-
1st April 2014, 05:38 PM
#2081
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள ராகுல் - பழனியை உங்கள் தலைமுறை கண்டிப்பாக பார்க்கவேண்டும் - ஒரு கூட்டு குடும்பம் , family values , அண்ணன் தம்பி உறவுமுறை , மற்றவர்களை புண் படுத்தகூடாத நல்ல மனம் , பிறரை மனம் உவந்து பாராட்ட கூடிய நல்ல இதயம் , ஈகோ இல்லாத மனித நேயம் , பிறரையும் ( தவறு செய்தவர்களையும் ) மன்னிக்கும் பரந்த உள்ளம் - இவைகள் அத்தனையும் தெரிந்து கொள்ள , புரிந்து கொள்ள
உங்களுக்காகவும் , மற்ற நண்பர்களுக்காகவும் முழு படமும் இதோ - DVD நீங்கள் தேட அவசியம் இல்லை ---
நீங்கள் உங்கள் பதிவுகளை இனி தொடரலாம் - எனக்கு பழனியை பற்றி அலச நேரம் உங்களால் கிடைத்தற்கு மிகவும் நன்றி
-
1st April 2014 05:38 PM
# ADS
Circuit advertisement
-
1st April 2014, 05:38 PM
#2082
Junior Member
Seasoned Hubber
Dear Ravi Sir,
Nice write up on palani movie, one suggestion , you can type the article in MS word, complete it leisurely and once you complete it you can post it sequentially, it will be better and we can read without break
Thanks for video
-
1st April 2014, 05:40 PM
#2083
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது - 21
1970 ல் வந்த விளையாட்டு பிள்ளை பற்றி தான் இந்த பதிவு ,1968 ல் வந்த தில்லான மோகனாம்பாள் என்ற இமாலய வெற்றி படத்தை தந்த கூட்டணி , மேலும் காலத்தால் அழியாத படங்களை தந்த இயக்குனர் நடிகர் கூட்டணியில் வந்த படம் தான் இந்த விளையாட்டு பிள்ளை, இந்த படத்தை திரு apn இயக்கிய காரணத்தை பற்றி திரு முரளி சார் சில நாட்களுக்கு முன்பாக விரிவாக எழுதி உள்ளார் , எனவே முதலில்
கதை:
கிராமத்து இளைஞன் முத்தையா (சிவாஜி சார் ) பொறுப்பு இல்லாமல் விளையாட்டு தனமாக வாழ்ந்து வருகிறார் , வீர விளையாட்டில் சூரர். அதே கிராமத்தின் பண்ணையார் மகள் மரகதம் (பத்மினி ) வீர விளையாட்டில் பிரியம் உள்ளவர் , ஆசையாக ஒரு மாட்டை வளர்த்து வருகிறார் . விளையாடி கொண்டு இருக்கும் முத்தையா மாட்டை பிடிக்க போக , மரகதத்தை சந்திக்கிறார் , முதல் சந்திப்பிலே இரண்டு பேருக்கும் சண்டை வர , சில நாட்களுக்கு பிறகு ரேகலா பந்தயத்தில் சந்தித்து கொளுகிரர்கள் , அந்த பந்தயத்தில் மரகதம் மற்றும் முத்தையா இருவருக்கும் கடும் போட்டி , கடைசியில் போட்டியில் வெற்றி பெறுகிறார் முத்தையா, மரகதத்தின் மனதிலும் இடம் பிடிக்கிறார்.
