-
9th March 2015, 01:16 PM
#11
Senior Member
Seasoned Hubber
செலுலாய்ட் சோழன் -62
(From Mr.Sudhangan's Facebook)
1962ம் ஆண்டு வெளிவந்த படம் ` ஆலயமணி’ இந்த படத்தை தயாரித்தவர் வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பா!
படத்தின் துவக்கமே விறுவிறுபாக இருக்கும்! `ஆலயமணி’ ஒரு காலத்தில் இந்த ஆலயமணி அடித்து பிழைத்து வந்த ஆறுமுகம் பிள்ளை! வறுமையின் பிடியில் விழுந்து மரணப்பாறையில் விழுந்து வாழ்வை முடிக்க நினைத்தார்!
அவரை காத்தது ஆலயமணி! மடியப்போகும் நேரத்தில் அவரை தடுத்து வாழ்வைத் தந்தது ஆலயமணி!
கோவில் மணி அடித்து பிழைத்து வந்த குடும்பத்தை கோடிஸ்வரனாக்கியது இந்த ஆலயமணி!
அவர் குடும்பத்து குலதெய்வமே ஆலயமணி! அந்த ஆறுமுகம் பிள்ளையின் வழியில் வந்தவர் தான் தியாகராஜன்!
அந்த தியாகராஜன் கதாபாத்திரம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
` முருகா! வெற்றியின் உருவே! எம்மையும் எமது நாட்டையும் வாழ வைய்யப்பா ! என்கிற வசனத்தோடு அவர் கோவிலில் முருகனை கும்பிடுவது போன்ற காட்சியோடு தான் படம் துவங்கும் பிறகு தான் படத்தின் டைட்டில் கார்டே வரும்! இந்தப் படத்தின் மூலக்கதையும் நான் ஏற்கெனவே படித்த ஜி.பாலசுப்ரமணியம்தான்!
திரைக்கதை வசனத்தை எழுதியிருந்தவர் ஜாவர் சீதாராமன்! இந்தப் படத்தை இயக்கியவர் கே. சங்கர்!
எந்த ஒரு சிறு தோல்வியையும் தாங்க முடியாத ஒரு கதாபாத்திரம் சிவாஜியுடையது!
ஒரு டென்னிஸ் போட்டில் தோல்வி என்றால் கூட மனம் வெதும்புவார்! அந்த ஆரம்ப காட்சிகளில் அவர் காட்டும் அந்த பணக்கார மிடுக்கு! பேசும் ஆங்கிலம்! அதை உச்சரிக்கும் விதம்! ஒரு பரம்பரை பணக்க்காரனுக்கு கூட அத்தனை மிடுக்கு இருக்குமா என்று சந்தேகம் படும்படியாக ஒரு ஆரம்ப அறிமுகம் அந்த கதாபாத்திரத்திற்கு!
அவருடைய அருமை நண்பராக எஸ்.எஸ்.ஆர். நடித்திருப்பார்! அதில் ஒவ்வொரு வசனத்திலும் ஜாவர் சீதாராமனின் அறிவு கூர்மை பளிச்சிடும்!
ஏழை எஸ்.எஸ்.ஆரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து தனக்கு இணையான அந்தஸ்தை கொடுப்பார் பணக்கார சிவாஜி!
அப்போது அதை ஏற்றுக்கொள்ள எஸ்.எஸ்.ஆர் தயங்குவார்!
அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு ஒரு வசனம்!`நானோ தன்மான உணர்ச்சி அதிகமுள்ள ஒரு ஏழை. உன்னைப் போல ஒரு பணக்காரனுக்கு நண்பனாக இருப்பது என்பது கூரிய கத்தியை எடுத்து தானே குத்திக்கொள்வதைப் போன்றது’ என்பார்!
அன்றைய கதாசிரியர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தான் வாழ்க்கையின் யதார்த்தங்கள் எத்தனை அவர்கள் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது!
அதை ஆலயமணி படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரியும்! இந்த படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ். வீரப்பாவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்! தமிழ்த் திரையுலகம் இதுவரையில் எத்தனையோ வில்லன்களைப் பார்த்திருக்கிறது!
