Results 1 to 5 of 5

Thread: Mahabharatham

Threaded View

  1. #1
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Mahabharatham

    #1 17-02-2013


    முதன்முறையாக தமிழ் நடிகர், நடிகைகள் நடிக்க நேரடியாக தமிழில் பிரமாண்டமாக தயாராகிறது ‘மகாபாரதம்’ தொலைக்காட்சி தொடர். சன் டி.வியில் வருகிற 17ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் காலை 10 மணியிலிருந்து 11 மணிவரை ஒளிபரப்பாகிறது. ‘சினி விஸ்டாஸ்’ நிறுவனம் சார்பில் சுனில் மேத்தா, பிரேம் கிஷண் மல்கோத்ரா தயாரிக்கும் இந்த தொடரை சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இசை தேவா. பாடல் பா.விஜய். கதை ஆக்கம் சாகித்ய அகடமி விருது பெற்ற பிரபஞ்சன். கில்லி சேகர் சண்டை காட்சிகள் அமைக்கிறார். கணேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அசோக் நடனம் அமைக்கிறார். பூவிலங்கு மோகன், அமித் பார்கவ், ஓ.ஏ.கே.சுந்தர், இளவரசன், மனோகர், தேவிப்பிரியா, பூஜா, ஐஸ்வர்யா ஆகியோருடன் புதுமுகங்களும் நடிக்கின்றனர்.


    இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது: மகாபாரதம் இயக்குவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இதை இயக்கும்படி சுனில் மேத்தா என்னிடம் கேட்டபோது, ‘நிஜமாகத்தான் சொல் கிறீர்களா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என்றார். சிறுவயதிலிருந்தே மகாபாரதம் கேட்டிருக்கிறேன். மேலும் மகாபாரதம் நூல்களை வாங்கி படித்தேன். 25 ஆண்டு களில் 50 திரைப்படங்கள் இயக்கி இருக்கிறேன். அதைவிட மகாபாரதம் இயக்குவதுதான் கடினமான பணியாக இருக்கிறது. ஆனாலும் இது மனநிறைவு தரு கிறது. பெங்களூர் அருகே நதிகள், மலை, சோலைவனம் என எல்லாம் இணைந்திருக்கும் ஒரு இடத்தை ஷூட்டிங் லொகேஷனாக தயாரிப்பாளர் தேர்வு செய்திருப்பதுடன் அங்கு 25 அரண்மனை செட்கள் அமைத்திருக்கிறார்.


    அதில் படப்பிடிப்பு நடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான நடிகர்கள் நடித்து வரு கிறார்கள். அவர்களுக்கு உடை தைப்பவர்கள், செட் போடுபவர்கள் உதவியாளர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் இணைந்து இதனை உருவாக்கி வருகிறோம். தினமும் நடிகர்கள் தேர்வும் நடக்கிறது. அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது மக்களின் மனங்களை கவர்ந்திழுக்கும். தயாரிப்பாளர் சுனில் மேத்தா கூறும்போது, ‘‘தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இது முக்கியமானதாக இருக்கும். பிராந்திய மொழியில் இவ்வளவு பெரிய பிரமாண்டத்தில் ஒரு தொடர் வெளிவருவது இதுதான் முதல் முறை’’ என்றார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் பிரபஞ்சன், நடிகர்கள் பூவிலங்கு மோகன், இள வரசன், அமித் பார்கவ், ஐஸ்வர்யா, இரண்டாவது யூனிட் இயக்குனர் சிவகுமார், இசை அமைப்பாளர் தேவா, ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    =====================

    நாம் செவிவழி கேட்டு, பிறமொழி வாயிலாக பார்த்த மகாபாரதம், முதன் முறையாக நம் தாய் மொழியான தமிழில் பிரமாண்டமாய் தயாரிக்கப்பட்டு வெளிவருகிறது. பிறமொழிகளில் இந்த மகாபாரதம் வெளிவந்த போது கூட, 52 எபிசோடுகளாக கதையை சுருக்கிச் சொன்னார்கள். ஆனால் தற்போது இந்த மகாபாரதம், பல்வேறு புத்தகங்களை ஆராய்ந்து வியாசர் எழுதிய மகாபாரதத்தின் சுவை, சற்றும் குறையாமல், சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனால் கதையாக்கம் செய்யப்பட்டு, சின்னத்திரையில் ஒரு திரைப்படம் என்று சொல்லும் அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது பார்வையாளர்களுக்கு ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தும். மகாபாரதம் என்றாலே பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள், திரவுபதி, கிருஷ்ணர் என்று தான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் கேள்விப்படாத கதாபாத்திரங்களான சாந்தனு மகாராஜா, இளம் வயது பீஷ்மரான தேவ விரதன், கங்காதேவி இது போன்ற இன்னும் பல கதாபாத்திரங்களின் கதை இதில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.