இந்த பந்தயத்தை படம் பிடிக்கிறார் இளைய ராணி ரோஜா ரமணி
-
1st April 2014, 05:41 PM
#2084
Junior Member
Seasoned Hubber
தான் மரகதத்தை காதலிக்கும் விஷியத்தை தன் தாயிடம் சொல்லும் முத்தையா , மரகதத்தை பெண் கேட்டு செல்ல சொல்லுகிறார். தான் விதவையாக இருப்பதால் முத்தையாவின் சித்தஅப்பாவை இவர்கள் சார்பில் பெண் கேட்க அனுப்புகிறார் முத்தையாவின் தாயார் . முத்தையாவின் சித்தஅப்பா கருமி , மற்றும் அடுத்தவரின் சொத்துக்கு ஆசைபடுபவர் , பெண் கேட்டு போக சீர்வருசை தட்டு வாங்க வெறும் பத்திரத்தில் கை எழுத்து வாங்குகிறார் சித்தஅப்பா (பாலையா)
மரகதத்தின் வீட்டுக்கு சென்று அங்கே தன் பிள்ளையை பற்றி பெருமையாக சொல்லி , முத்தையாவை பற்றி பொய் சொல்லி , அந்த சம்பந்தத்தை தன் மகனுக்கு முடிக்கிறார் பாலையா
பாலையாவின் மகன் சோ பட்டணத்தில் நாடகம் நடத்துகிறார் , அவர் மனோரமாவை காதலிக்கிறார் , பணத்துக்கு அல்லாடுகிறார் , மரகதத்தை தனக்கு கல்யாணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று அறிந்து மரகதத்தை தூக்கி கொண்டு பொய் கல்யாணம் செய்கிறார் முத்தையா , இதனால் ஊர் கோபத்துக்கு ஆளாகும் முத்தையாவின் குடும்பத்தை ஊர் ஒதுக்கி விடுகிறது ,சோ பணத்தை எடுத்து கொண்டு போய் விடுகிறார் , மனோரமா கர்பமாக இருப்பதை அறிந்து அவரை கழட்டி விடுகிறார் சோ
-
1st April 2014, 05:41 PM
#2085
Junior Member
Seasoned Hubber
விவசாயம் செய்து வாழ முடிவு செய்கிறார்கள் முத்தையா மற்றும் மரகதம் , உழ இரண்டு மாடு இல்லை என்ற சூழ்நிலையில் , மரகதத்தின் தந்தை மகள் மேல் உள்ள வெறுப்பில் அவள் வளர்த்த மாட்டை துரத்தி விட அது மரகதம் வீடு தேடி வர , இவர்கள் அதை வைத்து உழுது விவசாயம் செய்கிறார்கள் . நிலைமை கொஞ்சம் சீராகிறது
மரகதம் கர்ப்பம் ஆகிறார் , இதை அறிந்த அவர் தாய் மரகதத்தை வந்து சந்திக்கிறார் . சில மாதங்களில் முதைய்யவுக்கு ஆன் குழந்தை பிறக்கிறது , அனால் அவர் சந்தோசம் சில நிமிடங்கள் தான் நீடிக்கிறது , காரணம் தான் வெறும் பத்திரத்தில் கையெழுத்து போட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொளுகிறார் பாலய்யா , அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லுகிறார்கள் ( தன் நிலத்தில் குடுசை போட்டு வாழுகிறார்கள் ) முத்தையாவின் மகன் பெயர் மாணிக்கம் , மாணிக்கம் கொஞ்சம் பெரியவன் ஆகிறார் , ஒரு நாள் மாணிக்கம் விளையாட்டின் பொது கிணத்தில் விழ போக அதை பார்க்கும் முத்தையாவின் தாய் கிழே விழுந்து இறந்து விடுகிறார் , சில வருடங்களில் அந்த ஊரில் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது , பசி கொடுமை தாங்காமல் மாணிக்கம் தன் தாத்தா (பத்மினியின் தந்தை) வீட்டில் திருட போக , தாத்தா( vs ராகவன் ) அடிக்கிறார் , அதை பார்க்கும் அவர் மனைவி மாணிக்கம் தான் தங்கள் பேரன் என்று சொல்ல மனம் மாறும் ராகவன்
