-
24th March 2014, 03:58 PM
#1641
Junior Member
Veteran Hubber
Originally Posted by
saileshbasu
நேற்று Deviparadise திரைஅரங்கு
உரிமைக்குரல் [Mr. BSR] , பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் தோழமை சங்கங்களின் உறுபினர்கள் கொண்டாட்டம்.
பெட்டியில் தூங்கிய படம்....
தூசு தட்டப்பட்ட படம்....
பெயரளவில் பார்வையாளர்களை கொண்ட படம்...
சிறிய திரை அரங்குகளில் ஓடிய படம்
நட்சத்திர பட்டாளம் உள்ளதால் ஓடிய படம்.......
இப்படி பல இலவச விளம்பரங்கள், அந்த நட்சத்திர பட்டாளம் கொண்ட படத்திற்கு இன்னும் கிடைக்க வழி வகை செய்து , போஸ்டர் வெளியிடும் நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி .
மேற்கூறிய காரணம் எல்லாம் நாங்கள் ஒத்துகொள்கிறோம் என்றே வைத்துகொண்டாலும் ......நட்சத்திர பட்டாளம் கொண்ட படம் 2012இல் செய்த சாதனையை , வியாபார ரீதியாக முழுமையாக முறியடித்து பிறகு இந்த வீர (வீம்பு) வசனம் பேசட்டும் poster தயாரித்தவர்கள் !
திரைப்படம் வெளியிடும் சமயம் தேர்தல் கமிஷன் போஸ்டர் கெடுபிடி, பள்ளி தேர்வு ...மற்றும் இன்னும் பல புதிய காரணங்கள் தேடி பதிவிடட்டும் !
இதே தேர்வு அதுவும் STATE மற்றும் CBSE மற்றும் ISCE தேர்வுகள், IPL டௌர்னமெண்ட் 2012இல் நட்சத்திர பட்டாளம் கொண்ட பெட்டியில் தூங்கிய தூசி தட்டப்பட்டு நவீனமயமாக்கபட்ட திரைப்படம் வெளியானபோதும் இருந்தது என்பதை POSTER ஒட்டிய உண்மை விளம்பிகள் மறந்தது ஏனோ ?
இதுபோன்ற காரணங்கள் பட்டியளிடுவோர் ஒரு விஷயத்தை நினைத்து பார்க்கவேண்டும்.
இந்த ஆயிரத்தில் ஒருவன் - பிரமாண்டத்தின் மகுடம் என்று பறைசாற்றிகொள்ளும் காவியம், புதுமுகங்கள் நடித்த புது காவியம் அல்ல !
POSTER கூறுவதை போல வருடம் தோறும் திரையிடப்பட்டுள்ள "வசூல் புரட்சி" திரைப்படம்.
நடப்பது எதிர் கட்சி ஆட்சி அல்ல ! உங்கள் ஆட்சிதானே ? கதாநாயகியாக நடித்தவர் உங்கள் கட்சியில் இப்போதைய முதல்வர்தானே ?
போஸ்டர் கெடுபிடி திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு, திரையிட்டு 3 நாட்கள் வரை எந்த கெடுபிடியும் இல்லை ..
திங்கள் முதல் அதுவும் ஓரிரு இடங்களில் தான் குறிப்பாக மதுரை, மட்டும் சிறிது STRICT ஆக கடைபிடிக்கப்பட்டது ! சென்னை, கோவை, சேலம், காரைக்கால், காங்கேயம், நாகர்கோயில், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய எங்கும் குறிப்பிடும்படியான நிலைமை இல்லை.
மேலும் கோவையில் மற்றும் மதுரையில் திரு.MGR, கதாநாயகி நீங்கலாக ராட்சச எழுத்து வடிவில் "திவ்ய நிறுவனம் வழங்கும் " ஆயிரத்தில் ஒருவன் - பிரமாண்டத்தின் மகுடம் "என்று போஸ்டர்கள் மீண்டும் ஒட்டப்பட்டது யாரும் மறுக்க முடியாது !
