ஒரு மணி நேர தொடர் ஆனது டார்லிங் டார்லிங்


முக்கியமான தொடர்களை 30 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரமாக நீட்டித்து ஒளிபரப்புவது இப்போதைய டிரண்ட். அந்த வரிசையில் 30 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேர தொடராகி இருக்கிறது டார்லிங் டார்லிங்.


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த தொடர் நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இதன் ஒளிபரப்பு கால அளவு ஒரு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஒரு மணி நேர தொடராக திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


.எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் இரு குடும்பங்களிடையே நடக்கும் பிரச்சினைகள் தான் கதை. இரண்டு குடும்ப குழப்பங்களின் கலாட்டாக்களை காமெடியாக சொல்லி வருகிறார்கள். இதுவரை கொஞ்சம் சீரியசும் கலந்திருந்த கதை இனி முழுநேர காமெடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. படப்பிடிப்பையும் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கி சினிமா தரத்துக்கு தயாரிக்கிறார்கள். சினிமா பார்க்கும் உணர்வை ஏற்பபடுத்த வேண்டும் என்பதே தொடரின் நோக்கம் என்கிறார்கள்.

நன்றி: தினதந்தி