தன் மகள் , மருமகன் , பேரன் அனைவரையும் தன் வீட்டுக்கு வந்து வசிக்கும் படி அழைக்க போகும் பொது , அவர்கள் அனைவரும் வேறு ஊருக்கு சென்று விட்ட செய்தி கேட்டு மாண்டு விடுகிறார்
தன் உயிலில் தன் சொத்து அனைத்தும் மாணிக்கத்துக்கு தான் சொந்தம் என்றும் மாணிக்கத்துக்கு 18 வயது ஆகும் வரை அதை நிர்வகிக்கும் பொறுப்பை முத்தையாவுக்கு வழங்குகிறார் ராகவன்
-
1st April 2014, 05:42 PM
#2086
Junior Member
Seasoned Hubber
வருடங்கள் ஓடி விடுகிறது மாணிக்கம் இப்போ சிவகுமார் , தன் கல்லுரி ஆண்டு விழாவுக்கு தன் தந்தையை அழைக்கிறார் , அவரும் வர , அந்த சமஸ்தான ராஜாவும் வருகிறார் , மாலை போடும் பொது யானை மதம் பிடித்து ராஜாவை மிதிக்க போக முத்தையா ராஜாவை காபதுகிறார் , அப்போ தான் ராணியை பார்க்கிறார் , சின்னவயதில் பார்த்த இளையராணியின் அண்ணன் தான் ராஜா (ராமதாஸ் ). ராணி (காஞ்சனா) முத்தையாவின் குடும்பத்தை விருந்துக்கு அழைக்கிறார்
முத்தையாவின் குடும்பம் ராஜாவின் மாளிகைக்கு சென்று விழாவில் கலந்து கொளுகிரர்கள் , மரகதம் மற்றும் மாணிக்கம் இருவருக்கும் ராணியின் மேல் நாட்டு நாகரிகம் பிடிக்காமல் வந்து விட முத்தையா விருந்தில் கலந்து கொளுகிறார் . அந்த மாளிகையில் வேலை செய்கிறார் சோ , அதை பார்த்து என்ன த இங்கே இருக்கே என்று சாதரணமாக கேட்க சோ அதை offensive ஆக எடுத்து கொண்டு நேரம் பார்த்து பழி வாங்க திட்டம் போடுகிறார். விருந்தில் மது குடித்து விடுகிறார் முத்தையா , அவரை பிடித்து கொண்டு நிற்கும் காஞ்சனா உடன் அவரை படம் எடுக்கிறார் சோ
குடித்து விட்டு வரும் தன் கணவரை பார்க்கும் மரகதம் அதிர்ச்சி ஆகிறார் , முத்தையா மீண்டும் குடிக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறார் . தன் எடுத்த படத்தை மாணிக்கம் கைக்கு போகும் படி செய்கிறார் சோ
ராணியின் அன்பு பிடியில் இருந்து விலக முடியாமல் அங்கே தங்கி விடுகிறார் முத்தையா , தாயும் , மகனும் ஊருக்கு கிளம்பி விடுகிறார்கள் .ஊர் திருவிழா வருகிறது , அதற்கு வருவதாக சொல்லுகிறார் முத்தையா. சொன்னபடி வருகிறார் ராணியுடன் , அந்த வருடம் முதல் மரியாதையை ராணிக்கு கிடைக்கும் படி செய்கிறார் , இதை பார்த்து தாயும் , மகனும் தப்பாக எடுத்து கொளுகிரர்கள் (உண்மையில் இருவரின் மனதிலும் வெறும் மரியாதை கலந்த நட்பு தான் ). மாணிக்கம் தனக்கு 18 வயது முடிந்து விட்டது என்று கூறி சொத்தை தன் பெயருக்கு மாற்றி தர சொல்ல , தந்தையும் அப்படியே செய்கிறார் , மனம் வெறுத்து போய் ராணி கூட சென்று விட நினைக்கிறார்
இந்த நேரத்தில் சோவின் நண்பர் அந்த ஊருக்கு exhibition நடத்த வருகிறார் , அவரிடம் சொல்லி மாட்டை அடக்கும் போட்டி வைக்கும் படியும் , மாட்டின் கொம்பில் விஷம் தடவும் படியும் சொல்லுகிறார் . முத்தையாவை provoke செய்ய பேசுகிறார் சோவின் நண்பர் , முத்தையா போட்டிக்கு தான் தயார் என்று சொல்லிவிட , அந்த செய்தி முத்தையாவின் மனைவி , மகன் இருவருக்கும் தெரியவருகிறது ( மாட்டின் கொம்பில் விஷம் இருப்பதும் ) தந்தையை காப்பற்ற களத்தில் குதிக்கிறார் மாணிக்கம் , அவரால் முடியாமல் போகவே முத்தையா மாட்டை அடக்க , சோ செய்த சூழ்ச்சி தெரிய வருகிறது
(TR ராமச்சந்திரனின் செயலால் ) அந்த போடோவும் சோ வின் கைவண்ணம் என்று தெரிய வர குடும்பம் ஒன்று சேர்க்கிறது
சுபம்
-
1st April 2014, 05:42 PM
#2087
Junior Member
Seasoned Hubber
அலசல் :
இந்த படம் எனக்கு பிடித்த காரணங்கள்
1. நடிகர் திலகத்தின் தோற்ற்றம் - பொதுவாக சற்று குண்டாக இருப்பார் இதில் எப்படி ஒல்லியாக இருக்கார் என்று விந்தை , காரணம் அதற்கு அடுத்த படத்தில் (vietnam வீடு) கொஞ்சம் குண்டாக இருக்கிறார் Dedication thy name is சிவாஜி )
2.light ஸ்டோரி - ரொம்பவும் அழ விடாமல் , போகும் கதை + positive ending
3. நடிகர் திலகத்தின் வீர சாகசங்கள் (சாமிநாதன் sir- thanks)
-
1st April 2014, 05:43 PM
#2088
Junior Member
Seasoned Hubber
சிவாஜி :
என்ன ஒரு அழகு . ஆனைமுகம் நம்பியே என்ற பாடலில் கபடி ஆடும் பொது அறிமுகம் ஆகும் நடிகர் திலகத்தின் முகத்தில் விளையாட்டு பிள்ளை கலை , அதே பாடில் சிலம்பம் சுத்தும் லாவகம் , கயிறு இழுக்கும் காட்சி , என்ன தெரியாது இந்த அற்புத மனிதர்க்கு - படத்தில் வரும் வசனம் முற்றிலும் உண்மை , வித்தைக்கு ஜெயம் உன் பக்கம் தான் , அடுத்து வரும் ரேகள போட்டியில் வண்டி ஓட்டும் லாவகம் , மாட்டை அடக்கும் காட்சி , யானையை அடக்கும் காட்சி - போடுங்க ஒரு whistle . நடிகர் திலகத்துக்கு அழ வைக்கும் காட்சி தான் வரும் , சண்டை போடா வராது என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டர்கள் , நம்மவரும் ராஜா , திருடன் , என் தம்பி, தியாகம் , தங்கை போன்ற பல படங்களில் அதை பொய் என்று நிருபித்து உள்ளார் , இந்த படத்தில் மீண்டும் ஒரு முறை நிருபித்து உள்ளார்
யானையை அடக்கும் காட்சியில் பெரும் பகுதி நம்மவர் டுப் இல்லாமல் நடித்து இருபது தெரிகிறது , காரணம் camera கோணத்தில்
ஹீரோ வுக்கும் டுப்க்கும் இருக்கும் வித்தியாசம் கண்டிப்பாக தெரியும் , skull shape காட்டி கொடுத்து விடும் , யானையை அடக்கும் காட்சியில் வேகம் என்றல் மின்னல் வேகம் தான் , அதுவும் அது தூக்கி போடும் போட்ட உடன் சுதாரித்து கொண்டு எழுந்து வருவதும் , மீண்டும் அது தன் பலத்தை காட்ட , நம்மவர் அதை அடக்கும் காட்சியும் - டாப்
-
1st April 2014, 05:44 PM
#2089
Junior Member
Seasoned Hubber
கிளைமாக்ஸ் காட்சியில் மாட்டை அடக்கும் காட்சி - சூப்பர் அதிலும் மாட்டின் கொம்பை பிடித்து தொங்கும் காட்சி. மாடு தன்னை முட்டி விட்டு தான் தகர தடுப்பு கிட்ட விழுந்து விடுவதும் , மீண்டும் மாட்டை அடக்க ம்யற்சிபதும் - swept me off my feet (வாசு சார் விரிவாக எழுதி உள்ளார் )
