாறாக நடந்த விவாதங்களில் இரவிகிரண் சூர்யா எப்போது பின்வாங்கினார் என்பதை அவரோ, குற்றம் சாட்டுபவர்களோ சொன்னால் தேவலை. இல்லை எனக்குதான் பின்வாங்குவதென்றால் என்னவென்று தெரியவில்லையா?
    அதுவும் இல்லைஎன்றால் ஆடை கிழிந்த யாருக்கேனும் உதவுவதற்காக 'பின்' வாங்கினாரோ என்னவோ? யாரேனும் தெளிவு படுத்துங்களேன்.
    விவாதம் தொடரும்.

  15. #2670
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி - உங்கள் பதிவுகள் அருமை என்று திரும்ப திரும்ப சொல்லியும் , எழுதியும் வாயும் , கைகளும் வெகுவாக வலிக்கின்றன - நேராக என்னுடைய View Point க்கு வருகிறேன்

    1. அந்த திரியை ஒரு நகைச்சுவை திரியாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர , ரவி கிரண் serious ஆக எடுத்து கொண்டது போல எல்லோரும் எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை . நமது திரியில் நகைச்சுவை கிடைக்காத போதெல்லாம் அந்த திரி பதிவுகளை பார்த்து நகைச்சுவையை பெற்று கொள்வது வழக்கம் - கல்நாயக் அவர்கள் நகைச்சுவைடன் எழுதுவது வழக்கம் - ஆனால் அவருடைய பதிவுகளும் குறைவாகவே வருகின்றன .

    2. பொய் சொல்வது என்பது ஒருவிதமான addiction - அந்த addiction லிருந்து விடுதலை பெறுவது அவளவு சுலபம் இல்லை - நமக்கு உண்மை மட்டும் பேசுவது ஒரு addiction ஆக இருப்பது போல் ! - அவர்களிடம் இருந்து உண்மை வரும் என்று சொல்வது அல்லது எதிபார்ப்பது சூரியன் மேற்க்கே உதிக்கும் நாள் ஒன்றில் ஏற்படலாம்

    3. யாராவது ஒருவரை நாம் Mr .Perfect என்று குறிப்பிட்டால் அதைவிட ஒரு சிறந்த நகைச்சுவை இருக்க முடியாது - ஏனெனில் யாருமே perfect கிடையாது - it is a myth . ஒரு மாய ஜால வார்த்தை - புத்தன் , காந்தி , ஏசு , ராம் மனிதராக வந்த பின் பல குறைகளுடன் தான் வாழ்ந்தார்கள் - நாமும் NT யை perfect என்று சொல்லவில்லையே - பல படங்களை அவர் தவிர்த்திருக்கலாம் என்று தானே எழுதுகிறோம் , விமர்சிக்கிறோம் --- அந்த திரியில் அவருடைய தவறுகளை யாருக்காவது சுட்டி காட்டி எழுதும் தயிரியம் இருக்கிறதா ? இல்லை அந்த திரியில் அப்படி எழுதிவிட்டு அடி படாமல் வாழ்ந்து விட முடியுமா ? ஓடாத படங்கள் ஓடியதாகவும் , ஓடிய படங்கள் ஒரு கோடியை தாண்டியதாகவும் எழுதும் மாயா ஜால வார்த்தைகளுக்கு நாம் ஏன் மதிப்பு கொடுத்து நம் நேரத்தையும் பதிவுகளையும் வீணடிக்க வேண்டும் ??

    4. 50 நாட்களை , constipation மாதிரி தள்ளி விட்டார்கள் - இன்னும் 6 மாதம் போகட்டும் - டிஜிட்டல் யுகத்தில் தலைவர் செய்த சாதனை - மறு வெளியீட்டின் மொத்த வசூல் 100 கோடியே 50 இலட்சத்து 45 பைசா என்று ஒரு மா மேதை பதிவு போடுவார் - அதை - நன்றாக சொன்னீர்கள் என்று பலர் சொல்லை அந்த திரியை ரொப்பி விடுவார்கள் ...

    5. உங்கள் உண்மைகள் அவர்களை மாற்ற போவதில்லை - அவர்கள் கொடுக்கும் நகைச்சுவையும் குறைய போவதில்லை - நாமும் அவர்கள் போல பொய் சொல்லும் கலையை பின் பற்ற போவதில்லை - ஏன் நமது energy யை வீணடித்து கொள்ள வேண்டும்?

    6. நீங்கள் நமது திரியின் நண்பர்களுக்கு வேண்டுமானால் மன அமைதி கிடைக்க வேண்டி உங்கள் உண்மை பதிவுகளை வெளியிடலாம் - ஆனால் அந்த பக்கம் நிறைந்துள்ள மூணு கால் முயல்களை ஒன்றுமே செய்ய முடியாது

    எங்களுக்கு மன அமைதி தேவை - தொடுருங்கள் உங்கள் உண்மைகளை !!

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •