நண்பர்களே.. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? இங்கு ராகதேவன் அருள் புரிந்து இரண்டரை வருடமாகி விட்டது. யாரும் இங்கு வருகிறார்களா என தெரியவில்லை. இருந்தாலும் ஒரு குசலம் விசாரித்து விட்டு, நேற்று நான் கிழித்ததை பீத்தி கொள்ளலாமென வந்தேன்.

நேற்று ஞாயிற்று கிழமை.. கொரோனா கொடுமையால், உடற்பயிற்சிக்காக ஒரு முறை செல்லலாம் என்கிற சலுகையை காலையிலேயே 15 மைல் சைக்கிள் ஒட்டி கழித்து விட்டேன். கார்டனில் புல் வெட்டியாகி விட்டது. மதியம் மீன் குழம்பு சாப்பாட்டில் அதிகம் நாட்டமில்லை, வேண்டா வெறுப்பாக மாலையில் தான் அதை சாப்பிட்டேன். காலை முதல் கை அரிக்கிறது என்று தலையை சொரிந்து கொண்டே இருக்கும் குடிமகன் போல நானும் அங்கும் இங்குமாக இருந்தேன். மனம் ஒருநிலை படவில்லை.

நான் கேட்டிராத ராஜா சாரின் ஒரு பாடலை தேடி கண்டு பிடிக்கலாமே என எழுந்தேன். பாடல் எண்பதுகளில் வந்திருக்க வேண்டும். வழக்கமான டூயட்டாக இருக்க கூடாது. அதில் ஜானகியும், பாலுவும், ராஜா சாரும் மாறி மாறி உரையாடி கொண்டிருக்க வேண்டும். நான் இது வரை இந்த பாடலை கேட்டிருக்க கூடாது. கேட்டதும் என் மனதில் நச்சென்று பதிய வேண்டும். பின்னணியில் வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு கொண்டு வேகமெடுக்க வேண்டும். கேட்க கேட்க . ஹாப்பி ஹார்மோன்ஸ் ததும்ப வேண்டும். -- இது தான் கண்டிஷன்ஸ்.

3 மணி நேர தேடலுக்கு பின்என் கையில் சிக்கிய இந்த செம தெலுகு பாடல், 24 மணி நேரமாய் என் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.

படம்: வம்சியின் ஸ்ரீ கனக மஹாலக்ஷ்மி ரிக்கார்டிங் டான்ஸ் ட்ரூப். வெளியான வருடம்: 1988