ஆகையால், இதுபோல பெட்டியில் தூங்கிய, தூசுதட்டபட்டு நவீனமயமாகி வெளியிட்ட திரைப்படத்தை, அதன் நடிகரை தாக்கும் போஸ்டர்களுக்கு காசு செலவு செய்வதை விடுத்து அந்த காசை ரசிகர்கள் அனைவருக்காகவும் செலவிட்டு ஆக்கபூர்வமாக திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன் எனும் நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய டிக்கெட் வாங்கி பயன்படுத்தினால் சால சிறந்தது !
சென்னை முழுவதும் 1500 POSTER ஒட்டிய காசுதான் TOTAL WASTE !! PRINTING CHARGES PLUS PASTING BILL !
இந்த போஸ்டரால் 125இல் ஒரு 45 திரை அரங்கில், திரு MGR அவர்கள் நடித்து வருடா வருடம் வசூல் புரட்சி செய்ததாக கூறப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைபடதை உங்களால் தூக்கி நிறுத்த உதவுமா என்பதை யோசியுங்கள் ?
பெட்டியில் தூங்கிய தூசுதட்டி நவீனபடுத்தபட்ட திரைப்படத்தையும் அதில் நடித்த நடிகர் பேரில் உள்ள உங்கள் வயிதெரிச்சலயும் காழ்புணர்ச்சியைதான் வெளிக்காட்ட உதவும் ! மக்களிடம் ஒரு "சிம்பதி" அல்லது "எம்பதி" கிடைக்க ஒருபோது வழிவகை செய்யாது என்பதை இனியாவது புரிந்து கொண்டால் நன்று !
இதுபோல POSTER ஓட்டுபவர்கள் DVD வியாபாரத்தில் பெட்டியில் உறங்கிய, தூசு தட்டப்பட இனியும் தயாராக உள்ள திரைப்படங்களை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்ததை தைரியமாக மனசாட்சி என்ற ஒன்று இருக்குமே என்றால் அதை அடகு வைக்காமல், கழட்டிவைக்காமல் ஒலிக்கிறது எங்கள் உரிமைக்குரல் என்று ஒத்துகொள்ளமுடியுமா அல்லது இதுபோல ஓலக்குரல் தான் வருமா ? ?
இன்றைய confession விளம்பரம் மக்கள் பார்த்தாலே தெரியும் யார் உண்மையர் ....யார் பொய்யர் என்று !!
தெரு தெருவாக அந்த பொட்டியில் உறங்கிய படத்தை, தூசு தட்டி நவீனமயமாகி 2012 வெளியான நட்சதிரபட்டாளம் கொண்ட, பெயரளவில் பார்வையாளர்களை கொண்டதாக இன்னும் பல பொய் தகவல்களை காசு செலவு செய்து உண்மை தகவலை கூறுவது போல POSTER அடித்து ஓலக்குரல் இடும் நண்பர்களுக்கு ...! இதோ இதற்க்கு முதலில் பதில் சொல்லுங்கள் ! பிறகு தொடரட்டும் உங்கள் POSTER பொய் தகவல்கள் !
புத்தகம் மூலம் நண்பர்களுக்குள் சண்டை மூட்டி விடுபவர்கள், தம் இனத்தை சேர்ந்தவர்களை மற்றவர்களுடன் நட்பு வைப்பதை கொச்சை படுத்தி, துரோகிகளை போல சித்தரிப்பது, நன்கு கற்ற, நற்குணங்கள் வாயிந்த சுமார் குறைந்தது 45 வருட பழுத்த அனுபவமும் திரு. MGR அவர்கள் மீது இறைவனாக நினைக்கும் பக்தியும் கொண்ட இன்றும் என்றும் மக்கள் திலகம் புகழ்பாடி உண்மை தொண்டாற்றிவருபவர்களை விளம்பரத்திற்க்காக செய்பவர்கள் என்பது போல தனது புத்தகத்தில் தம்மை சேர்ந்தவர்களையே நாகூசாமல் காழ்புனர்சியல் எழுதும் கனவான்களே ! இந்த புகைப்படத்திற்கு என்ன உங்கள் பதில் ! இவரை கேள்வி கேட்க முடியுமா உங்களால் ?
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம்......
காழ்புணர்ச்சியால் உண்மையை ஜீரணிக்க முடியாமல் ..நீங்கள் உங்கள் பத்திரிகை வாயிலாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாய்க்குவாய் பொய் கூறுகிறீர்களே ...
