*************************
மதுரை அரண்மனையின் அந்தப் புரத்தில் தனது அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த மகாராணி புவன முழுதுடையாள் உள்ளே நுழைந்த குலசேகரனை வரவேற்றார்..

'வா.குலசேகரா..எப்படி உள்ளது உடல் நிலை '

*
'தேவலை அம்மா. நான் நுழைந்ததும் நீங்கள் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள் '

'ஆம் மகனே. இதோ இந்தச் சித்திரத்தைப் பார்.

இவள் சோழ மன்னனின் மூன்றாம் மனைவியின் மகள்.அமைச்சர் அநிருத்தர் 'முதலில் இவளைத் திருமணம் செய்து கொண்டால் பின்னர் எதுவும் குழப்பம் எல்லாம் வராமல் சுமுகமாக வைத்துக் கொள்வதாக ' ஓலை அனுப்பியிருக்கிறார்...

பார் மகனே. சும்மா சும்மா போர் வந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்.. சோழரிடமிருந்து சம்பந்தம் நமக்குக் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. '

*
குலசேகரனின் மனதில் பலவித எண்ணங்கள் அலைபாய -பிற்காலத்தில் மிகப் பெரிய பாண்டிய சாம்ராஜ்யத்தை நிறுவிய ஜடாவர்மன் சுந்தர பாண்டியனைப் பெற்றெடுக்கப் போகும் - சோழராஜகுமாரியின் சித்திரத்தைப் பார்த்த வண்ணம், 'சரி அம்மா.. நீங்கள் சொல்வது போல் செய்கிறேன். இன்னொரு விஷயம். ஒரு வீரக் கல் நாட்ட வேண்டும் ' என்றான்.

(திண்ணையில் பல வருடங்களுக்கு முன் வெளியானது..)- 2002 என நினைக்கிறேன்

*********************************