வெறும் சண்டை படமா என்று கேட்கும் நண்பர்கள் தொடர்ந்து படிக்கவும் . நடிகர் திலகத்தின் கிராமத்து படம் என்று சொன்ன உடன் என் நினைவுக்கு வரும் படங்கள் பட்டிகாடா பட்டணமா, சவாலே சமாளி , பழனி (இது பார்க்க வில்லை ) பல நபர்களுக்கும் அப்படி தான் என் இந்த படம் பிடிக்க வில்லை என்று தெரியவில்லை . தனக்கு ஆன் குழந்தை பிறந்து இருப்பதை அறிந்து , அதை பார்த்த உடன் , தனக்கு 10 ஆட்கள் பலம் வந்து விட்டதை போன்று கர்ஜிக்கும் காட்சி , உணர்ச்சி மிகுதியில் குழந்தையை தன் தாயின் காலடியில் வைக்க போகும் காட்சியும் , தன் மனைவிடம் குழந்தை தன் குழந்தை சிவப்பாக இருக்கிறது , கருப்பாக இல்லை என்று சொல்லுவதும் , வீட்டை காலி செய்யும் சூழ்நிலையில் அனைவரும் இது குழ்ந்தை பிறந்த நேரம் என்று சொல்ல , நம்மவர் மட்டும் குழ்ந்தை பிறந்த நேரம் என் கடன் தீர்ந்து விட்டது என்று சொல்லுவது - typical நடிகர் திலகம் stamp . இது இளம் பருவத்தின் மிடுக்கில் நடிகர் திலகம் -
A typical village angry young man portrayed effectively by NT
-
1st April 2014, 05:44 PM
#2090
Junior Member
Seasoned Hubber
இப்படி செல்லும் அவர் கதாபாத்திரம் பணக்காரன் அந்தஸ்தை அடைந்த உடன் கம்பீரமாக ஸ்டைல் ஆக , அதே சமயம் பெரிய மனிதர்களின் சவகாசம் வேண்டும் என்ற குணத்தையும் , யார் மனதையும் புண் படுத்த கூடாது என்ற குணத்தையும் கொடுகிறது
NT breeze life into the character Muttaiyaa particularly in the second half of the movie as middle aged man with subtle mannerisms
பட்டு வேஷ்டி கட்டி கொண்டு வரும் பொது கஷ்ட படும் காட்சியும் , தன் சொந்த நிலத்தில் உழுது சாப்பிடுவதும் , அவர் பழசை மறக்க வில்லை என்பதையும் காட்டுகிறது , வீரத்திலும் அவர் பழசை மறக்கவில்லை என்பதை அடுத்த அடுத்த காட்சிகளும் , கிளைமாக்ஸ் காட்சிகாலும் நிருபிகிறது ( அண்ணாமலை , படையப்பா படங்களுக்கு this may be a reference for hero character‘s transformation )
சிவகுமார் சொல்லி கொடுத்து நடிகர் திலகம் அங்கிலம் பேசும் காட்சி -கை தட்டாமல் இருக்க முடியவில்லை - (இவர் பள்ளி படிப்பை முடிக்காதவர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ) என்ன ஒரு command over language , அதை உச்சரிக்கும் பொது அவர் உடம்பை ஒரு சைடு ஆக நிப்பதும் , பேசி முடித்த உடன் உக்கர்த்து துடைத்து கொல்வதும் , மீண்டும் பேச சொன்ன உடன் தமிழில் பேசுவதும் ( அந்நியன் ஸ்டைல் )
ராஜா உடன் குடிக்கும் காட்சியில் அவர் நடிப்பு - வெட்கம் , சாப்பிட தெரியமால் தவிப்பதும் - nice
முதல் முறையாக குடித்து விட்டு மனிப்பு கேட்கும் காட்சி - சொர்க்கம் ஸ்டைல் . தன் மகன் சொத்தை கேட்கும் பொது கை எழுத்து போட்டு விட்டு நிற்கும் காட்சி - நான் எதிர் பார்க்காத காட்சி (பெரிய சண்டை - உபதேசம் எதிர் பார்த்தேன் ) காஞ்சனா உடன் பழகும் காட்சிகள் நல்ல ஆன் பெண் நட்புக்கு utharnam
மொத்தத்தில் perfect characterization - உபயம் - கொத்தமங்கலம் சுப்பு
Bookmarks