    இப்படிப்பட்ட ஒரு காவியத்திற்கு இசை என்பது சிறப்பாக இருக்க வேண்டும். இதற்காகவே தேனிசைத் தென்றல் தேவா முதல் முறையாக சின்னத்திரையில் இந்த தொடருக்கு இசையமைப்பதோடு, முகப்பு பாடலுக்கும் இசையமைக்கிறார். கவிஞர் பா.விஜய் எழுதிய பாடலை சங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார். நடன இயக்குநர் அசோக்ராஜ் நடனம் அமைக்க, ‘கில்லி‘ சேகர் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார். தமிழ் நடிகர்களான பூவிலங்குமோகன் ஒ.ஏ.கே.சுந்தர், இளவரசன், மனோகர், தேவிப்பிரியா, பூஜா, ஐஸ்வர்யா ஆகியோருடன் பல புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள். இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா. தமிழில் “ஜுனூன்” என்ற தொடர் மூலம் அறிமுகமான “சினிவிஸ்டாஸ்” நிறுவனம் நேரடியாக இந்த மகாபாரதத்தை களம் இறக்குகிறது. இதன் தயாரிப்பாளர்கள் சுனில் மேத்தா, பிரேம் கிஷண் மல்கோத்ரா. நாளை முதல் ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது ,

    மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள ‘மகாபாரதம்’ தொலைக்காட்சித் தொடர் சன் டி.வியில் இன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை ஒளிபரப்பாகிறது.


    * இதுவரை ஒளிபரப்பான ‘மகாபாரதம்’, ‘ராமாயணம்’ போன்ற புராணத் தொடர்கள், இந்தியில் இருந்து டப் செய்யப்பட்டவை.
    *இப்போதுதான் முதன் முறையாக ‘மகாபாரதம்’ தொடர் தமிழில் நேரடியாகத் தயாராகி உள்ளது.
    *இத்தொடரில் தமிழ் சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
    * தொடரை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி நடித்த ‘பாட்ஷா’, ‘வீரா’, ‘அண்ணாமலை’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர்.
    * தேனிசைத் தென்றல் தேவா இத்தொடருக்கு இசை அமைத்துள்ளார். டைட்டில் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார்.
    * இப்பாடலை சங்கர் மகாதேவன் உணர்ச்சிகரமாக பாடியுள்ளார். அசோக் ராஜன் நடனம் அமைத்துள்ளார். ரெட் ஒன் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது.
    * சினி விஸ்டாஸ் நிறுவனம் சார்பில் சுனில் மேத்தா, பிரேம் கிஷண் மல்கோத்ரா தயாரித்துள்ளனர். இவர்கள் பிரபலமான ‘ஜுனூன்’ தொடரை தயாரித்தவர்கள்.
    * வியாசர் எழுதிய மகாபாரதத்தை சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் கதையாக்கம் செய்துள்ளார்.
    *இதில் இதுவரை இல்லாத அளவு 700 நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
    * பிரமாண்ட அரங்குகளும் நவீன தொழில்நுட்பங்களும் இத்தொடரில் ஹைலைட் விஷயங்களில் ஒன்று.
    * மகாபாரதக் கதை பெரியது. இதுவரை வந்த தொடர்களில் சில காட்சிகளை மட்டுமே எடுத்திருப்பார்கள். இத்தொடரில் முழுக் கதையும் காட்டப்பட இருக்கிறது.
    * பிரபலமான சின்னத்திரை நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
    * மயிர் கூச்செரிய வைக்கும் சண்டைக்காட்சிகள் மாஸ்டர் ‘கில்லி’ சேகர் மேற்பார்வையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.
    * ஏராளமான காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதை கண்டுபிடிக்க முடியாது.
    * இத்தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அலங்கார உடைகளும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய நகைகளும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.
    * பார்வையாளர்களை மெய்மறக்க வைக்கும் வகையில் படத்தின் காட்சிகளை படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் கணேஷ் குமார்.
    * மொத்தத்தில் ‘சின்னத்திரையில் ஒரு திரைப்படம்’ என இத்தொடர் குறிப்பிடப்படுகிறது.









    Last edited by aanaa; 18th February 2013 at 12:17 AM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •