-
29th May 2013, 06:38 AM
#1
Junior Member
Newbie Hubber
Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

சிவாஜி என்ற மாமனிதர்.
ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.(இந்த விஷயத்தில் Joe கட்சிதான்).
அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.
ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.
நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை ,அம்சங்களை வைத்து பாகம் 11 ஐ தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்.
இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.
அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .
வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.
எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .
கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.
சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.
பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.
சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.
நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.
மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.
கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.
தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.
பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.
ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.
இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.
தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.
அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.
நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.
படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.
பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.
யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.
தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.
பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.
நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.
தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.
தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
Last edited by Gopal.s; 31st May 2013 at 05:56 AM.
-
29th May 2013 06:38 AM
# ADS
Circuit advertisement
Bookmarks