கடவுள் வாழ்த்து.
----------------



சும்மா
பெருமைக்காகச் சொல்லவில்லை நாங்கள்...
நடிகர் திலகத்தைக்
கடவுளென்று.

கடவுளென்பவன் யார்..?

சராசரி மனிதனின்
வேகங்கள், திறமைகள் மீறிய
மகாசக்தி கொண்டவன்
கடவுள்.

எங்கள் நடிகர் திலகத்திற்கு
அந்த சக்தி இருந்தது.
ஆகவே கடவுளென்கிறோம்.

சாதாரண மனிதனின்
சங்கடங்கள் தீர்க்க வல்லவன்
கடவுள்.

எங்கள் நடிகர் திலகம்
தீர்த்திருக்கிறார்.
ஆகவே கடவுளென்கிறோம்.

சார்ந்திருக்கும்
அத்தனை பேரையும்
சந்தோஷமாக வைத்திருப்பவன்
கடவுள்.

எங்கள் நடிகர் திலகம் வைத்திருக்கிறார்.
ஆகவே கடவுளென்கிறோம்.

கடவுளுக்கான ஆடைகளை
அணிந்து,
கடவுளுக்கான ஆபரணங்களை
அணிந்து,
கடவுளுக்கான
விசேஷப் புன்னகையும்
சுமந்து...
இங்கே
எத்தனையோ நடிப்பறிஞர்கள்
கடவுளின் வேடமிட்டு
நடித்திருக்கிறார்கள்.
ஜெயித்திருக்கிறார்கள்.

இன்று, நேற்றல்ல...
கலை உலகத்திற்கும்,
கடவுள் வேடத்திற்கும்
நீண்டகாலமாக நெருக்கம்.

ஆனால்...

ஒரு நடிகன் கடவுளானதும்,
அவன் நடித்தே கடவுளானதும்..
நடிகர் திலகத்திலிருந்துதான்
தொடக்கம்.