அதே பொட்டியில், தூசு தட்டி நவீன மயமாகிய திரைபடத்தின் நூறாவது நாள் சத்யம் (2 theaters) மற்றும் எஸ்கேப் திரை அரங்கின் முன் பதிவு - 100th day
இதை இங்கு பதிவிட காரணம் ...இனியும் நீங்கள் பொய் புளுககூடாது உங்கள் பொய் செய்தி மக்களை சென்றடைய கூடாது..உண்மை ஆவணம் மக்கள் காண வேண்டும் என்தற்காக !
தூசு தட்டி நவீன மயமாகிய திரைபடம் வெளியான தேதி : MARCH 16 2012
முன் பதிவு தேதி : JUNE 24 2012
ஓடுகின்ற நாள் : 100 : ஒடுங்கிற திரை அரங்குகள் : 3
படம் வெளிவந்தது 48 வருடங்கள் முன்பு ! ! !
இனியாவது உங்களுடைய இந்த வயிதெரிச்சல் பிடித்த பொய் தகவல் போஸ்டர் அடிப்பதை நிறுத்திகொள்ளுங்கள் என்று கேட்டுகொள்கிறோம் !
Last edited by RavikiranSurya; 26th March 2014 at 06:34 PM.
-
24th March 2014 03:58 PM
# ADS
Circuit advertisement
-
24th March 2014, 06:36 PM
#1642
Junior Member
Platinum Hubber
இன்றைய மாலை மலரில் வெளியான செய்தி
நன்றி-மாலை மலர் நாளிதழ்
Last edited by puratchi nadigar mgr; 24th March 2014 at 06:38 PM.
-
24th March 2014, 06:38 PM
#1643
Junior Member
Platinum Hubber
-
24th March 2014, 06:40 PM
#1644
Junior Member
Platinum Hubber
இந்த வார குங்குமம் வார இதழில் வெளியான செய்தி
நன்றி-குங்குமம்
-
24th March 2014, 07:09 PM
#1645
Junior Member
Platinum Hubber
திரு.டி.எம்.எஸ் செல்வகுமார் மேடையில் பாடும் காட்சி
-
24th March 2014, 07:17 PM
#1646
Junior Member
Platinum Hubber
நடிகர் சார்லி அவர்கள்
-
24th March 2014, 07:42 PM
#1647
Junior Member
Platinum Hubber
திருவாளர்கள் :கே. பாபு, பி.ஜி.சேகர், இளங்கோவன் ஆகியோர்.
-
24th March 2014, 07:45 PM
#1648
Junior Member
Platinum Hubber
காமராஜர் அரங்கில், விழா நிகழ்ச்சிகளை , திரு.திருப்பூர் ரவிச்சந்திரன்
அவர்கள் தொகுத்து வழங்கும் காட்சி. அருகில் திரு. எஸ்.ராஜ்குமார்
மற்றும் திரு.லக்ஷ்மன் சுருதி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th March 2014, 08:00 PM
#1649
Junior Member
Platinum Hubber
courtesy - SARADHA MADAM .
தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.
ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.
கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.
கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.
பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.
பாடல்களும் இசையும்:
இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.
1. பருவம் எனது பாடல்
நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்
பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து
இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்
என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.
(நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).
2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.
3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப் பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.
4. உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்
பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.
பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன்
அடுத்து வ*ரும் இசை ‘பிட்’டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).
4. ஆடாமல் ஆடுகிறேன்
கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.
ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா…வா…வா…. வா….வா…வா…
முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.
விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.
(மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).
5. நாணமோ… இன்னும் நாணமோ
நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?
ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது – அது இது
பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.
6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”
நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.
‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.
Last edited by esvee; 24th March 2014 at 08:06 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th March 2014, 08:22 PM
#1650
Junior Member
Platinum Hubber
நடிகர் சார்லி பார்வையாளர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை உயர்த்தி தோன்றும் காட்சி. அருகில். திருவாளர்கள்:எஸ். ராஜ்குமார், கணேசன் ,பேராசிரியர் செல்வகுமார், கண்ணன் ஆகியோர்.
Bookmarks