வில்லன் என்றால் வீரப்பா தான் என்பதற்கு அடையாளமாக அமைந்தது அவருடைய அந்த அட்டகாசமான அந்த வில்லன் சிரிப்பு! இவரால் திரையில் வஞ்சிக்கப்பட்ட கதாநாயகிகள் ஏராளம்! சாவித்திரி, அஞ்சலிதேவி,. பத்மினி, வைஜெயந்திமாலா, தேவிகா என்று பலரைச் சொல்லலாம்! ஆனால் எல்லாமே படத்தோடு சரி! நேரில் மிகவும் அமைதியானவர் பி.எஸ். வீரப்பா ! அதிர்ந்து கூட பேசமாட்டார்! ஆனால் திரையில் ஏராளமான அட்டகாசங்களை செய்வார்! வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் மிகவும் பிரபலமானது அந்த வைஜெயந்தி மாலா பத்மினி போட்டி நடனம்! அதற்கு நடுவே ` சபாஷ் ! சரியான போட்டி’ என்று இவரது மந்தகாசமான குரல் தனித்து ஒலிக்கும்!
முன்பு ஒரு பெண்ணை காதலிப்பவர்கள் கூட இவரது வசனத்தைத் தான் சொல்வார்கள்!
கே.பி.சுந்தராம்பாளின் நட்பு கிடைத்து அதன் மூலமாக அவர் நடித்த மணிமேகலை படத்தில் இவருக்கு முதலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது! தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வந்த வீரப்பா ஐம்பதுகளின் இறுதியில் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் என்று ஒரு சொந்த பட நிறுவனத்தை துவங்கினார்! இவரது நிறுவனம் தயாரித்த முதல் தமிழ்ப் படம் `பிள்ளைக் கனியமுது’ எஸ்.எஸ்.ஆர் – ஈ.வி.சரோஜா ஜோடி! வில்லன் வீரப்பா!
அடுத்து ஜெமினி – அஞ்சலிதேவி ஜோடியாக நடித்த ` வீரக்கனல்’ படத்தை தயாரித்தார்!
இதற்கடுத்து வந்த திரைப்படம் தான் ` ஆலயமணி’ இந்த படத்தின் வேலைகள் 1961 களில் துவங்கியது! 1962ம் வருடம் படம் வெளிவந்தது!
இவரது நிறுவனத்தின் எம்ப்ளமே ஆலயமணிதான்!
`ஆலயமணி’ படத்திற்கு கல்கண்டு இதழில் தமிழ்வாணன் கேள்வி – பதில் பகுதியில் இப்படி எழுதினார்
`வீரப்பா பட்ட பாட்டிற்கெல்லாம் விடை கிடைத்துவிட்டது! `ஆலயமணி’யின் வெற்றி டாண் டாண் என்று ஒலிக்கத் துவங்கிவிட்டது! `ஆலயமணி யின் வெற்றி இதனை இந்தியிலும் தயாரிக்கும் ஆர்வம் பலருக்கும் இருந்தது!
பலர் வீரப்பாவை அணுகி இந்தி உரிமையைக் கேட்டார்கள்! இதற்கு ஒரு காரணம் இருந்தது! ஜி.என்.வேலுமணி தமிழில் பாகப்பிரிவினை படத்தை சிவாஜியை வைத்து எடுத்தார்! படம் தமிழில் மகத்தான வெற்றியடைந்த படம்!
பலரும் இந்தியின் தயாரிக்க வேலுமணியை அணுகினார்கள்! ஆனால் `பாகப்பிரிவினை’ கிராமியப் பின்னனி கொண்ட கதை! இதை இந்தியின் எடுக்க பயந்த வேலுமணி அதன் இந்தி உரிமையை வாசுமேனன் என்கிற தயாரிப்பாளருக்கும் விற்றார்! அவர் இந்தியில் சுனில் தத்தை கதாநாயகனாக வைத்து எடுத்தார்.படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றி! வேலுமணியின் கணிப்பு பொய்த்தது! இந்த சம்பவம் வீரப்பாவின் நினைவில் வந்தது! பலர் ஆலயமணி யின் கதையை இந்தியில் எடுக்கும் உரிமையைக் கேட்டு பலர் வந்தார்கள்! வீரப்பா எந்த முடிவையும் எடுக்கவில்லை!
மனதில் அவருக்கு ஏகக் குழப்பம்!
வேலுமணியின் அனுபவத்தை பல நண்பர்கள் வீரப்பாவிற்கு நினைவு படுத்தினார்கள்! நண்பர்கள் வேறு தூபம் போட்டார்கள்! `இத்தனை தயாரிப்பாளர்கள் வந்து உரிமை கேட்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமலா இருக்கும்? என்கிற கேள்வியை அவர் மனதில் விதைத்தார்கள்! அங்கே தான் விதி விளையாடியது!
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
9th March 2015 01:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks