நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் புரிந்த சாதனைகளை ஊடகங்கள் மற்றும் பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்து கொள்வதை காட்டிலும் தீவிர ரசிகர்கள் நாங்கள் பெற்ற அனுபவத்தை பதிவிடுவோமாயின் அந்தப் பதிவுகள் தெளிவு படுத்திவிடும், அந்த வரிசையில் 28 ஆண்டுகளுக்கு முன் நான் நடிகர்திலகத்தின் திரைப்படம் காண சென்ற நினைவு பகிர்ந்து கொள்கிறேன்,
அப்போது பத்தாம் வகுப்பு படிக்கிற சின்சியரான காலம் வருடம் 1987, கிராமத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள பேரூராட்சி செங்கம் நகரத்தில் விடுதியில் தங்கிப் படித்த நாட்கள், டூரிங் கொட்டகையில் படம் பார்த்து வந்த நமக்கு தியேட்டர்களில் படம் பார்க்க சான்ஸ் தொடங்கியது,
பக்கத்தில் திருவண்ணாமலை நகரம் 35 கிமீ தொலைவு அங்கு மட்டுமே புதிய படம் ரிலீஸ், புதிய படம் ரிலீஸ் என்றால் கூட அது நம்ம படமா இருந்தாகனும் என்ற ஒரு சுய நலம் இருக்கவே செய்தது, அப்படிப்பட்ட தருணத்தில் விடுதியின் எதிரே இருக்கும் உயரமான நீண்ட சுவரில் புதிய ரிலீஸாகும் படத்தின் வால் போஸ்டர் ஒட்டுவது வழக்கம் அந்த குறிப்பிட்ட சுவரில் திருவண்ணாமலையிலிருக்கும் ஸ்ரீபாலசுப்ரமனியர் திரையரங்கில் திரையிடப்படும் படங்களுக்கு மட்டுமே, அந்தத் திரையரங்கில் தான் திரிசூலம் 200 நாட்களையும் முதல் மரியாதை 150 நாட்களையும் கடந்து சாதனை புரிந்தன.
அந்தச் சுவற்றில் முதல் மரியாதை வால் போஸ்டர் நீண்ட நாள் காட்சி தந்தது,
தினமும் காலை எழுந்தவுடனே சுவற்றில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என காண்பது வழக்கம்,
அன்று நான் காணும் போது வசந்த மாளிகை போஸ்டர் பளிச்சென்றது, ஏற்கனவே டூரிங் கொட்டகையில் இரு முறை பார்த்தது தான் ஆனாலும் வசந்த மாளிகையாச்சே அன்றைய நாள் ஞாயிறு விடுதியில் ஊருக்கு சென்று வர அனுமதி உண்டு அது போதாதா நமக்கு, நானும் எனது நண்பர் மகாலிங்கமும்( சங்கிலியின் DSP சரவணன் பக்தர்) காலை 11 மணிக்காட்சியில் பார்த்து விட்டு திரும்பலாம் என்ற திட்டத்துடன் புறப்பட்டு தி.மலைக்கு பேருந்தில் சென்று தியேட்டருக்கு அருகில் இறங்கினோம், இங்கு தான் நமக்கு டர்னிங் பாருங்கள், பார்க்க வந்தது வசந்த மாளிகையை ஆனால் எங்களை வரவேற்பு கொடுத்து பரவசப் படுத்தியது நடிகர் திலகத்தின் ஐந்து திரைப்படங்கள் முறையே ஸ்ரீ பாலசுப்ரமணியரில் வசந்த மாளிகை, சக்தி தியேட்டரில் அன்னையின் ஆணை, அன்பு தியேட்டரில் குலமகள் ராதை , கிருஷ்ணா தியேட்டரில் சம்பூர்ண ராமாயணம், புகழ் திரையரங்கில் குடும்பம் ஒரு கோயில்,
திக்கு முக்காடி விட்டோம் அந்த ஊரில் இருந்த ஆறு தியேட்டரில் ஐந்து தியேட்டரில் நடிகர் திலகத்தின் ஐந்து படங்கள் எதை பார்ப்பது எதை விடுவது, எங்களுக்கு இருக்கும் சான்ஸ் மூன்றுக்கு மட்டுமே இரவு 10 மணிக்கு கடைசி பஸ்சை பிடித்து ஊருக்கு சென்றாக வேண்டும் அதன்படி வசந்த மாளிகை, அன்னையின் ஆணை, குல மகள் ராதை ஆகியவற்றை கண்டு வீடு வந்து சேர்ந்தாலும் சம்பூர்ண ராமாயணம், குடும்பம் ஒரு கோயில் மிஸ்ஸிங் என்பதை நீண்ட நாட்கள் மறக்க இயலாத சூழலில் வருந்தியது இப்போதும் பசுமையான நிகழவாகவே இருக்கிறது..
இங்கு நாம் சொல்லும் செய்தி
அன்றைய கால கட்டத்தில் எத்தனையோ புதிய படங்கள் வந்த வண்ணம் இருந்தாலும் ஒரு சில பிரபலமான நடிகர்கள் இருந்தும் கூட ஒரு நகரின் ஒட்டுமொத்த தியேட்டர்களும் நடிகர்திலகம் மயமாகவே இருந்தன,
மக்கள் நடிகர் திலகம் படம் ஓடுகின்ற தியேட்டரில் மட்டுமே கூடினார்கள்,
*திரையுலக வரலாற்றில் எந்த நடிகராலும் இது போன்ற சாதனையை இனி நிகழ்த்த முடியாது என்பதை சுட்டிக் காட்டிடவே இந்த அனுபவ பதிவு.

17759824_1289648651152022_4006635739853201139_n.jpg

17759946_1289648671152020_5079251626236200119_n.jpg


Thanks Sekar Parasuram